சைபர் கிரைம் புகாரளிப்பது எப்படி? [FAQ]

1
Cyber Crime சைபர் கிரைம்

சைபர் கிரைம் குற்றங்களுக்காகத் தனி இணையத் தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலமாக எங்கே இருந்தும் புகார் அளிக்க முடியும்.

சைபர் கிரைம் என்றால் என்ன?

இணையம், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் குற்றங்களில் ஈடுபடுவது சைபர் கிரைம் குற்றம் என்று கூறப்படுகிறது. Image Credit

எவ்வகைக் குற்றங்கள் இதன் மூலம் நடக்கிறது?

இணையத்தில் தவறான தகவல்களைக் கூறி ஏமாற்றுவது, தொலைபேசியில் அழைத்து ஏமாற்றுவது, நம் பயனர் தகவல்களைத் திருடுவது, ஹேக் செய்வது.

சமூகத்தளங்களில் பாலியல் ரீதியா தொல்லை தருவது, வங்கிக்கணக்கில் திருடுவது, செயலி மூலமாகத் தகவல்களைத் திருடுவது போன்றவை சில எடுத்துக்காட்டுகள்.

எங்கே புகார் அளிக்க வேண்டும்?

https://cybercrime.gov.in/

அடையாளத்தை மறைத்து (Anonymus) புகாரளிக்க முடியுமா?

முடியும்.

புகார் அளிக்கும் போது என்னென்ன தகவல்கள் கொடுக்க வேண்டும்?

அடையாளத்தை மறைத்துப் புகார் அளிப்பவர்கள் தனிப்பட்ட தகவல்கள் எதையும் கொடுக்க வேண்டியதில்லை ஆனால், குற்றம் சம்பந்தப்பட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

கொடுத்த புகார் பற்றிய தகவல்களைப் பின்தொடர (Report and Track), உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், எந்த மாநிலத்தைச் சார்ந்தவர் மற்றும் குற்றம் தொடர்பான விவரங்கள் அவசியம்.

உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP மூலம் புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.

பொய் புகாரளித்தால் என்ன ஆகும்?

பொய்யான புகாரளித்தால், இந்திய தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

புகாரளித்ததற்கான Acknowledgement கிடைக்குமா?

கிடைக்கும். சைபர் கிரைம் தளத்தில் புகாரளித்த பிறகு உங்கள் மொபைலுக்கும், மின்னஞ்சலுக்கும் Reference எண் வரும்.

தற்போதைய புகார் நிலையை எப்படிக் கண்டறிவது?

Reference எண்ணை வைத்து Check Status மூலமாகத் தற்போதைய நிலையை அறியலாம்.

அடையாளத்தை மறைத்துப் புகாரளித்தவர்கள் இச்சேவையைப் பெற முடியாது.

புகாரைத் திரும்பப் பெற முடியுமா?

பெண்கள் / குழந்தைகள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதுக்குப் புகாரளிக்கப்பட்டதைத் திரும்பப் பெற முடியாது.

ஆனால், மற்ற சைபர் குற்றங்களை FIR பதிவு செய்யப்படுவதற்கு முன் திரும்பப் பெற முடியும். FIR பதிவு செய்யப்பட்டு இருந்தால், புகாரைத் திரும்பப் பெற முடியாது.

மத்திய அரசு இணைய தளம் –> https://cybercrime.gov.in/

தமிழகக் காவல்துறை இணைய தளம் –> https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index

தொடர்புடைய கட்டுரைகள்

ஹேக்கிங் (Hack) பாதுகாப்பு வழிகள் என்ன?

எது மாறினாலும் “123456” மட்டும் மாறவில்லை!

SIM SWAP மோசடி [FAQ]

Authenticator App அவசியம் ஏன்?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

1 COMMENT

  1. இதுவரை தெரியாத புதிய தகவல் இது.. எளிமையாக புரியும்படி பகிர்ந்தமைக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!