பெரியார் மண்

5
பெரியார் மண் Periyar

ற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வேறுபட்டும், முன்னோக்கிய சிந்தனைகளின் தாக்கம் அதிகமாகவும், மத ரீதியான தாக்கங்கள் மிகக் குறைந்த அளவிலும் இருக்கப் பெரியார் அவர்கள் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.

ஆனால், பெரியார் கொள்கைகளில் சாதி மட்டும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இன்றளவிலும் அதே போல அல்லது கூடுதலாக உள்ளது என்று கூறலாம்.

பெரியார் மண்

முன்பு “பெரியார் மண்” என்று கூறுவது எப்போதாவது நடந்தது என்றாலும், தற்போது இவ்வாறு கூறுவது அதிகரித்துள்ளது என்பது கண்கூடு. Image Credit

குறிப்பாக “ஜெ” இறப்புக்குப் பின் பாஜக தமிழகத்தில் அதிகம் பேசு பொருளாக இருப்பதால், அதனுடைய தாக்கம் அதிகளவில் உள்ளது.

இதில் உளவியல் காரணமும் உள்ளது.

பெரியார் மண் என்று திமுக போன்ற கட்சிகள் கூறி தங்களுக்கான மக்கள் ஆதரவை இதன் மூலம் பாஜக போன்ற கட்சிகளுக்கு நினைவூட்டுகிறார்கள்.

இன்னொரு வகையில் கூறுவதென்றால், தமிழக மக்களை இவர்களே தங்கள் சிந்தாந்தத்தில் இணைத்துக்கொண்டு, அனைவரையும் தங்கள் ஆதரவாளர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள்.

போலி பகுத்தறிவாளர்கள்

இது ஒரு கட்சிக்கு இயல்பு என்பதால், இதில் கருத்துக் கூற எதுவுமில்லை.

ஆனால், தங்களைப் பகுத்தறிவாளர்களாகவும், பெரியாரின் பிள்ளைகளாகவும் காட்டிக்கொண்டு அதற்கு முற்றிலும் எதிரான வேலைகளையும் செய்து விட்டு, கடவுள் நம்பிக்கையையும், மத நம்பிக்கைகளையும் விமர்சிக்கும் போது தான் கடுப்பாகிறது.

அனைவருக்கும் தெரியும், ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின், கலைஞர் அவர்கள் துணைவி ராஜாத்தி அம்மாள் இருவரும் அத்திவரதரை பார்த்ததும், இவர்கள் கட்சிக்காரர்களே இவர்களது கட்சியைச் சார்ந்தவர்களுக்கே சிறப்பு அனுமதிக்குக் கடிதம் கொடுத்ததும்.

இது போல ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

தனிப்பட்ட விருப்பங்கள்

திமுகவினரைக் கேட்டால், அவர்களது தனிப்பட்ட விருப்பங்களில் தலையிட மாட்டோம் என்று கூறுகிறார்கள், நியாயமான ஒன்று.

தனிப்பட்ட விருப்பங்கள் என்பது இவர்கள் குடும்பத்தினருக்கு மட்டும் தான் உள்ளதா? பொதுமக்களுக்கு இல்லையா?!

இவை அத்தி வரதர் விஷயத்தில் மட்டுமல்ல, அனைத்து சம்பவங்களிலும்.

கடவுளையும், பொதுமக்களையும் நக்கல் அடிக்கும், பெயரில் மட்டும் வீரத்தை வைத்து இருக்கும் வீரமணி அவர்கள், துர்கா மற்றும் ராஜாத்தி அம்மாளை விமர்சிக்க முடியுமா?

வாயை உடைத்து விடுவார்கள் என்ற பயம் தானே!

எவனைப் பேசினால் எந்தப் பிரச்சனையும் இல்லையோ, எவன் எதையும் கேட்க மாட்டானோ அவனை மட்டும் நோண்டுவது, நக்கல் அடிப்பது.

வெட்கமாக இல்லையா?!

சுப வீர பாண்டியன்

சுப வீர பாண்டியன் காவேரி தொலைக்காட்சி பேட்டியில் துர்கா மற்றும் ராஜாத்தி அம்மாள் அத்திவரதர் கோவில் சென்றது பற்றிக் கேட்ட போது நேரடி பதிலைக் கூறாமல், சம்பந்தமே இல்லாமல் மாற்றிப் பேசி உளறிக்கொண்டு இருக்கிறார்.

உதயநிதி பற்றிக் கேட்ட போது வடிவேல் போல “தங்களுக்குத் தெரியாத சட்டமில்லை.. அதில் எந்தச் சட்டம் சிறந்த சட்டமோ அந்தச் சட்டத்தை…” என்பது போலக் குளறுகிறார்.

தேர்தலின் போது ஒத்த சிந்தனைக் கட்சி, கேள்வி வந்தால் உள் கட்சி விவகாரம்!

அதாவது இவர்கள் அனைவரும், இவர்கள் கட்சி சார்ந்த எதையும் விமர்சிக்க மாட்டார்கள். கேட்டால் அது உள்கட்சி விவகாரம்.

ஆனால், அடுத்தவன் தனிப்பட்ட விருப்பம் மட்டும் நான் நக்கல் அடிப்பேன், கேள்வி கேட்பேன்! என்ன ஒரு கேவலமான பிழைப்பு!

மன்மதன் படத்தில் சிம்பு கடுப்பாகி, “தலைய இப்படி ஆட்டு.. இல்ல.. அப்படி ஆட்டு” என்பது போல, கட்சி என்று வந்தால் இவர்கள் எல்லா பக்கமும் தலையை மையமாக ஆட்ட வேண்டியது.

சுயமரியாதை

சுயமரியாதையைப் பற்றி வாய் கிழிய பேசுவார்கள் ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் அவர்களிடம் இருக்காது.

இந்தத் திக காரங்களுக்குப் பெயரில் மட்டுமே வீரம் இருக்கும் ஆனால், அனைவரும் தொடை நடுங்கிகள். பொது மக்கள் மீதும் அப்பாவிகள் மீதும் மட்டுமே வீரத்தைக் காட்டுவார்கள்.

பெரியார் பெயரை வைத்துக்கொண்டு இவர்கள் அடிக்கும் கூத்தை, தற்போது பெரியார் இருந்தால், “என் பெயரை வைத்து என்னடா பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கடுப்பாகி அவர் வைத்து இருக்கும் கம்பிலேயே எல்லோரையும் வெளுத்து விடுவார்.

பெரியார் பெயரை வைத்துக்கொண்டு “பெரியார் மண்” என்ற பெயரில் திராவிடக் கட்சியினரும் சில அமைப்புகளும் அடிக்கும் கூத்து உண்மையிலே கடுமையான வெறுப்பைக் கொண்டு வருகிறது.

பேச்சுக்கும் செய்கைக்கும் சம்பந்தமுமில்லை

இவர்கள் பேச்சுக்கும் செய்கைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. பேசுறது பெரியார் ஆனால், செய்வது எல்லாம் அதற்கு எதிராக!

பெரியார் பேசியது சாதி வேண்டாம் என்பது ஆனால், தேர்தலில் ஆட்களை நிறுத்துவதே சாதியை வைத்துத்தானே!

வீட்டினுள் உள்ளவர்கள் செய்வது பற்றிக் கேள்வி கேட்க மாட்டோம் ஆனால், அடுத்தவனை நக்கல் அடிப்போம்.

இவர்கள் எல்லாம் பெரியார் பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது?

தயவு செய்து பெரியார் மண் என்று கூறி பெரியாரை அசிங்கப்படுத்தாதீர்கள்.

அதே போல உங்கள் நடிப்புக்கு பொதுமக்களையும் நீங்களாகவே கூட்டு சேர்க்காதீர்கள், எரிச்சலாக உள்ளது.

பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுவது தவறல்ல ஆனால், பின்பற்றினால் கொள்கைகளுக்கு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயம் என்று நடப்பதற்கு பெயர் என்ன தெரியுமா?

தொடர்புடைய கட்டுரைகள்

பெரியார் | ஈ. வெ. இராமசாமி

ஸ்டாலினின் இந்து மத எதிர்ப்பு

திராவிட அரசியல் தமிழகத்தை சீரழித்ததா?

கலைஞர் மு. கருணாநிதி 1924 – 2018

அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. கிரி, பதிவை படித்த பின் தோன்றியது ” நமக்கு வந்த தக்காளி சட்னி, அவங்களுக்கு வந்தா ரத்தம்” என்பது தான் நினைவுக்கு வருகிறது..

    “தயவு செய்து பெரியார் மண் என்று கூறி பெரியாரை அசிங்கப்படுத்தாதீர்கள். அதே போல உங்கள் நடிப்புக்கு பொதுமக்களையும் நீங்களாகவே கூட்டு சேர்க்காதீர்கள், எரிச்சலாக உள்ளது. உண்மையான வார்த்தைகள்..

    இவர்கள் பெரியார் பெயர் கூறி மற்றவர்களை அசிங்கப்படுத்துகிறோம் என்று நினைத்து, பெரியாரையும் சேர்த்து அவமானப்படுத்துகிறோம் என்பது தெரியாமலே செய்து வருகின்றார்.. இவர்களால் உண்மையில் பெரியார் கொள்கைகளை பின்பற்றுவோர் கூட பொதுவெளியில் யாரோ செய்யும் தவறுகளால் அவமானப்படும் நிகழ்வுகளும் உண்டு.. கல்லூரி பருவத்தில் நானும் பெரியாரை குறித்து பல தகவல்களை படித்து இருக்கிறேன்..

  2. மிகவும் சரியாக சொன்னீர்கள் இது மட்டும் அல்ல பல விஷயங்களில் இவர்கள் ரெட்டை வேடம் போடுகிறார்கள்

  3. ஒரு கொள்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுதலுக்கு உட்படும். அப்படி இருந்தால் தான் சூழலுக்கு ஏற்ப தன்னை தக்க வைத்துக் கொள்ளும். ஆனால் பெரியார் கொள்கை திருக்குறள் போன்றது இன்னும் ஆயிரம் வருடங்களுக்குத் தேவைப்படும். ஆனால் இதனைப் பயன்படுத்தி ஆதாயம் பார்த்தவர்கள் மூலம் சமகாலத்திலே அழிவுப் பாதையில் கொண்டு போய் நிறுத்திவிட்டார்கள். தவறு பெரியார் மேல் அல்ல. அதை வைத்து காசாக்கும் கலையைக் கற்றவர்கள் மேல் மட்டுமே நாம் குற்றச்சாட்டு வைக்க வேண்டும்.

  4. @யாசின்

    “இவர்களால் உண்மையில் பெரியார் கொள்கைகளை பின்பற்றுவோர் கூட பொதுவெளியில் யாரோ செய்யும் தவறுகளால் அவமானப்படும் நிகழ்வுகளும் உண்டு.. ”

    சரியா சொன்னீங்க. இதைத்தான் நான் கூறுகிறேன்.

    இவர்களால் அனைவருக்கும் கெட்ட பெயர். பெரியார் கொள்கைகளை இழிவுபடுத்துவதே இவர்கள் தான்.

    @சரவணன் உண்மை.

    @ஜோதிஜி “ஒரு கொள்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுதலுக்கு உட்படும். அப்படி இருந்தால் தான் சூழலுக்கு ஏற்ப தன்னை தக்க வைத்துக் கொள்ளும். ஆனால் பெரியார் கொள்கை திருக்குறள் போன்றது இன்னும் ஆயிரம் வருடங்களுக்குத் தேவைப்படும். ”

    மிகச்சரியாக சொன்னீர்கள் ஜோதிஜி. இவை காலத்துக்கு ஏற்ப மாறும் கொள்கைகள் அல்ல. சரியான அவதானிப்பு.

    “தவறு பெரியார் மேல் அல்ல. அதை வைத்து காசாக்கும் கலையைக் கற்றவர்கள் மேல் மட்டுமே நாம் குற்றச்சாட்டு வைக்க வேண்டும்.”

    மிகச் சரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here