இன்று தைப்பூசம். ரொம்ப நாளா அழகன் முருகன் பற்றி எழுத வேண்டும் என்று விருப்பம்.
ஆனால், சரி எழுதுவது முருகனுக்கு ஒரு ஸ்பெஷல் நாளில் எழுதினால் நன்றாக இருக்குமே என்று நினைத்துத் தாமதித்துத் தாமதித்து இன்று எழுதுகிறேன்.
கடவுள் நம்பிக்கை என்பது ஒரு புறம் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் (இந்து மதத்தில்) தனக்கு பிடித்த கடவுள் என்று ஒருவர் இருப்பார். Image Credit
சிலருக்கு காரணம் கூற முடியும் சிலருக்கு ஏன் என்றே தெரியாது ஆனால், பிடிக்கும்.
சிலருக்கு பெருமாள், சிலருக்கு ஐயப்பன், சிலருக்கு முருகன், சிலருக்கு விநாயகர் என்று. எனக்குப் பிடித்தவர் முருகன் தான்.
உளவியல்
இதற்கு உளவியல் ரீதியாக ஒரு காரணத்தை அம்மா கூறினார்கள்.
அம்மா கர்ப்பமாக இருக்கும் போது பையன் வேண்டும் என்று எங்கள் ஊரில் உள்ள முருகன் கோவிலில் தினமும் படியேறி வேண்டினார்களாம்.
அதோடு நம் முன்னோர்கள் அனைவரும் முருகன் பக்தர்கள், அதனால் நீ முருகன் பக்தன் ஆனதில் வியப்பு இல்லை என்று கூறினார்.
பொதுவாகக் குழந்தை வயிற்றில் இருக்கும் போது தாய் எதுபற்றி அதிகம் நினைக்கிறாரோ அதன் தாக்கம் இருக்கும் என்று படித்து இருக்கிறேன் அதனால் அதைப் புறம் தள்ள முடியவில்லை.
இவற்றை எல்லாம் தாண்டி முருகனை பிடிக்க இரு முக்கியக்காரணங்கள். ஒன்று எளிமை, இரண்டு இயற்கை சூழ்ந்த இடங்களில் இவரது கோவில் இருக்கும்.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்.
முருகனுக்கு இன்னொரு சிறப்பு இவர் தமிழ்க் கடவுளாக இருப்பது ஆனால், முருகன் கிட்ட பிடிக்காத ஒரே விஷயம் இவர் இரண்டு மனைவிக்காரர் 😀 .
இது தான் எனக்கு முருகனிடம் பிடிக்காத ஒரே விஷயம்.
மற்ற கடவுள்களிடம் எல்லாம் எதோ ஆடம்பரம் இருப்பது போலவே எனக்குத் தோன்றும் ஆனால், முருகனிடம் மட்டும் அப்படிப்பட்ட எண்ணம் எனக்கு எப்போதும் வருவதில்லை அதற்கு அவருடைய தோற்றம் காரணமாக இருக்கலாம்.
இயற்கையும் முருகனும்
எனக்கு இயற்கை ரொம்பப் பிடிக்கும், மரங்களை மிகவும் நேசிப்பவன்.
முருகன் கோவில்கள் பெரும்பாலும் மலைப்பகுதிகளிலே இருப்பதால் இயல்பாகவே இயற்கை சூழ்ந்து காணப்படும். இவைகளே முருகனை எனக்குப் பிடிக்க முக்கியக்காரணங்கள்.

இது வரை எத்தனையோ கோவிலுக்குச் சென்று இருக்கிறேன் அதில் வெகுசில கோவில்களிலே மன நிறைவை அடைந்து இருக்கிறேன்.
இதை வார்த்தைகளால் கூற முடியாது, அனுபவிக்க மட்டுமே முடியும்.
அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்று எங்கள் ஊரில் உள்ள கருங்கரடு முருகன் கோவில்.
இங்கு எப்போது ஊருக்குச் சென்றாலும் தவறாமல் சென்று விடுவேன்.
இங்கே எந்த ஆடம்பரமும் கிடையாது இயற்கை சூழ்ந்து இருக்கும், பழைய கட்டிட அமைப்பே இன்னும் பராமரிக்கப்படுகிறது.
இன்னும் டைல்ஸ், கிரானைட் போட்டு அசிங்கப்படுத்தாமல் இருக்கிறார்கள்.
பழனி
திருப்பதிக்கு அடுத்து பணம் கொழிக்கும் இடம் பழனி ஆனால், பழனி முருகன் கோவில் என்றாலே வெறுப்பு வரும்படி அங்கே மாற்றி விட்டார்கள்.
எதற்கு என்றாலும் பணம் கொடுக்க வேண்டும். இதைப்போலப் பணம் பணம் என்று இருக்கும் இடத்தில் கடவுளிடம் என்ன பெற விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை.
கொஞ்சம் பணம் கூடுதலாகக் கொடுத்தால், சிலையையே பெயர்த்து கொடுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு அங்குள்ளவர்கள் மோசமானவர்கள்.
இதனாலே அங்கே செல்லப் பிடிப்பதில்லை ஆனால், இவர்கள் இதைப்போலச் செய்வதற்கு முருகன் என்ன செய்வார்?
இதனால் கூட்டம் விசேசம் இல்லாத நாட்களில் செல்ல வாய்ப்புக் கிடைத்தால் சென்று வருவேன்.
முருகனை அவன் இவன் என்று ஏகவசனத்தில் அழைக்கலாம் 🙂 . செல்லப்பிள்ளை மாதிரி.
இதற்குக் காரணம் முருகன் சிறிய வயது செயல்களே முன்னிலைப் படுத்தப்படுவதால் இருக்கலாம். இன்னும் முருகனை அனைவரும் சிறுவனாகவே பார்ப்பதால், அவர் இது போல அழைக்கப்படுகிறாரோ என்னவோ!
கடவுள் என்பவர் ஒருவரே! நாம் தான் நம்முடைய வசதிக்கு, மதங்களுக்கு ஏற்பப் பல்வேறு பெயர்களில் வடிவங்களில் அழைக்கிறோம்.
இவ்வாறு அழைக்கப்படும் பெயரில், வடிவத்தில் எனக்கு அழகன் முருகன் பிடித்தவராக இருக்கிறார் அவ்வளோ தான்.
ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் அன்று எப்படியும் முருகன் கோவிலுக்குச் சென்று விடுவேன். இந்த வருடம் வார நாட்களில் வருவதால் செல்ல முடியவில்லை 🙁 .
கடந்த வருடங்களில் எடுத்த நிழற் படங்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
சிங்கப்பூரை அதிரவைத்த தைப்பூசம் [2009 படங்கள்]
சிங்கப்பூர் தைப்பூசம் குவிந்த வெளிநாட்டினர்! [2010]
ஓதி மலை முருகன் அற்புதங்கள் [July 2008]
சஷ்டி விரதம் ஏன்? எதற்கு? எப்படி? விளக்கங்கள் [2017]
எங்க ஊரில் உள்ள கருங்கரடு முருகன் கோவில் தைப்பூசமான இன்று அமர்க்களமாக இருக்கும். சிறிய வயதில் காவடி எடுத்துச் சென்றது.
அதன் பின் பள்ளியில் ஹாஸ்டல், சென்னையில் வேலை அதன் பின் சிங்கப்பூர் வேலை என்று கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் செல்ல முடியவில்லை 🙁 .
Read: என்னுடைய கிராமத்து பயணம் புகைப்படங்களுடன் [கருங்கரடு முருகன் கோவில்]
இன்று மாலை கோவிலுக்குச் செல்லலாம் என்று இருக்கிறேன்.
கொசுறு
தைப்பூசக் கொண்டாட்டம் நேற்று இருந்தே துவங்கி விட்டது. நேற்று எங்கள் அலுவலகம் இருந்த சாலையில் காவடி ஊர்வலம் சென்றது.
ஒரு ஹைடெக்கான நாட்டில் அதிலும் அலுவலகங்களுக்கு மிகவும் பிரபலமான சாலையில் இதைப்போல நம்ம காவடி ஊர்வலம் செல்வதைப் பார்க்கும் போது வரும் மகிழ்ச்சிக்கு அளவில்லை 🙂 .
மலேசியாவில் இரு நாட்கள் அரசு விடுமுறை. தற்போது ‘பத்து மலை’ முருகன் சென்றால் சரவெடியாக இருக்கும்.

நண்பரே,
தைப்பூசம், தமிழ்க்கடவுள் முருகன் குறித்த நேர்த்தியான தகவலும், தங்கள் நினைவுகளும் சிறப்பு.
ஸ்ரீ….
தைப்பூசக் கொண்டாட்ட பகிர்வுக்கு வாழ்த்துகள்..
அருமையான பகிர்வு. முந்தைய தைப்பூச, கருங்கரடு கோவில் பதிவுகளும் வாசித்திருக்கிறேன். அழகன் முருகனின் ஆசிகள் என்றும் உங்களுக்கு இருக்கட்டுமாக!
//நியாயமாகக் கூறினால் கடவுள் என்பவர் ஒருவரே! நாம் தான் நம்முடைய வசதிக்கு, மதங்களுக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் வடிவங்களில் அழைக்கிறோம். இவ்வாறு அழைக்கப்படும் பெயரில், வடிவத்தில் எனக்கு முருகன் பிடித்தவராக இருக்கிறார் அவ்வளோ தான்//
ரீபீடு
பரவசத்துடன்…
//நியாயமாகக் கூறினால் கடவுள் என்பவர் ஒருவரே! நாம் தான் நம்முடைய வசதிக்கு, மதங்களுக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் வடிவங்களில் அழைக்கிறோம்.//
ஆஹா ஆஹா…..
நீங்கள் எதை நம்புறீங்கன்றத விட அதில் எவ்வளோ உறுதி இருக்குன்றது தான் முக்கியம்.
நீங்க நம்புவதை பற்றி மட்டும் பகிர்ந்திருப்பது படித்தவுடன் மகிழ்வை தந்தது, இதனை நாம் எல்லோருமே கடை பிடித்தால் வீன் மன உளைச்சலை தவிர்க்கலாம்.
உங்கள் நம்பிக்கையின் மீது உள்ள உறுதிக்காக எனது பின்னோட்டம் இங்கே, முதன் முறையாக மதம் சார்ந்த பதிவில்.
மிக்க சந்தோஷம் கிரி.
5 வயதில் இருந்து 20 வயதுவரை நல்லூர் முருகனுக்கு பால் காவடி வருடாவருடம் எடுத்துள்ளேன்!!! (இலங்கையின் மிகப்பெரிய கோவில்) எப்போதும் மறக்காத நாட்கள் அவை…..
சிறுவயதில் முருகன் & கிருஷ்ணர்தான் எனக்கும் பேவரிட்; கரணம் மகாபாரதம் & கந்த புராணம்….. பின்னர் எப்டி பிள்ளையார் பேவரிட் ஆனார் என்பது தெரியவில்லை 🙂
விநாயகருக்கு ‘ர்’ போல வைரவர்/ வீரபத்திரருக்கும் ‘ர்’ வரும் :p
//கோவிலுக்கு போனால் ஃபிகர்ஸ் பார்த்து மனம் சலனப்படுகிறது என்று கோவிலுக்கு யாரோடு போனாலும் வேகமாக ஒரு ரவுண்டு வந்து அனைத்து சாமியையும் பேருக்கு கும்பிட்டு விட்டு வந்து அமர்ந்து விடுவேன்//
எனக்கும் கோவிலுக்கோ ‘கும்பிட’ போவதென்றால் விசேட நாட்களில் போக பிடிப்பதில்லை, காரணம் நீங்க சொன்னதுதான். பக்தர்களின் கூக்குரல்கள் மத்தியில் தாவணிகள், சாரிகள் மத்தியில் மனதை ஓரிடத்தில் லயிக்க வைக்கும் சக்தி என்னிடம் இல்லை 🙂
//முருகனை அவன் இவன் என்று ஏகவசனத்தில் அழைக்கலாம் icon smile அழகன் முருகன் செல்லப்பிள்ளை மாதிரி. வேறு எந்தக் கடவுளையும் இப்படி அழைக்கலாமா என்று தெரியவில்லை.//
கிரிஷ்ணரையும் அழைப்பார்கள் என்று நினைக்கிறேன்; திருடா,கபட நாடக சூத்திர அவதாரி….
பக்கத்தில் கோவிலுள் பக்தி பாடல் ஒலிக்கின்றது (எமது வீட்டில் இருந்து 200 மீட்டர்களுக்குள் 3 பெரிய முருகன் கோவில்கள்) முதல் இனைய பார்வையே உங்கள் ‘அழகன் முருகன்’ பதிவு, காலங்காத்தாலேயே ஒரே பக்தி மார்க்கமா இருக்கு…..
அப்புறம் கடவுள் இருக்கார், இல்லை மேட்டர் நமக்கு வேலைக்காகாத வீண் பேச்சு…. இருக்கெங்கிறவன்களோ, இல்லை என்கிறவங்களோ யாராக இருந்தாலும் நீங்க நம்பிறதில உறுதியா இருங்க; டவுட்டில அலைஞ்சீங்க உங்களுக்கு முடிவே கிடைக்காது :p
கிரி முருகன் பற்றிய பதிவு பக்தி பரவசத்துடன் இருக்கிறது வேறென்ன சொல்ல முருகனுக்கு அரோகரா
// நீங்க நம்புவதை பற்றி மட்டும் பகிர்ந்திருப்பது படித்தவுடன் மகிழ்வை தந்தது, இதனை நாம் எல்லோருமே கடை பிடித்தால் வீன் மன உளைச்சலை தவிர்க்கலாம்.
உங்கள் நம்பிக்கையின் மீது உள்ள உறுதிக்காக எனது பின்னோட்டம் இங்கே, முதன் முறையாக மதம் சார்ந்த பதிவில்.
//
ரிப்பீட்டு 🙂
என்ன தான் வெளிநாட்டில் இருந்தாலும் நமக்கு என்று இருக்கிற identity யாராலும் மாத்த முடியாது … நானும் அப்படி தான் … இங்கே பிரான்சில் அந்தளவுக்கு தைபூசம் கொண்டாடவில்லை என்றாலும் வருடத்திருக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடக்கும்.. அதை பார்க்கும் பொழுது எனக்குள் ஏற்படும் பரவசத்தை நீங்கள் சொன்னது போல் வார்த்தைகளால் விவரிக்க முடியாது .. இங்க பிரான்சில் அந்தளவுக்கு தமிழ் மக்கள் கிடையாது என்று தான் நினைத்தேன்… ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் கூடிய கூட்டத்தை பார்த்து வியந்து போனேன்… அந்த போட்டோ உங்களுக்காக…
http://www-public.it-sudparis.eu/~rajagopa/TherThiruvizha2009.jpg
இந்த போட்டோ வெறும் பாதி கூடம் தான்.. சிங்கப்பூரை compare பண்ணும் போது இது மிக கொறைவு தான்.. அதற்கு முன் பாரிஸில் அவ்வளவு தமிழ் கூட்டத்தை நான் பார்த்ததில்லை ..
more photos are here:
photos romba அருமை
ராஜேஷ்.v
// பழைய கட்டிட அமைப்பே இன்னும் இங்கே பராமரிக்கப்படுகிறது. இன்னும் டைல்ஸ் கிரானைட் எல்லாம் போட்டு அசிங்கப்படுத்தாமல் இருக்கிறார்கள்.//
சரியாக சொன்னீர்கள். எனக்கும் புராதன கோவில்களை கிரானைட்/ டைல்ஸ் போட்டும், கண்டபடி வண்ணங்களை தீட்டியும் கெடுப்பது பிடிப்பதே இல்லை. இவை எல்லாம் செய்யாமல் சுத்தமாக வைத்திருந்தாலே போதும்.
முருகன் இயற்கையோடு இணைந்து இருக்கும் அமைப்பு நம்மை ‘இயற்கையை போற்றும் பண்பை சிறிதாவது பின்பற்று’ என்று கூறுவது போலத்தான் உள்ளது.
முருகன் என்றால் அழகு, முருகன் என்றால் தமிழ், முருகன் என்றால் இளமை, முருகன் என்றால் வீரம், என்பதால் முருகன் பலரும் விரும்பும் கடவுளாக இருக்கிறன் போலும். இந்த தைபூச திருநாளிலே ஒரு சிறந்த பதிவை அளித்தமைக்கு நன்றி.
அருமை கிரி
கோவிலுக்கு போய் சைட் அடிக்க கூடாதா? முருகன் அவன் வேலைக் கொண்டு உங்க கண்ணை குத்த… 😉
முருகனே சைட் அடிச்சு, டீஸ் பன்னி தானே வள்ளியை திருமணம் செய்து கொண்டான்?
ஆனால் முருகன் கிட்ட பிடிக்காத ஒரே விஷயம் இவர் இரண்டு மனைவிக்காரர் இது தான் எனக்கு முருகனிடம் பிடிக்காத ஒரே விஷயம்.
———————————————————————————————————————–
அது நம்ம முருகனோட personal matter. 😀 . நம்ம interfere பண்ண வேண்டாமே 🙂
ரொம்ப அழகான பதிவு
– அருண்
அருமையாக சொன்னீர்கள். முருகன் எனக்கும் இஷ்டதெய்வம். மிக எளிமையான கடவுள். திருச்செந்தூர் செல்லும்போதெல்லாம், மிக குதூகலமாக மனதுக்கு தோன்றும்.
கிரி,
மிக நன்றாக இருந்தது உங்கள் பதிவு. நான் சிவபக்தன், ஆனாலும் இந்திய வரும்போதெல்லாம் நான் செல்லும் ஒரு கோவில் திருத்தணி. எனக்கு மிகவும் பிடித்த கோவில். மனதில் அமைதியுடன் தியானிக்கும் இடம் திருவேண்ணாமலை, திருவேலங்காடு, ஸ்ரீசைலம்.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். — திவிளையாடல் படத்தில் வரும் வசனம்
காமேஷ்
அனைவரின் வருகைக்கும் நன்றி
@ஜமால் & அப்துல்லா நன்றி 🙂
@ஜீவதர்ஷன் இலங்கையில் தைப்பூசம் விமர்சையாக கொண்டாடப்படுமா? தமிழகம் மலேசியா சிங்கப்பூர் போல
நீங்க சொன்னது போல கிருஷ்ணனையும் அப்படி அழைப்பார்கள்.. ஆனால் முருகன் அளவிற்கு இல்லை 🙂
@மனோஜ் படங்கள் அனைத்தும் அருமை. நன்றி பகிர்விற்கு. இது போல வெளிநாடுகளில் பார்க்க பரவசமாகத்தான் இருக்கிறது.
@ராஜன் சார் யார் இப்ப கண்டுக்கறாங்க இதை.. அழகு “படுத்துறேன்னு” கூறி அழகை கெடுத்துட்டு இருக்காங்க 🙁
@சீனு சைட் அடிக்கக்கூடாது என்று நான் எங்கே சொன்னேன் .. எனக்கு அப்படி இருப்பது கஷ்டமாக உள்ளது என்று தான் கூறினேன் 🙂
@ராஜேஷ் ஓகே 🙂
@காமேஷ் நீங்க என்னுடைய கிரமாத்து பதிவில் கூறியது போல.. நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் வரலாம் 🙂
வணக்கம் கிரி, நலமா?
அருமையான புகைப்படங்கள், பழைய பதிவையும் இப்போதான் பார்த்தேன்..
அப்புறம், பகுத்தறிவாளர்கள் இதைப் படிக்கலாம் என்றே நினைக்கிறேன், (இந்த வார்த்தை கடவுள் மறுப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன என்று எனக்கு புரியவில்லை..)
ஈ. ரா
முருகன் கோவில் மட்டுமல்ல அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படும்!!! விஜயதசமி தவிர்த்து ஏடு தொடங்கும் நாள், நெல் புதிர் எடுக்கும் நாள், தொழில் தொடங்கும் நாள் என்பனவும் தைப்பூசத்தில் தான்!!!!