ஆண்டு இறுதியில் சனிப்பெயர்ச்சி “எனக்கு கட்டம் சரியில்லை” என கூறிய போது.. “ஏற்கனவே பலமா வாங்கிட்டமே இனி பரவாயில்லாம இருக்கும் என்று நினைத்தால், இனித் தான் ஆரம்பம் என்று சொல்றாங்களே!” என்று கலவரமாகி விட்டது.
இரண்டு நாள் கழித்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக விற்பனைக்காக இழுத்துக்கொண்டு இருந்த எங்கள் நிலம் ஒன்று உடனே முடிந்து விட்டது.
சனிப்பெயர்ச்சி
சனி உச்சத்தில் இருக்கும், கடினமான காலமாக இருக்கும் என்று சொன்னாங்க.. இப்படி துவக்கத்திலேயே நல்ல சேதியா என்று மகிழ்சியடைந்தேன் 🙂 . Image Credit
விற்கலாம் என்று நினைத்துச் செயலில் இறங்கும் நேரம் “ஜெ” கிரயக் கட்டணத்தை உயர்த்த ரியல் எஸ்டேட் செம்ம அடி.
இதை நம்பித் தான் வீட்டுக் கடன் வாங்கி இருந்ததால், நெருக்கடியானது.
வட்டி
வெட்டியா வட்டி கட்ட வேண்டியதாகி விட்டது. பல திட்டம் போட்டும் கடனைக் கட்ட முடியவில்லை. வட்டி கட்டுவது என்பது கொடுமையான ஒன்று.
வீட்டுக்கடன் என்றால், அசல் எறும்பு போல ஊர்ந்து போக, வட்டி ராக்கெட் வேகத்தில் போகும். கடைசியில் முக்கி முக்கிக் கட்டியும் கொஞ்சமே அசல் குறைந்து இருக்கும்.
கடந்த வருடங்களில் வட்டியே ஏகப்பட்டது கட்ட வேண்டிய நிலை ஆகி விட்டது.
இதனால் மற்ற முடிவுகளும் சொதப்பி ஒரு சலிப்பான மன நிலையில் இருந்தேன்.
கவலை
என்னிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம், என்ன பிரச்சனை வந்தாலும், அதிகபட்சம் ஒருநாள் மட்டுமே அது குறித்து நினைவில் இருக்கும் பின்னர் கடந்து விடுவேன்.
மனைவி கூட “உங்களுக்கு எது தான் சீரியசா தெரியும்?” “எதுக்குமே உங்களுக்குக் கவலை வரதா?” என்று கேட்பார்.
கவலைப்படுவதால் பிரச்சனை தீர்ந்து விடும் என்றால் கவலைப்படுகிறேன் என்று கூறி விடுவேன் 🙂 .
இதைச் சிறு வயதில் “கல்கண்டு” புத்தகத்தில் துணுக்குப் பகுதியில் படித்தது, அப்படியே மனதில் பதிந்து விட்டது.
அதாவது “கவலைப்பட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்றால், உங்கள் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு கவலைப்பட்டுப் பாருங்கள். நீங்கள் செய்வது எவ்வளவு முட்டாள்த் தனமானது என்று புரியும்” என்று போட்டு இருந்தது.
இதைப் படித்ததில் இருந்து எதற்கும் கவலைப்படுவதில்லை.
மனைவியிடம் ‘பிரச்சனைகளைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்காதே! ஒன்றுமில்லை என்று நினைத்தால் பெரிய விசயமாகத் தோன்றாது‘ என்று கூறுவேன்.
“சரி! இதையெல்லாம் பின்பற்றுகிறேன் என்று எப்படி நான் அறிவது?” என்று கேட்டார்.
“படுத்தவுடன் எப்போது தூக்கம் வருகிறதோ! அன்று எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளப் பழகி விட்டாய்” என்று அர்த்தம் என்றேன்.
“அடப் போங்க நீங்க.. அதெல்லாம் கஷ்டம்!” என்று கூறி விட்டார் 🙂 .
சனிப்பெயர்ச்சி உச்சம்
சனிப் பெயர்ச்சி நல்லதாக இருந்த போதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை ஆனால், உச்சத்தில் இருக்கும் போது பல நாட்கள் பிரச்சனை / எதிர்பார்ப்பு சரியாகி விட்டது.
எனக்கு இருந்த பெரிய பிரச்சனையே இந்த நிலம் தான். இந்த வருட நடுவில் ஒரு பெரிய பிரச்னையை எதிர்பார்க்கிறேன்.. பார்ப்போம் என்ன ஆகிறது என்று.
Update : என் வேலை மாற்றல் குறித்த விஷயம் தான் அது. பெரியளவில் பிரச்சனை ஆகாமல் கிடைத்து விட்டது 🙂 .
சனிப் பெயர்ச்சி எனக்கு மோசமாக இருந்தாலும் நல்லதே நடந்தது.
சனி பெயர்ச்சியால் உள்ளம் தளர்ந்து இருந்தால், அதனால் பிரச்சனை மட்டுமே என்று கவலை கொள்ளாமல் நல்லதும் நடக்கும் என உற்சாகமாக இருங்கள்.
வாழ்க்கையில் சிரமம் என்று நினைத்தால் எல்லாமே சிரமம் தான். அதன் போக்கிலேயே நாமும் சென்றால், எதுவுமே சமாளிக்கக் கூடியது தான்.
எந்தப் பிரச்சனை என்றாலும் தூங்கி எழுந்து அடுத்த நாள் பாருங்கள், உங்கள் மனம் கொஞ்சம் தெளிவு அடைந்து இருக்கும்.
கதை
ஒரு மாணவன் தனது ஆசிரியரிடம் ஐயா! சிரமத்தை எப்படி சமாளிப்பது? என்று கேட்டான். அதற்கு அந்த ஆசிரியர்..
டஸ்டரை கையில் கொடுத்து இதை உன்னால் நீட்டிப் பிடிக்க முடியுமா?
இதைப் பிடிப்பதில் என்னய்யா சிரமம்! எளிதாகப் பிடிப்பேன்.
10 நிமிடங்கள் நீட்டிப் பிடிக்க முடியுமா?
முடியும்.
20 நிமிடங்கள்
ம்ம்ம் முடியும்
30 நிமிடங்கள்
சிரமம் ஐயா..
வாழ்க்கையின் சிரமங்களும் இது போலத் தான். நீ பிடித்து இருந்த டஸ்டர் எடை 1 மணி நேரம் ஆனாலும் அதே தான் ஆனால், உன்னால் நீட்டிப் பிடிக்க முடியவில்லை.
நம் பிரச்சனைகளும் அப்படித் தான்.
அதையே நினைத்து மனதில் வைத்துப் புழுங்கிக் கொண்டு இருந்தால், மன அழுத்தம் தான் அதிகம் ஆகும்.
குழப்பங்களையும் பிரச்சனைகளையும் இறக்கி வைத்து விட்டால், மனம் தெளிவாகி விடும் என்றார்.
இது இந்த மாணவனுக்கு மட்டுமல்ல நமக்கும் சேர்த்துக் கூறப்பட்டது தான்.
எனவே, யாருக்குத் தான் பிரச்சனையில்லை, நம்ம பக்கத்து வீட்டுக்காரர் முதல் அனைவருக்கும் பிரச்சனை இருக்கிறது.
சிலது வெளியே தெரிகிறது சிலது வெளியே தெரிவதில்லை அதற்காக அவர்கள் பிரச்சனை இல்லாமல் இருக்கிறார்கள் என்பது அர்த்தமல்ல.
கவலைகளைச் சுமந்து கொண்டே இருக்காதீர்கள், இறக்கி வையுங்கள் நிம்மதி அடைவீர்கள். அதை விட முக்கியம் நல்லா தூங்குவீங்க 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
வீடு நிலம் அடமானம் வைக்கிறீர்களா?
நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா ……
சனிபெயர்ச்சி உங்களுக்கு நன்மை அளித்திருப்பது செம …..
எனக்கு இந்த சனிப்பெயர்ச்சி வலது கையை உடைத்துவிட்டது. சென்ற வருடம் 2 சனிப்பெயர்ச்சி நடந்தது . 1 நவம்பர் மாதத்திலும் மற்றொன்று டிசம்பரிலும் நடந்து. 2 வகையான பஞ்சாங்க கணிப்பு இருப்பதாலேயே இப்படி இருமுறை பெயர்ச்சி நடக்கிறது… சனிப்பெயர்ச்சி பலன் 2 க்கும் ஒரேமாதிரியாகத்தான் சொல்லினார்கள்.
முதல் பெயர்ச்சியின் பிறகு எனக்கு வாகன விபத்து ஏற்படும் என்று இருந்தது. சரியாக அடுத்த வாரமே வாழ்க்கையில் முதன் முறையாக விபத்தில் சிக்கி என் வலது கையை உடைத்துக்கொண்டேன்….
இப்போ என்ன பிரச்சினைனா 2 வது பெயர்ச்சி க்கு பலன் பார்த்தபோதும் அதே பலனை தான் சொன்னார்கள்..(இரண்டு பலன்களும் வெவ்வேறு ஜாதகர்களிடம் கேட்டது ) இதை கேட்டதில் இருந்து ரொம்ப மேர்சிலாயிட்டேன் … இருந்தாலும் நான் ஹாப்பி யத்தான் இருக்கேன் விபத்து நடக்கும் போது பார்த்துகொள்ளலாம் என்று..
#கமன்ட் பாக்ஸ் சரியாக வேல செய்கிறது அண்ணா ….மொஸிலா வில்
Thank you for your motivating Quotes…Happy new year anna 🙂
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
சரியாக சொன்னீர்கள் யாருக்குத்தான் பிரச்சினை இல்லை
புத்தாண்டு வாழ்த்துகள்
Thank you…
தல,
நல்லா இருக்கு பதிவு..உங்க wife மாதிரி தான் நானும் – “அடப் போங்க நீங்க.. அதெல்லாம் கஷ்டம்!”
புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்துக்கும்
– அருண்
Ok boss , Be happy ,Don’t worry . Good motivation . Thanks
சனி பெயர்ச்சி, ஞாயிறு பெயர்ச்சி எதையும் என் வாழ்வின் நம்புவதில்லை.. அடுத்தவர்களின் நம்பிக்கையிலும் குறுக்கிடுவதில்லை (குடும்பம், நண்பர்கள் உட்பட)… இந்த நாள் இனிய நாள், இறைவனுக்கு நன்றி..இது தான் என் ஃபார்முலா…
2014 லில் புதிய வீடு கட்ட துவங்கியது தான் எங்கள் குடும்பத்தின் வெற்றி… 70% முடிந்து விட்டது மீதி வேலை இன்னும் 3/4 மாதத்தில் முடிந்து விடும் என எதிர்பார்க்கிறேன்.. (இறைவனுக்கு நன்றி..) ஆரம்பித்த போது என்னிடம் இருந்தது வெகு குறைவான பணமே.. இருப்பினும் அனைத்தும் நன்றாக நடைபெறுகிறது.. குடும்பதினரின் ஆதரவும், நண்பர்களின் உற்சாகமான வார்த்தைகளும் இதற்கு காரணம்… அன்னைக்கும், மனைவிக்கும் மிகுந்த மகிழ்ச்சி…
அமீர்கானின் PK படம் நன்றாக செல்கிறது.. நேரம் இருப்பின் பார்த்து விட்டு விமர்சனம் எழுதலாமே.. பகிர்வுக்கு நன்றி கிரி..
பதிவு அருமை…பிரச்சனைகளை கையால்வது குறித்த உங்களின் வரிகள் மிகச் சிறப்பு. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கிரி 🙂
தெளிவான பதிவு,மிக்க நன்றி.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
என்னங்க கிரி, ரிஷப ராசியா… 😀 … புத்தாண்டு வாழ்த்துகள்…
அனைவரின் வருகைக்கும் நன்றி
@கார்த்தி உனக்கு கட்டம் சரியில்லையா.. 🙂 பார்த்து இரு. கமெண்ட் பாக்ஸ் இன்னும் பிரச்சனை இருக்கு.. இன்னும் சரி செய்யவில்லை.
@அருண் அப்படியெல்லாம் சொல்லப்படாது..
@யாசின் விரைவில் உங்கள் வீட்டை கட்டி முடிக்க வாழ்த்துகள். வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப் பார் ன்னு சொல்லுவாங்க.. ஒன்றை செய்துட்டீங்க 🙂
PK தற்போது பார்க்கும் யோசனை இல்லை..
@சதீஷ் நான் ரிஷப ராசி இல்லை 🙂