AK Vs AK (2020) | நீ ஹீரோ தானே! கண்டுபிடி பார்க்கலாம்

4
Ak Vs Ak movie review

ந்தியில் அவ்வப்போது வித்யாசமான கதைக்களத்துடன் திரைப்படங்கள் வந்து வியப்பில் ஆழ்த்தும். அது போன்ற ஒரு படமே AK Vs AK. Image Credit

AK Vs AK

நடிகர் அனில் கபூர் (AK), இயக்குநர் அனுராக் காஷ்யப் (AK) இருவரும் உண்மையாகவே சண்டை போட்டுக்கொண்டால் எப்படியிருக்கும்? அது தான் கதை.

எப்படி இது போல எடுக்க, நடிக்கத் துணிகிறார்கள் என்பதே வியப்பாக உள்ளது!

அனில் கபூர் தற்போது சந்தை மதிப்பு இல்லாத நடிகர், முந்தைய மதிப்பை வைத்துக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருப்பவர்.

அனுராக் காஷ்யப் Gangs of Wasseypur என்ற அற்புதமான படத்தை எடுத்துப் புகழ் பெற்றவர். Ugly உட்படச் சில படங்கள் விமர்சன ரீதியாகப் பாராட்டுப் பெற்றவை.

அனுராக் காஷ்யப் சர்ச்சையான நபர். எதையாவது கூறி ட்விட்டரில் சண்டை வளர்த்துக்கொண்டு இருப்பார்.

சமீபமாக அவருக்குப் பட வாய்ப்புகள் அமையவில்லை.

இருவரும் ஒரு மேடை விவாத நிகழ்ச்சியில் சண்டைபோட்டுக்கொள்ள, இதனால் அனுராக் காஷ்யப் பட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

கடுப்பான அனுராக், அனில் கபூர் மகளான சோனம் கபூரை (உண்மையாகவே இவரது மகள் தான்) கடத்தி விடுகிறார்.

இதைத் தனது உதவியாளரை வைத்துக் காணொளியாகவும் எடுக்கிறார். கேட்பவர்களிடம் பட ஒத்திகையெனக் கூறுகிறார்.

நீ ஹீரோ தானே! உன் மகளை 10 மணி நேரத்தில் கண்டுபிடி பார்க்கலாம்!‘ என்று சவால் விட்டு அனில் கபூர் அலைவதை காணொளியாகப் பதிவு செய்கிறார்.

விளையாட்டாக ஆரம்பித்தது விபரீதமாகப் போக, என்ன ஆகிறது என்பதே கதை.

அனில் கபூர் / அனுராக் காஷ்யப்

அனில் கபூர், அனுராக் காஷ்யப் இருவரும் சண்டை போட்டு, இருவரின் தற்போதைய நிலையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்கள்.

எப்படி இது போலப் படம் நடிக்கச் சம்மதித்தார்கள்! என்று வியப்பாக உள்ளது. ஏனென்றால், உண்மையாகவே அவமானப்படுத்தும் காட்சிகள் உள்ளது.

கதை வித்யாசமாக இருந்தாலும், பல நேரங்களில் ஆவணப்படம் (Documentary) பார்ப்பது போல உள்ளது. அதோடு என்னதான் பட ஒத்திகை என்று கூறினாலும் காவல்துறையும் நம்புவது லாஜிக்கல் இடறல்.

அனில் கபூர் மனைவி தவிர்த்து அவரது மகள், மகன் அனைவருமே நடித்துள்ளார்கள், இது மட்டுமல்லாது இதில் வரும் பலரும் Original Identity யிலேயே வருகிறார்கள்.

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய கதை ஆனால், வசனம் அப்படியல்ல. சர்வ சாதாரணமாகக் கெட்ட வார்த்தைகள் பேசப்படுகிறது.

தமிழில் தான் பார்த்தேன், இந்தியில் இன்னும் மோசமாக இருக்க வாய்ப்புள்ளது.

NETFLIX ல் காணலாம்.

Directed by Vikramaditya Motwane
Produced by Deepa De Motwane
Written by Anurag Kashyap (dialogues)
Screenplay by Avinash Sampath, Vikramaditya Motwane
Story by Avinash Sampath
Starring Anil Kapoor, Anurag Kashyap, Yogita Bihani, Sonam Kapoor, Harshvardhan Kapoor
Music by Alokananda Dasgupta, Rashis – Nuka
Cinematography Swapnil Sonawane
Edited by Bunty Bhansali
Distributed by Netflix
Release date 24 December 2020
Running time 108 minutes
Country India
Language Hindi

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. அணில் கபூர் எனக்கு விருப்பமான நடிகர்.. அவரோட சில பழைய படங்கள் எனக்கு இன்றும் விருப்பமானவை.. இதுவரை இந்த படத்தை பார்க்க வில்லை கிரி.. நேரம் கிடைக்கும் போது பார்க்க முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. யாசின் எனக்கென்னமோ அனில் கபூர் நடிப்பும் பிடிப்பதில்லை, அவருடைய உடல்மொழியும் பிடிப்பதில்லை.

  3. அனுராக் கஸ்யப் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் சூப்பராக நடித்திருப்பார் என்பதை குறிப்பிடாமல் விட்டதற்கு நயந்தாரா ரசிகர்கள் சார்பாக கடும் கண்டணங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here