ரயிலில் Lower Berth முன்பதிவு செய்வது எப்படி?

4
Lower Berth

யில் பயணம் சிறப்பானது என்றாலும், வயதானவர்களுக்கு Lower Berth கிடைக்கவில்லையென்றால், சிக்கலான பயணமும் கூட. Image Credit

Lower Berth

வயதானவர்கள் படுப்பதற்குக் கீழ் படுக்கையைத் தான் விரும்புவார்கள் காரணம் மேலே ஏறிச்சென்று படுக்க முடியாது என்ற காரணத்தால்.

ஆனால், ரயிலில் தானியங்கி முன்பதிவு என்பதால், Lower விருப்பத்தேர்வு செய்தாலும் Middle / Upper / Side Upper Berth கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

சில நேரங்களில் இதற்காகவே பயணசீட்டை ரத்துச் செய்து திரும்ப முன்பதிவு செய்ய வேண்டிய சோக நிகழ்வெல்லாம் நடந்துள்ளது.

இது குறித்த புகார் அதிகரித்ததால் கீழ் படுக்கையை வயதானவர்கள் முன்பதிவு செய்ய ரயில்வே துறை வாய்ப்பைக்கொடுத்தது.

இவ்வசதி முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டாலும், பலருக்கு இவ்வசதியைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை.

எந்த வயதினர் முன்பதிவு செய்யலாம்?

ஆண்கள் 60 வயதினரும் அதற்கு மேலும், பெண்கள் 45 வயதினரும், அதற்கு மேலும்.

எவ்வாறு முன்பதிவு செய்வது?

  • IRCTC தளத்தில் GENERAL என்பதற்குப் பதிலாக Lower Berth / Sr.Citizen பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • இரண்டு பேருக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
  • மூன்றாவது நபருக்கும் அதே பயணசீட்டில் முன்பதிவு செய்தால் GENERAL Quota பிரிவில் தானியங்கியாக முன்பதிவாகி விடும்.
  • இருவர் இருந்தால், தனித்தனியாகப் பெட்டி இருந்தால் பரவாயில்லையா? என்று கேட்கும். அதில் ஒரே பெட்டி என்று தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
  • இவற்றைத் தேர்வு செய்தால், கீழ் படுக்கையில் பயணச்சீட்டு கிடைத்து விடும்.
  • பெரும்பாலும் S1, S2 பெட்டிகளிலேயே Lower Berth கிடைக்கிறது.
  • இதனால் நடக்கும் தூரமும் குறைகிறது, இல்லையென்றால் பேட்டரி வாகனத்தைப் பயன்படுத்திப் பெட்டிக்குச் செல்ல வேண்டும்.

தேவைப்படுகிறவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

ரயிலில் ‘Boarding Point’ மாற்றுவது எப்படி?

Where Is My Train | App

தனியார் முகவர்களுக்குத் தடை விதிக்க IRCTC முடிவு

நிறைவேறாத ரயில்வே கனவு

ரயில்வே துறையில் தனியார் சரியா தவறா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. நான் முன்பே பல முறை கூறியது போல ரயிலில் பயணிப்பது போல் உள்ள சுகம் வேறு இந்த பயணத்திலும் இல்லை.. அதுவும் எல்லா இடங்களிலும் நின்று நின்று மெதுவாக செல்ல கூடிய ரயில்களில் பயணிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.. 2004 ஆம் ஆண்டில் மே மாதம் சென்னையில் என்னுடைய முதல் வேலைக்கான நேர்காணலை முடித்து விட்டு, நண்பர் ஒருவர் மூலம் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், விழுப்புரம் செல்ல டிக்கெட் (ரூபாய் 24 என நினைக்கிறேன்) எடுத்து காலை 6.15 am அளவில் புறப்பட்டு 10.45 am போல் விழுப்புரம் சென்றதாக நினைவு..

    முதல் நேர்காணல், நன்றாக கேள்விகளுக்கு பதில் அளித்தேன், வேலை எப்படியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை, அதுவும் சென்னையில் வேலை, 3500 ரூபாய் சம்பளம், மனது முழுக்க எதிர்கால கனவுகள், சென்னையை தாண்டி ரயில் புறப்பட, புறப்பட ஏனோ மனது துள்ளி குதித்தது.. என்னுடை பெட்டியில் ஒருவரும் இல்லை, பைலை தலைக்கு வைத்து விட்டு சும்மா குட்டி தூக்கம் போட்டேன்..இடையில் சிறிது பதட்டம் வேறு பாக்கெட்டில் உள்ள 50 ரூபவா யாராவது எடுத்து விடுவார்களோ என்ற பயம்?? சிறிது நேரம் பின்பு விழித்து பார்த்த போது ரயில் அமைதியாக சென்று கொண்டிருந்தது..

    என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத தருணங்களில் இதுவும் ஒரு முக்கியமான தருணம். எனக்கு ரயில் பயணம் என்றாலே இந்த நினைவு தான் முதலில் வரும்.. என்னை போல் என் மகனுக்கு ரயில் பயணம் மிகவும் பிடிக்கும்.. மனைவிக்கு சுத்தமாக பிடிக்காது.. ரயிலிக்கும் எங்கள் குடுபத்திற்குமான உறவு பல வருடங்களாக தொடர்ந்து கொண்டு வருகிறது.. சக்தியுடன் ஒரு நெடுதூர ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது இருவரது எண்ணம்.. இடம் கன்னியாகுமரியாக இருக்கலாம்.. அடுத்த விடுமுறையில் வரும் போது முயற்சிக்க வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. துணையாக ஒருவர் – துணை Male must be above 60 or துணை Female must be above 45 then it will be considered for Lower Birth

    The below details from IRCTC Website

    LOWER BERTH/Sr. CITIZEN Quota berths are lower berths earmarked only for male of age 60 years and above/female of age 45 years and above, when traveling alone or two passengers (under mentioned criteria) traveling on one ticket.

  3. @யாசின்

    “இடையில் சிறிது பதட்டம் வேறு பாக்கெட்டில் உள்ள 50 ரூபவா யாராவது எடுத்து விடுவார்களோ என்ற பயம்?? சிறிது நேரம் பின்பு விழித்து பார்த்த போது ரயில் அமைதியாக சென்று கொண்டிருந்தது.”

    🙂 🙂 எனக்கும் இது போல அவ்வப்போது சந்தேகம் வரும்.

    “என்னை போல் என் மகனுக்கு ரயில் பயணம் மிகவும் பிடிக்கும்.. மனைவிக்கு சுத்தமாக பிடிக்காது.. ”

    உங்கள் மனைவி உங்கள் விருப்பங்களுக்கு அப்படியே நேர் எதிர் போல 😀 நல்ல பொருத்தம்.

    “சக்தியுடன் ஒரு நெடுதூர ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது இருவரது எண்ணம்.. இடம் கன்னியாகுமரியாக இருக்கலாம்.. ”

    எனக்கும் இது போல ஆன்மீகப்பயணம் செல்ல வேண்டும் என்பது விருப்பம் ஆனால், பணி ஓய்வு பெற்றால் தான் செல்ல முடியும் போல 🙂 .

  4. நீங்கள் கூறுவது சரி தான்.

    துணையாக ஒருவர் என்பது, மிக மூத்த வயதில் ஒருவர் செல்லும் போது அவருக்கு துணையாக அனுமதிக்கப்பட்ட வயதில் செல்பவரை மனதில் வைத்துக் குறிப்பிட்டேன்.

    என் அம்மாவும், அக்காவும் வந்ததை மனதில் வைத்து எழுதினேன் ஆனால், படிப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படலாம் என்பதால் ‘துணையாக ஒருவர்’ என்பதை நீக்கி விட்டேன்.

    நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here