அஹிம்சை போராட்டம் மூலம் எதையும் சாதிக்கலாம் என்று உலகிற்கு நிரூபித்தவர் மஹாத்மா அவர்கள். வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தியின் அரிய நிழற்படங்கள் சில. Images Credit
இவருடைய “சத்யசோதனை” புத்தகம் அனைவருக்கும் ஒரு சிறந்த வழிக்காட்டி.
குழந்தையாக மோகன்தாஸ்
சிறுவனாக
இளைஞராக
வக்கீலாக
தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு மனைவி கஸ்துரிபாயுடன்
தென் ஆப்ரிக்கா நண்பர்களுடன்
கஸ்தூரிபாய் அவர்களுடன்
பொதுமக்களுடன் உரையாடல்
ரயிலில் அமர்ந்து குதூகலமாக பேசுகிறார்
இங்கிலாந்தில் டவ்னிங் தெரு என்ற இடத்தில்
பேச்சை கேட்டு கொண்டு இருக்கும் அவருடைய அபிமானிகள்
உப்பு சத்யாகிரகத்தில்
தண்டி யாத்திரையில்
உப்பு எடுக்கும் மஹாத்மா
அமைதியான முகத்தோடு ஒரு அட்டகாச புன்முறுவல்
ஆதரவாளர்களுடன் ரயிலில்
மானு மற்றும் அபாவுடன்
கான் அப்துல் கபார் கான் உடன் ஒரு நடை
மானுவும் அபாவும் மஹாத்மாவுக்கு தோள் கொடுத்து உதவுகிறார்கள்
மஹாத்மா நேருவுடன் ஒரு சந்தோஷ தருணத்தில்
முக்கிய கலந்துரையாடலின் போது
உப்பு சத்யாகிரக பொது கூட்டத்தில்
ஜின்னாவுடன்
மஹாத்மாவின் பிரபலமான புன்சிரிப்பு
தன்னை பின் பற்றுபவர்களுடன் உப்பு சத்தியாகிரகத்தில்
ஒரு சிறுவன் மஹாத்மாவின் கை தடியை பிடித்து அவரை முன் நடத்தி செல்கிறான்
செய்தித்தாள் படித்துக்கொண்டு இருக்கும் போது
தளர்ந்து போன காலத்தில் கஸ்தூரிபாய் அவர்களுடன்
உண்ணாவிரத்தில்
கருணை பொங்கும் முகத்துடன்
இறுதிப்பயணம் 🙁
காலங்கள் பல கடந்தாலும் இன்றும் உலக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் மாமனிதர்.
எந்த வன்முறையிலும் இறங்காமல், ஆங்கிலேயர்களை அமைதியால் அடித்து நொறுக்கியவர். வன்முறைக்கு இடம் கொடாதவர்.
வீரன் என்பவன் கத்தியால் சாதிப்பவன் அல்ல, அமைதியால் சாதிப்பவன் என்று உலகுக்கு உணர்த்தியவர் மகாத்மா அவர்கள்.
இன்றும் இவருடைய போராட்டங்களை “காந்தி” திரைப்படத்தில் பார்க்கும் போது கண்ணீர் எட்டி பார்க்கத் தவறுவதேயில்லை.
தன் நலன் கருதாது பிறர் நலனில் மட்டுமே அக்கறை காட்டிய இவர் மகாத்மா என்று சொல்லுக்கு மிகப்பொருத்தமானவர்.
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
Thanks for the photos and feeling proud to be an Indian
மிக அருமையான பதிவு , கட்டாயம் சூடான இடுகைகளில் வரவேண்டும்…
Superb photos.
நான் முதல் போட்டிக்கலாமுன்னு வந்தா மூணு பேர் முந்திக்கிட்டாங்க.
// வாசு said…
Thanks for the photos and feeling proud to be an Indian//
இந்த படங்களை பார்க்கும் போது, உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க முடியவில்லை. உங்கள் முதல் வருகைக்கு நன்றி வாசு.
// அதிஷா said…
மிக அருமையான பதிவு ,
கட்டாயம் சூடான இடுகைகளில் வரவேண்டும்…//
நன்றி அதிஷா. அனைவரும் மஹாத்மாவின் உண்மையான பிரதிபலன் பாராது போராடிய போராட்டங்களை மறந்து விடக்கூடாது எனபதே எண்ணமும்.
// Thiyagarajan said…
Superb photos.//
//முரளிகண்ணன் said…
கிரி கலக்கிட்டீங்க//
நன்றி தியாகராஜன் மற்றும் முரளிகண்ணன்
Hi, Can I take a local copy of those photos from your blog?
//ராஜ நடராஜன் said…
நான் முதல் போட்டிக்கலாமுன்னு வந்தா மூணு பேர் முந்திக்கிட்டாங்க.//
மஹாத்மாவின் மீது பலர் இன்னும் அளவுகடந்த மதிப்பு வைத்து இருப்பதை நினைக்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி ராஜ நடராஜன்.
// Thiyagarajan said…
Hi, Can I take a local copy of those photos from your blog?//
தியாகராஜன் நான் வேறு இடத்தில் இருந்து தான் எடுத்தேன். இந்த படங்களை கொடுக்க மறுக்க எவருமே விரும்ப மாட்டார்கள். உங்கள் பங்குக்கு அனைவருக்கும் அனுப்புங்கள். நீங்கள் கேட்கும் அனுமதி என்னை உண்மையிலேயே வியக்க வைக்கிறது, ஒரு வேளை மஹாத்மாவின் படங்களை பார்த்ததாலோ 🙂
நிஜமாவே புல்லரிக்குதுங்க!Thanks for the compilation!
//மித்ரா குட்டி said…
நிஜமாவே புல்லரிக்குதுங்க!
Thanks for the compilation!//
எனக்கு கடைசி சில படங்கள் மனதை ஏதோ செய்து விட்டது. எந்த படத்தையும் குறிப்பிட்ட சொல்ல முடியவில்லை. ஒவ்வொன்றும் அவ்வளவு அருமை
உங்கள் முதல் வருகைக்கு நன்றி
அருமையான படங்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி.
மிக்க நன்றி என்னால் அவரைபார்க்க முடிந்ததற்கு
உங்கள் வருகைக்கு நன்றி குமரன்
படங்களை எங்கே பிடிச்சீங்க;)அத்தனையும் அருமை.பிரேம் போட்டு வீட்டுல சுவற்றில் அழகு பண்ணலாம்.
கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு:)
தற்போதைய சூழலுக்கு நிரந்தரமாக சூடான பகுதிக்கு மாற்றிவிடலாம்.
அரசியல் பதிவின்னா இப்படி இருக்கணும்
தொடர் பின்னூட்டம் போடுவதுன்னா எப்படின்னு குசும்பனிடம் கற்றுக்கொண்ட பாதிப்பு
அப்பாவியா இருந்தாலும் நாம அன்பேசிவம் பேசுற ஆளுக என்பத பரிசல்காரனுக்கு உணர்த்த இந்தப் பின்னூட்டம்.
புகைப்படத்தில் முதல் பரிசு எதுக்கு கொடுக்கலாமுன்னு சி.வி.ஆர் அறிவிக்கணுமுன்னு இந்தப் பின்னூட்டம்.
இந்தப் படங்களை எப்படி புது தொழில் நுட்பப் படுத்தலாமுன்னு ஆலோசனை சொல்ல பிரேம்ஜிக்கு இந்தப் பின்னூட்டம்.
//ராஜ நடராஜன் said…
படங்களை எங்கே பிடிச்சீங்க;)அத்தனையும் அருமை.பிரேம் போட்டு வீட்டுல சுவற்றில் அழகு பண்ணலாம்//
இணையத்திலே தான் எடுத்தேன். உண்மையிலேயே அழகான படங்கள் தான்.
//தற்போதைய சூழலுக்கு நிரந்தரமாக சூடான பகுதிக்கு மாற்றிவிடலாம்.//
நேர்மையான முறையில் போவதே நியாயம் 🙂
//தொடர் பின்னூட்டம் போடுவதுன்னா எப்படின்னு குசும்பனிடம் கற்றுக்கொண்ட பாதிப்பு//
இவ்வாறு தொடர் பின்னூட்டம் போடாமல் நியாயமான முறையில் சூடான பதிவுக்கு வரும் பதிவுகளே அனைவர் மனதில் நிற்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து 🙂
அளவுக்கதிகமான கும்மி பின்னூட்டம் (இந்த அரிய புகைப்பட) பதிவின் தரத்தை குறைத்து விடும் என்றே கருதுகிறேன்
உங்கள் அன்பிற்கு நன்றி
Thanks for the photos….an chance to remember the Father of our Nation
அதிஷா said //மிக அருமையான பதிவு , கட்டாயம் சூடான இடுகைகளில் வரவேண்டும்…//வழிமொழிகிறேன். வாழ்த்துக்கள். அப்படியே நேதாஜியின் அரிய புகைப்படங்கள் கிடைத்தால் பதிப்பிக்கவும். ஆவலுடன்,rvc
கிரி,
படங்கள் Great !
எடுத்துப் போட்டதற்கு நன்றி !
அற்புதமான பதிவு. அத்தனை படங்களையும் தேடித் தந்து அவருக்கு மரியாதை செய்து விட்டீர்கள்!
//எந்த வன்முறையிலும் இறங்காமல் ஆங்கிலேயர்களை அமைதியால் அடித்து நொறுக்கியவர். வீரன் என்பவன் கத்தியால் சாதிப்பவன் அல்ல அமைதியால் சாதிப்பவன் என்று உலகிற்கு உணர்த்தியவர்.//
உண்மை. அந்த மகாத்மா வாழ்ந்த மண்ணில் நாம் இன்னும் அமைதியைத் தேடிக் கொண்டே…இருப்பதுதான் கொடுமை. இன்று பெங்களூரில் 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு:(!
//Black said…
Thanks for the photos….an chance to remember the Father of our Nation//
உண்மை தான், அடிக்கடி இப்படி கண்ணில் பட்டால் தான் மறக்காமல் இருப்போம் போல இருக்கு 🙁
————————————————-
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
அருமை கிரியண்ணே…
உங்க தாத்தா கூட சுதந்திர காலத் தியாகில்ல?//
நன்றி. ஆமாம் அப்துல்லா.என்னுடைய தாத்தா முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் (தற்போதைய தங்கபாலு GK வாசனை போல) அவர் பெயரும் (வெங்கட) கிரி தான், அவரின் நினைவாகவே எனக்கு கிரி என்று பெயர் வைத்தார்கள்.
// RVC said…
வாழ்த்துக்கள். அப்படியே
நேதாஜியின் அரிய புகைப்படங்கள் கிடைத்தால் பதிப்பிக்கவும்.
ஆவலுடன்,//
நன்றி RVC முயற்ச்சிக்கிறேன், கிடைத்தால் கண்டிப்பாக பதிவிடுகிறேன். உங்கள் வருகைக்கு நன்றி.
———————————–
// ARUVAI BASKAR said…
அவர் இப்போதைய சுயநலவாத அரசியல் சூழ்நிலையில் மறு பிறப்பு எடுத்து வர வேண்டும் என்பது எனது ஆசை !//
இன்றைய அரசியலில் இவரால் தாக்கு பிடிக்க முடியாது. நமது நாட்டின் அரசியல் ஈரல் கேட்டு போய் பல வருடங்கள் ஆகிறது 🙁
உங்கள் வருகைக்கு நன்றி பாஸ்கர்.
// கோவி.கண்ணன் said…
கிரி,
படங்கள் Great !
எடுத்துப் போட்டதற்கு நன்றி //
உங்கள் பாராட்டிற்கு நன்றி கோவி கண்ணன். எனக்கு இந்த படங்களை பார்க்கும் போது ஒரு ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
———————————–
// ராமலக்ஷ்மி said…
அற்புதமான பதிவு. அத்தனை படங்களையும் தேடித் தந்து அவருக்கு மரியாதை செய்து விட்டீர்கள்!//
மிக்க நன்றி ராமலக்ஷ்மி. இதை கேட்கும் போது எனக்கு கொஞ்சம் பெருமையாகவே உள்ளது.
//அந்த மகாத்மா வாழ்ந்த மண்ணில் நாம் இன்னும் அமைதியைத் தேடிக் கொண்டே…இருப்பதுதான் கொடுமை…//
மகாத்மாவுக்கே அது கிடைக்காத போது நமக்கு ஏமாத்திரம். இனி வரும் காலங்களில் அமைதி என்று இல்லை, தொல்லை இல்லை என்றாலே பெரும் நிம்மதி என்ற நிலையை அடைந்து விடுவோம்.
//இன்று பெங்களூரில் 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு:(!//
பதிவிட்ட எனக்கு இன்னும் அதிர்ச்சி. என்று தணியும் வெடிகுண்டு கலாச்சாரம். இப்படி அப்பாவிகளின் உயிர்களை பலி வாங்கி இவர்கள் என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
//பிரேம்ஜி said…
உண்மையில் அரிய மற்றும் சிறப்பான புகைப்படங்கள். புகைப்படங்கள் மூலம் அன்னாரின் சிறு வயது முதல் முதுமை வரை முழு வரலாற்றை பார்த்த திருப்தி. நன்றி.//
நன்றி பிரேம்ஜி உங்கள் வருகைக்கும் சேர்த்து.
———————————–
//ச்சின்னப் பையன் said…
அருமையான படங்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி…//
நன்றி ச்சின்னப் பையன் தொடர்ந்து வாங்க.
புகைப்படங்கள் அனைத்தும் அருமை கிரி. எடுத்து இட்டமைக்கு நன்றி.உங்கள் வலைப்பதிவிலிருந்து படங்களை எடுத்துக்கொள்ளலாமா?
கிரி கலக்கிட்டீங்க
//அறிவன்#11802717200764379909 said…
நேதாஜி காந்தியால் நடத்தப்பட்ட அரசியல் கால்வாரல்களால் வெறுத்துப் போய்த்தான் இந்தியாவிற்கு வெளியே போய் இந்திய சுதந்திரத்திற்கு முயன்றார்//
அனைவருக்கும் நல்லவராக யாராலும் இருக்க முடியாது,கருத்து வேறுபாடுகள் இருக்க தான் செய்யும். இருந்தாலும் எனக்கு இதை பற்றி விமர்சனம் செய்ய அல்லது விவாதிக்க எனக்கு தகுதி இருப்பதாக கருதவில்லை.
//ஒரு அரசியல் தலைவராக இந்தியாவின் இன்றைய குழப்பங்களுக்கும்,நெருக்கடிகளுக்கும் காந்தியும் நேருவுமே காரணிகள்//
இருக்கலாம். இருந்தாலும் ஒரு சிலரை நான் இன்னும் விமர்சினத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவே கருதுகிறேன். எனக்கும் ஒரு சில விசயங்களில் கோபம் உண்டு, ஆனால் அதை மட்டுமே நான் நினைப்பதில்லை.
உங்கள் வருகைக்கு நன்றி அறிவன்.
———————————–
// வற்றாயிருப்பு சுந்தர் said…
கிரி
அருமையான முத்தான பதிவு. பாராட்டுகளும் நன்றியும்.
எனது குழந்தைகளுக்குக் காட்டி விளக்கிச் சொல்லவேண்டும்//
நன்றி சுந்தர். நம் குழந்தைகளுக்கு வரலாற்று நாயகர்களை பற்றி எடுத்துக்கூற வேண்டியது நமது கடமை.
//நண்பர் கிரி,காந்தி என்ற தனிமனிதர் உண்மையில் ஒரு மஹாத்மா.ஆனால் காந்தி என்ற ஒரு அரசியல் தலைவர் ஒரு எக்ஸெண்ட்ரிக்.நான் இப்படி சொல்வதால் பலர் என்னை விமர்சிக்கலாம்,ஆனால் அதுதான் உண்மை.//ச்சே ….தேச பிதாவ இப்படி சொல்லலாமா ???தனி மனிதனாகவும் அவர் அப்படித்தான் இருந்தார். ஒரு இந்துத்துவா வாதியாக, “தலித் மக்களுக்கு கோவிலுக்கு செல்ல அனுமதிக்காவிட்டால் என்ன, நாம் தலித்திற்கு தனி கோவில் கட்டிவிடுவோம்” என்று சொன்னவர் தான் அவர் !!!
//மதுமிதா said…
புகைப்படங்கள் அனைத்தும் அருமை கிரி. எடுத்து இட்டமைக்கு நன்றி.//
உங்கள் பாராட்டிற்கு நன்றி மதுமிதா. உங்கள் பாராட்டுக்கள் அனைத்தும் இதை கஷ்டப்பட்டு சேகரித்த முகம் தெரியாதவரை சென்றடைகிறது
//உங்கள் வலைப்பதிவிலிருந்து படங்களை எடுத்துக்கொள்ளலாமா?//
தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
வாங்க களப்பிரர் எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளா ஆளையே காணோம்
உங்கள் வருகைக்கு நன்றி.
அருமை கிரியண்ணே…
உங்க தாத்தா கூட சுதந்திர காலத் தியாகில்ல?
கிரி
நல்ல முயற்சி.
காந்திய விமர்சனம் பண்ணும் அளவுக்கு அவரை விட நாம் தகுதியாலோ அல்லது செய்கையாலோ உயர்ந்தவர்கள் இல்லை.
அவரது சத்ய சோதனையில் தன்னைப் பற்றி மறைக்காமல் தனது பலவீனங்களையும் மறக்கமல் எழுதியிருக்கிறார்.
மேலும் அவர் தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லை. தேச நலனை முன்னிறுத்தி சுயலாபங்களை விலக்கி வைத்தவர்.
என்ன செய்றது கிரி, வலை பக்கம் வந்தா நமக்கு ரத்த கொதிப்பு தான் வருது … அதனால டாக்டர் அறிவுரை படி பதிவுலகத்துக்கு எப்பப்யாவது வந்தா போதும்னு முடிவுக்கு வந்துட்டேன் …
// வடகரை வேலன் said…
கிரி
நல்ல முயற்சி.
காந்திய விமர்சனம் பண்ணும் அளவுக்கு அவரை விட நாம் தகுதியாலோ அல்லது செய்கையாலோ உயர்ந்தவர்கள் இல்லை.//
அதனாலேயே ஜகா வாங்கிட்டேன் :-). இல்லைனா அறிவன் சார் கூட விவாதத்தில் கலந்து கொண்டு இருப்பேன். அவர் எப்போதும் தன் கருத்துகளை கூறுவர். என்னுடைய வலை தளத்தில் முக்கிய நபர் அவர்.
//அவரது சத்ய சோதனையில் தன்னைப் பற்றி மறைக்காமல் தனது பலவீனங்களையும் மறக்கமல் எழுதியிருக்கிறார்.//
100% உண்மை. இருந்தாலும் சர்ச்சைகள் எனபது பொது தானே! இதற்க்கு யாரும் விதி விலக்கு அல்ல.
//மேலும் அவர் தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லை. தேச நலனை முன்னிறுத்தி சுயலாபங்களை விலக்கி வைத்தவர்.//
உண்மை தான். ஆனால் களப்பிரர் போன்றோர் வேறு மாதிரி சிந்திக்கிறார்கள். பார்வை அனைவருக்கும் பொது கிடையாதே.
எனக்கு இதில் விவாதம் செய்ய விருப்பமில்லை, எனென்றால் அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது, எனவே தெரியாத ஒன்றை வைத்து அனுமானத்தில் அதுவும் இவரை போன்றவர்களை விவாதிக்கும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை.
இருந்தாலும் அவர்கள் கருத்துக்களை கூற உரிமை உண்டு.
உங்கள் வருகைக்கு நன்றி வேலன்.
// களப்பிரர் said…
என்ன செய்றது கிரி, வலை பக்கம் வந்தா நமக்கு ரத்த கொதிப்பு தான் வருது //
ஹா ஹா ஹா ஹா
//அதனால டாக்டர் அறிவுரை படி பதிவுலகத்துக்கு எப்பப்யாவது வந்தா போதும்னு முடிவுக்கு வந்துட்டேன் …//
அந்த மாதிரி பதிவுகள் பக்கம் போகாம விட்டுடுங்க (அப்படின்னா உன்னோட பதிவுக்கே வந்திருக்க கூடாதுன்னு சொல்லிடாதீங்க :-)))) )
நீங்க இல்லாத போது பல விஷயங்கள் நடந்து விட்டது. கேள்வி பட்டு இருப்பீர்கள், இருந்தாலும் நான் எதிலும் தலையிடுவதில்லை. நம்ம உண்டு நம்ம வலை தளம் உண்டு என்று இருக்கிறேன் 🙂 அதனாலே எனக்கு இதுவரை பெரிய பிரச்சனை எதுவும் வரலை
அவர் இப்போதைய சுயநலவாத அரசியல் சூழ்நிலையில் மறு பிறப்பு எடுத்து வர வேண்டும் என்பது எனது ஆசை !
உண்மையில் அரிய மற்றும் சிறப்பான புகைப்படங்கள். புகைப்படங்கள் மூலம் அன்னாரின் சிறு வயது முதல் முதுமை வரை முழு வரலாற்றை பார்த்த திருப்தி. நன்றி.
அருமையான படங்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி…
//SurveySan said…
Vow! great collection//
நன்றி.
//was that MS on the right?//
தெரியவில்லை சர்வேசன்..உங்கள் வருகைக்கு நன்றி
நண்பர் கிரி,
காந்தி என்ற தனிமனிதர் உண்மையில் ஒரு மஹாத்மா.
ஆனால் காந்தி என்ற ஒரு அரசியல் தலைவர் ஒரு எக்ஸெண்ட்ரிக்.நான் இப்படி சொல்வதால் பலர் என்னை விமர்சிக்கலாம்,ஆனால் அதுதான் உண்மை.
பகத்சிங் வரலாற்றையும்,நேதாஜி,திலகர் ஆகியோர் காங்கிரஸிலும்,கல்கத்தாவிலும் கோலோச்சிய காலங்களில் அகில இந்தியக் காங்கிரஸில் என்ன நடந்தது என்ற வரலாற்றை சிறிது படித்துப் பாருங்கள்.
நேதாஜி காந்தியால் நடத்தப்பட்ட அரசியல் கால்வாரல்களால் வெறுத்துப் போய்த்தான் இந்தியாவிற்கு வெளியே போய் இந்திய சுதந்திரத்திற்கு முயன்றார்.
நேரு போன்ற வசீகரிக்கும் தலைவர்கள் காந்தியின் பின் உறுதியாக நின்றதால் அவர் காங்கிரஸில் அசைக்க முடியாதவரானர்;அவரின் அந்த நிலையை திலகர்,நேதாஜி போன்றவர்களை மட்டம்தட்ட பயன்படுத்தினார்.
ஒரு அரசியல் தலைவராக இந்தியாவின் இன்றைய குழப்பங்களுக்கும்,நெருக்கடிகளுக்கும் காந்தியும் நேருவுமே காரணிகள்.
Please read India Unbound by Gurcharan Das.
கிரி
அருமையான முத்தான பதிவு. பாராட்டுகளும் நன்றியும்.
எனது குழந்தைகளுக்குக் காட்டி விளக்கிச் சொல்லவேண்டும்.
நன்றி.
Vow! great collection
// பேச்சை கேட்டு கொண்டு இருக்கும் அவருடைய அபிமானிகள் ///
was that MS on the right?
//காந்திய விமர்சனம் பண்ணும் அளவுக்கு அவரை விட நாம் தகுதியாலோ அல்லது செய்கையாலோ உயர்ந்தவர்கள் இல்லை.//
நிச்சயம்,ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் தகுதியும் திறமையும் இருப்பவர்கள் மட்டுமே விமர்சிக்க வேண்டுமென்றால்,காந்தியை விமர்சிக்க லண்டன் போய் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின் தான் விமர்சிக்க வேண்டும்.
கருணாநிதியை விமர்சிக்க வேண்டும் என்றால் 50 படங்களுக்கு திரைக்கதை எழுதியபின் தான் விமர்சிக்க வேண்டும் !
//அவரது சத்ய சோதனையில் தன்னைப் பற்றி மறைக்காமல் தனது பலவீனங்களையும் மறக்கமல் எழுதியிருக்கிறார்.
//
ஒரு தனி மனிதராக அவர் மகாத்மா என்றுதான் நானும் சொல்கிறேன்.
ஆனால் அதிலும் கூட கஸ்தூர்பாவும்,தேவதாஸும் வேறு கருத்துக்கள் கொண்டிருந்தார்கள் என்று நம்ப இடமிருக்கிறது.
ஆனால் பொதுமக்கள் பார்வையில்,அவர் ஒரு தனி மனித மாகாத்மாதான்!
//
மேலும் அவர் தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லை. தேச நலனை முன்னிறுத்தி சுயலாபங்களை விலக்கி வைத்தவர்.
//
இது சிறிது சிக்கலான நோக்கு.
அவர் இந்தியா திரும்பிய காலத்தில் பெரும்பாலான இந்தியர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாகவே இருந்தார்கள்.
அவர்கள் விரும்பியிருந்தாலும் காசு,பணம் தேறியிருக்காது என்பதுதான் உண்மை.
ஆனால் காங்கிரஸ் கட்சி வசூலில் காந்தியும் கெட்டியானவர்தான்;ஒருமுறை அவர் நமது திரைப்பட நடிகை கே.பி.சுந்தராம்பாள் வீட்டுக்கு உணவு உண்ண வந்தார்(சுற்றுப்பயணத்தில் போது).
தன் கையாலேயே சமைத்து அவருக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தார் கே.பி.எஸ்;
உணவு பரிபாறப்பட்டது தங்கத்தட்டில் !(அக்காலத்தில் முதன்முதலில் லட்சரூபாய் சம்பளம் வாங்கிய புதல் பெண் நடிகை கே.பி.எஸ் மட்டுமே !).
உணவு படிமாறப்பட்டவுடனேயே காந்தி கேட்டார்,’உனவு மட்டும்தானா எனக்கு,தட்டு இல்லையா?’?
உணவுக்குப் பின்னர் அந்தத் தட்டும் அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது !
என்ன அந்தப் பணம்,இப்போது போல் அல்லாமல் மதுரை,கொடநாடு,சி.ஐ.டி.காலனி,கோபாலபுரம்,ஸ்விஸ் வங்கிக் கணக்கு எனப் பதுங்காமல்,காங்கிரஸ் கட்சியை நடத்தவும்,போராட்ட நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.
அவரின் தனிமனிதத் தேவைகள் மிகக் குறைவாக இருந்தன;ஆனால் சில எக்ஸெண்ட்ரிக்கான அவரின் தேவைகளுக்கு பெரும்பணம் செலவு செய்யப்பட்டது.
ஒருமுறை அவரின் கால் செருப்பு அறுந்து போனபோது,அவர் இயற்கையாகவே இறந்து போன மாட்டின் தோலால் தைத்த செருப்பையே அணிவேன் என அடம்பிடித்ததால்,காங்கிரஸ் சேவாதளத் தொண்டர்கள் குஜராத் முழுவதும் அலைந்து திரிந்து இயற்கையாகவே இறந்த மாட்டைத் தேட வேண்டியிருந்தது.சுமார் பத்து நாட்கள் மாநிலம் முழுவதும் இந்தத் தேடல் நடந்து,பின்னர் அவ்வைகையான மாட்டை அறிந்து,அதிலிருந்து செருப்பு உருவாக்கப்பட்டு,அதையே அணிந்தார்.
ரொம்பக் கேணத் தனமாகத் தோன்றவில்லை??????
>>//was that MS on the right?//
தெரியவில்லை சர்வேசன்..உங்கள் வருகைக்கு நன்றி>>
சர்வேஸ்,ஆமாம்.சரிதான்.
//அறிவன்#11802717200764379909 said…
ரொம்பக் கேணத் தனமாகத் தோன்றவில்லை??????//
இந்த விளையாட்டுக்கு (விவாதத்திற்கு) வரவில்லை, எனக்கு இதை பற்றி எதுவும் தெரியாது, வேறு யாராவது கூற விரும்பினால் கூறலாம்.
//சர்வேஸ்,ஆமாம்.சரிதான்.//
நன்றி அறிவன் (நிறையா தெரிந்து வைத்து இருக்கீங்க போல) 🙂
இதோ இந்தியன் என்று பெருமைப்படும் ஒருவனின் நன்றிகள்…
//பரிசல்காரன் said…
என்ன கிரி… நேரில் சந்திக்கும்போது இதையெல்லாம் சொல்லவில்லை?//
அப்போது எனக்கு நேரம் இல்லை கே கே. ஊருக்கு செல்லும் அவசரத்தில் இருந்தேன். அடுத்த முறை எங்க வீட்டிற்க்கே வாங்க//
//எத்தனை விஷயங்களைப் பேசியிருக்கலாம்? வீணடித்துவிட்டோமே? //
என் தாத்தா காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்ததற்கும் எனக்கு மஹாத்மா மீது இருக்கும் அன்பிற்கும் சம்பந்தம் இல்லை. எங்கள் வீட்டிற்கு காமராஜர் உட்பட பல பெரிய தலைகள் வந்து இருகிறார்கள். காமராஜருடன் என்னுடைய தாத்தாவிற்கு நல்ல நெருங்கிய நட்பு இருந்தது. உங்கள் பகுதி வயதான் காங்கிரஸ் பெரியவர்களிடம் KPV கிரி பற்றி தெரியுமா என்று கேட்டுப்பாருங்கள், அவர்களுக்கு ஒருவேளை தெரிந்து இருக்கலாம்.
இன்றும் நீங்கள் கோபி கோ ஆபரேடிவ் (பழனியம்மாள் பள்ளி அருகில்) வங்கி சென்றால் கல்வெட்டில் திறப்பாளர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு KPV கிரி என்று இருக்கும், கீழே சிறப்புரையோ ஏதோ காமராஜர் என்று இருக்கும், எனக்கு இன்றும் அது பெருமை அளிக்கும் விஷயம் தான்.
உங்கள் வருகைக்கு நன்றி கே கே.
//வெண்பூ said…
இதோ இந்தியன் என்று பெருமைப்படும் ஒருவனின் நன்றிகள்…//
மிக்க நன்றி வெண்பூ. நாம் இந்தியன் என்று கூறி பெருமைப்படும் இதை போல விஷயங்களின் தரம் என்று குறைவதில்லை. உங்கள் வருகைக்கு நன்றி.
கிரி…
//என்னுடைய தாத்தா முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் (தற்போதைய தங்கபாலு GK வாசனை போல) அவர் பெயரும் (வெங்கட) கிரி தான், அவரின் நினைவாகவே எனக்கு கிரி என்று பெயர் வைத்தார்கள்.//
என்ன கிரி… நேரில் சந்திக்கும்போது இதையெல்லாம் சொல்லவில்லை?
எத்தனை விஷயங்களைப் பேசியிருக்கலாம்? வீணடித்துவிட்டோமே?
மிக நல்ல பதிவு!
//அறிவன்#11802717200764379909 said…
நானும் விவாதத்துக்காகக் கூறவில்லை.எனக்குத் தெரிந்தவற்றை,என் சிந்தனைக்குச் சரியானதைக் கூறுகிறேன்,அவ்வளவே!//
ஒத்துக்கொள்கிறேன் அறிவன். ஒவ்வொருவரும் தங்கள் மனதிற்கு சரி என்று படுவதையே கூறுகிறார்கள், உங்கள் கருத்தை கூறுகிறீர்கள் அவ்வளவே.
//மிகச் சிறுவயதிலிருந்தே நிறையப் படிக்கும் பழக்கமும்,வழக்கமும் உண்டு,அதன் காரணமாக இருக்கலாம்//
நிறைய படிப்பது நல்லது தான், நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள உதவும்.
//அதோடு பின்னால் உயரமாகத் தோன்றும் நபர்(ஆண்) சதாசிவம்-எம்.எஸ்’ன் கணவர்.//
நிறுத்தாம சிக்ஸர் அடிக்கறீங்க போங்க 🙂
// இளவேனில் said…
கிரி அருமை, அற்புதமான பதிவு …
புகைப்படங்கள் அல்ல பொக்கிஷங்கள்… //
நன்றி சக்தி.
//இனி எப்போதும் இப்படி ஒரு மகாத்மா பிறக்க போவதில்லை…//
உண்மை தான் அவரில் கால் வாசி கூட வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை.
//படங்களை பார்க்கும் போதே என் கண்கள் குளமாகி விட்டது…//
கடைசி ஒரு சில படங்கள் என்னையும் மிக பாதித்து விட்டது.
//இப்போதுள்ள அரசியல் வாதிகள் இந்த புகைப்படங்களை –
கண்டிப்பாக பார்க்க வேண்டும் …
அப்போதாவுது திருந்துவார்களா..?//
நடக்கிற கதைய பேசுங்க சக்தி 🙂
//இந்த பதிவு இந்தியன் என்பதில்
பெருமையும் பெருமிதம் கொள்ள செய்கிறது…
வளர்க.. வாழ்த்துக்கள் //
உங்கள் வருகைக்கு நன்றி சக்தி.
>>இந்த விளையாட்டுக்கு (விவாதத்திற்கு) வரவில்லை, எனக்கு இதை பற்றி எதுவும் தெரியாது, வேறு யாராவது கூற விரும்பினால் கூறலாம்.>>
நானும் விவாதத்துக்காகக் கூறவில்லை.எனக்குத் தெரிந்தவற்றை,என் சிந்தனைக்குச் சரியானதைக் கூறுகிறேன்,அவ்வளவே!
>>
//சர்வேஸ்,ஆமாம்.சரிதான்.//
நன்றி அறிவன் (நிறையா தெரிந்து வைத்து இருக்கீங்க போல) 🙂
>>
நன்றி..மிகச் சிறுவயதிலிருந்தே நிறையப் படிக்கும் பழக்கமும்,வழக்கமும் உண்டு,அதன் காரணமாக இருக்கலாம்.
>>//was that MS on the right?//
தெரியவில்லை சர்வேசன்..உங்கள் வருகைக்கு நன்றி
சர்வேஸ்,ஆமாம்.சரிதான்.
>>
அதோடு பின்னால் உயரமாகத் தோன்றும் நபர்(ஆண்) சதாசிவம்-எம்.எஸ்'ன் கணவர்.
//தமிழன்… said…
நல்ல படங்கள்…!//
நன்றி தமிழன்
கிரி அருமை, அற்புதமான பதிவு …
புகைப்படங்கள் அல்ல பொக்கிஷங்கள்…
இனி எப்போதும் இப்படி ஒரு மகாத்மா பிறக்க போவதில்லை…
படங்களை பார்க்கும் போதே என் கண்கள் குளமாகி விட்டது…
இப்போதுள்ள அரசியல் வாதிகள் இந்த புகைப்படங்களை –
கண்டிப்பாக பார்க்க வேண்டும் …
அப்போதாவுது திருந்துவார்களா..?
இந்த பதிவு இந்தியன் என்பதில்
பெருமையும் பெருமிதம் கொள்ள செய்கிறது…
வளர்க.. வாழ்த்துக்கள்
ஜெய் ஹிந்து …!
நல்ல படங்கள்…!
அன்புள்ள கிரி அவர்களுக்கு, அருமையான படங்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி.அன்புள்ள அறிவன் அவர்களுக்கு,உங்களோடு வாதத்தில் இறங்க எனக்கும் உங்களைப் போன்ற நிறைந்த தகவல் அறிவு இல்லையென்பதாலும், வாதத்தில் எனக்கும் விருப்பமில்லை என்பதாலும், இருந்தாலும் நீங்கள் காந்தியை விமர்சனம் செய்வதைப் போலவே எனக்கும் உங்களை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டதாலும் இதை பதிவு செய்கிறேன். நீங்கள் காந்தியை விமர்சனம் செய்யும் அளவை விட அதிகமாகவே, தன்னை தானே சுய விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார் அவர். இதை நான் சத்திய சோதனையில் சில பக்கங்களை வாசிக்க நேர்ந்த போது உணர்ந்திருக்கிறேன். அவர் நல்லது மட்டுமே செய்வார் என்றோ, அப்படி நல்லதை மட்டுமே செய்தார் என்றோ நாம் அவரை மகாத்மாவாக கொண்டாட வில்லை. அவர் தன் தவறுகளையும், தான் சுய நல வயப்பட்ட தருணங்களையும் ஒருபோதும் நியாயப்படுத்த முயற்சிக்காமல் அசாத்திய துணிச்சலுடன் உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். அதனாலேயே அவர் மகாத்மா. இப்போது அவர் இருந்தாரேயானால், நீங்கள் முன் வைக்கும் வாதங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், உங்களின் விமர்சனத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உங்களுக்கு நன்றியும் தெரிவித்து இருப்பார் என்றே எனக்கு தோன்றுகிறது.
//சிவாஜி said…
அன்புள்ள கிரி அவர்களுக்கு, அருமையான படங்களைப் பகிர்ந்து கொண்டீர்கள்.//
உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சிவாஜி.
really superb.
//rukku said…
really superb.//
நன்றி ருக்கு உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து 🙂
தேசப் பிதாவின் அரிய புகைப்படங்கள்.நன்றிதி.விஜய்
விஜய் உங்கள் பதிவை ஏற்கனவே பார்த்து விட்டேன் 🙂
அறிவன் உங்களோட கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன 🙂
நண்பர் சிவாஜி,
நன்றி.உடனடி என்னை விமர்சிக்க வேண்டும் என்று தோன்றுகிறது என்ற உங்கள் வார்த்தை என் வாதத்துக்கான உண்மையான பாராட்டு,என்னைப் பொறுத்தவரை.
நான் சொல்லவந்த விதயம் சரியான கோணத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றே அஞ்சுகிறேன்.
எனது விமர்சனம் எல்லாம் அவரை (அக்காலத்திய)தேச அரசியலின் தந்தை என்ற நிலையில் வைத்தே.
தனது தனி மனித சறுக்கல்களை பகிரங்க ஒப்புக் கொள்தல் மட்டுமே ஒருவனை மகாத்மா ஆக்கி விடும் என்பது சரியென்றால்,கண்ணதாசன் கூட மகாத்மா ஆகியிருக்க வேண்டும்.
அவர் மகாத்மா எனத் தொழப்பட்டது அவரது இரண்டு வித பரிமாணங்களில்-ஒன்று அறியப்பட்ட ஒரு தனிமனிதராக-இதில் அவர் வெல்கிறார்,பொது மக்கள் பார்வையில்.நானும் உங்களைப் போலவே வியந்திருக்கிறேன்,ஒரு தனிமனிதன் தனது தந்தையின் நோய்ப் படுக்கை நேரத்திலும் தன் காம வேட்கைக்குப் பலியான சம்பவங்களை பொதுவில் விவரிக்கும் உளத்திண்மை,காந்தியிடம் இருந்ததைப் பார்த்து.
அவருடைய சத்திய சோதனை ஒவ்வொரு இந்தியனும் படித்துப் பெருமைப்பட வேண்டிய புத்தகம்.நானும் பலமுறை படித்திருக்கிறேன்.
அவர் மகாத்மா’வானது இந்த தனிமனித உயர்பிம்பம் பொது வாழ்க்கையிலும் ஏறியதனால் அல்லது ஏற்றப்பட்டதால் !
நான் சொல்ல வந்தது இந்தப் பொது வாழ்வில் ஒரு போராட்டத் தலைவராக,அவரின் பல செயல்கள் பலரை நோகடிக்கும் வகையில் சிறிது எக்ஸெண்ரிக் தனத்துடன் இருந்தன என்பதை வைத்தே.
காட்டாக,கோகலேயும் போஸும் கல்கத்தாவைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள்;அவர்கள் ஒரு சொல் சொன்னால் கல்கத்தாவே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கல் செல்வாக்கு நிரம்பிய அவர்களை காந்தி தன் பல செயல்களால் கிட்டத்திட்ட டம்மி ஆக்கினார்;போஸ் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு கிட்டத்திட்ட இறக்கும் நிலைக்கு வந்தும் காந்தி அவரை விடுவிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை;அவர் இறந்துவிடுவார் என்ற நிலையில் கல்கத்தா மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடும் அறிகுறிகள் தெரிந்ததும் அரசு அவரை ஐரோப்பாவிற்கு அனுப்பி சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதித்தது.
இரண்டாவது முட்டாள்தனமான பின்வாங்கல் ஒத்துழையாமை இயக்கத்தின் போது நடந்தது;ஒத்துழையாமை இயக்கம் முழுவீச்சில் ஆரம்பித்து சூடுபிடித்து , அரசு கிட்டத்திட்ட திணறும் நிலைக்கு வந்த போது,ஒரு போராட்டத்தில் சில ஆங்கில அதிகாரிகள் தாக்கப்பட்டனர் என்ற ஒரே காரணத்திற்காக சட்டென்று நாடு முழுதுக்குமான போராட்டத்தை நிறுத்தினார்.
சிறிது யோசித்துப் பாருங்கள்,விலங்குகளைப் போல ஜாலியன் வாலாபாக்கில் இந்தியர்களை நாய்களைச் சுடுவது போல சுட்டுத் தள்ளிய டயர் எந்த சேதமும் இல்லாமல் இருக்க முடிந்தது;அவ்வளவு செல்வாக்கான காந்தி-மகாத்மாவால் என்ன செய்ய முடிந்தது??ஆனால் சில ஆங்கிலேயர்கள் பாதிக்கப் பட்டதால் ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்பட்டது.
பல முன்னணித் தலைவர்கள் நொந்து போனார்கள்.
பகத்சிங்’ன் தூக்கிலிடும் நிகழ்வும் இவ்வாறே காந்தியின் அறிந்தே நடந்தது;ஒரு வகையில் அவர் வழியில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாதவர்களை அவர் ஒழித்துக் கட்டுகிறாரோ என்று சந்தேகப் படத் தக்க வகையில் அவரது பல நடவடிக்கைகள் அமைந்தன….
நமக்கு தேசப்பிதா என ஒரு கட்டமைப்புக்கான பிம்பத்தில் அவர் சரியாகப் பொருந்தினார்,அவ்வளவுதான் !
எழுதினால் இதுவே தனி இடுகையாகிவிடும்.
கிரி,நீண்ட பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன்.
நண்பர் கிரி அவர்களுக்கு,இப்புகைப்படங்களைத் தரவிறக்கிக் கொள்ளலாமா.. நீங்கள் அனுமத்தால்..
தாராளமாக கையேடு. நீங்கள் அனைவரும் இதை போல கேட்டு பெறுவது எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யம் அளிக்கிறது. மிகவும் சந்தோசப்படுகிறேன். இனி யாராவது தரவிறக்கம் செய்ய விரும்பினால் என்னோட அனுமதி தேவை இல்லை. யார் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
கிரி எனக்கு மகாத்மாவை மிகவும் பிடிக்கும்.. ஆனால் அவரை பிடிக்காதவர்களோடு இவ்வளவு நாள் இருந்திருக்கிறேன்… எனக்கும் என்னுடன் தங்கி இருந்த என் தோழிக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்திருக்கிறது… நீண்ட நாள் பிறகு அவரை மதிக்கும் மற்றொரு நபரை பார்க்கிறேன்… அறிய புகைப்படங்கள்… மிகவும் நன்றாக உள்ளது… அஹிம்சையினால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று நிருபித்த ஒரு மாமனிதர்… கண்டிப்பாக சுட்டு போட்டாலும் எனக்கு அது வராது 🙂 இருந்தாலும் முயற்சி செய்கிறேன்…
//Vidhya said…
கிரி எனக்கு மகாத்மாவை மிகவும் பிடிக்கும்.. ஆனால் அவரை பிடிக்காதவர்களோடு இவ்வளவு நாள் இருந்திருக்கிறேன்… எனக்கும் என்னுடன் தங்கி இருந்த என் தோழிக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்திருக்கிறது… நீண்ட நாள் பிறகு அவரை மதிக்கும் மற்றொரு நபரை பார்க்கிறேன்… //
வித்யா அவரை மதிக்கும் பலர் இருக்கிறார்கள். நீ கூறுவதை பார்த்தால் அவரை பிடிக்காதவர்களே அதிகம் உள்ளதாக படுகிறது. எனக்கும் ஒரு விசயத்தில் உடன்பாடு இல்லை இருந்தாலும் அதற்காக அவரை ஒதுக்கி விட முடியுமா! இன்றும் என்னில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.
//அறிய புகைப்படங்கள்… மிகவும் நன்றாக உள்ளது… //
நன்றி
//அஹிம்சையினால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று நிருபித்த ஒரு மாமனிதர்//
உண்மை தான். அவரின் பல அனுபவங்கள் நம்மை மேம்படுத்தி கொள்ள உதவுகிறது.
i feel very proud to be a indian .
i பீல் வெரி வெரி ப்ரௌட் டு பி இந்தியந
நினைக்கும் போதல்லாம் மனத்திற்கு ஓர் மகிழ்ச்சி .
நானும் நிக்களும் ஒரு மகாத்மா போலே இர்ருந்தால் நாட்டை கட்டி அலுப்பலம்\
thanks for the photos………. ungal ellorayum vida mahathma than kurayai therinthu irukirar……. ungal vimarsanagalinal avarin puhalai kulaika ninaipathai vida mudinthal avarin seyalkalai, poratangalai, manauruthiyai indraya samuthaya kudumaikaluku ethiraka pera mudiyuma endru nirupiyungal……. parpom……..
மிகவும் பயன்வுள்ளதகவே இருக்கு
மகாத்மா காந்திக்கு ஜே
நான் காந்தி இன் பொன் போன்ற சிரிப்பு பார்க்க
சிறப்பாக உள்ளது.
சூப்பர்…நம் தேசபித போடோஸ் அருமை..
ரொம்ப நன்றி ….
நான் இந்தியன் ஆகா பிறந்ததில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்
என் தேச தந்தைக்கு ஜெய்
என் பரத மாதாக்கு ஜெய்
மிக மிக நன்றி
இவ்வரிய புகைப்படங்களை தந்ததற்கு
un பெலியாப்ளே pitures
ரொம்ப அழகா இருக்குங்க
இந்திய அரசியலில் காந்தி செய்த முன்று துரோகங்கள் என்று சொல்லப்படுகின்றவை உங்கள் கவனத்துக்கு வந்திருக்கின்றனவா? 1. அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை நியாயமற்ற முறையில் கட்சித் தேர்தலில் தோற்கடித்தார் 2. அவர் பகத் சிங் தூக்கிலேற்றப்பட்ட போது அதை ஆதரித்தார் 3. தலித்துக்களுக்கு இரட்டை வாக்குரிமையை ஆங்கில அரசு கொண்டுவந்தபோது அதை உண்ணாவிரதம் இருந்து தோற்கடித்தார்.
இந்தக்காரணத்துக்காகவே அவர் இன்று துரோகி என்று சொல்லப்படுகிறார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
—————————
பொதுவாக நம்முடைய பொது அரட்டைகளில், ஆழ்ந்த வாசிப்போ வரலாற்றுப்புரிதலோ இல்லாத மேடைப்பேச்சாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு முன்வைக்கப்படும் திரிபுகளும் அவதூறுகளும்தான் இவை.
பல லட்சம் பேரைக் கொலைசெய்த ஸ்டாலினைப்பற்றி அல்லது மாவோவைபற்றிப் பேசும் போது அவர்களின் தவறுகளை வைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது என்று சொல்பவர்கள்தான் காந்திமேல் இந்த ‘மாபெரும்’ தவறுகளைக் கண்டுபிடித்து அவரை மனிதர்களில் கடையர் என்று சொல்லவருகிறார்கள். இவ்வளவுதான் காந்தியில் அவரது மோசமான எதிரிகள் கூட கண்டுபிடிக்கக்கூடிய பிழைகள் என்றால் இதுவே காந்தியின் மேன்மைக்கான சான்றாகும்.
ஒன்று: சுபாஷ் சந்திர போஸ் காந்தியின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவர். அப்படி தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர். பின்னாளில் சுபாஷ் எப்பரடி உருவானார் என்று பார்க்குபோது அவரை வரலாற்றுணர்வும் நிதானமும் இல்லாத கற்பனாவாதி என காந்தி மிகச்சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார் என்று தெரியவருகிறது. சுபாஷை காந்தி காங்கிரஸ் தலைவராக ஆக அனுமதித்திருந்தால் காங்கிரஸை அவர் வன்முறைப்பாதைக்கு இட்டுச்சென்றிருப்பார். இந்திய மண்ணுக்குள் ஜப்பானியரை கொண்டு வந்திருப்பார். இங்கே உலகப்போர் நிகழ வைத்திருப்பார். தன் முதிராத வரலாற்றுப்பார்வையின் விலையாக கோடி மனித உயிர்களை பலிகொடுத்திருப்பார்.
ஆகவே தெள்ளத்தெளிவாக கண்முன் தெரியும் ஓர் அபாயத்தைத் தவிர்க்க தன் அனைத்து சக்திகளையும் காந்தி பயன்படுத்தியது மிக இயல்பானது. அதை அவர் செய்யாமல் விட்டிருந்தால்தான் அது மாபெரும் வரலாற்றுப்பிழை. சுபாஷ் துடிப்பான இளம்தலைவராக இருந்தார். அந்த வசீகரமே அவரது வெற்றிக்கான முதல்காரணம். அதற்கு எதிராக காந்தி தன்னுடைய வசீகரத்தை பயன்படுத்தினார்.
அதைவிட மேலான இன்னொரு காரணம் உண்டு, அன்றைய காங்கிரசில் வங்கத்துக்கு இருந்த அதிகப்படியான பங்கு. வங்க பிராந்திய உணர்வை சுபாஷ் தன் தேர்தலில் அப்பட்டமாகவே பயன்படுத்திக்கொண்டார். அதற்கு எதிராக காந்திசெய்யக்கூடுவதாக இருந்தது ஒன்றே, தென்னிந்தியப் பங்களிப்பை திரட்டுவது. பட்டாபி சீதாராமையா வழியாக அதை செய்யமுயன்றார் அவர்.
சுபாஷ்சந்திர போஸுடன்
சுபாஷ் வென்றபின் காந்தி காங்கிரசில் நீடிப்பது சரியல்ல. சுபாஷை தேர்வுசெய்தது காங்கிரஸ் பொதுக்குழு. ஆனால் காங்கிரசின் உண்மையான பலம் என்பது காந்திக்கு மக்கள் மேல் இருந்த செல்வாக்கு. பொதுக்குழுவின் தேர்வை மதித்து காந்தி சுபாஷ் தலைமையிலான காங்கிரஸில் நீடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? காந்தியின் அகிம்சைநோக்கை நம்பி காங்கிரசுக்கு வந்த மக்களை அவர் சுபாஷின் வன்முறை நோக்குக்கு கையளிக்க வேண்டியிருக்கும். அதை அவர் செய்திருக்க வேண்டுமா என்ன?
ஆகவே அவர் தான் விலகிவிடுவதாகச் சொன்னார். அவர் விலகினால் காங்கிரஸே இல்லை. ஆகவே பொதுக்குழு பணிந்தது. காந்தி வேண்டும் காந்தியம் வேண்டாம் என்ற காங்கிரஸ் பொதுக்குழுவின் நிலைபாட்டை காந்தி ஏற்காமலிருந்ததே நியாயமானது.
பின்னர் காந்தி ஹரிஜன இயக்கம் ஆரம்பித்தபோதும் உயர்சாதிப்பித்து கொண்டிருந்த பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் புருஷோத்தம்தாஸ் டாண்டன், கோவிந்த வல்லப பந்த் ஆகியோர் தலைமையில் எதிர் நிலையை எடுத்தார்கள். காங்கிரசுக்கு காந்தி வேண்டுமென்றால் காந்தியமும் வேண்டும் என்ற நிலைபாட்டையே காந்தி எடுத்தார். அவர்களை பணியவைத்தார். இறுதியில் அதே காங்கிரஸ் இட ஒதுக்கீடுவரை வந்ததற்கு அவரே காரணம். அதுவே அவரது அரசியல். அதில் என்ன பிழை இருக்கிறது?
பகத் சிங்கை தூக்கிலேற்ற காந்தி ஆதரவளித்தார் என்பது காந்திய அவதூறு செய்ய ஐமப்துகளில் கம்யூனிஸ்டுக்கட்சி தடைசெய்யபப்ட்ட காலத்தில் எஸ்.ஆர்.டாங்கே என்ற நேர்மையற்ற இடதுசாரித் தொழிற்சங்கவாதி கிளப்பிவிட்ட பொய். இந்த ஆசாமி நெருக்கடி நிலை காலத்தில் இந்திரா அரசுடன் சேர்ந்து அடித்த சுயநலக் கூத்துக்கள் வரலாறு. அந்த அவதூறு மிகத்தெளிவாக தவறென நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழில் அ.மார்க்ஸ் போன்ற காந்திய எதிர்பாளர்களே இதை விரிவாக பதிவுசெய்திருக்கிறார்கள். தீராநதி 2008 இதழ்களைப் படியுங்கள்.
காந்தி பகத்சிங்கின் வன்முறை சார்ந்த வழிகளை ஏற்றவரல்ல. வெள்ளையரைக் கொல்லுதல் அவர் நோக்கில் மாபெரும் பாவம். அவரைப்பொறுத்தவரை வெள்ளையர் ஓர் அரசியல் ஆட்டத்தில் மறுதரப்பில் இருப்பவர்கள்தான். அவர்களையும் அவர் நேசித்தார். அவர்களில் உள்ள ஏழை மக்களையும் தன்னவராகவே கண்டார். ஆகவே அவர்களுக்கும் அவர் தங்களவராக இருந்தார்.
இங்கிலாந்துக்கு வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற காந்தியை துணிதுவைக்கும் மக்கள் தங்கள் தலைவராக தங்கள் குப்பத்துக்குக் கூட்டிச்சென்றுதங்க வைத்தது அதனால்தான். வெள்ளையருடன் எந்நிலையிலும் பேச காந்தி தயாராக இருந்தார். பகத்சிங் செய்த கோலைகளை நியாயபப்டுத்தியபின் அவர் எப்படி உலக மனசாட்சியுடன் பேச முடியும்? எப்படி வெள்ளையனின் அறவுணர்வை நோக்கி பேச முடியும்? அதன்பின் சத்யாக்ரகத்துக்கு என்ன மதிப்பு?
ஆகவே பகத்சிங்கை அவர் முழுக்க நிராகரித்ததே இயல்பானது. வரலாற்றுணர்வும் சமநிலையும் இல்லாத கற்பனாவாதப் புரட்சியாளராகவே பகத் சிங்கை அவரது கடிதங்கள் காட்டுகின்றன. அவர் தூக்கிலேற்றப்படவிருக்கையில் தேசமே உணர்ச்சிக்கொந்தளிப்புடன் அவருக்கு சார்பாக நின்றது. அவர் செய்ததை காங்கிரசிலேயே முக்கால்வாசிப்பேர் நியாயப்படுத்தினார்கள். அது பொதுமக்களின் மனநிலை. வீர வழிபாடும் தியாக வழிபாடும் நம் மக்களின் மனதில் ஊறியவை. காரணம் நாம் பல நூற்றாண்டுகளாக போரிடும் சமூகமாக இருந்திருக்கிறோம். அதற்கான மனநிலைகளும் படிமங்களும் விழுமியங்களும் நம் பண்பாட்டில் ஊறியிருக்கின்றன
அந்த அலையைக் கணித்துக்கொண்டு தன் கொள்கையை மறந்து பகத்சிங்கை நியாயப்படுத்தினாரென்றால்தான் காந்தி அயோக்கியர். அல்லது பகத்சிங்கை நிராகரித்துவிட்டு தன் சொந்த மகன் அதைச்செய்திருந்தால் அதை நியாயப்படுத்தியிருந்தால் அது சுயநலம். எது காந்தியமோ அதுவே காந்தி. அதில் அவர் சமரசம்செய்துகொள்ளவே இல்லை. இந்தியாவே காந்தியத்தை ஒடுமொத்தமாக நிராகரித்திருந்தாலும் அவர் தன் நோக்கில் தெளிவாகவே இருந்திருப்பார்.
ஆனால் அவர் பகத்சிங் மற்றும் தோழர்களின் விடுதலைக்காக தனிப்பட்டமுறையில் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்தார். வழிதவறிய மைந்தர்கள் அவர்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்றாடினார். அனைத்துக்கும் இன்று திடவட்டமான கடித ஆதாரங்கள்னாஅவணகாப்பகங்களில் உள்ளன. பகத்சிங், படுகேஷ்வர் தத் தவிர பிற புரட்சியாளர்கள் உயிர் பிழைத்தமைக்கு ஆங்கில ஆட்சியாளர்கள் காந்திமேல் கொண்டிருந்த மதிப்பும் காந்தி அவர்களால் புறக்கணிக்கப்பட முடியாத இடத்தில் இருந்தார் என்பதுமே காரணம்.
தலித் பிரச்சினையில் காந்தியின் கொள்கை வெளிப்படையானது, திட்டவட்டமானது. தலித்துக்கள் தங்கள் சமூக இழிவிலிருந்து கல்வி, தொழில் மூலம் மேலே வருவது ஒரு பக்கம். அவர்களைப்பற்றிய உயர்சாதியினரின் கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதும், அவர்களிடம் குற்றவுணர்வை உருவாக்குவதும் இன்னொரு பக்கம். தலித்துக்களை பிறருக்கு எதிராக நிறுத்தும் ஒரு போராட்டம் இந்திய சமூகத்தைப் பிளவுபடுத்தும் என்றும் ஒட்டுமொத்தமாக தலித்துக்களுக்கு எதிரான உணர்வுகளையே உருவாக்கும் என்றும் காந்தி உறுதியாக நினைத்தார்.
இதையே காந்தி இஸ்லாமியர் விஷயத்திலும் எண்ணினார். காந்தியின் அணுகுமுறை என்பது இந்திய சமூகத்தை முழுக்க அரசியலுக்குக் கொண்டுவருவதும், அவர்களுக்கு இடையே உள்ள வரலாற்று முரண்பாடுகளை மெல்லமெல்ல சமரசப்படுத்துவதும்தான் என்று நாம் காணலாம். எல்லா சமூக உறுப்புகளையும் ஒன்றுடன் ஒன்று உரையாட வைக்கவே அவர் முயன்றார்.
கிட்டத்தட்ட 200 வருடம் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தலித்துக்களுக்காக எதையுமே செய்யவில்லை என்பது வரலாறு. அவர்களின் ஜமீந்தார்களின் கீழேதான் தலித்துக்கள் வரலாற்றிலேயே ஆகப்பெரிய கொடுமைகளை அனுபவித்தார்கள். அப்படிப்பட்ட பிரிட்டிஷ் அரசு திடீரென இரட்டை வாக்குரிமையை கொண்டு வருவதென்பது அப்பட்டமான பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை அறிய ராஜதந்திரம் ஏதும் தேவையில்லை.
அந்த இரட்டை வாக்குரிமை அப்போது ஏற்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? தலித்துக்களில் ஒருசாரார் பிரிட்டிஷ் தாசர்களாக சில்லறை அதிகாரத்தை அடைந்திருப்பார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை இருபது வருடம் அந்த சலுகை நீடித்திருக்கும். ஆனால் அதன் விளைவாக தலித் சமூகமே பொது ஓட்டத்தில் இருந்து முற்றிலும் அன்ன்னியமாகிவிட்டிருக்கும். சுதந்திரத்துக்குப்பின் அம்பேத்கர் காங்கிரஸ் ஆதரவுடன் சட்ட அமைச்சராக ஆகி இட ஒதுக்கீட்டை 90 சதவீதம் உயர்சாதியரால் ஆன காங்கிரஸ் ஆதரவுடன் அரசியல் சட்டத்திலேயே இடம்பெறச்ச்ய்திருக்க முடியுமா என்ன?
தன் வாழ்நாளின் இறுதியிலேனும் அம்பேத்கார் காந்தி இரட்டை வாக்குரிமைக்கு எதிராக இருந்தது எத்தனை நன்மை பயத்தது என அந்தரங்கமாக உணர்ந்திருப்பார் என்றே நினைக்கிறேன். தலித்துக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடவேண்டும். ஆனால் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தில் இருந்து அன்னியப்பட்டு அவர்கள் எதை அடைய முடியும்?
காந்தி உண்ணாவிரதம் இருந்து அக்கோரிக்கையை முறியடித்தார். ஆமாம், அவர் முற்றிலும் தவறென நம்பிய ஒரு கோரிக்கையை முறியடிக்க தன் உயிரை பணயம் வைத்தார். அதுவே இயல்பான காந்திய வழி. தலித்துக்களுக்கு எதிராக பிரசாதியினரை அவர் தூண்டிவிட்டிருக்க வேண்டும் என்கிறார்களா இவர்கள்? அது மிக எளிய விஷயம். அம்பேத்கார் அடங்கிப்போனதற்குக் காரணம் காந்தியின் மீது அவர் கொண்டிருந்த பெருமதிப்பு மட்டும் அல்ல. இன்றுபோலவே அன்றும் இந்திய தலித்துக்களில் பெரும்பான்மையினர் காந்தியையே தலைவராக எண்ணினார்கள். ஏனென்றால் வரலாற்றில் முதல்முறையாக அவர்களின் பிரச்சினையைக் கேட்ட, அவர்களை அரசியலுக்குக் கொண்டுவந்த, அவர்களின் நலன்களை பிறர் கவனிக்கச் செய்த அமைப்பு காந்தியின் காங்கிரசே.
காந்தி தலித் குழந்தைகளுடன்
தன் கருத்துக்களுக்கு எதிரான அனைவரையுமே கொன்றே ஒழித்த ஸ்டாலினையும் மாவோவையும் பிறரையும் தலைவர்களாகக் கொண்டாடுகிறவர்கள் தன் கொள்கைக்காக உண்ணாவிரதமிருந்து சாகத்துணிந்த காந்தியை சர்வாதிகாரி என்கிறார்கள். தான் எதிர்க்கும் ஒருவர் மேல் இம்மி கூட வெறுப்பை உமிழாமல் தன் தார்மீக வல்லமையை மட்டுமே ஆயுதமாகப் பயன்படுத்தியவரை துரோகி என்கிறார்கள்.
உண்மை என்பதுதான் எத்தனை தனியது ! எவ்வளவு வேட்டையாடபடுவது ! எத்தனை வெறுக்கப்படுவது ! இருந்தும் அது எப்படியோ வெற்றிபெற்று வருவதன் மாயம்தான் என்ன? வரலாறெங்கும் நிரம்பியிருக்கும் எளிய மக்கள் உண்மையை தங்கள் ஆத்மாவால் எப்படியோ அடையாளம் காண்கிறார்கள் என்பதுதானா?
super and very nice story……….
it’s very nice …… i want more
மிகவும் நல்ல கருத்துகள் . காந்தியின் உண்ணாவிரதம் பற்றி விரிவாக எழுதவும் . வலை தளத்தில் தேடியும் சரியாக கிடைக்கவில்லை
மிகவும் நல்ல கருத்துகள் . காந்தியின் உண்ணாவிரதம் பற்றி விரிவாக எழுதவும் . வலை தளத்தில் தேடியும் சரியாக கிடைக்கவில்லை
வெரி பெஸ்ட் ஒன்.
பிளான் யுவர் வொர்க் பிரஸ்ட் தென் வொர்க் யுவர் பிளான்……..
அன்புள்ள திரு கிரி,
காந்தியின் நிலைபாடுகள் குறித்த உங்கள் விளக்கம் அற்புதம். நன் மிகவும் மதிக்கும் என் மனதில் உயர்மிகு இடத்தில உள்ளவர அண்ணல் காந்தி. எனக்குமே சரியான வரலாறு புரிதல் இன்றி ஏற்பட்ட நெருடல்களையும் மிக அற்புதமாக விளக்கினீர்கள். “எது காந்தியமோ அதுவே காந்தி” மிக அருமை!!! உங்கள் நண்பர்கள் குழாமில் என்னையும் இணைத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன். நன்றி.
அன்றைய தேச நிகழ்வு தமிழ் பற்றுடன் தேச பற்று அதிகமாகிறது
எச்செல்லேண்டா இருக்கு மகாத்மா காந்தி பற்றிய தகவல் எதுவாக இருந்தாலும் என்னுடைய இ-மெயில் கு அனுப்பவும்
“இன்னும் ஒரு காந்தி” தேவை இந்த நாட்டிற்கு,அரசியல் அவலங்களை ஆணி வேரோடு புடுங்குவதற்கு”இன்னும் ஒரு காந்தி தேவை “
காந்தி இந்த மந்திர சொல்லே kangress கட்சிக்கு சோறு போடுகிறது .
இன்னும் நூறு காந்தி தேவை இந்த இந்திய மண்ணை மக்களை ஒருமுக படுத்த
அதற்கு சுதந்திரதிற்காக உழைத்தைவிட அதிகம் பாடுபட வேண்டும்.
விரி eaxcelant
இவர் இந்திய மக்களில் ஒருவர் என்பது இந்தியாவுக்கு பெருமைசெர்த்து உள்ளது. நாமும் மகாத்மா காந்தி பின்பற்றுவோம் இந்திய நாடை வல்லரசு நாடாக மாற்றுவோம்.
இன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் இந்திய எனது நாடு என்று கருதினால் வல்லரசு நாடாக மாறும் . இன் நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனும் மகாத்மா காந்தி என்று கருத வேண்டும் .
thanks for the photos
கிரி ,
உங்களை போன்றோர் உள்ளவரை சத்தியமும் தர்மமும் வாழும்.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்கள். படங்கள் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. பரத் மாதாவுக்கு ஜே. ஜெய் ஹிந்த்.
கிரேட் கிரேட் நல்லா இருக்கு
நல்லா இருககு
நல்லா இருககு
very குட்
wonderful
புனிததன்மைக்கு வார்த்தையே kidaiyadu
மிகவும் அன்பான மனிதர் மகாத்மா காந்தி அவர் வழியை பின்பற்றுவோம்
very nice thankyou
mahatma was one of the a great man in the worldl.
நான் இப்படத்தை பார்த்தேன் ,ரசித்தேன் மெய்மறந்தேன்
நான் அவருடைய தீவிர பக்தன்
,ஆனால் நான் தீவிரவாதி
இது சிறந்த புகைப்படங்கள்
வெள்ளையனை வெளியேற்றிய வேங்கை
வாழ்க வளமுடன். மகாத்மா என்றும் , எப்பொழுதும் எல்லோருக்கும் வழிகாட்டி. இன்றைய மாணவர்களுக்கு அவசியம் அவரது வாழ்க்கையை உணர்த்தவேண்டும்.