Oneplus Bluetooth Z2 Neckband எப்படியுள்ளது என்று பாப்போம். Image Credit
தேவைகள்
Ear Phone பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம், இது காதின் திறனை மிகப்பெரியளவில் எதிர்காலத்தில் பாதிக்கும்.
எனவே, பலரையும் Ear Phone தொடர்ச்சியாகப் பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைப்பேன்.
ஆனால், YouTube ல் சில காணொளிகள், விவாதங்கள் பார்க்கச் சரியான நேரம் அமைவதில்லை. Blog எழுதுவதற்கு, புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள தேவைப்படுவதால் பார்க்க வேண்டியதுள்ளது.
பயணம்
தினமும் ரயிலில் அலுவலகம் செல்வேன்.
வீட்டிலிருந்து ரயில் நிலையம் 15 நிமிடங்கள் நடை, ரயில் பயணம் 20 நிமிடங்கள், ரயில் நிலையத்திலிருந்து அலுவலகம் 15 நிமிடங்கள் நடை.
தோராயமாகத் தினமும் இரண்டு மணி நேரங்கள் கிடைக்கும்.
எனவே, அலுவலகம் சென்று வரும் பயணத்தில் பார்க்க / கேட்க Cable Ear Phone பயன்படுத்தினேன் ஆனால், அதை வைப்பதற்குச் சிரமாக இருந்தது அதோடு சிக்காகி விடுகிறது. கை பட்டு Disconnect ஆகி விடுகிறது.
எனவே, Cable பழுதடைந்த பிறகு வேறு வழி இல்லாமல் Bluetooth Ear Phone வாங்கிக்கொள்ளலலாம் என்று முடிவு செய்தேன்.
OnePlus 8 பயன்படுத்துவதால் Oneplus Bluetooth Z2 Neckband வாங்கிக்கொண்டேன்.
Ear Buds மட்டுமே (Wireless) உள்ளவை தவறி கீழே விழுந்து விடக்கூடிய வாய்ப்புள்ளதால், இதைத் தேர்வு செய்யவில்லை.
OnePlus Bluetooth Z2 Neckband
எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு பயனுள்ளதாக உள்ளது.
- கழுத்தில் மாட்டிக்கொள்வதால், கைகளில் சிக்கிக்கொள்ளுமோ, தட்டி விடுமோ என்ற பிரச்சனையில்லை. எந்த இடைஞ்சலும் இல்லாமல் பயன்படுத்த முடியும்.
- அதிகபட்சம் 15 நிமிடங்களில் 100% Charge ஆகி விடுகிறது.
- 30 மணி நேரங்களுக்கு Charge நிற்கும் (பேசுவதற்கு) என்று Oneplus கூறுகிறது ஆனால், பரிசோதிக்கவில்லை.
- பயன்படுத்தியவரை சிறப்பாக உள்ளது. அவசரத்துக்கு 10 நிமிடங்களில் Charge (90%) செய்து கொள்ளலாம் என்பது அனுகூலம்.
- சட்டை காலருக்குள்ளே வைத்துக்கொண்டால் வெளியே தெரியாமல் மறைத்துக்கொள்ளலாம். ஒரு மணி நேரம் தொடர்ச்சியாகப் பயன்படுத்தியும் காது வலிக்கவில்லை. நான் அழுத்தி வைக்காதது கூட காரணமாக இருக்கலாம்.
- மடிக்கணினியிலும் இணைக்க முடிவது கூடுதல் பலன். நீண்ட நேர Meeting / conference ல் பயன்படுத்த எளிதாக உள்ளது.
- காந்தம் உள்ளதால் வலது இடது (Ear Buds) பக்கங்களை இணைத்துக் கொள்ள முடிகிறது.
- இவ்வாறு இணைத்து வைத்தால் பேட்டரி பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, தேவைப்படும் நேரம் மட்டும் பிரித்துக்கொள்ளலாம்.
- பிரித்தவுடன் Bluetooth மொபைலில் இணைந்து விடுகிறது.
- எவ்வளவு பேட்டரி உள்ளது என்பதை மொபைல் Bluetooth இணைப்பில் பார்த்துக்கொள்ளலாம்.
- Noise Cancellation AI scene-model algorithm வசதி இருந்தாலும் சத்தமான இடங்களில் எதிர்முனையில் உள்ளவருக்கு மற்றவர்கள் பேசுவது கேட்கிறது.
- அமைதியான இடங்களில் கூட நமக்கு கேட்பது அருகில் இருப்பவர்களுக்கு (பேச்சோ / இசையோ) கேட்காது. இது உண்மையிலேயே வியப்பு.
- Workouts / Jogging / Running செய்பவர்களுக்குப் பொருத்தமானதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
- Water Resistance என்று கூறப்பட்டுள்ளது, சோதிக்கவில்லை, விருப்பமுமில்லை 🙂 .
- Volume Button பார்க்காமலே அழுத்த எளிதாக உள்ளது.
- பயணத்தின் போது பயனுள்ளதாக உள்ளது.
- Round Neck T Shirt, சுடிதார், புடவை பயன்படுத்தி அதிகம் வியர்ப்பவர்களுக்குக் கழுத்தில் மாட்டுவது கடுப்பாக இருக்கலாம்.
பின் குறிப்பு
அமேசானில் குறைந்த விலையில் வாங்குவது எப்படி? கட்டுரையில் கூறியுள்ளபடி காத்திருந்து ₹1600 க்கு வாங்கினேன் (தள்ளுபடி உட்பட).
அமேசான் Link
Ear Phone பயன்பாட்டை முடிந்தவரை தவிருங்கள். இவை காதுகளுக்கு ஆபத்தானவை. பயன்படுத்தும் போது ரொம்பவும் அழுத்தமாக அணிய வேண்டாம்.
இதுவரை நான் வாங்கிய சாதனங்கள், வாகனங்கள். ஒன்று கூட என்னை ஏமாற்றவில்லை 🙂 . Ear Buds ம் ஏமாற்றாது என நினைக்கிறன்.
டிவிஎஸ் ஜுபிடர் | அசத்தல் வண்டி
Sony HT-RT3 Real 5.1ch Dolby Digital Soundbar
அமேசான் Kindle ஏன் வாங்க வேண்டும்?!
Amazfit GTS Smart Watch வாங்கலாமா?
Vu Premium (55 inch) Ultra HD (4K) Android TV Review
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
பயனுள்ள பதிவு.
Wireless ear buds இரண்டு வகை வைத்துள்ளேன். நடைப் பயிற்சி செல்லும் போது கீழே விழுந்து விடுமோ எனக் கவனமாகவே இருக்க வேண்டியுள்ளது. கையில் எடுக்கும் போதும் திருப்பி வைக்கும் போதும் கூட கவனம் தேவை. சில முறைகள் நழுவ விட்டிருக்கிறேன். JBL Tune 125BT வாங்க எண்ணியிருந்த சமயத்தில் உங்கள் பரிந்துரையை வாசிக்க நேர்ந்தது. Oneplus Z2 ஆர்டர் செய்து விட்டேன்:).
@ராமலக்ஷ்மி
பயன்படுத்திப்பார்த்து எப்படியுள்ளது என்று நினைவு இருந்தால் கூறுங்கள் 🙂 .
ஒரு வாரம் பயன்படுத்திவிட்டு சொல்லலாமென இருந்தேன். நீங்களும் கேட்டிருக்கிறீர்கள் :)! வசதியாகவும், மிக நன்றாகவும் உள்ளது!! நன்றி.