கூகுள் சர்ச்சைகள்

7
கூகுள் சர்ச்சைகள்

டந்த மாதம் ஐரோப்பா அமைப்புகள் கூகுளுக்கு 4.5 பில்லியன் அபராதத்தை விதித்தது, இதற்குக் கூகுள் மேல் முறையீடு செய்துள்ளது. Image Credit

கூகுள் சர்ச்சைகள்

அபராதம் ஏன்?

கூகுள் தன்னுடைய Android இயங்கு தளத்தில் க்ரோம் உலவி மற்றும் தேடல் செயலிகளை ஆரம்பித்திலேயே நிறுவி விடுகிறது (By Default). இதனால், மற்ற நிறுவனங்கள் பாதிப்பை அடைகின்றன என்பது குற்றச்சாட்டு.

ஐரோப்பா அமைப்பு எவ்வளவு கிறுக்குத்தனமானவங்க என்று இதன் மூலம் அறியலாம். இயங்கு தளம் கூகுளுடையது, கட்டற்ற (Open Source) மென்பொருள் என்பதால் இலவசமாக வழங்கி வருகிறது.

அப்படி இருக்கையில் தன் செயலிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் என்ன தவறு?

அதோடு கூகுள் மற்ற செயலிகளைத் தடை செய்யவில்லை.

விருப்பம் இருக்கும் எவரும் தான் விரும்பும் செயலிகளை நிறுவிக்கொள்ளலாம் என்று இருக்கும் போது, இதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை?!

கூகுள் க்ரோம் வேண்டாம் என்றால், எத்தனையோ செயலிகள் Google Play Store ல் உள்ளதே! அவற்றை நிறுவிக்கொள்ளலாமே! கூகுள் தடுத்ததா?!

ஐரோப்பா அமைப்புகள் தாங்கள் நினைத்தை செய்ய வேண்டும் என்றே செய்து வருகின்றன. கூகுளுக்கு அபராதம் விதித்ததில் என்ன நியாயம் என்பது புரியவில்லை.

தன் இயங்கு தளத்தில் தன் செயலிகளை (மற்றவர்களைத் தடை செய்யாமல்) இணைப்பதில் என்ன தவறு உள்ளது?!

Location

தற்போது தனியுரிமை (Privacy) என்பது ஃபேஸ்புக் செய்த தகவல் திருட்டுக்குப் பிறகு கடும் சர்ச்சையாகி விட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய சேவைகளில் கொள்கைகளில் திருத்தங்களைச் செய்து வருகிறார்கள்.

கூகுள் ஏற்கனவே தன்னுடைய சேவைகளைப் பற்றி வெளிப்படையாக எளிமையாக வைத்துள்ளது. தேவையானதை நாம் தடை செய்து கொள்ளலாம்.

இதில் தான் தற்போது சிக்கலைக் கூகுள் எதிர்நோக்கியுள்ளது.

Location Turn Off செய்து இருந்தாலும், கூகுள் நம்மைக் கண்காணிக்கிறது என்பது தான் தற்போதைய குற்றச்சாட்டு. இதற்குக் கூகுள் ஒரு சப்பை காரணத்தைக் கூறி தன் கொள்கைகளில் திருத்தம் செய்து இருக்கிறது.

ஐரோப்பா அமைப்புகள் அபராதம் இதற்குத் தான் விதித்து இருக்க வேண்டும்.

Turn Off செய்த பிறகும் கண்காணிக்கிறது என்றால், கூகுள் அதற்கு என்ன காரணம் கூறினாலும் தவறு தான். இதே போல மற்ற சேவைகளும் இருக்க வாய்ப்பு உள்ளது என்று அனைவரும் சந்தேகிக்க வாய்ப்புள்ளது தானே!

எனவே, கூகுளுக்குக் கடுமையான அபராதத்தை இதற்கு விதித்து இருக்க வேண்டும்.

Android Ping

Android தொலைபேசிகள், க்ரோம் உலவியை நாம் பயன்படுத்தாமல் இருந்தால் கூட (Idle) நம் தகவல்களைக் கூகுள் பெற்று வருகிறது என்று அடுத்தச் சர்ச்சை.

Incognito Mode பயன்படுத்தினால் கூட வேறு வகையில் சில தகவல்களை எடுக்கிறது. நாம் நினைப்பதை விட நம்முடைய தகவல்களைக் கூகுள் அதிகளவில் கண்காணித்து வருகிறது என்று சர்ச்சையாகியுள்ளது.

24 மணிநேரத்தில் 340 முறை Android திறன்பேசியில் தகவல்களை எடுக்கிறது என்று ஆய்வு கூறுகிறது. தோராயமாக மணிக்கு 14 முறை தகவல்களை எடுக்கிறது.

கூகுள் இதையெல்லாம் தன் சேவையை மேம்படுத்தத் தான் செய்கிறது என்று காரணம் கூறினாலும், ஏற்றுக்கொள்ளும்படியில்லை.

தகவல்களை எடுக்க மாட்டேன் என்று கூறிய பிறகு எடுப்பது எந்த விதத்தில் சரி?!

தனியுரிமை (Privacy) என்று வரும் போது கூகுள் நம்பகமானது இல்லை என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இவ்வாறு கூகுள் சர்ச்சைகள் தொடர்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் கூகுளுக்கும் உள்ள வேறுபாடு, ஃபேஸ்புக் நம் தகவல்களை மற்றவர்களுக்கு விற்று விட்டது.

கூகுள் தனக்கு தானே பயன்படுத்திக்கொள்கிறது.

கொசுறு 1

தனியுரிமை விசயத்தில் அனைவர் பாராட்டையும் பெற்று வருவது ஆப்பிள் நிறுவனம் தான். இவர்களையும் 100% நம்ப முடியாது என்றாலும், இருக்கும் நிறுவனங்களில் நிச்சயம் ஆப்பிளைத் தற்போதைக்கு நம்பலாம்.

கொசுறு 2

கூகுள் என்ன செய்கிறது என்று எனக்குத் தெரியும் என்பதாலும், எனக்கு அதனால் தற்போது நேரடி பாதிப்பில்லை என்பதாலும், கூகுள் சேவையைப் பயன்படுத்துகிறேன்.

முன்னரே கூறியபடி உலகில் இலவசம் என்று எதுவுமில்லை. எந்த இலவசத்துக்குப் பின்பும் மறைமுக இலாபம் இருக்கும்.

எனவே, சிலதை தவிர்க்க முடியாது என்றாலும், நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

7 COMMENTS

  1. என்பெயர் சூர்யா என் வீடு இந்தியா இப்போதுதான் இந்தப்படத்தை திரையரங்க நகலில் தமிழில் பார்த்தேன். 0.90GB செலவழித்து download செய்ததற்கு நல்லபடம்.
    நடிகரின் பெயர் அல்லு அர்ஜூன் மற்றும் அக் ஷன் கிங் அர்ஜூன் இந்தப்படத்தையா இவ்வளவு நாள் தவறவிட்டோம் என்று படம் பார்த்து 30 மணி நேரத்திற்குள் எனக்குள் கேள்வி எழுந்தது.
    சூர்யா என்றால் கோபக்காரன்.

    ( நான் படத்தில் கண்ட சின்ன அரசியல்)
    உலக ஊடகங்களின் உண்மைத்தன்மை என்ன என்பதை இரண்டு காட்சிகளில் சொல்லியிருக்கிறார்கள்.
    சூர்யா அன்பிடம் நீ இன்னும் நம்பவில்லையென்றால் கிழித்துவிடு என்பார் நான் என்றால் சிறிதும் சிந்திக்காது கிழித்திருப்பேன். {இலங்கை என்றாலும் சரி இந்தியா என்றாலும் சரி}
    கடைசியில் கீதத்தைக் கேட்டு வெறுப்புத்தான் வருகிறது.

  2. மிக்க நன்றி உங்கள் பதிவிற்கு.
    நான் android தான் உபயோகிக்கிறென். google crome ற்கு பதிலாக uc browser தான் உபயோகிக்கிறேன் வேகமாக download செய்கிறது. இன்னும் வேகமாக download செய்யவேண்டும் என நினைப்பவர்கள் playstore இல் adm (android download manager) download செய்து உபயோகியுங்கள்.
    google , youtube ,facebook சர்ச்சையாகும் என முன்னமே அறிந்திருந்தேன்.

  3. Hope you followed USA Vs Microsoft antitrust case on IE browser. EU taking up this case is the right thing to do, it’s their market and their citizens. They decide what the regulations are and what is fair play for their market. I think they have a point here. Google forces manufactures to distribute their defaults and phone makers have no choice than installing those two apps(chrome+playstore). Hope you understand the thin line here.
    Note they won’t and can’t do same in china.

  4. சில‌ காலத்திற்கு முன்னர் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் சில்லறை வியாபாரத்தில் இறங்க எத்தனித்த போது எல்லா சில்லறை வியாபாரிகளும் அதை எதிர்த்தார்கள். ஏன் நீங்கள் கூட எதிர்த்திருக்கலாம். நிறைய காசு வால்மார்ட் இடமிருப்பதால் தங்களின் இருப்பு பாதிக்கப்படும் என்பதுதான் அவர்களின் கவலை. இதற்கு பெரிய அளவு உதாரணம்தான் கூகிள் குரோமிற்கு தண்டனை. இந்தியாவில் யாருடனாவது சேர்ந்து தொழில் தொடங்க எந்தவித் தடையுமில்லை.. பின்னர் ஏன் சில்லறை வியாபாரிகள் எதிர்த்தார்கள். ஜெயலலிதா கூட வால்மார்ட் தமிழ் நாட்டிற்குள் வர முடியாது என்று சொன்னதாக நியாபகம். இலவசமாக கொடுக்கப்படும் மென்பொருளுக்கு கட்டாயம் குறோம் பயன்படுத்துவது சொல்லுவது நியாயமில்லை. உங்களுக்கே தெரிந்திருக்கும் எத்த‌னை பேருக்கு இன்னமும் கூகிள் ஸ்டோரில் மென்பொருள் வாங்க தெரியாது என்று. கூகிள்குரோம் நேரடியா இருந்தால் அதைத்தானே வாடிக்கையாள‌ர்கள் பயன்படுத்துவார்கள். தொழில் நுட்பத்தில் உச்சத்திலிருக்கும் ஜெர்மனியின் கிழக்கு முதல் பக்கத்தில் இருக்கும் குரோமை நீங்கள் பயன்படுத்துவீர்களா இல்லை 4 ஆம் பக்கத்தில் இருக்கு செயலியை தேடிபோய் பயன்படுத்துவீர்களா.

    அப்பிள் தன்னுடய மென்பொருளுக்கு இலவசமாக வளங்குவதில்லை என்பதால்தானவர்களின் மேல் வழ‌க்கில்லையென்று நினைக்கிறேன்.

    அப்பிள் இப்போது தன்னுடய சீன வாடிக்கையாளர்களின் தகவல்களை சீனாவிலேயே சேகரிக்க தொடங்கிவிட்டார்கள். அங்கு உள்ள தகவல் சீன அரசாங்கத்திற்கு போகாது என்றா நினைக்கிறீர்கள். அதே மாதிரி அமெரிக்காகாரன் அரசாங்கம் எங்களின் தகவல்களை பார்க்காமலா இருக்கும். ஆனால் அப்பிள் அரசாங்கத்திற்கு தன் தகவல்களை கொடுக்குமே தவிர யாருக்கும் விற்காது என்று நானும் நம்புகிறேம்ன்.

    பேஸ்புக் தகவல்களை விற்று விட்டது என்று சொல்லுயுள்ளீர்கள். நான் அறிந்தவரை பேஸ்புக் தகவல்களை ஆய்விற்காக வழங்கியபோது பெற்ற நிறுவனம் அதை தவறாக பயன்படுத்தியதாகவே அறிகிறேன்.

  5. உங்களுக்கே தெரிந்திருக்கும் எத்த‌னை பேருக்கு இன்னமும் கூகிள் ஸ்டோரில் மென்பொருள் வாங்க தெரியாது என்று. கூகிள்குரோம் நேரடியா இருந்தால் அதைத்தானே வாடிக்கையாள‌ர்கள் பயன்படுத்துவார்கள். தொழில் நுட்பத்தில் உச்சத்திலிருக்கும் ஜெர்மனியின் கிழக்கு முதல் பக்கத்தில் இருக்கும் குரோமை நீங்கள் பயன்படுத்துவீர்களா இல்லை 4 ஆம் பக்கத்தில் இருக்கு செயலியை தேடிபோய் பயன்படுத்துவீர்களா.////

    நான் எழுத நினைத்த விமர்சனம் இது.

  6. @pratheepan கருத்தை பதிவு மாற்றி போடாதீர்கள், சம்பந்தப்பட்ட பதிவில் கருத்துரையிட்டால் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    UC Browser எதோ பிரச்சனை என்று கூறினார்கள், கவனமாக இருங்கள்.

    @பாலா, ப்ரியா & ஜோதிஜி

    நீங்கள் கூறுவதை நானும் அறிவேன்.

    Android, Open Source என்பதால், கூகுள் கட்டணங்கள் மொபைல் நிறுவனங்களுக்கு குறைவு தான். கூகுள் வருமானம் விளம்பரங்கள் மூலம் தான்.

    இதனால் தன்னை விட மற்ற நிறுவனங்கள் அதிகம் சம்பாதிக்கிறது என்று Android இயங்கு தளத்திற்கு மாற்றை அடுத்த ஐந்து வருடங்களில் கொண்டு வரப்போவதாக கடந்த மாதம் செய்திகளில் வந்தது.

    அதோடு தன்னுடைய இயங்குதள கட்டுப்பாட்டை (ஆப்பிள் போல) இதன் மூலம் தக்க வைக்கலாம் என்பதும்.

    கூகுள் இந்த நிலையை அடைய கடும் முயற்சி எடுத்து இருக்கிறது, நிறைய பணத்தை முதலீடு செய்து இருக்கிறது. அதில் தன்னுடைய லாபத்தை எடுக்கவே நினைக்கும். இதில் என்ன தவறு?

    நீங்கள் கூகுள் நிலையில் இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்?

    சரி! நீங்கள் அனைவரும் கூறியது போலவே வருகிறேன்.

    கூகுள் க்ரோம், தேடல் செயலிகள் இல்லையென்றால், வேறு எந்த செயலியும் இருக்கக் கூடாது என்பது தான் இதன் மறைமுக அர்த்தம்.

    அப்படி இருக்கும் போது எந்த செயலியுமே இல்லாத மொபைலில் எதுவுமே தெரியாத ஒருவர் அதாவது கூகுள் ப்ளே ஸ்டோரில் எதுவுமே வாங்க தெரியாத ஒருவர் எப்படி ஒரு உலவி, தேடல் செயலியை பயன்படுத்துவார்?

    எப்படி தன்னுடைய மொபைலில் நிறுவுவார்? எப்படி நான்காம் பக்கத்தில் இல்லாத ஒரு செயலியை பயன்படுத்துவார்?

    பல பில்லியன் கணக்கில் முதலீடு செய்தவனும், ஒரே ஒரு உலவி செயலியை வெளியிட்டவனும் சமம் என்றால், இது என்னங்க நியாயம்?!

  7. @ப்ரியா, ஃபேஸ்புக் குறித்த சந்தேகத்துக்கு பதில்

    “Was your data included in the data sold to malicious third parties?” Rep. Anna Eshoo, a Democrat from California, asked. “Your personal data.”

    “Yes,” Zuckerberg answered promptly, without elaboration on what was taken from his profile.

    மார்க், பயனர் தகவல்களை தான் விற்றதாக ஒத்துக்கொண்டார். கூகுளில் தேடி பார்க்கலாம், விரிவாகக் கிடைக்கும்.

    துவக்கத்தில் third party நிறுவனங்கள் எடுத்துக்கொண்டதாக சமாளித்து வந்தார்கள். ஆதாரம் சிக்கியதால் ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க முடியாததால் வேறு வழியின்று ஒத்துக்கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!