திரையுலகின் வழக்கமான முறைகளை OTT வெளியீடு முற்றிலும் மாற்றி விட்டது குறிப்பாக நடிகர்களின் பிம்பத்தை, வசூல் மோசடிகளை. OTT அழிக்கும் Stardom & ரசிக சண்டைகள் என்னவென்று பார்ப்போம். Image Credit
OTT வெளியீடு
கொரோனா காரணமாக, திரைப்படங்களைத் திரையரங்குகளில் வெளியிட முடியாததால், பெரும்பாலானவர்கள் OTT யில் வெளியிட்டு வருகிறார்கள்.
காரணம், தயாரித்த படத்தை வெளியிடவில்லையென்றால், கடனுக்கான வட்டி அதிகரிக்கும். திரையரங்கில் வெளியிட்டால், கொரோனா காரணமாக எந்த அளவுக்கு மக்கள் வருவார்கள் என்று தெரியாது, உறுதியற்ற வசூல் நிலை.
எனவே, முதலுக்கு மோசம் இல்லாமல், செலவழித்த பணம் திரும்ப வந்தால் போதும் என்ற எண்ணம்.
ஆனால், OTT யின் ராசியோ என்னவோ வெளியான பெரும்பாலான படங்கள் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.
திரையரங்கில் வெளியிட்டு இருந்தாலும், இதே நிலை தான்.
பாராட்டைப் / வரவேற்பை பெற்ற படங்கள் Zee 5 ‘லாக்கப்‘, Amazon Prime சூரரைப் போற்று, Hotstar மூக்குத்தி அம்மன்.
பெரிய நடிகர்களுக்குச் சிக்கல்
தமிழகத்தில் கதாநாயக பிம்பம் பல காலமாகத் தொடர்கிறது. ட்ராக்கர்ஸ், ட்விட்டர் பிரபலங்கள் கிளப்பிய போலி வசூல் கணக்குகளால், மோசடி நடந்து வருகிறது.
ரசிகர்களும் தாங்கள் ரசிக்கும் நடிகரை உயர்த்தியும், போட்டி நடிகரைப் பழித்தும் சண்டை போடுவதாலும், நடிகர்களுக்கு நல்ல மைலேஜ் கிடைத்து வருகிறது.
ஒரு நடிகர் மட்டுமே என்றால் பெரியளவில் கவனிக்கப்பட மாட்டார்கள் ஆனால், அதே இருவருக்கிடையேயான போட்டி என்றால் கவனம் பெறும்.
எனவே, ஒரு படம் வெளியான இரண்டாம் பாதியில் இருந்தே விமர்சனங்களும், வசூல் விவரங்களும் களை கட்ட ஆரம்பித்து விடும்.
வசூல் சண்டைகள்
முதல் நாளே இவ்வளவு கோடி, அவ்வளவு கோடி வசூல் என்று ட்ராக்கர்ஸ் ஆரம்பித்து விடுவார்கள் ஆனால், அவை உண்மையான தகவல்கள் அல்ல.
ரசிகர்களும் தங்களுக்குச் சாதகமான வசூல் நிலவரங்களை, ட்விட்டர் தகவல்களைப் பகிர்ந்து மற்றவர்களுடன் சண்டை போட்டு, ஏதாவது ஒரு இணையத் தளத்தில் இருந்து லிங்க்கை கொடுத்து ஆதாரம் காட்டுவார்கள்.
இச்சண்டைகள் இயல்பாகவே ஒரு விவாதத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.
OTT அழிக்கும் Stardom & ரசிக சண்டைகள்
திரையரங்கில் வெளியாகி, வசூல் சண்டைகள் நடந்தால் தான் நடிகர்களுக்குப் பலன். படம் வெளியாகி எந்தப் பரபரப்பும் இல்லையென்றால் அவர்களுக்கு இழப்பு.
OTT யில் வெளியான அன்று ட்விட்டரில் விமர்சனங்களில் சண்டை ஓரிரு நாட்கள் இருக்கும், மீம்ஸ் போடுவார்கள், அந்த வார இறுதியோடு முடிந்து விடும்.
ஆனால், வசூல் சண்டை நடைபெறாது, வாய்ப்பில்லை. சூரரைப் போற்று படத்தையே எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
இவையெல்லாவற்றையும் விட முதல் நாள் திரையரங்கில் நடக்கும் சண்டைகள், பரபரப்புகள் எதுவுமே இருக்காது. நடிகர்கள் பலத்தைக் காட்ட முடியாது.
FDFS
மல்டிப்ளெக்ஸ் இல்லாத காலத்தில் FDFS என்பது கொண்டாட்டமாக இருந்தது ஆனால், தற்போது அதன் அர்த்தமே மாறி அரசியலாகிக்கொண்டு இருக்கிறது.
வசூலை ட்ராக்கர்ஸ் பயன்படுத்துவது போல, ரசிகர்களைத் திரையரங்குகள் உசுப்பேத்தி பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
OTT வெளியீடு எந்தப் பரபரப்பையும் தராது என்பதால், பெரிய நடிகர்களுக்குச் சிக்கலாகி உள்ளது.
தற்போது OTT நிறுவனங்கள், எவ்வளவு பேர் படத்தைப் பார்த்தார்கள் என்பதை வெளியிடுவதில்லை. பின்னாளில் ஒருவேளை வெளியிட ஆரம்பித்தால், இதை வைத்துத் திரும்ப வழக்கம் போலச் சண்டைகள் நடைபெறலாம்.
ட்ராக்கர்ஸ்
OTT வெளியீடால் யார் பாதிக்கப்பட்டார்களோ இல்லையோ ட்ராக்கர்ஸ் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓடாத படத்தை ஓடியதாக, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கே தெரியாத வசூலை இவர்கள் கூறி வந்தார்கள்.
கடந்த படத்துக்குக் கூறிய வசூலை, இவர்களே இந்தப்படத்துக்கு இன்னும் அதிகப்படுத்திக் கூறுவார்கள். அதையும் ஒரு கூட்டம் நம்பி சண்டையிடும்.
தற்போது திரையரங்கில் வெளியாகாததால், வசூல் கதை அளக்க முடியவில்லை. இவர்களின் வருமானமும் பெரியளவில் தடைபட்டு விட்டது.
தயாரிப்பாளர் பணம் கொடுக்கவில்லையென்றால், படத்தைச் சுமார் என்றும், பணம் கொடுத்தால் சூப்பர் என்றும், இவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது.
முடிவுக்கு வந்தால் நல்லது
கொரோனா பிரச்சனை முடிந்த பிறகு திரைப்படங்கள் வழக்கம் போலத் திரையரங்குகளில் வெளியாகத் துவங்கி விடும்.
வழக்கம் போலச் சண்டைகளும் துவங்கி விடும் என்பது கசப்பான உண்மை.
நாகரீகமான விமர்சனங்கள், சிறந்த விவாதத்தைக் கொண்டு வரும் ஆனால், அதற்கான வாய்ப்புகள் தற்போது பெருமளவு குறைந்து விட்டன.
இன்னும் ஒரு தலைமுறைக்கு இது போல ‘Stardom fight” இருக்கலாம், பின்னர் தொடர வாய்ப்புகள் குறைவு. தொடரவில்லையென்றால், மகிழ்ச்சி.
தொடர்புடைய கட்டுரைகள்
திரையரங்கு உரிமையாளர்கள் Vs தயாரிப்பாளர்கள்
டிராக்கர்ஸ் அரசியலும் உணராத ரசிகர்களும்!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கடந்த 40 ஆண்டுகளில் முதலாளியை மதிக்காத ஒரே துறை திரைப்படத்துறை. நீங்கள் உயிர் பொருள் ஆவி அனைத்தையும் கொண்டு வந்து முதலீடாக உள்ளே வந்து போட்டு வந்தவன் போனவன் அத்தனை பேர்களும் மஞ்சள் குளித்து பிரபல்யமாக மாறி அரசியல் கனவுகள் சுமந்து சமூக ஆர்வலராக மாறி ஆட்டம் போட்டு அடுத்தடுத்து வரும் தயாரிப்பாளர்களை அழித்து…. கற்பனை செய்து பாருங்கள். உங்களால் இந்த வாழ்க்கை வாழ முடியுமா?
தயாரிப்பாளருக்கு அடுத்த சங்கிலி அப்போதே கட் செய்யப்படுகின்றது. ஆனால் நடிகர் விநியோகஸ்தர், திரை அரங்க உரிமையாளர்கள் சங்கிலி நேரிடையாக மறைமுகமாக உருவாகிப் பாதுகாக்கப்படுகின்றது. நடிகரை இவர்களால் மிரட்ட முடியும். பணிய வைக்க முடியும். அடுத்தடுத்து இருப்பவர்கள் இப்படியே மற்றொருவரைச் செய்ய முடியும். ஏன் இப்படி?
தி கேப்டன் என்றொரு சீனப் படத்தைப் பாருங்கள். பார்த்து மூன்று நாட்கள் ஆகி விட்டது. இன்னமும் என்னால் அந்தப்படத்தை விட்டு மீண்டு வர முடியவில்லை. இப்படி இவர்களால் ஏன் எடுக்க முடியாது? நிச்சயம் முடியும். மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பது பொய். இவர்களுக்குப் புகழ் மாலை தேவைப்படுகின்றது.
ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு அரசியல் பேசும் நடிகரிடம் நீங்க எங்கள் ஊருக்கு வாங்க. அடிப்படைத் தேவைகள் நிறையச் செய்ய வேண்டியுள்ளது. அதனைப் பார்த்து விட்டு அடுத்த ஆடியோ விழாவில் அதனைப் பற்றி பேசுங்கள் என்று ஒரு ரசிகர் சொன்னால் அடுத்த விழாவில் அந்த நடிகர் பொது விசயங்கள் குறித்துப் பேசுவாரா?
இதுவொரு மாயச்சுழல். பல லட்ச ரசிகர்கள் வருடந்தோறும் தங்கள் வாழ்க்கையைப் பணத்தை இழந்து கொண்டிருக்கின்றார்கள்.
உண்மையிலையே சூரரை போற்று படம் அமெஜானுக்கு லாபமா நட்டமா ?
பெரும்பாலான படங்கள் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை : கிரி, எனக்கு தெரிந்த வரை வரவேற்ப்பு பெற்றுள்ளது அல்லது பெறவில்லை என எப்படி கணிக்க முடியும்.. உறுதியான தகவல்கள் ஏதும் OTT நிறுவனத்தால் தற்போது அளிப்பதாக தெரியவில்லை.. எதிர்காலத்தில் இந்த புள்ளி விவரமே படத்தின் விலையை நிர்ணயிக்கும் குறியீடாக அமையலாம்..
சண்டைகள் நடந்தால் தான் நடிகர்களுக்குப் பலன் : எதிர்காலத்தில் திரைத்துறையின் நிலை எவ்வாறு அமையும் என்று தெரியவில்லை.. காரணம் பல கோடி முதலீட்டில் சில படங்கள் மட்டுமே வர வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.. குறிப்பிட்ட இயக்குனர்களை படங்கள் மட்டும்..
தற்போது OTT நிறுவனங்கள், எவ்வளவு பேர் படத்தைப் பார்த்தார்கள் : நிச்சயம் இந்த தகவல்கள் எதிர்காலத்தில் வெளி வரும்..
திரைத்துறையின் நிலை : மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறது.. எல்லாரும் ஒன்று பட்டால் மட்டுமே பிரச்சனையை கையாள முடியும்..
@ஜோதிஜி
“கடந்த 40 ஆண்டுகளில் முதலாளியை மதிக்காத ஒரே துறை திரைப்படத்துறை”
ரொம்ப சரியா சொன்னீங்க. இதற்குக் காரணம் யார் என்று இங்கே கூறியுள்ளேன் https://www.giriblog.com/tamil-cine-field/
@தனுஷ்
“உண்மையிலையே சூரரை போற்று படம் அமெஜானுக்கு லாபமா நட்டமா ?”
OTT க்கு திரைப்படத்தை விநியோஸ்தர்கள் போல வாங்கி லாபமா நட்டமா என்று கூற முடியாது.
எவ்வளவுக்கெவ்வளவு OTT படங்களின் எண்ணிக்கை / நல்ல படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு Subscribe செய்பவர்கள் அதிகரிப்பார்கள்.
எனவே, கிடைத்த படத்தை வாங்கி போட்டுட்டே இருப்பாங்க.
எனவே, OTT டேட்டாபேஸ் ல எவ்வளவு படம் உள்ளது என்பதை வைத்தே அவர்கள் வருமானம். அதே போலப் புதிய படங்களைச் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால், ஏற்கனவே subscribe செய்தவர்கள் விலகி விடுவார்கள்.
சின்னக் கணக்கு போட்டுப் பாருங்க.. Prime ல ஒரு லட்சம் பேர் உள்ளார்கள், வருடத்துக்கு 1000 கட்டியுள்ளார்கள் என்றால்.. 🙂 . எனவே, மொத்த வருமானம் தான் கணக்கே! அமெரிக்காவில் 100+ மில்லியன் மக்கள் Subscribe செய்துள்ளார்கள்.
@யாசின்
“கிரி, எனக்குத் தெரிந்த வரை வரவேற்ப்பு பெற்றுள்ளது அல்லது பெறவில்லையென எப்படி கணிக்க முடியும்.”
மக்களால் பரபரப்பாகப் பேசப்பட வேண்டும். நான் பல படங்களைப் பார்க்கக்கூட இல்லை.. காரணம், விமர்சனங்கள் / வாய் மொழி விமர்சனம்.
அதோடு அந்த OTT நிறுவனங்கள் சில நேரங்களில் அதிகம் பேர் பார்த்தார்கள் என்று கூறுவார்கள்.
OTT தகவல்களை ட்ராக்கர்ஸ் போலச் சண்டை மூட்டி விட்டுப் பரபரப்பாக்க செய்யாமல் இருந்தால் நல்லது.