கொலை வெறியாக்கிய SBI

12
கொலை வெறியாக்கிய SBI

போராடி பெறுவது துவக்கத்தில் எரிச்சலாக இருந்தாலும், பின்னாளில் அதில் கிடைக்கும் திருப்தி முடிந்தவரை எதையும் விட்டுவிடாமல் போராடி பெற வேண்டும் என்ற எண்ணங்களைத் தோற்றுவித்து விட்டது. Image Credit

பின்வரும் என் அனுபவங்கள் படிக்கவே உங்களுக்குச் சலிப்பாக இருக்கலாம் ஆனால், அதைப் போராடி பெற்று இருக்கிறேன் என்றால், கொஞ்சம் பெருமையாகவே உள்ளது.

பின்னாளில் படித்துப்பார்க்க பதிவு செய்ய வேண்டும் என்றே ஒரே காரணத்துக்காக மட்டுமே எழுதுகிறேன்!

எனவே, பொறுமையுள்ளவர்கள் மட்டும் தொடரலாம். மற்றவர்கள் விருப்பப்பட்டால், SKIM Reading செய்யலாம்.

SBI வாடிக்கையாளர் சேவை விமர்சனம்

SBI வங்கியின் மோசமான வாடிக்கையாளர் சேவை குறித்த ஏராளமான மீம்ஸ் பார்த்து இருப்பீர்கள். இதுவும் அது போன்ற மோசமான அனுபவம் தான்.

என்னைப் பொறுத்தவரை SBI சிறப்பான சேவை தான் ஆனால், அதன் Process ல் தடை ஏற்பட்டால், பொறுமையின் எல்லை எதை என்பதை நமக்கு காட்டி விடுவார்கள்.

கிரி! இவ்வளவு போராடி இந்தக் கிரெடிட் கார்டை பெற வேண்டுமா?‘ என்ற இயல்பான கேள்வி படிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும்.

இதற்கு இரு காரணங்கள் மட்டுமே!

  • எனக்கு எந்த அவசரமுமில்லை, இந்தக் கார்டு வந்தால் தான் எனக்கு வாழ்க்கையே எனும் அளவுக்கு எதுவுமில்லை.
  • எந்த எல்லை வரை தான் இப்பிரச்சனை போகும் என்ற எதிர்பார்ப்பும், என்ன தான் ஆகிறது? என்று பார்த்து விடலாம் என்ற ஆர்வமுமே காரணம்.

எதனால் இந்தக் கார்டு?

பல்வேறு சலுகைகளுடனான கிரெடிட் கார்டுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதில் ஒவ்வொருவரின் தேவையைப் பொறுத்துப் பெறலாம்.

எனவே, கிரெடிட் கார்டு வாங்கும் ஒவ்வொருவரும் தனக்கு எந்தக் கார்டு வாங்கினால் நல்லது என்று விசாரித்து, கூகுளில் தேடி வாங்க வேண்டும்.

SBI 5% சலுகையையுடன் Cashback கார்டு அறிமுகப்படுத்திய போது, என் தேவைக்கு இலாபமாக இருக்கும் என்று SBI தளத்தில் விண்ணப்பித்தேன்.

ஒரே வாரத்தில் Approve ஆகி நான்கு நாட்களில் கார்டு வரும் என்று குறுந்தகவல் வந்தது.

இதன் பிறகான சம்பவங்களே இக்கட்டுரை எழுதக்காரணம் 🙂 . முடிந்தவரை பிரச்சனைகளைச் சுருக்கமாகக் கூற முயற்சித்துள்ளேன்.

சம்பவம் 1

SBI சொன்ன மாதிரியே கார்டை அனுப்பி விட்டது, டெலிவரி நிறுவனம் Delhivery.

Delhivery நபர் கார்டை கொடுத்து OTP அனுப்பினார், வரவில்லை. திரும்ப முயற்சித்தும் வரவில்லை.

சார்! OTP இல்லாமல் என்னால் கொடுக்க முடியாது. நாளை முயற்சிக்கிறேன், OTP quota முடிந்து விட்டது‘ என்றார்.

இவரிடம் கோபப்பட எதுவுமில்லையே! சரி என்று கூறி கார்டை திரும்பக் கொடுத்து விட்டேன்.

சம்பவம் 2

அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும் அதே நிலை. மூன்று முறை முயற்சிப்பார்கள். டெலிவரி செய்ய முடியவில்லை என்றால், திரும்ப அனுப்பி விடுவார்கள்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல, கண் முன்னால் கார்டு இருக்கிறது ஆனால், என்னால் வாங்க முடியவில்லை, கடுப்பாக இருந்தது.

சம்பவம் 3

இதன் பிறகு SBI வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன் ஆனால், பிரச்சனை என்னவென்பதையே புரிந்து கொள்ளாமல் template மின்னஞ்சல்களாக அனுப்பி வெறியாக்கியதால், Call Center அழைத்தேன்.

பிரச்சனையைக் கூறி, வேறு டெலிவரி நிறுவனத்தில் அனுப்பும்படி கூறினேன்.

அதெல்லாம் முடியாது சார். நாங்க இதில் மட்டுமே அனுப்புவோம்‘ என்றார். ‘நீங்கள் அனுப்பினால் இதே பிரச்சனை வரும்‘ என்றேன்.

இல்லை சார் வராது‘ என்றார். எனக்கும் வேறு வழி இல்லாததால், சரி என்றேன்.

சம்பவம் 4

அதே Delhivery நிறுவன நபர், ‘சார்! OTP சொல்லுங்க’ என்கிறார்.

வரவில்லை. திரும்பச் சம்பவம் 1, சம்பவம் 2 படித்துக்கொள்ளுங்கள்.

சம்பவம் 5

திரும்ப SBI அழைத்தேன், எடுத்தவர் பிரச்சனையைப் புரிந்து கொண்டு பேசினார்.

சார் நான் புதிய கார்டை அனுப்புகிறேன், இதில் வேறு நிறுவனத்தில் அனுப்ப Note Add பண்ணி விடுகிறேன்‘ என்றார். அப்பாடா! என்று இருந்தது.

காரணம், இது கொஞ்சம் Sensible பதிலாக இருந்தது.

சம்பவம் 6

ஒரு வாரம் கழித்து,

சார்! Delhivery யிலிருந்து பேசுறோம்‘ என்கிறார்.

எனக்கு எப்படி இருந்து இருக்கும்? என்று யோசித்துக்கொள்ளுங்கள். கொலைவெறி ஆகிட்டேன்.

Delhivery நபரிடம் உங்க Team Head எண் கொடுங்க அவரிடம் பேசுகிறேன் என்று வாங்கிக்கொண்டு அவரை அழைத்தேன்.

அவரிடம் பேசிய பிறகு, அவர், ‘சார் என்னோட Lead கிட்ட பேசுங்க‘ என்று இன்னொரு எண்ணைக் கொடுத்தார்.

அவர், ‘சார்! நாங்க OTP இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. SBI இந்த விசயத்துல ரொம்ப Strict, எங்களுக்கு ₹5000 அபராதம் விதித்து விடுவார்கள்‘ என்கிறார்.

என்ன தாங்க பண்ணுறது?!‘ என்று கேட்டேன்.

‘நீங்க SBI கிட்ட தான் சொல்லணும், நானும் SBI க்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்‘ என்றார். இவரிடம் வேறு என்ன பேசுவது? சரி என்று கூறி விட்டேன்.

சம்பவம் 7

இது நான்காவது முறை.

திரும்ப SBI வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்துப் பிரச்சனையை விளக்கினேன். ‘சார்! மின்னஞ்சலில் OTP வருவது போல மாற்றியுள்ளேன்‘ என்றார்.

இதில் எனக்கு நம்பிக்கையில்லை ஆனாலும், எனக்கு வேறு வழியில்லை.

சம்பவம் 8

ஒரு வாரம் கழித்து ‘சார்! உங்களுக்கு டெலிவரி வந்துள்ளது‘ என்று திரும்ப Delhivery யிடமிருந்து அழைப்பு.

ஆனால், எதிர்பார்த்தது போல மின்னஞ்சலில் OTP வரவில்லை. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை.

முதல் முறையிலேயே கார்டை Retun செய்யக் கூறி விட்டேன். கிட்டத்தட்ட Delhivery நிறுவனத்தில் உள்ள அனைவருமே என் வீட்டுக்கு வந்து சென்று விட்டார்கள்.

எங்க தெரு பெயரைக் கேட்டாலே, OTP வராதேன்னு நினைத்து இருப்பார்கள்.

இதுவரை நான்கு முறை நடந்து விட்டது ஆனால், தீர்வில்லை. பேசாமல் கார்டை ரத்து செய்து விடலாமா! என்று தோன்றியது.

சரி! என்னதான் ஆகிவிடும் என்று பார்ப்போம் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.

சம்பவம் 9

இவர்களை நம்பி பயனில்லை என்று இணையத்தில் இவர்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது என்று தேடியதில், OMR சாலையை SBI தளம் காட்டியது.

எங்கள் அலுவலகத்திலிருந்து பக்கம் என்பதால், சரி நேரடியாகவே சென்று பேசிப்பார்ப்போம் என்று சென்றேன்.

அங்கே சென்றால், அங்குள்ள காவலர், ‘சார்! SBI அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றி விட்டார்கள். எனவே, அங்கே போய்ப் பாருங்க‘ என்கிறார்.

செம்ம காண்டாகி விட்டது. இதைக்கூடவா தளத்தில் update செய்து இருக்க மாட்டார்கள் என்று எரிச்சலாகி விட்டது.

சரி இதைச் சரி செய்ய அவர்களிடம் கூறலாம் என்று மின்னஞ்சல் அனுப்பினால்,

நீங்க அலுவலகத்தில் சென்று நேராகப் புகார் கொடுங்கள் என்று பதில் வருகிறது. ‘நான் ஏன்யா நடுராத்திரியில் சுடுகாடு போகிறேன். வேணும்னா நீ மாத்திக்கோ இல்லைனா விட்டுடுன்னு‘ நினைத்துப் புறக்கணித்து விட்டேன்.

சம்பவம் 10

இவர்களோடு சண்டை போட்டுப் பயனில்லை என்று புரிந்து, Escalation Matrix உள்ளதா? என்று தேடிப்பார்த்தேன், இருந்தது.

First Level Escalation nodalofficer@sbicard.com என்று இருந்தது. இவர்களுக்கு மொத்தப்பிரச்சனையையும் விளக்கி மின்னஞ்சல் அனுப்பினேன்.

உடனே Auto Generated மின்னஞ்சல் ஐந்து நாட்களில் பதில் அளிப்பதாக வந்தது.

இடைப்பட்ட நேரத்தில் எனக்கு என்ன தோன்றியது என்றால், ஒருவேளை DND யில் பதிவு செய்து வைத்துள்ளதால், SMS Block ஆகிறது என்ற சந்தேகம் இருந்தது.

எனவே, SMS தொடர்பான DND கட்டுப்பாடுகளை நீக்கி, ஒரு சில நாட்களுக்குப் பிறகு Delhivery தளத்தில் டெலிவரி Status சோதனை செய்தால், SMS வந்தது.

அப்பாடா! இனி இதிலேயே அனுப்பினாலும் வந்து விடும் என்று திருப்தியாகி விட்டேன். பல முறை சோதித்துப் பார்த்தேன், SMS வந்தது.

சம்பவம் 11

நேரடியா Airtel Customercare அழைத்துப் பேசினேன்.

அவர்கள், ‘சார்! எந்தக் குறுந்தகவலும் வரவில்லை என்றால் பார்க்கலாம், குறிப்பிட்ட ஒரு இடத்திலிருந்து வரவில்லையென்றால், அந்த நிறுவனத்திடம் தான் கேட்க வேண்டும்‘ என்றார்கள்.

Delhivery யில் புகார் அளிக்கலாம் என்றால், OTP வராததால், என் கணக்கில் நுழைய முடியவில்லை. உள்ளே சென்றால் தானே புகார் அளிக்க முடியும்.

தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களும் இல்லை.

பேஸ்புக்கில் பிரச்சனையைக் கூறி புகார் அளித்தால், ஆத்தா வையும் சந்தைக்குப் போகணும் காசு கொடுங்கற மாதிரி SBI வாடிக்கையாளர் சேவை மையம் சொல்வது போலவே பதிலளிக்கிறார்கள்.

கடுப்பாகி, இது வேலைக்காகாது என்று விட்டுவிட்டேன்.

சம்பவம் 12

சொன்ன நம்ப மாட்டீங்க, ஐந்து நாட்களுக்குப் பிறகு SBI (Escalation Team) அனுப்பிய மின்னஞ்சலைப் பார்த்தால், அதே Delhivery யிலேயே அனுப்பி இருந்தார்கள்.

கொலைவெறி ஆகிட்டேன். கண்டபடி திட்டி மின்னஞ்சல் அனுப்பினேன்.

இந்நிலையில் ஐந்தாவது முறையாகத் திரும்ப Delhivery யில் வந்தது. SMS பிரச்சனை சரியானதாக நினைத்து இருந்ததால், கொஞ்சம் நிம்மதி இருந்தது.

அதுவரை வந்த OTP, திரும்ப வரவில்லை. செம கடுப்பாகி விட்டது.

‘சார்! இன்னொரு முறை முயற்சிக்கிறேன்‘ என்றார். அவர் முயற்சித்த பிறகு முதலில் முறை அனுப்பிய OTP வந்து விட்டது ஆனால், இரண்டாவது முறை முயற்சித்ததால் முதல் OTP Expiry ஆகி விட்டது.

அதன் பிறகு OTP வரவே இல்லை.

என் நிலையை நினைத்துப் பாருங்கள். பொறுமையோட எல்லைக்கு ஓடிக்கொண்டு இருந்தேன்.

வடிவேல் ஒரு படத்தில் தப்பிக்கச் சந்தானபாரதி காரில் ஏறிக்கொள்வார் ஆனால், அவர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறியதும் பயந்து எட்டிக்குதித்துத் தப்பித்து விடுவார் ஆனால், அடிபட்டு விடும்.

ஆனால், சந்தானபாரதி சென்ற கார் மண்ணில் புதைந்து எதுவும் ஆகாமல் நின்று விடும்.

அடடா! இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து இருந்தால், அடிபடாமல் தப்பித்து இருக்கலாமே என்று வடிவேல் கூறுவார்.

அது மாதிரி ஒரு 10 நொடிகள் அமைதியா இருந்து இருந்தால் முதல் OTP யில் வேலை முடிந்து இருக்குமே என்று கடுப்பாகி விட்டது.

சம்பவம் 13

இதன் பிறகு principalnodalofficer@sbicard.com என்ற அடுத்த நிலை Escalation க்கு இதுவரை இருந்த அனைத்து Tickets விவரங்களையும் குறித்து அனுப்பினேன்.

ஒவ்வொரு முறை டெலிவெரி செய்யும் போதும் ₹1000 கட்டணம், இதுவரை ₹5000 வீணடித்துள்ளீர்கள் என்பதையும் குறிப்பிட்டேன்.

மூன்று நாட்களில் பார்ப்பதாக Auto generated பதில் வந்தது, மூன்று நாட்கள் கழித்து ஐந்து நாட்களில் பதில் அளிப்பதாக இன்னொரு மின்னஞ்சல் வந்தது.

இடைப்பட்ட காலத்தில் போராட்டம் 80 நாட்கள் கடந்து இருந்தது.

அனுப்பி விட்டதாக மின்னஞ்சல் வந்தது. அவர் கொடுத்த AWB எண் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்! அதே Delhivery.

இதை விட மிகப்பெரிய கடுப்பு கடந்த முறை அனுப்பி இருந்த அதே AWB எண், அது Return ஆனது கூடத் தெரியாமல் அதை அனுப்பி இருக்கிறார்கள்.

எனக்கு உண்மையிலேயே வியப்பாகி விட்டது. இப்படியும் முட்டாள்கள் இருப்பார்களா என்று!

ஏனென்றால், Escalation first level என்றாலே முக்கியமானது ஆனால், second level escalation நபர்களே அடி முட்டாள்களாக இருந்தால், என்ன செய்வது?!

இவர்கள் ஏன் பிரச்சனை என்னவென்பதையே புரிந்துகொள்ளாமல் பணி புரிகிறார்கள் என்று சலிப்பாகி விட்டது.

இப்படிச் சொதப்பியதில் அடுத்த Escalation என்று customerservicehead@sbicard.com க்கு அனுப்பலாம் என்று முடிவு செய்தேன்.

இவர்களும் செய்யவில்லையென்றால் அடுத்தப் பிரம்மாஸ்திரம் Ombudsman தான் ஆனால், இவர்கள் டெலிவரி பிரச்சனையைப் பார்ப்பார்களா என்று சந்தேகம்.

சம்பவம் 14

ஆரம்பமே இப்படித்தான் ஆரம்பித்தேன்.

Pls READ THE COMPLETE MAIL AND UNDERSTAND THE ISSUE AND THEN REPLY. DO NOT SEND A TEMPLATE ANSWER.

இதன் பிறகு இருந்த எரிச்சலை எல்லாம் மின்னஞ்சலில் கொட்டி, Ticket விவரங்களுடன் அனுப்பி வைத்தேன்.

சம்பவம் 15

facebook twitter தளங்களிலும் புகார் அளிக்கலாம் என்று கூறி இருந்தது.

சரி! ட்விட்டரில் புகார் அளிப்போம் என்று https://twitter.com/SBICard_Connect சென்று இதுவரை சந்தித்த பிரச்சனைகளை DM ல் கூறி ஏதாவது செய்ங்க, 80+ நாட்கள் ஆகி விட்டது என்று அனுப்பினேன்.

இதன் பிறகு மறந்து விட்டேன், Escalation ல் இருப்பவர்களே தீர்க்க முடியவில்லை, இவர்கள் என்ன செய்து விடப்போகிறார்கள் என்பதால்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் இதில் பணி புரிந்து கொண்டுள்ளோம், விரைவில் தொடர்பு கொள்கிறோம் என்று பதில் வந்தது.

முக்கியமாக, வந்த பதில் Template பதிலாக இல்லாமல், இயல்பாக இருந்தது. சரி பார்ப்போம் என்று காத்திருந்தேன்.

அடுத்த நாள் SBI யிலிருந்து அழைப்பதாகக் கூறி நாங்கள் Speed Post ல் அனுப்பியுள்ளதாகக் கூறினார். ஏற்கனவே, இது போல ஒருவர் கூறி Delhivery யில் வந்ததால், ‘இதே தான் சொல்றீங்க ஆனால், வருவதில்லை‘ என்றேன்,

இல்லை சார் இந்த முறை வரும்‘ என்றார்.

பின்னர் ட்விட்டரிலிருந்து உறுதிப்படுத்தினார்கள். ஒருவேளை நிஜமாகவே அனுப்பி விடுவார்களோ! என்று நினைத்தேன்.

சம்பவம் 16

ஐந்து நாட்கள் கடந்தது ஒன்றையும் காணோம்.

திரும்ப அவர்களிடம் DM ல் சென்று கூற, check செய்து வருவதாகக் கூறி சென்று, பின்னர் என் முகவரி தவறாக இருப்பதாகக் கூறினார்.

முகவரி தவறாக வாய்ப்பே இல்லை, அதே தான் என்று கூறி திரும்ப முகவரியை உறுதி செய்தேன்.

மாலையில், ‘ஓரிரு நாட்களில் வந்து விடும்‘ என்றார்.

Speed Post

குடும்பத்தினர் ஊருக்குச் சென்று விட்டதால், வந்தால் வாங்க ஆள் இல்லையென்று பக்கத்து வீட்டில் அடையாள அட்டையைக் கொடுத்து இருந்தேன்.

ஆனால், இரு நாட்களாக வரவில்லை. அடுத்த நாள் ஊருக்குச் செல்ல வேண்டும்.

அடுத்த நாள் அலுவலகத்திலிருந்து மாலை வீட்டுக்கு வந்தால், கதவில் Speed post ல் இருந்து சீட்டு வைத்துச் சென்று இருந்தார்கள்.

அதாவது, ‘நாங்கள் வந்தோம் நீங்க இல்லை. எனவே, இதை எடுத்து வந்து வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது Return செய்து விடுவோம்‘ என்று.

Speed post ஏன் என்னை அழைக்கவில்லை என்று புரியவில்லை. அழைத்துக் கூறி இருந்தால், முதல் முறை Speed post ல் அனுப்பிய போதே வாங்கி இருப்பேன்.

டெலிவரி தொடர்பான SMS எதுவும் வரவில்லை, SBI அனுப்பியது தவிர்த்து.

SBI அனுப்புவதும் Reference Number மட்டுமே இருக்கும், இதை வைத்து Speed post தளத்தில் பார்க்க முடியாது.

Speed Post ட்விட்டர் சேவையில் Reference எண் கொடுத்துக்கேட்டால், அதைக் கொடுங்க இதைக் கொடுங்க ன்னு எல்லாத்தையும் கேட்டுட்டு இறுதியில் AWB எண் கொடுங்க என்கிறார்கள்.

அது இல்லைனு தானே Reference Number கொடுத்தேன், அப்புறம் எதுக்கு முகவரி விவரங்கள் உட்பட அனைத்தையும் வாங்குனீங்க என்று எரிச்சலானது.

இறுதியாக…

நான் வேற அதே இரவு ஊருக்குச் செல்ல வேண்டும், என்னடா இது! சோதனை மேல் சோதனை என்று எரிச்சலாகி விட்டது.

பின்னர் தெரிந்தவரிடம் கூறி அடையாள அட்டையைக் கொடுத்து வாங்கிக்கொள்ளச் சொன்னேன். இருப்பினும் பயம், கொடுப்பார்களா மாட்டார்களா என்று.

நமக்குப் பதிலாக ஒருவர் அடையாள அட்டையைக் கொடுத்து வாங்கலாம் என்பதால், கொஞ்சம் தைரியம் இருந்தாலும், சந்தேகம் இருந்தது.

அடுத்த நாள் பல்வேறு கேள்விகளுக்குப் பிறகு அவரிடம் கொடுத்து விட்டார்கள்.

பின்னர் ஊரிலிருந்து வந்து 90 நாட்கள் தொடர் போராட்டத்துக்குப் பிறகு உண்மையாகவே கார்டை கையில் வாங்கி விட்டேன் 🙂 .

customerservicehead@sbicard.com முகவரிக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு எந்தப் பதிலும் இல்லை ஆனால், principalnodalofficer@sbicard.com திரும்ப மின்னஞ்சல் அனுப்பி ட்விட்டர் சேவை கூறிய தகவலைக் கூறினார்கள்.

Delhivery

OTP அனுப்பும் நிறுவனங்கள் SMS மட்டுமல்லாது, அழைப்பு மூலமாகவும் OTP கொடுக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இதை இவர்கள் செய்து இருந்தால், முதல் முறையிலே வாங்கி இருப்பேன்.

ஏனென்றால், பிரச்சனை எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் உள்ளது. இதை டெலிவரி செய்ய வருபவர்களே கூறுகிறார்கள்.

எனவே, SMS உடன், அழைப்பு வழியாகவும் OTP கொடுக்கும் வசதியை நிறுவனங்கள் தர வேண்டும்.

இடைப்பட்ட காலத்தில், Delhivery share குறைந்தது.

இப்படியே போய் நிறுவனம் திவாலாகி விட்டால், இனி யாரும் இந்நிறுவனத்தில் அனுப்ப மாட்டார்கள் என்று நினைக்கும் அளவுக்குக் கடுப்பாகி இருந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் 🙂 .

இவர்கள் பெயர் பெரிய பிரச்சனை, பேசும் போது Delhivery ன்னு சொல்வதை Delivery ன்னு புரிந்து SBI வாடிக்கையாளர் சேவை மையத்தில் குழப்பம்.

இருக்குற பிரச்னை போதாது என்று இது வேற. வைக்க வேற பெயரே கிடைக்கவில்லையா?!

Delhivery யில் Voice OTP வசதி செயல்படுத்தி இருக்கலாமே என்ற குறை மட்டுமே! மற்றபடி அவர்கள் சேவை சிறப்பானதாகவே இருந்தது.

Virtual Card

ICICI வங்கியின் கிரெடிட் கார்டுகளை கையில் பெறுவதற்கு முன்னரே, அதனுடைய செயலியில் தகவலைப் பெற்று மெய்நிகர் (Virtual) முறையில், இணையத்தில் பயன்படுத்த முடியும்.

Physical ஆக பயன்படுத்த மட்டுமே கார்டு தேவை.

Cashback கார்டை இணையத்தில் மட்டுமே பயன்படுத்தப்போவதால், எனக்கு Physical கார்டு அவசியமே இல்லை ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மெய்நிகர் சேவையை SBI கொடுப்பதில்லை.

இதைக்கொடுத்து இருந்தால், கார்டு தாமதமாகி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையே பட்டு இருக்க மாட்டேன்.

Card Fee

இந்தக் களேபரத்தின் இடையே, சம்பவம் 5 ல் கூறியபடி வேறு கார்டு அனுப்பியதற்கு ₹100 +₹18 GST போட்டு விட்டார்கள். இதையெப்படி விட முடியும்?

இதையும் ட்விட்டர் சேவையில் என் தவறில்லை என்று விளக்கி Reverse செய்து தரக்கேட்டேன். இரு நாட்களில் செய்து தந்து விட்டார்கள்.

இதை மின்னஞ்சல் வாடிக்கையாளர் சேவையில் விளக்கி அவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை ஆனால், ட்விட்டரில் ஒரே வேண்டுகோளில் முடித்துக் கொடுத்தார்கள்.

Social Media Team என்ற ட்விட்டர் வாடிக்கையாளர் சேவை பணியாளர்கள் Jus like that பிரச்சனையை முடித்துத் தந்து விட்டார்கள்.

முதல் முறையே இவர்களிடம் சென்று இருந்தால், ஒரே வாரத்தில் பிரச்சனை சரியாகி இருக்கும் 🙁 .

இவர்களுக்கு நன்றி தெரிவித்து DM செய்தேன்.

என்னைப் போல எத்தனை பேர் பொறுமையாகச் சண்டை போடுவார்கள்?! பெரும்பான்மையோர் கார்டை ரத்து செய்து இருப்பார்கள்.

நானே ஒருமுறை செய்து விட நினைத்தேன் ஆனால், மேற்கூறியது போல என்ன தான் ஆகிறது என்று பாப்போம் என்ற ஆர்வத்தில் தொடர்ந்தேன்.

வாடிக்கையாளர் சேவை மையம்

SBI மின்னஞ்சல் பிரிவில் உள்ளவர்களுக்கு அடிப்படை தகுதி common sense இருக்கக் கூடாது என்ற நிபந்தனை இருக்குமா?! என்ற தீவிர சந்தேகம் உள்ளது.

ஏனென்றால், நாம் ஒன்று கேட்டால், சம்பந்தமே இல்லாத பதிலை அளிப்பார்கள்.

எனக்குக் கோபத்தை விட இப்படிப்பட்ட முட்டாள்களை, common sense என்ற ஒன்றே இல்லாதவர்களைப் பணியில் அதுவும் Escalation பிரிவிலும் வைத்து இருக்கிறார்களே என்ற எரிச்சலே மேலிட்டது.

இருப்பதிலேயே மிகப்பெரிய சோதனை, மின்னஞ்சலில் இவர்களுடன் பேசுவது. நாம் ஒன்றை கேட்டால், அதற்குத் தொடர்பே இல்லாத பதிலைத் தருவார்கள்.

எப்படி இது போன்றவர்களைப் பணியில் அமர்த்தியுள்ளார்கள் என்று தோன்றும். இதை விட, சொல்ல வேண்டிய பதில் ஒரு வரி இருக்கும் அதற்கு Template Answer அனுப்புவார்கள் பாருங்கள்.

நேரிலேயே சென்று பொளந்து விடலாம் என்று தோன்றும்.

எப்படித் திட்டினாலும், வழக்கமான template பதிலை அரைப் பக்கத்துக்குப் போட்டு விட்டு, நாம் கேட்டதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு வரி பதிலை அளிப்பார்கள்.

திட்டி அனுப்பினாலும், ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்’ மாதிரி தான் பதில் வரும்.

ICICI

இதே நேரத்தில் ICICI வங்கி கணக்கின் Debit Card expiry ஆகி விட்டது. அவர்களும் Delhivery யில் அனுப்பினார்கள்.

இதே OTP பிரச்சனையில் மூன்று attempt ஆகி return ஆகி விட்டது.

நீங்க நம்ப மாட்டீங்க, நான் கேட்கும் முன்பே அல்லது புகார் அளிக்கும் முன்பே அடுத்த நாள் Bluedart கூரியரில் அனுப்பி டெலிவரி செய்து விட்டார்கள்.

என்ன தான் அரசுத்துறை வளர்ந்தாலும், அவர்களின் அடிப்படை பிரச்சனைகள் இன்னும் மாறவில்லை.

SBI சிறந்த வங்கி, அவர்களின் சேவையும் சிறப்பு தான். இதைப் பலமுறை கூறியுள்ளேன் ஆனால், அவர்களின் process ல் பிரச்சனையானால் தொலைந்தோம்.

இது SBI மட்டுமல்ல, அரசுத் துறை அனைத்துக்கும் பொருந்தும்.

SBI யை எடுத்துக்கொள்ளுங்கள்,

சரியாக அனுப்பி இருந்தார்கள். OTP பிரச்சனை இல்லையென்றால், ஒரே வாரத்தில் பெற்று இருப்பேன் ஆனால், சின்னப் பிரச்சனை 90 நாட்களுக்கு இழுத்து விட்டது.

எவ்வளவு மனஉளைச்சல்!

Cashback Card

இக்கார்டை பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.

இக்கார்டு வரத் தாமதமான நேரத்தில், சலுகைகள் பலவற்றை மே 2023 முதல் குறைத்து விட்டார்கள் 🙂 .

என்ன கொடுமை சார்! இருப்பினும் இலாபகரமானது தான்.

கொசுறு

இப்படிப் போராடி பெறுவதில் எனக்கு எப்போதும் முன்மாதிரியாக நினைப்பது நண்பர் மாயவரத்தான் ரமேஷ் அவர்கள் தான்.

இவரளவுக்கு இல்லையென்றாலும், எதோ இதுபோலச் சிறு சிறு போராட்டம் / சண்டைகளைச் செய்து பெற்று விடுகிறேன்.

இவ்வாறு போராடி பெறுவதில் ஒரு கிக் இருப்பது உண்மை தான் 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

முட்டை பிரியாணியும் மீதி ஒரு ரூபாயும்

SBI வங்கி கொடுத்த அதிர்ச்சி!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

12 COMMENTS

  1. I’ve encountered similar problems with SBI through email follow-up, however Twitter support is the best way to contact SBI for assistance.

  2. இந்த மொக்க SBI CARD க்காகவா இவ்வளவு கஷ்டமா? Sbicard ஐ விட hdfc. Axis. Icici. இல் ஏராளமான சலுகைகள் இருக்கின்றன். இன்னொன்று sbicard எஸ்பிஐ வங்கியால் நடத்தப்படும் கிரெடிட் கார்டு சேவை கிடையாது. எஸ்பிஐ மேர்பார்வையில் 100% தனியார் கம்பெனியான GE CAPITAL என்ற தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் கிரெடிட் கார்டு சேவை ஆகும். எஸ்பிஐ வங்கி தனி இது தனி. அரசி வங்கி சேவையாக நீங்கள் இந்த கிரெடிட் கார்டு சேவையை குறிப்பிடுகிறீர்கள். இது sbi அனிமதியுடன் முழுக்க முழுக்க தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் கிரெடிட் கார்டு சேவை ஆகும். Sbi வங்கியே இந்த கிரெடிட் கார்டு சேவையை அளித்தால் சேவை இன்னும் மோசமாக இருக்கும். Sbi card வாடிக்கையாளர் சேவை மிகச்சிறப்பானது. நான் 8 வருடமாக உபயோகிக்கிறேன். காரணம் அது தனியாரால் நடத்தப்படுவதால்.

  3. கிரி உங்கள் பொறுமைக்கும், விடாமுயற்சிக்கும் பாராட்டுக்கள். Sbi மீது எங்க எப்படி புகார் தெரிவிப்பது என்று எல்லோருக்கும் தெரியாது.. Customer care, mail இதில் எல்லாம் புகார் தெரிவிக்க (16 சம்பவங்கள் செய்யும் அளவிற்கு) யாருக்கும் நிச்சயமாக பொறுமை இருக்காது. அட போட இது தேவை இல்லாத ஒன்று என்று 2…3…வது முயர்ச்சி யுடன் விட்டு விடுவதே அதிகம்.
    90… நாட்கள் முயற்சி நல்ல அனுபவம்.
    நன்றி

  4. @Ragu & Prabhakaran

    Yes. Here after I will coordinate with twitter support only.

    @ஹரிஷ்

    “இந்த மொக்க SBI CARD க்காகவா இவ்வளவு கஷ்டமா?”

    இந்தக்கட்டுரையின் மையக்கருத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை அல்லது கட்டுரையை முழுதாக படிக்கவில்லை.

    “sbicard எஸ்பிஐ வங்கியால் நடத்தப்படும் கிரெடிட் கார்டு சேவை கிடையாது. எஸ்பிஐ மேர்பார்வையில் 100% தனியார் கம்பெனியான GE CAPITAL என்ற தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் கிரெடிட் கார்டு சேவை ஆகும். ”

    யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவ்வட்டை SBI கடனட்டை என்றே கருதப்படும். என்ன பாராட்டு / விமர்சனங்கள் கிடைத்தாலும் அவை SBI யையே சாரும்.

    @சக்தி நன்றி 🙂

  5. கிரி.. உண்மையில் இந்த பதிவு என்னை வியக்க வைக்கிறது.. அதை விட உங்களின் பொறுமையையும் புரிந்து கொள்ள முடிகிறது.. படிக்கும் போது எளிதான கடந்து போகும் படி இருந்தாலும் உண்மையில் அதன் வலியை நீங்கள் மட்டும் தான் முழுவதும் உணர்ந்து கொள்ள முடியும்.. படிக்கும் எங்களை பொறுத்த வரை இது ஒரு சம்பவம் மட்டுமே!!! பகிர்வுக்கு நன்றி..

  6. கிரி. உங்கள் கட்டுரையை முழுவதுமாக படித்து தான் கமென்ட்ஸ் போட்டேன். ஒரு முறை நான் எனது எஸ்பிஐ கிரெடிட் கார்டு ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் நேரடியாக வங்கிக்கு சென்று புகார் அளித்தேன். அதற்கு வங்கி அதிகாரி எஸ்பிஐ கிரெடிட் கார்டு எஸ்பிஐ வங்கி நிர்வகிப்பதில்லை. அதற்கு என்று தனியாக தனியார் டீம் உள்ளது அந்த நம்பருக்கு கால் செய்தோ அல்லது மின்னஞ்சல் அனுப்பி தான் நீங்கள் தீர்வு காணவேண்டும் என கூறினார். ஐசிஐசிஐ எச்டிஎப்சி போன்று எஸ்பிஐ வங்கியே நேரடியாக கிரெடிட் கார்டை சேவையை வழங்குவதில்லை எனவும் கூறினார். அதை தான் நானும் கூறினேன்.

    • கிரி. Sbi simply save rupay card approval aagi 20 days mel aachu. Add-on card vandhuvittadhu. Bluedart courier il anupimaargal. But primary card adhrkku munndiye anupi vittargal. Aanl innum varavillai. Primary card courier ref no vaithi tracking seithal record not found enru varugiradhu. Seri enru bluedart call seithu pesinen. Sbi eppodhum ipdi dhan seigiraargal. Courier book seidhu viduvaargal udane ref no generate aagi vidum customer ku adhai anupi vittu product ai anupa neenda naatkal eduthu kolgiraargal enru koorinar. Nan card enru dhan sonnen bluedart il pesiyavar sbicard aah enru udane kettar. Nan thirumba sbi card ku call seithu ipdi avargal solgirar enru sonna udane vazhakkam nangal escalate panrom enru koorinargal. Nan gaandu aagi card cancel request edungal enaku card venam enru sonnen. Cancellation department ku transfer seidhargal avar Nan andha card ai cancel seidhu new card anupa udane request edukkiren enru solli irukkiraar. Innum one week parpen card Vara villai enraal card closer request koduthu viduven enru solli irukkiren. Sbi card service ivlo mosamaaga aagi vittadhu. Nan already simply click visa card 7 varudamaaga ubayogiyhu 3 month munnar dhan andha card ubayogam illai ena permanent cancel seidhen. Tharpodhu sbi simply save rupay vandhu vittadhu enbadhaal meendum apply seidhen. Approval aagi card ai anupiyadhaaga message vandhu 18 naal aagiyum card Vara villai. Bluedart ku call seidhu visaarithadhil dhan SBI in alatchiyam patri therindhadhu. Gaandu aagi vitten. Udane ungal katturai ninaivil vandhadhu. Adhan en anubavatthai oru comment pottu povom enru vandhen. SBI rupay epdi irukiradhu ena card vandhal use seidhu solgiren

  7. @யாசின் நன்றி 🙂

    @ஹரிஷ்

    “ஐசிஐசிஐ எச்டிஎப்சி போன்று எஸ்பிஐ வங்கியே நேரடியாக கிரெடிட் கார்டை சேவையை வழங்குவதில்லை எனவும் கூறினார். அதை தான் நானும் கூறினேன்.”

    நான் கூறியது பின்வருவதற்கு

    “இந்த மொக்க SBI CARD க்காகவா இவ்வளவு கஷ்டமா?”

    நான் இந்தக்கார்டை வாங்க இவ்வளவு கஷ்டப்படவில்லை. இப்பிரச்சனை எவ்வளவு தூரம் செல்கிறது என்று பார்ப்போம் என்ற ஆர்வத்தில் தான் இவ்வளவு முயற்சிகளைச் செய்தேன்.

    எப்போதுமே ஒரு பிரச்சனையைப் பாதியிலேயே விட்டுவிடாமல் எல்லை வரை சென்று பார்ப்பதில் ஒரு த்ரில் உள்ளது. இதை மையக்கருத்தாக வைத்துத்தான் இக்கட்டுரையை எழுதினேன்.

    அதோடு முன்னரே கூறியது போல பொதுமக்களுக்கு SBI Card என்று தான் தெரியுமே தவிர அதை SBI பராமரிக்கிறார்களா? அல்லது வேறு தனியார் பராமரிக்கிறார்களா? என்பதில் கவலையில்லை.

    எனவே, பாராட்டும், விமர்சனமும் SBI க்கே சேரும். நீங்கள் கூறியதை தவறு என்று கூறவில்லை, அது எனக்கு தகவல்.

  8. கிரி. Sbi simply save rupay card approval aagi 20 days mel aachu. Add-on card vandhuvittadhu. Bluedart courier il anupimaargal. But primary card adhrkku munndiye anupi vittargal. Aanl innum varavillai. Primary card courier ref no vaithi tracking seithal record not found enru varugiradhu. Seri enru bluedart call seithu pesinen. Sbi eppodhum ipdi dhan seigiraargal. Courier book seidhu viduvaargal udane ref no generate aagi vidum customer ku adhai anupi vittu product ai anupa neenda naatkal eduthu kolgiraargal enru koorinar. Nan card enru dhan sonnen bluedart il pesiyavar sbicard aah enru udane kettar. Nan thirumba sbi card ku call seithu ipdi avargal solgirar enru sonna udane vazhakkam nangal escalate panrom enru koorinargal. Nan gaandu aagi card cancel request edungal enaku card venam enru sonnen. Cancellation department ku transfer seidhargal avar Nan andha card ai cancel seidhu new card anupa udane request edukkiren enru solli irukkiraar. Innum one week parpen card Vara villai enraal card closer request koduthu viduven enru solli irukkiren. Sbi card service ivlo mosamaaga aagi vittadhu. Nan already simply click visa card 7 varudamaaga ubayogiyhu 3 month munnar dhan andha card ubayogam illai ena permanent cancel seidhen. Tharpodhu sbi simply save rupay vandhu vittadhu enbadhaal meendum apply seidhen. Approval aagi card ai anupiyadhaaga message vandhu 18 naal aagiyum card Vara villai. Bluedart ku call seidhu visaarithadhil dhan SBI in alatchiyam patri therindhadhu. Gaandu aagi vitten. Udane ungal katturai ninaivil vandhadhu. Adhan en anubavatthai oru comment pottu povom enru vandhen. SBI rupay epdi irukiradhu ena card vandhal use seidhu solgiren

  9. @ஹரிஷ் இவனுங்க கிட்ட விளங்க வைத்து வாங்குவதற்குள் நாக்கு தள்ளி விடும். நாம ஒன்றை கேட்டால், அதற்கு சம்பந்தமே இல்லாத ஒன்றை கூறுவார்கள்.

    இவர்களிடம் எனக்கு “சிறப்பான” அனுபவமுள்ளது 🙂 .

    தங்கிலீஷ் எழுதுவதை தவிருங்கள். படிக்கச் சிரமமாக உள்ளது.

  10. ‘’ தங்கிலீஷ் எழுதுவதை தவிருங்கள். படிக்கச் சிரமமாக உள்ளது’’

    சிரமத்திற்கு மன்னிக்கவும். என்னுடைய ஐபோன் repair க்கு கொடுத்ததால் நண்பரிடம் இருந்து android வாங்கி உபயோகித்தேன். அப்போது எனக்கு மொபைலில் தமிழ் டைப் செய்வது மிகவும் சிரமமாக இருந்தது. இவ்வளவு நாள் ஐபோன் கீபோர்ட் பழகியதால் திடீரென்று அவ்வளவு பெரிய கமெண்ட் தமிழில் android இல் எழுத பொறுமை இல்லை. மிகவும் தடுமாறினேன். அதனால் தங்கிலீஷ் டைப் செய்தேன். தற்போது ஐபோன் மீண்டும் வந்துவிட்டது. இனி தமிழில் எழுதுகிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here