ஸ்டாலினின் இந்து மத எதிர்ப்பு

8
Stalin DMK ஸ்டாலினின் இந்து மத எதிர்ப்பு

லைஞர் பகுத்தறிவாளர், கடவுள் மறுப்பாளர் என்று இந்து மத நம்பிக்கைகளை விமர்சித்தும் “ராமன் கல்லூரிக்குப் போனானா“, “இந்து என்றால் திருடன்” என்று பல சர்ச்சையான கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.

ஸ்டாலினின் இந்து மத எதிர்ப்பு

அனைத்து மதங்களும் நல்லதையே போதிக்கின்றன. சில கருத்துக்கள், வழக்கங்கள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டு இருக்கின்றன.

இந்து மதமும் காலத்துக்கேற்ப மாறி வருகிறது.

இருப்பினும் “வர்ணாசிரமம்” போன்ற அடிப்படையிலேயே இணைந்து விட்டதை மாற்றுவது எளிதல்ல, இருப்பினும் அதிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

திமுக துவங்கப்பட்டது பகுத்தறிவு கொள்கையை அடிப்படையாக வைத்துத் தான். அக்காலக் கட்டத்தில் கடவுள் மறுப்பு, பகுத்தறிவு பேச்சுக்கு மக்களிடையே ஆதரவு இருந்தது.

தற்போது மக்களின் நம்பிக்கைகளும் காலத்துக்கு ஏற்ப மாறி வருகிறது.

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்பது இந்து மதத்தை மட்டும் குறி வைத்துத் தாக்கும் கொள்கையாகத் தற்போது மாறி விட்டது.

முன்பு கடவுள் மறுப்புக் கொள்கைகளுக்கு ஆதரவு இருந்தது ஆனால், தற்போது அது முற்றிலும் எதிர் திசையில் உள்ளது. எந்த அளவுக்கு என்றால், திமுக வினரே கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகத்தான் பலர் உள்ளனர்.

திமுக வினர் பலர் என்று கூறக்கூடாது, பெரும்பான்மையினர் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகத் தான் உள்ளனர், வெளி உலகுக்காகவும், கட்சியில் உள்ளதாலும் நம்பிக்கை இல்லாதது போலக் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களின் நடைமுறை சிக்கலைப் புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே தான், சர்ச்சையாகும் போதெல்லாம் கூறியது யார் என்று பார்த்தால், முன்பு கலைஞர் தற்போது ஸ்டாலின் மற்றும் சில போலி இணையப் போராளிகள்.

கலைஞர் காலம் முடிந்து விட்டது. எனவே, அவரை விட்டு ஸ்டாலினுக்கு வருகிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலின்

ஸ்டாலினுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை, தொடர்ச்சியாக இந்து மதத்தை நக்கல் அடித்து வருகிறார்.

அப்பா செய்தார் அதனால் தானும் செய்தால் தான் கட்சியில் மதிப்பு என்று நினைக்கிறாரா?! அல்லது இந்து மதத்தின் மீது அவருக்கு வெறுப்புள்ளதா?

இந்து மதத்தின் மீது அவருக்கு வெறுப்பு இருந்தால், அது அவருடைய தனிப்பட்ட விருப்பம், விமர்சிக்க எதுவுமில்லை.

இந்து மதம் அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை.

ஆனால், ஒரு கட்சித் தலைவராக இருந்து, பொறுப்பற்ற முறையில் தொடர்ச்சியாகக் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவு படுத்தி வருவது எந்த வகையில் நியாயம்?

சமீபத்தில் முஸ்லீம் திருமணத்தில் கலந்து கொண்டு இந்து மதத் திருமண வழக்கங்களைக் கொச்சைப்படுத்திப் பேசி இருந்தார்.

எவ்வளவு ஒரு கேவலமான செயல்.

உங்களுக்குப் பிடிக்கலைன்னா உங்கள் குடும்ப வழக்கங்களில் பின்பற்ற வேண்டாம். எதற்குப் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைக் கிண்டலடிக்கிறீர்கள்?!

பல்வேறு காரணங்களால் உங்களுக்குப் பிராமணர்களைப் பிடிக்கவில்லை, அவர்களைக் கடுமையாக விமர்சிக்கிறீர்கள்.

ஸ்டாலினின் இந்து மத எதிர்ப்பு தனிப்பட்ட காரணம், அதில் தலையிட முடியாது ஆனால், ஏன் வாக்கு சேகரிக்க அவர்களிடம் சென்றுநிற்க வேண்டும்?

வாக்களிக்க மட்டும் அவர்கள் வேண்டும் ஆனால், எனக்குத் தோன்றும் போதெல்லாம் அவர்களை வசை பாடுவேன் என்பதற்குப் பெயர் என்ன தெரியுமா?!

பெரும்பான்மை இந்துக்கள் மத வெறியர்கள் அல்ல

பெரும்பான்மை இந்துக்கள் மத வெறியர்கள் அல்ல, அதற்கு அவர்கள் முக்கியத்துவமும் கொடுப்பதில்லை என்பது தான் நடைமுறை எதார்த்தம்.

அதனால் தான் இந்தியா இன்னும் பல்வேறு அரசியல் குழப்பங்கள், பிரச்சாரங்கள், மதப் பிரச்னைகளைத் தாண்டிச் சுமூகமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.

அதிலும் தமிழகம் ஒரு படி மேலே இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடச் சகிப்புத்தன்மையில் சிறப்பாக நடந்து கொண்டுள்ளது.

ஆனால், இது போலத் தொடர்ச்சியாக இந்து மதத்தை மட்டும் விமர்சித்துக் கொண்டு இருப்பதால், என்னால் சர்வ நிச்சயமாக மாற்றத்தை உணர முடிகிறது.

தற்போதெல்லாம் இந்து மதத்தை முன்பு போலக் கிண்டலடித்தால், எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள்.

மக்கள் பொறுமையின் எல்லைக்கோட்டுக்கு வந்துவிட்டார்கள்.

இந்து மதப் பண்டிகை வேண்டாம் ஆனால், “விடுமுறை தினக் கொண்டாட்டம்” வேண்டும்! இந்து மதத்தை இழிவாக விமர்சிப்பேன் ஆனால், இந்துக்கள் வாக்கு வேண்டும்! என்ன கதை இது?!

காலம் மாறி வருகிறது ஸ்டாலின் அவர்களே!

இனியும் இந்தப் போலி வேடம் போட்டு விமர்சித்துக் கொண்டு இருந்தால், தற்போது இல்லையென்றாலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் இல்லையென்றாலும், நிச்சயம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மத ரீதியான எதிர்ப்பு கடுமையாக எதிரொலிக்கும்.

திக வீரமணி

வயதானால் பேச்சைக் குறைக்க வேண்டும் என்பது முன்னோர் வாக்கு ஆனால், இந்த வீரமணியோ வாயாலே அழிந்து, திமுக கட்சிக்கும் வேட்டு வைத்துக்கொண்டு உள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளோடு கடவுள் கிருஷ்ணரை ஒப்பிட்டுப் பேசுகிறார். அதற்கு ஸ்டாலின் எந்த வித கண்டிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை.

அதற்குப் பதிலாக “நான் இந்து மதத்துக்கு எதிரானவன் இல்லை, என் மனைவி கடவுள் நம்பிக்கையுள்ளவர்” என்று கூறி இருக்கிறார்.

உங்கள் மனைவி துர்கா மட்டுமா கடவுள் நம்பிக்கையுள்ளவர்?! ராசாத்தி அம்மாள் உட்பட உங்கள் குடும்பத்தினர் அனைவரும் கோவில் கோவிலாகச் சென்று வேண்டிக்கொண்டு இருப்பது யாருக்கும் தெரியாதா?

மற்றவர்களின் நம்பிக்கைகளை விமர்சிக்கும் முன், அறிவுரைகளைக் கூறும் முன்பு அதை ஏன் உங்கள் வீட்டில் இருந்தே துவங்கக் கூடாது?!

திமுகவினரே…!

உங்கள் தலைவரிடம் இது போல இந்து மத நம்பிக்கைகளைக் கிண்டலடிக்க வேண்டாம், வாக்கு போய் விடும் என்று கூறுங்கள்.

உங்கள் தலைவர் சொந்த செலவில் உங்கள் கட்சிக்குச் சூனியம் வைத்துக்கொண்டுள்ளார்.

வரும் ஓரிரு தேர்தல்களில் வேண்டும் என்றால், இதன் தாக்கம் பெரியளவில் தெரியாமல் இருக்கலாம் ஆனால், இதே தொடரும் என்று கனவு காண வேண்டாம்.

தற்போது ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளதை கவனித்து இருக்கலாம். எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்பதும் உங்களுக்குப் புரிந்து இருக்கும்.

இந்து மத எதிர்ப்பு ஸ்டாலினுக்கு மட்டுமல்ல, அவரைப்போல இரட்டை வேடம் போடும் அனைத்து திமுக உடன் பிறப்புகளுக்கும் பொருந்தும்.

இந்து மதம் என்றில்லை, எந்த மதத்தினர் நம்பிக்கையையும் விமர்சிக்காதீர்கள், விமர்சித்தால் அந்த விமர்சனத்துக்கு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

திராவிட அரசியல் தமிழகத்தை சீரழித்ததா?

கர்ம வினையும் இந்து மதமும்

அர்த்தமுள்ள இந்து மதம்

பெரியார் | ஈ. வெ. இராமசாமி

அசுரன் – வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்

கொசுறு

இக்கட்டுரைக்கு “திமுகவின் இந்து மத எதிர்ப்பு” என்று தலைப்பு வைக்க நினைத்தேன் ஆனால், யோசித்துப் பின்னர் ஸ்டாலின் பெயரை மட்டும் குறிப்பிட்டு விட்டேன்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. ஸ்டாலின் எந்த இடத்தில் அப்படி பேசி இருந்தாலும் அது தவறு தான், அந்த கூட்டத்தில் ஒரு சில இஸ்லாமிய பெண்கள் இருந்தனர் ஆனால் அது இஸ்லாமிய திருமணம் அல்ல என்று ஒரு மறுப்பு சமூக ஊடகங்களில் வந்தது. முடிந்தால் தேடி பார்க்கவும்

    • அந்த திருமணம் இஸ்லாமிய திருமணம் தான்
      அதனால் தான் சுடலை அந்த திருமணத்துடன் இந்து திருமணத்தை ஒப்பிட்டு பேசினார்

  2. அன்பை விதைக்க ஆரம்பிக்கப்பட்ட மதங்கள் இப்போது வெறுப்பையே விதைக்கிறது. விடுமுறை தின கொண்டாட்டங்கள் என சன் தொலைக்காட்சி இன்றும் காசு பார்ப்பது கேளிக்கூத்து.

    இஸ்லாமிய திருமணத்தில் இந்துமதத்தை குறை கூறியதாக நானும் படித்தேன். ஸ்டாலினுக்கோ இல்லை உதய நிதிக்கோ கலைஞ்ஞரின் பேச்சுத்திறமையில் 1% கூட இல்லை. மதத்தை குறைகூறலாம் ஆனால் இடம் பொருள் ஏவல் அறிந்து பேசவேண்டும். திமுக வின் இன்றய மற்றும் நாளைய தலைவர்களுக்கு இந்த அறிவு சிறிதளவும் இல்லை. கலைஞ்ஞர் கூட தன்னுடய இறுதிக்காலங்களில் இந்து மதத்தை குறை சொல்லுவதை குறைத்துக்கொண்டார் என்று நினைக்கிறேன். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை இப்போது மக்களிடையே குறைந்துவிட்டது என்பது வெள்ளிடைமலை.

    பாஜாகாவின் அரசியல் எனக்கு உடன்பாடில்லை. அதிலும் ராஜா வை எனக்கு சிறிதளவும் பிடிக்காது. ஆனால் அவருக்கு இணையத்தில் பெரும் தொகையில் ஆதரவாளர்கள் இருப்பது போல் உள்ளது. அவர்களில் சிறிய சதவீதத்தினர்தான் தீவிர இந்துத்துவா ஆதரவாளர்கள். பெரும்பான்மையானோர் திமுக வால் இந்துத்துவா ஆதரவாளர்கள் ஆனவர்கள். போகிறபோக்கில் அவர் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை. ( தமிழிசை வெல்லவேண்டும் என்ப‌து எனது ஆசை .)

    திமுக இப்படியே பெரும்பான்மை மதத்திற்கு எதிராக நக்கல் செய்தால் தற்போது சாதி ரீதியான் தேர்தல் போட்டிகள் சிறிது காலத்தில் மத ரீதியாக தமிழ் நாட்டிலும் மாறும். சிறுபான்மையினரை காப்பதாக இப்போது தனக்கு தானே பட்டம் கட்டும் திமுக இப்படியான் செயல்களின் மூலம் அவர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கும்.

    இது நீங்கள் சில காலமாக மனதில் போட்டு உருட்டிய விடயத்தை இப்போது வெளியே விட்டது போல உள்ளது. மிக விரைவில் உங்களுக்கு இந்து தீவிரவாதி பட்டம் கட்டப்படும். தயார் ஆகுங்கள்.

    ஜோதிஜி என்ற பெயரில் இங்கே உங்களுக்கு பதிவிடுபவர்தான் திருப்பூரில் வேட்பாளரா? இருவரின் படத்தையும் வைத்து பார்த்தால் கிட்டத்தட்ட ஒன்று போல் உள்ளது. அவரும் எழுத்தாளர் என்று பத்திரிகையில் உள்ளது.

    சில நாட்களாக ரஜினி ரசிகர்கள் திமுக வை மிக அதிகமாக ருவீட்டரில் விமர்சிக்கிறார்கள். திமுகவை விமர்சிக்க கூடாது என்றல்ல, திடீர் என்று ஏன் அதிகமாக விமர்சிக்கிறார்கள் என்பதுதான் கேள்வி. திமுகவை பலவீனப்படுத்தினால் ரஜினி இலகுவாக அரியணை ஏறுவார் என்ற எண்ணமா . ( இதில் உங்களை நான் சேர்க்கவில்லை. ஆகவே கோபப்படாமல் பதில் தெரிந்தால் சொல்லுங்கள். )

  3. ஜோதிஜி என்ற பெயரில் இங்கே உங்களுக்கு பதிவிடுபவர்தான் திருப்பூரில் வேட்பாளரா? இருவரின் படத்தையும் வைத்து பார்த்தால் கிட்டத்தட்ட ஒன்று போல் உள்ளது. அவரும் எழுத்தாளர் என்று பத்திரிகையில் உள்ளது.

    நான் வேட்பாளர் அல்ல. சாதாரண குடும்ப இஸ்திரி. எந்த இடத்தில் எந்த படத்தை பார்த்தீங்க? நானும் இங்கே வேட்பாளாராக இருந்துள்ளேன். வேறொரு பிரச்சனை நடந்த போது. வாபஸ் வாங்கச் சொல்லிவிட்டார்கள். அப்புறம் நான் எழுத்தாளர்ன்னு யாரோ உங்க கிட்ட புரளிய கிளப்பி விட்டுருக்காங்க. அதுக்கு ரொம்ப பொறுமை வேணும். அது நமக்கு லேது.

    • தேவியர் இல்லம் என்ற பெயரில் இணையத்தில் எழுதும் ஜோதிஜி நீங்கள் என்று நினைத்தேன். அப்படி இல்லையா?

      • நானும் அவரும் இரட்டையர். அவர் மூத்தவர். நான் இளையவர்.

  4. ஸ்டாலின் செயற்பாடுகள் வேறு மத விழாக்களில் கலந்து கொள்வதும், ஒரு மதத்தை மட்டும் தாக்குவதும் பகுத்தறிவு செயற்பாடு இல்லை.இந்து மத எதிர்ப்பு மட்டுமே.

  5. @சுடலை நீங்களே கூறியது போல எங்கே கூறி இருந்தாலும் தவறு தான், அதை தேடி நாம என்ன செய்ய போகிறோம்.

    @ப்ரியா செமையா எழுதி இருக்கே.. 🙂 ஆமா உனக்கு என்ன வயசு.. வயதுக்கு மீறிய முதிர்ச்சி உனக்கு.

    “விடுமுறை தின கொண்டாட்டங்கள் என சன் தொலைக்காட்சி இன்றும் காசு பார்ப்பது கேளிக்கூத்து.”

    கலைஞர் டிவி. சன் தொலைக்காட்சியில் அப்படி வருவது இல்லை.

    “ஸ்டாலினுக்கோ இல்லை உதய நிதிக்கோ கலைஞ்ஞரின் பேச்சுத்திறமையில் 1% கூட இல்லை.”

    மறுக்க முடியாத உண்மை. ஸ்டாலின் தினமும் எதையாவது உளறுகிறார், பார்க்கவே பரிதாபமாக உள்ளது.

    கேப்டனுக்கு இவர்கள் செய்தது தான் அவர் விட்ட சாபமோ என்னமோ ஸ்டாலின் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்.

    “விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை இப்போது மக்களிடையே குறைந்துவிட்டது என்பது வெள்ளிடைமலை.”

    உண்மையே! அதே சமயம் இந்த நிலைக்கு கொண்டு வந்ததே தற்போதுள்ள அரசியல் கட்சிகளே!

    பொறுமைக்கும் எல்லை உண்டு. காலங்கள் மாறுகிறது, மக்களின் எண்ணங்களும் மாறுகிறது. முன்பு போல என்ன கிண்டல் செய்தாலும், திட்டினாலும் அமைதியாகவே இருக்க பலர் நினைப்பதில்லை.

    ராஜாவை பாஜக வினர் தவிர வேற யாரும் ஆதரிப்பதில்லை ஆனால், தற்போது சிவகங்கையில் மோசமான போட்டியாளர்கள். எனவே, ராஜாவே குறிப்பிடத்தக்க வாக்குகள் பெற்றால் வியப்பில்லை.

    “ஆனால் அவருக்கு இணையத்தில் பெரும் தொகையில் ஆதரவாளர்கள் இருப்பது போல் உள்ளது.”

    இணையத்தில் மட்டும்.

    “பெரும்பான்மையானோர் திமுக வால் இந்துத்துவா ஆதரவாளர்கள் ஆனவர்கள். போகிறபோக்கில் அவர் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை”

    முழுக்க ஏற்றுக்கொள்கிறேன். பலர் திமுக செய்த வெறுப்பு அரசியலாலே மாறியவர்கள். ராஜா சொன்ன மாதிரி அடைந்தாலும் வியப்பில்லை. அதற்கு முன்பே சொன்னது போல போட்டியாளர்களும் சரியில்லை.

    “தமிழிசை வெல்லவேண்டும் என்ப‌து எனது ஆசை .”

    கனிமொழியை விட 100 மடங்கு சிறந்தவர் தமிழிசை. என்ன ஒரு பிரச்னையென்றால், இவருடைய Attitude.

    ஒரு கட்சியின் பொறுப்பான தலைவராக நடந்து கொள்ளவில்லை. மற்றவர்கள் கிண்டலடிக்க வசதியாக உள்ளது இவருடைய நடவடிக்கைகள்.

    “திமுக இப்படியே பெரும்பான்மை மதத்திற்கு எதிராக நக்கல் செய்தால் தற்போது சாதி ரீதியான் தேர்தல் போட்டிகள் சிறிது காலத்தில் மத ரீதியாக தமிழ் நாட்டிலும் மாறும். சிறுபான்மையினரை காப்பதாக இப்போது தனக்கு தானே பட்டம் கட்டும் திமுக இப்படியான் செயல்களின் மூலம் அவர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கும்.”

    மிகச் சரி. இதை வைத்து என்னால் ஒரு கட்டுரையே எழுத முடியும். பிறிதொரு நாள் எழுதுகிறேன். இவர்கள் வெகு ஜன இந்துக்களை மத பற்றாளர்களாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

    “இது நீங்கள் சில காலமாக மனதில் போட்டு உருட்டிய விடயத்தை இப்போது வெளியே விட்டது போல உள்ளது. ”

    நிச்சயமாக இல்லை. ஊடகங்கள் குறித்து எழுதிய போதும் இதையே குறிப்பிட்டு இருந்தாய், இரண்டுமே தவறு.

    வீரமணி சர்ச்சை பேச்சும், ஸ்டாலின் திருமண பேச்சும், இது தொடர்பாக பலர் அனுப்பும் WhatsApp செய்தியும் இதை எழுத வைத்தது.

    நான் காத்திருந்து எழுதியது ஒரே ஒரு கட்டுரை தான். 2009 ல் ரஜினியை விகடன் கிண்டல் செய்து, ஜெ குறித்து தவறாக கூறி விகடன் வருத்தம் தெரிவித்தது. இதை வைத்து எழுதினேன்.

    இது ஒன்று மட்டுமே வஞ்சம் வைத்து எழுதிய கட்டுரை. சரியா விகடன் சிக்கியது பொளந்துட்டேன்.

    ஜோதிஜி தேவியர் இல்லம் எல்லாம் ஒன்று தான். அவர் தான் இவர். சும்மா உன்னை கலாய்க்க தம்பி அண்ணன் ன்னு சொல்லிட்டு இருக்காரு 🙂 .

    புத்தகம் எழுதி இருக்காரு.. அப்ப எழுத்தாளர் தான்.. நீ கூறியது சரி தான். அவர் தன்னடக்கமா இருக்காரு 🙂 .

    “சில நாட்களாக ரஜினி ரசிகர்கள் திமுக வை மிக அதிகமாக ருவீட்டரில் விமர்சிக்கிறார்கள்.”

    காரணம் ஒன்றும் பெரியதாக இல்லை.

    மற்ற கட்சியினரை விட திமுக வினர் ரஜினியை கடுமையாக விமர்சிக்கிறார்கள், எனவே, இவர்களும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

    திமுக வை ரஜினி ரசிகர்கள் பலவீனப்படுத்துகிறார்கள் என்பதை விட ரஜினியை பலவீனப்படுத்த திமுக வினர் முயல்கிறார்கள் என்பதே உண்மை.

    திமுக பெரிய கட்சி அதை நாங்கள் பலவீனப்படுத்துவது என்பது எளிதல்ல. அதோடு அவர்களுக்கு ஊடக பலம் உள்ளது.

    இங்கே ரஜினி சொன்னதையே மாற்றி கூறுகிறார்கள். அப்படி இருக்கும் போது எங்கள் பக்கம் அவ்வளவு பலமில்லை. இருப்பினும் அவர்களுக்கு சவால் கொடுப்பது உண்மை.

    அதோடு திமுக பிடிக்காத மற்றவர்களும் சேரும் போது கூடுதல் ஆதரவாக உள்ளது.

    “இதில் உங்களை நான் சேர்க்கவில்லை. ஆகவே கோபப்படாமல் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.”

    இல்லை நீ கேட்டதில் உண்மை தான் தெரிந்தது. வேண்டும் என்று கேட்கவில்லை.

    @ஜோதிஜி 🙂

    @வேகநரி நீங்கள் கூறுவது சரியே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here