ஓதி மலை முருகன் அற்புதங்கள்

70
Othimalai murugan ஓதி மலை முருகன்

த்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் ஓதி மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. வறட்சியான பகுதி, மரங்கள் அதிகம் இருக்காது, இருக்கும் பெரும்பாலான மரங்களும் முள் மரங்களே.

1650+100 படிகள்

கோவில் 1650+100 செங்குத்தான படிக்கட்டுகளைக் கொண்டது, நகரத்து வயதானவர்கள் ஏற முடியாது, வயது குறைந்தவர்களே ஏறத் திணறி விடுவார்கள்.

முதல் முறை எங்கும் உட்காராமல் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கடைசியில்  வேறு வழி இல்லாமல் உட்கார்ந்துவிட்டேன்.

கொஞ்சம் மறந்து பின்னால் சாய்ந்தாலும் பல்டி போட்டு விடுவோம், அவ்வளோ செங்குத்தான பகுதி. மிகைப்படுத்தி கூறவில்லை.

சபரி மலை சென்ற போது கூட இவ்வளோ சிரம படவில்லை.

இக்கோவிலுக்கு நடந்து மட்டுமே போக முடியும், வாகன பாதை கிடையாது.

எளிமையான ஓதி மலை முருகன் கோவில்

கோவில் மிக எளிமையாக இருக்கும், எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல்.

கோவிலுக்கு வரும் ஐயர் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வருவார் (படி ஏறி படி ஏறித் திடமாக இருக்கிறார்) ஒரு சில நாட்கள் கோவிலிலேயே தங்கி விடுவார்.

அவர் எப்படி தான் ஏறிப் போய் பூசை செய்கிறாரோ!! நினைத்தாலே கண்ணைக் கட்டுது. எந்த வித ஆடம்பர அலங்காரமும் இல்லாமல், எளிமையான முருகன் சிலை, பார்க்கவே அற்புதம். இத்தனை உயர மலையிலும் ஒரு கிணறு உள்ளது.

கஷ்டப்பட்டு நடந்து வந்தாலும் மேலே வந்ததும் ஒரு நிம்மதி கிடைக்கிறது.

சம்பவங்கள்

என் அக்கா இக்கோவில் முருகன் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்து உள்ளார்கள், இங்கே சென்று வேண்டினால் நல்லது நடக்கும் என்று அவர்கள் நம்பிக்கை.

அதை உண்மையாக்கும் வகையில் ஒரு சில சம்பவங்கள் நடந்தன.

நமக்கும் மேலே ஒரு சக்தி உள்ளது என்பதை நான் முழுமையாக நம்புபவன். கடவுள் மீது நம்பிக்கை உண்டு ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை இல்லை.

நடந்த ஒரு சில விஷயங்கள் என் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

அக்காவின் கணவர் உறவினர் 4 பேருக்கும் எங்கள் உறவினர் ஒருவருக்கும் இந்த கோவில் சென்ற வந்த பிறகு குழந்தை பிறந்தது (நீண்ட காலமாகக் குழந்தை இல்லாமல்) மூவரின் நிலை எனக்குச் சரியாகத் தெரியவில்லை ஆனால், உண்மை.

எனக்குத் தெரிந்த மீதி இருவர் பற்றிக் கூறுகிறேன்.

சம்பவம் 1

ஒரு தம்பதிக்கு நீண்ட வருடங்களாகக் குழந்தை இல்லை.

பல மருத்துவர்களிடம் காண்பித்து விட்டார்கள் மருத்துவர்களும் ஆணின் விந்தணுவில் சரியான அளவு உயிரணு இல்லை, எனவே குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறி விட்டார்கள்.

திருமணம் ஆகி 5 வருடம் ஆகி விட்டது. அனைவரும் கை விட்ட பிறகு அனைவருக்கும் நினைவு வருவது கடவுள் தானே.

எனவே, என் அக்காவின் விருப்பத்திற்காக இதையும் முயற்சி பண்ணலாமே என்று அவர்கள் கோவில் சென்று முருகனை வேண்டி வந்தார்கள்.

அடுத்த மாதமே கருவுற்றார்கள்.

தற்போது குழந்தை பிறந்து நலமுடன் இருக்கிறார்கள். இது நம்பவே முடியாத அதிசயம்.

சம்பவம் 2

இன்னொரு தம்பதி எனக்கு மிக நெருங்கிய உறவினர். திருமணம் ஆகி 20 வருடம் ஆகி விட்டது ஒரு முறை கருத்தரித்து அழிந்து விட்டது.

பிறகு கருவுறவே இல்லை, அவரின் (ஆணின்) விந்தணுவில் உயிரணு இல்லை என்று கூறி விட்டார்கள்.

இவரும் இந்தக் கோவில் வந்து வேண்டிக் கொண்டார், இதற்காகப் பல விரதங்கள் பல வேண்டுதல்கள் என்று பட்ட கஷ்டம் சொல்லி மாளாது.

பிறகு அக்காவின் ஆலோசனை படி (அக்கா மருத்துவர்) சென்னை கமலா மருத்தவரிடம் ஆலோசனை பெற்று செயற்கை முறையில் கருத்தரித்துள்ளார்கள்.

இது அறிவியல் தான் இங்கே எங்கே கடவுள் வந்தார் என்றால் பதில் இல்லை.

20 வருடம் குழந்தை இல்லாமல் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி பல நாட்கள் அழுது, மற்றவர்களின் பேச்சுகளைச் சமாளித்து இந்த நிலையை அடைந்தவர்களிடம் போய் இது கடவுள் செயல் அல்ல அறிவியல் என்று கூறினால் நம்மை அவர் என்ன கூறுவார் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

வெளியே இருந்து கூறுகிறவர்கள் என்ன வேண்டும் என்றாலும் கூறலாம், கஷ்டபடுகிறவர்களுக்கு மட்டுமே அதன் அருமை புரியும்.

தற்போது கருவுற்று இருக்கிறார்கள், இன்னும் குழந்தை பிறக்கவில்லை.

அவர்கள் நலமுடன் குழந்தை பெற அந்த முருகன் ஆசிவர்த்திப்பானாக.

(பிற்சேர்க்கை: இவருக்குக் குழந்தை பிறந்து நலமுடன் இருக்கிறார்கள்)

சம்பவம் 3

இன்னொரு பெண், இவருக்குத் திருமணமே ஆகவில்லை.

பல இடங்களில் முயற்சி செய்தும் சரியான வரன் கிடைக்கவில்லை. என் திருமணத்திற்கு முன்பு இருந்து பார்க்கிறார்கள்.

தற்போது அக்கா கோவிலுக்குச் சென்று வர கூறி, போய் வந்த பிறகு தற்போது நல்ல இடத்தில் வரன் கிடைத்துள்ளது.

கோவிலுக்குப் போகாமல் இருந்தால் கடவுள் வரன் கொடுக்க வில்லை என்றால், அது என்ன கடவுள் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை.

திருமணம் ஆகாமல் தள்ளிப் போவது எவ்வளோ பெரிய கொடுமை என்று அந்த நிலையில் இருப்பவர்களுக்குத் தான் தெரியும் அதுவும் குறிப்பாகப் பெண்கள்.

அந்த நிலையில் இருப்பவர்கள் கடவுளிடம் உன்னைத் தேடி வந்தால் தான் கொடுப்பாயா என்றெல்லாம் கேக்கும் மன நிலையில் இருக்க மாட்டார்கள்.

முயற்சிப்பதில் தவறில்லை

மூன்று முறை இதோடு சென்று வந்துள்ளேன். எனக்கும் பல நன்மைகள் நடந்ததாகவே கருதுகிறேன். என் பகுதியை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதை நான் ஏன் கூறினேன் என்றால் இதைப் போலக் கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள்.

பல முயற்சிகளைச் செய்து இருப்பார்கள், கடைசியாக இதையும் ஏன் முடிந்தால் முயற்சித்து பார்க்கக் கூடாது.

நல்லது நடக்கவில்லை என்றாலும், கெட்டது நடக்க வாய்ப்பில்லையே. நம்பிக்கையோடு எதைச் செய்தாலும் அதற்குப் பலன் உண்டு.

அது கடவுளுக்கு எனும் போது கொஞ்சம் கூடுதல் சக்தி இருப்பதாகவே உணருகிறேன்.

கடவுள் நம்பிக்கை பற்றி பேசும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது பதிவர் அனுராதா அவர்கள் கூறியது தான்.

நான்கு பக்கமும் கஷ்டம் வந்தால் நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான்

  • பார்க்குறதுக்கு சின்ன மலையா இருக்கேன்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க, ஏறும் போது தான் அதன் கஷ்டம் தெரியும்.
  • ஒவ்வொரு 300 படிக்கட்டிற்கும் ஒரு இளைப்பாறும் மண்டபம் இருக்கும் (850 படிக்கட்டு வரை)
  • சமதரையே கிடையாது முழுவதும் படிக்கட்டே தான். 850 வது படிக்கட்டு அருகே ஒரு சிறு கோவில். இதன் பிறகு இளைப்பாறும் மண்டபம் கிடையாது
  • முருகனை புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை என்பதால் கோபுரம் மட்டுமே எடுத்தேன்
  • தூரத்தில் தெரிவது பவானி சாகர் அணையின் தண்ணீர்
  • மேக மூட்டம் ஒரு சில இடங்களில் இருப்பது மேலே இருந்து பார்க்கும் போது அழகாகத் தெரிந்தது
  • வெய்யில் நேரத்தில் காலில் செருப்பு இல்லாமல் ஏற இறங்க முடியாது.
  • ஒரு முறை என் அக்கா இருவர் கோவிலுக்குப் போகும் போது வெய்யில் இல்லாததால் செருப்பு போடாமல் சென்று விட்டு வரும் போது வெய்யில் கொளுத்தி, நடக்க முடியாமல் கண்ணில் தண்ணீர் வந்தது தனிக் கதை.
  • கருங்கல் என்பதால் சூடு தாறுமாறாக இருக்கும்.

ஓதி மலை செல்க முருகன் அருள் பெருக

தொடர்புடைய கட்டுரைகள்

அழகன் முருகன்

சஷ்டி விரத அனுபவங்கள்

“சஷ்டி விரதம்” ஏன்? எதற்கு? எப்படி? விளக்கங்கள்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

70 COMMENTS

  1. //ஜெகதீசன் said.
    //
    🙂
    அப்ப எனக்கு இல்லை… நான் தொடரவில்லை…. 😛 //

    ஜெகதீசன் நான் நீக்கிய பதிவில் உங்கள் பின்னூட்டம் வந்து விட்டது 🙂 மன்னிக்கவும். நீங்க நாத்திகரா!!!

    —————————————————————–

    //கோவி.கண்ணன் said…
    படங்கள் அழகாக இருக்கிறது/

    நன்றி கோவி கண்ணன். சிங்கையில் நான் மட்டும் தான் தனி போல :-))

    ————————————————

    //ஜெகதீசன் said…
    கிரி,
    தமிழ்மணத்தில் இந்த இடுகையின் சுட்டியை அழுத்தினால்,
    “Page not found
    Sorry, the page you were looking for in the blog மனசாட்சி does not exist.”
    என்று error page போகுது….

    Url எதும் மாத்தீட்டீங்களா என்ன?//

    சின்ன மாற்றம் செய்து மறுபடியும் வெளியிட்டேன். 🙂 நன்றி

  2. நம்பிக்கை என்றைக்கும் கை விடுவதில்லை. முருகனின் அருள் பெற விரும்புவோருக்கு வழி காட்டும் பதிவு. படங்கள் அருமை.

    எங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் கருங்குளம் என்ற இடத்தில் இதே போன்ற குன்றின் மேல் பெருமாள் கோயிலும், அடிவாரத்தில் சிவன் கோயிலும் அமைந்திருக்கும். படங்கள் அதை நினைவு படுத்தின, குறிப்பாக குன்றின் மேலிருந்து ஊரினை எடுத்திருக்கும் படம். அக் கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் ஒரு அருமையான மனநிறைவும் அமைதியும் பெறுவர்.

    • கருங்குளம் வெங்கடாசலபதி…. சந்தனக்கட்டையால் உருவம். நல்ல கோயில். எனது மகளின் புகுந்த வீட்டாரின் குல தெய்வம். கீழே சிவன் கோயில். சுற்றிலும் வாழையால் சூழப்பட்ட ஊர்.

  3. //கூடுதுறை said…
    I don’t about this kovil
    thanks for your information//

    நன்றி கூடுதுறை

    ——————————————————-

    //நம்பிக்கை என்றைக்கும் கை விடுவதில்லை//

    உண்மை ராமலக்ஷ்மி. கடவுள் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைக்கிறோமோ அதே அளவு நம் மீதும் நம்பிக்கை வைத்து நம் கடமைகளை சரி வர செய்தாலே போதுமானது. நம் கடமையை எதுவும் செய்யாமல் கடவுளை மட்டும் எதிர்ப்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. அதையே நீங்களும் கூறுகிறீர்கள் என்று நம்புகிறேன்.

    //குன்றின் மேலிருந்து ஊரினை எடுத்திருக்கும் படம். அக் கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் ஒரு அருமையான மனநிறைவும் அமைதியும் பெறுவர்.//

    உங்களின் கருத்திற்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள் 🙂

  4. கிரி,
    தமிழ்மணத்தில் இந்த இடுகையின் சுட்டியை அழுத்தினால்,
    “Page not found
    Sorry, the page you were looking for in the blog மனசாட்சி does not exist.”
    என்று error page போகுது….

    Url எதும் மாத்தீட்டீங்களா என்ன?

  5. //அதை நாம் முருகனாகவும், அல்லாவாகவும், இயேசுவாகவும் வழிபட்டு வருகிறோம் என்று பலரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்//

    சரியா சொன்னீங்க நிருபர்

    //தாங்கள் திருவண்ணாமலைக்கு சென்று என்றாவது கிரிவலம் வந்ததுண்டா//

    இது வரை இல்லை.

    //நீங்கள் சொல்லும் ஓதி மலை அற்புதங்கள் போல திருவண்ணாமலை அற்புதங்களும் ஏராளம் உண்டு. இதை நானும் என் அனுபவத்தில்தான் சொல்கிறேன்.//

    வாய்ப்பு கிடக்கும் போது கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நிருபர்

  6. //நமக்கும் மேலே ஒரு சக்தி உள்ளது என்பதை நான் முழுமையாக நம்புபவன்//

    சிறு வயதில் இருந்தே நானும் இதே கருத்தை என் மனதில் பதித்து வைத்திருக்கிறேன். கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை நண்பரே. மனித சக்திக்கு மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதை நாம் முருகனாகவும், அல்லாவாகவும், இயேசுவாகவும் வழிபட்டு வருகிறோம் என்று பலரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

    கிரி.. தாங்கள் திருவண்ணாமலைக்கு சென்று என்றாவது கிரிவலம் வந்ததுண்டா…? நீங்கள் சொல்லும் ஓதி மலை அற்புதங்கள் போல திருவண்ணாமலை அற்புதங்களும் ஏராளம் உண்டு. இதை நானும் என் அனுபவத்தில்தான் சொல்கிறேன்.

  7. // புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
    எந்த நல்ல விஷயத்தையும் கஷ்டப்பட்டு தான் அடையணும்//

    உண்மை தான் அப்துல்லா. அப்படியே அடையும் எதுவும் நிலைத்து இருக்கும். உங்கள் வருகைக்கு நன்றி.

  8. பார்க்குறதுக்கு சின்ன மலையா இருக்கேன்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க, ஏறும் போது தான் அதன் கஷ்டம் தெரியும்.
    //

    எந்த நல்ல விஷயத்தையும் கஷ்டப்பட்டு தான் அடையணும்

  9. உங்கள் வர்ணனையும் புகைப்படங்களும் அருமையாக இருந்தன. நேரில் முருகனை தரிசித்து வந்தது போல இருந்தது.

  10. //Expatguru said…
    உங்கள் வர்ணனையும் புகைப்படங்களும் அருமையாக இருந்தன. நேரில் முருகனை தரிசித்து வந்தது போல இருந்தது.//

    உங்கள் பாராட்டுக்கு நன்றி குரு

  11. // இளவேனில் said…
    கடவுள் இல்லை…! கடவுள் இல்லை…!
    என்று ஆன்மிகவாதியை விட அதிக முறை
    இறைவன் நாமத்தை கூறுபவர்கள் நாத்திகர்கள் …//

    எப்படி சக்தி இப்படி எல்லாம்? :-)))))

    //எல்லாம் அவரவர் நம்பிக்கையை பொருத்தது …
    அன்பே சிவம் …! உணர்த்தால் போதும் //

    நெத்தியடியா சொன்னீங்க.

    //தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின்
    அற்புதங்களை கேட்க்கும் போது மிக சந்தோசமாக இருக்கு
    அதை விட ..அந்த இடத்தையும் கோவிலையும் பார்க்கும் போது
    போய் தரிசிக்கனும்னு ஆசையா இருக்கு //

    கவலையே படாதீங்க, அடுத்த முறை என் வீட்டிற்கு வரும் போது கண்டிப்பாக கூட்டி செல்கிறேன்.

    //நகர்ப்புற திருத்தலங்களில் கிடைக்காதா ஒன்று
    புகைப்படத்தை பார்க்கும் போதே எனக்கு கிடைக்கிறது ….//

    அது வேறு ஒன்றும் இல்லை சக்தி, ஆடம்பரம் இல்லாத எளிமையான அழகு. கிரானைட் கற்கள் பதித்த கோவில்களில் கிடைக்காத அழகு இந்த கருங்கற்களில் கிடைக்கிறது. எனக்கு பழனி கோவிலில் கிடைக்காத நிம்மதி (குறிப்பா அங்கே இருக்கிற பூசாரிகள் திருட்டு தொல்லை தாங்க முடியலை) இங்கே கிடைக்கிறது. எளிமையில் இருக்கும் அழகு எத்தனை செலவு செய்து கோவில் கட்டினாலும் கிடைக்காது. இது புரியாதவர்கள் ஏதோ கடவுள் கேட்கிறார் என்று இவர்களே நினைத்து வெட்டி செய்து கொண்டு உள்ளார்கள்.

    //இயற்க்கை எழில் சூழ்ந்த திருத்தலத்தில்
    என் மனதில் அமைதி …//

    இந்த பதிவால் உங்களுக்கு நிம்மதி கிடைத்தது என்றால் எனக்கு மிக்க சந்தோசமே.

  12. கடவுள் இல்லை…! கடவுள் இல்லை…!
    என்று ஆன்மிகவாதியை விட அதிக முறை
    இறைவன் நாமத்தை கூறுபவர்கள் நாத்திகர்கள் …
    நான் அவர்களை குறை சொல்லவில்லை –
    எல்லாம் அவரவர் நம்பிக்கையை பொருத்தது …
    அன்பே சிவம் …! உணர்த்தால் போதும் …

    தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின்
    அற்புதங்களை கேட்க்கும் போது மிக சந்தோசமாக இருக்கு
    அதை விட ..அந்த இடத்தையும் கோவிலையும் பார்க்கும் போது
    போய் தரிசிக்கனும்னு ஆசையா இருக்கு ….
    நகர்ப்புற திருத்தலங்களில் கிடைக்காதா ஒன்று
    புகைப்படத்தை பார்க்கும் போதே எனக்கு கிடைக்கிறது ….

    இயற்க்கை எழில் சூழ்ந்த திருத்தலத்தில்
    என் மனதில் அமைதி …

    அரோகரா… ! அரோகரா …!

  13. முருகனுக்கு “கந்தவைத்தியன்” என்று மறுபெயர் உள்ளதை இந்த செய்தி நினைவு படத்துகிறது

  14. கிரி புகைப்படங்கள் மிக அருமை. கண்டிப்பாக வேண்டுதலுக்காக செல்லாவிட்டாலும், மன அமைதிக்காவது அங்கு செல்ல தூண்டுகிறது உங்கள் கட்டுரை.

  15. அழகாக இருக்கிறது ஓதி மலையின்
    படங்கள்.

    இங்கு செல்வதற்கு வழிகள் பல உண்டு.

    அருகில் உள்ள பல ஊர்களும் நினைவுக்கு வருகின்றன.

    இரும்பொறை, பெத்திகுட்டை,புளியம் பட்டி…..

  16. //Venkatbalaji said…
    Really good information.
    Thank you very brother.
    Put your trust in God misfortune will you pass.//

    நன்றி வெங்கட் பாலாஜி

    ===============================================================

    //senthildharman said…
    நல்ல பதிவு. ஓதி மலை படங்கள் மிகவும் அருமை.//

    நன்றி செந்தில் தர்மன்

    இருவரின் முதல் வருகைக்கும் நன்றி

  17. //சிம்பா said…
    கிரி புகைப்படங்கள் மிக அருமை. கண்டிப்பாக வேண்டுதலுக்காக செல்லாவிட்டாலும், மன அமைதிக்காவது அங்கு செல்ல தூண்டுகிறது உங்கள் கட்டுரை//

    உங்கள் பாராட்டிற்க்கு நன்றி சிம்பா. ஆராவாராம் இல்லாத இடம் கண்டிப்பாக அமைதியாக தான் இருக்கும், அதிலும் கோவில் எனும் போதும் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

    //please increase the font size. that will help the people like me.//

    அவ்வளவு சிறியதாகவா இருக்கிறது! முயற்சிக்கிறேன்

    ================================================================

    //பெருசு said…
    அழகாக இருக்கிறது ஓதி மலையின்
    படங்கள்.//

    நன்றி பெருசு. உங்கள் பெயரை கேட்டால் என் நண்பன் நினைவு வருகிறது 🙂

    //இங்கு செல்வதற்கு வழிகள் பல உண்டு.
    அருகில் உள்ள பல ஊர்களும் நினைவுக்கு வருகின்றன.
    இரும்பொறை, பெத்திகுட்டை,புளியம் பட்டி…..//

    நீங்க எங்கள் ஊர் அருகில் தான் இருக்கிறீர்களா!

    இருவரின் முதல் வருகைக்கும் நன்றி

  18. THERE IS SO MANY TEMPLES LIKE THIS MURUGA TEMPLE. I HAVE WORSHIPED SO MANY DIFFERENT TEMPLE GODS. EACH EVERY ONE ARE DIFFERENTLY GIVE WHAT OUR ENQUIRE IF WE BELIVELY WORSHIP THANK YOOOOOO

  19. //சரவணகுமரன் said…
    புகைப்படங்கள் அனைத்தும் அருமை, கிரி//

    நன்றி சரவண குமரன்

    ====================================================

    // somasundram said…

    THERE IS SO MANY TEMPLES LIKE THIS MURUGA TEMPLE. I HAVE WORSHIPED SO MANY DIFFERENT TEMPLE GODS. EACH EVERY ONE ARE DIFFERENTLY GIVE WHAT OUR ENQUIRE IF WE BELIVELY WORSHIP THANK YOOOOOO//

    நன்றி சோமசுந்தரம்

    =======================================================

    // muthu said…

    hey i read it . i belive 100% on u r experince. i need bus route to this temple hill can u mail me that//

    முத்து உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பினேன் ஆனால் பவுன்ஸ் ஆகி விட்டது. அங்கே செல்ல பேருந்து வசதி சரியாக இல்லை, எனவே சத்தியமங்கலம் ல் இருந்து டாக்சி எடுத்துக்கொள்ளவும்.

  20. Giri are u an Coimbatore?. bcoz i am coimabtore native guy. ur publishing about temple and their god this site is so beatiful. I appreacite u….. Give ur address and phone numbers.

  21. நான் கோவை அருகே உள்ள கோபிசெட்டிபாளையம், தற்போது சிங்கப்பூர் ல் உள்ளேன். நீங்கள் என்னை தொடர்பு கொள்ள விரும்பினால் contact@giriblog.com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

    உங்கள் பாராட்டிற்கு நன்றி

  22. Good article with pictures.I will keep this temple in mind when I visit India next time. Nandri.

  23. டியர் சார்,
    நானும் அந்த ஓதி மலை முருகனின் பக்தை நீங்கள் சொனது முழுக்க முழுக்க உண்மை நானும் அதை உணர்த்து உள்ளேன். முருகனின் அருளே அருள்.
    நன்றி

  24. கண்ணன் நவம்பர் 12

    ஆரம்பத்தில் சற்றே அதிரிர்ந்தென் மேலும் சுதரிதுகொண்டு கட்டுரையை படித்தேன் இறுதியில் மகிழ்ந்தேன்

    ஏன் என்று கேட்டல் நேட்ட்று தளத்திற்கு சென்று வந்தேன் முருகனின் சக்தியை அளவிட முடியாது

    மலை மேலே செல்லும் போது உடல் முற்றிலும் இயலவில்லை கடைசி நுறு படிகள் ஏறுவேன நம்பிக்கை சற்றே தொட்ட்றது பிறகு எப்படியோ ஏறினேன்

    ஏறின சில நிமிடங்களில் உடல் வலியை காணோம் அடுததநாளான இன்று அவ்வளவு கடினமான மலையை ஏறினான சட்ட்ரே மெய் சிலிர்த்து போயுள்ளேன்

    ஒதி மலை முருகனுக்கு நன்றி

    வாய்ப்பளித்த உங்களுக்கு மனமர்ந்ட நன்றி

    kannan ௦

  25. மிகவும் வியக்க தக்கது. தயவுசெய்து எனக்கு போவதற்கு வழி சொல்லுங்கள். ஈநேன்றல் என் அக்க, அப்பறம் என் நபனின் அக்காவிற்கு குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். நான் ஒரு முருகனின் தீவிர பக்தை. எதை என் முருகனே வழி கட்டியதாக கருதுகிறேன்.

    • கிரி கோவிலுக்கு செல்லும் வழியை சொல்லுங்கள். நான் ஈரோடில் இருந்து செல்ல வேண்டும்.

  26. ஓதிமலை முருகனை காண வழிசொல்ல வேண்டும் (தயவுசெய்து)

    • புஞ்சை புளியம்பட்டி அருகில் உள்ளது, கோவை , ஈரோடுஇல் இருந்து பஸ் உள்ளது. கோவிலுக்கு அருகில் இறந்க்கி கொள்ளலாம்.

  27. நானும் எனது இரு குழந்தைகளும்( பதினான்கு, பனிரெண்டு வயது) ஒருமுறை இக் கோவிலை பற்றி அதிகம் தெரியாமல் காலை சாப்படும் இல்லாமல் மலை ஏற ஆரம்பித்து விட்டோம். அது எந்த விழாக்களும் இல்லாத நாள். எங்கள் மூவரை தவிர வேறு யாரும் இல்லை. தங்கள் செல்லயுள்ளதுபோல் மிகவும் கலைத்து மலை ஏறினால் எங்களுக்காகவே அன்று கோவில் அய்யர் வந்திருந்தார் இதை என்னென்பது. மிகவும் திவ்ய தரிசனம். அங்கேயே பொங்கல் வைத்து கொடுத்தார். மூன்று மணி நேரம் இருந்தோம். அந்த அமைதி எங்கும் கிடைத்து இல்லை.

    மேலும் ஒரு தகவல் சாதாரண நாட்களில் செல்லாதீர். விழக்கலங்களில் மட்டும் செல்லுங்கள்.

  28. பகிர்விற்கு நன்றி
    அர்ச்சகர் கைபேசி எண் இருந்தால் நம் வருகையையும் அவர் வசதியையும் தெரிந்துக் கொண்டு செல்ல வசதியாக இருக்கும்
    முருக பக்தர்கள் எண் ப்ளாக்கைப் பார்த்து சேலம் ஸ்வயம்பாலையா ராஜபாலமுருகனை தரிசிக்க அழைக்கிறேன்.

    • அர்ச்சகர் கைபேசி எண் இருந்தால் நம் வருகையையும் அவர் வசதியையும் தெரிந்துக் கொண்டு செல்ல வசதியாக இருக்கும்

      இந்த ப்ளாக்’ன் ஆசிரியர் அதை கொடுத்தால் மிக வசதியாக இருக்கும்

  29. செல்லும் வழியை பஸ் ரயில் ருட் போட்டு தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்..
    அடுத்த முறை செல்லும் போது தகவல் தாருங்கள்.. உடன் வருவதற்கும் வலம் வருவதற்கும்

  30. அழகு……. அழகு கடவுளின் கோயிலும் அழகாக இருக்கிறது.
    நேரில் பார்க்க ஆவலை தூண்டுகிறது. கோவையிலிருந்து எவ்வளவு தூரம் இருக்கும் இந்த ஊர்?
    எத்தனை வருட பாரம்பரியம்? யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லவும்.
    திருவண்ணாமலை கோவிலும் அழகாகவும் பக்தர்களுக்கு திருப்தி தரும் கோவிலாகத்தான் இருந்தது. இப்பொழுதுதான் பணம் படைத்தவர்கள் மட்டும் செல்லக்கூடிய இடமாக மாறியுள்ளது…..

  31. கோவையிலிருந்து எவ்வளவு தூரம் இருக்கும் இந்த ஊர்?
    கோவை —-[35 – 40 KM]—–> அன்னூர் ——-[10 – 15 KM]——> ஒதிமலை.

    எத்தனை வருட பாரம்பரியம்?
    வருடங்கள்-ன்னு கணக்கு சொல்ல முடியாது.

    காரணம் :
    இந்த ஊர்ல போகர் காடு [ பூதி காடு] ன்னு ஒரு இடம் மலை அடிவாரத்துக்கு பக்கத்துல இருக்கு.

    போகர் அங்கே இருந்து யக்னங்கள் பல பண்ணினாரு-ன்னு சொல்றாங்க.
    அதன் காரணமா இன்னும் அந்த காட்டுல மண்ணுக்கு கீழே விபூதி போல இருப்பதை பார்க்க முடியும் [ நம்ம வெள்ளியங்கிரி மலை மாதிரி ]….

    முருகனுடைய சிலை-ஐ செய்ததில் போகர்-கும் ஒரு பங்கு உண்டு-ன்னு சொல்றாங்க.

    அதாவுது, போகரின் வழிகாட்டுதலோடு தான் சிலை செய்ததாக சொல்றாங்க.

    எல்லாத்துக்கும் மேல, இங்கே சித்தர் ஒருத்தர் இன்னமும் இருக்கார். அவர் பெயர் எனக்கு தெரியாது… பார்த்ததில்லை. ஆனால் அங்கே போனா உணர முடியும். அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்

    • அவர் வேறு யாரும் இல்லை முதமை சித்தரான அகத்திய மஹா ரிஷி

  32. “ஐயர் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வருவார்”

    எத்தந்த நாட்கள் கிரி?

    JAY, ஈரோட்டில் இருந்து ஓதி மலைக்கு எப்படி செல்லவேண்டும்?

  33. அர்ச்சகர் பெயர் : கணபதி சிவம்
    தொடர்புக்கு : 98659-70586
    [ இந்த எண் தான் என் கிட்ட இருக்கு ]

    ஷஷ்டி [வளர் பிறை ஷஷ்டி-யா இல்ல தேய்பிறை ஷஷ்டி-யா ன்னு தெரியல], கிருத்திகை,
    அம்மாவாசை
    நாட்கள்-ல கோவில் திறந்து இருக்கும்.

    துல்லியமா தெரிந்து கொள்ள கணபதி சிவத்தை தொடர்பு கொள்ளலாம்.

    ஈரோடு –> கோபி –> சத்தி [ சத்தியமங்கலம் ] — > புளியம்பட்டி –> ஒதிமலை

    ஈரோடு – சத்தி-க்கு [via gopi ] single bus இருக்கு.. கவலை இல்ல.

    சத்தி-ல இருந்து புளியம்பட்டி ரொம்ப பக்கம்.. சத்தி டு கோவை வண்டி புடிசீங்கன்னா புளியம்பட்டி-ல இறங்கணும்.

    புளியம்பட்டி-ல இருந்து 1௦ கீமீ தான்…ஆனா புளியம்பட்டி-ல இருந்து ஒதிமலை போக பஸ் வசதி ரொம்ப ரொம்ப குறைவு / இல்ல.

  34. JAY -னு தான் போட்டேன், அது ஜி -னு மாத்திகிச்சு.

  35. இன்னும் ஒரு சிறப்பு, ஒதிமலை முருகருக்கு 5 தலை மற்றும் 8 கைகள். தைபூசம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
    கிருத்திகை,வளர் பிறை சஷ்டி , அம்மாவாசை போன்ற நாட்களில் சிறப்பு பூஜை நடை பெரும்.

    கிரி அவர்களே எங்கள் ஊர் முருகரை பற்றி அளித்த தகவல்களுக்கு மிகவும் நன்றி. தற்போது நானும் சிங்கப்பூரில் பணியில் இருக்கிறேன். இதற்கு காரணம் அந்த முருக கடவுள் தான்.

  36. an exeptional malai othimalai, anexeptional archagar ganapathisivam, anexeptional diety othimalai murugan what more to say….one who goes there do not return empty handed….mindful ofpleasentness from the malai….stomachful from archagar ganapathysivam ….lastof all… heartfull of blessings from othimalai murugan…as trueth seakers,[we follow the footsteps of sidhars] my friends and myself visited many temples,mounains and stayed in caves of importance…but this othmalai takes you to your goal….what more to say..god bless you mr.giri, thanks…

  37. அன்பரின் திருவுளத்திற்கு வாழ்த்துக்கள்
    ஓதி அடிமை

  38. Dear Mr. Giri,

    Want to go to the temple. Reaching Erode on 1st April at 11 A M. Want to climb the hill and worship Lord Murugan on 2nd April. Will take a car from Erode itself. Please provide further guidance.

    Rangan D P

  39. தமிழ் மன்மத வருஷம் Greetings TO ஆல் ஒதிமலை,முருகர்,பக்தர்கள் .AR SURIAMOORTHY .9443709037.

    • mikka nandri siva……indru othiappanuku sirapu pusaigal sirapu abhishehangal,matrum,boodhi paavadai.siva nandri annamalai

  40. எனது மனைவியும் நானும் 4வது ஏப்ரல் மாதம் மலை ஏறி முருகபெருமானை தரிசித்தோம். மேலே ஏறுவதில் ஒரு கடினமும் தெரியவில்லை. நாங்கள் இருவரும் 70 வயது தாண்டிவிட்டோம். சுமார் ஒரு மணி 45 நிமிடத்தில் மேலே சென்றோம். மிக அருமையான அனுபவம். முடிந்தால் மறுபடியும் ஏற உத்தேசம். அமெரிக்காவில் இருப்பதனால் உடனே செல்வது கடினம். யாவரும் தரிசிக்க வேண்டிய ஸ்தலம்.

    தாசன் அரங்கன்

  41. Every Sunday we are going to temple in the early morning.it is very nice for me.good for health.do you can visit there one time thank you my god

  42. Every Sunday we are going to temple in the early morning.my friends balu,shiva,Thiruvengadam (dr) ,manis &frends.it is very nice for us.good for health.do you can visit one time.

  43. அய்யா…

    ஒதிமலைக்கு செல்ல எனக்கு விருப்பமாக உள்ளது…

    நான் மதுரையில் உள்ளேன்…

    மதுரையில் இருந்து ஒதிமலைக்கு எப்படி செல்வது…

    ஒதிமலை அடிவாரம் வரை bus செல்கிறதா…?

    கோயில் எப்போ எத்தணை மணி வரை திறந்து இருக்கும்…

    இரவில் அங்கே தங்க வசதி உண்டா…?

    மலை மேலே குளிக்க குடிக்க தண்ணீர் matrum சாப்பாடு வசதி உண்டா…?

    ஒதிமலை முருகன் கோயிலில் எப்போது திருவிழா நடக்கும்…

    நன்கு தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்…

    நன்றி,

    என்றும் அன்புடன்…

    டி.கே.எஸ்.பாண்டியன்

  44. நான் என்னுடைய நண்பர்கள் ஓதிமலை கோவிலுக்கு சென்றோம்.மிகவும் அற்புதமாக இருந்தது .மலை ஏறினாலே கோடி புன்னியம்.

  45. I visited this temple twice – April 2015 and January 2016. It is not at all a difficult ascent. I did it just in an hour without hassle. I am over 75 now. There are now 11 shelters built on steps,. 8 up to the midway Vinayagar mandapam and 3 beyond. At the entrance was greeted by a simian. Had a wonderful darshan. Took more than 100 photos. Easiest way to reach is from Tiruppur.

  46. 1. ஓதிமலைக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 15C மற்றும் 16 ம். எண் பேருந்துகளில் செல்லலாம். 15 சி – சண்முகாபுரம் ( ஓதிமலை அருகில்), 16 ம். எண் இரும்பறை ( 4 கிமீ தொலைவு) நிறுத்தங்களில் இறங்கலாம். இரும்பொறையில் இருந்து ஆட்டோ அல்லது 2 சக்கர வாகனங்களில் அன்பர்கள் உதவுவார்கள்.

    2. அவிநாசி – அன்னூர் – இரும்பொறை மார்க்கமாகவும்,
    அவிநாசி – புளியம்பட்டி – ஓதிமலை மார்க்கமாகவும் வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!