அமேசான் Kindle அறிமுகச் சலுகையாக 3 மாதங்களுக்கு Kindle Unlimited கொடுத்ததால், அளவற்ற புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு இருப்பதால், எவ்வளவு புத்தகம் படிக்க முடியுமோ அவ்வளவையும் படிக்க முயற்சித்து வருகிறேன்.
இதில் உள்ள முக்கியமான வசதியே.. நாம் விரும்பும் புத்தகத்தைப் படிக்கலாம் என்பது தான். ஒரு புத்தகம் படிக்கிறோம், பிடிக்கவில்லை என்றால், அதை ஒதுக்கி விட்டு உடனே வேறு புத்தகத்தைப் படிக்கலாம். Image Credit
இன்னொரு புத்தகம் வாங்க காத்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், உடனடியாக அடுத்தப் புத்தகத்தைப் படிக்க முடிகிறது.
Vocabulary
- Kindle ல் உடனடியாக விளக்கத்தைத் தெரிந்து கொள்ள முடிவதால், படிக்க எளிது.
- ஒரு பக்கத்துக்கு 5 வார்த்தைகள் என்று வைத்துக்கொண்டாலும், ஒரு புத்தகம் முடிக்கும் போது, தோராயமாக 200 புது வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
- இதே வார்த்தைகள் அடுத்தப் பாகத்திலும் ஆசிரியர் பயன்படுத்துவதால், நாம் படித்த வார்த்தைகளைத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வர உதவுகிறது.
- தற்கால கதைகளுள்ள புத்தகங்களைத் தொடர்ச்சியாகப் படிப்பதன் மூலம், தற்காலப் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.
சேமிக்கப்படும் வார்த்தைகள்
நாம் விளக்கம் பார்க்கும் வார்த்தைகள் அனைத்தும் Kindle ல் சேமிக்கப்படுகிறது.
அகராதி விளக்கம் English – Tamil ஆக இல்லாமல், English – English ஆக இருந்தால் நல்லது. எனவே, கடுப்பாக இருந்தாலும் English – English யையே பின்பற்றுகிறேன்.
பின்வரும் சொற்களுக்கான அர்த்தம் உங்களுக்குத் தெரியும், அடிக்கடி பயன்படுத்துவது தான். தெரியாதவர்கள் என்னனு கண்டு பிடியுங்கள் 🙂 .
pragmatic, agog, serene, wrath, rigid.
இலவச புத்தகங்கள்
Prime உறுப்பினர், பல இலவசமான Kindle புத்தகங்களைப் படிக்க முடியும்.
இது மட்டுமல்லாது அமேசான் சில நேரங்களில் இலவச புத்தகங்களைக் கொடுக்கும் போது வாங்கிக்கொள்ளலாம், இது நமக்கு நிரந்தரமானது.
சிலர் தங்களை புத்தகங்களை 24 மணி நேரத்துக்கு இலவசமாகக் கொடுப்பதாக அறிவிப்பார்கள், அந்த நேரத்திலும் நாம் பெற்றுக்கொள்ளலாம்.
அவ்வப்போது ₹75 கட்டணத்துக்கு Unlimited Kindle யை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்த சலுகை கிடைக்கும். வழக்கமாக மாதம் ₹169 (ஜூலை 2022) கட்டணம்.
இச்சலுகை வரும் போது நண்பர்கள் எவராவது தெரிவித்து விடுவார்கள் என்பது அனுகூலம். ₹500 மதிப்புள்ள புத்தகங்களையும் கூட ₹75 கட்டண சலுகையில் படித்து விடலாம்.
இவையெல்லாம் காகித புத்தகத்தில் சாத்தியமில்லை.
கூடுதல் Kindle தகவல்கள்
- துவக்கத்தில் Kindle சிறியதாக இருப்பதாக நினைத்தேன் ஆனால், சரியான அளவு.
- பேட்டரி இரண்டு வாரங்களுக்குத் தாராளமாக வருகிறது.
- இரவில் படிக்க Brightness அதிகப்படுத்திக்கொண்டால் அட்டகாசமாக உள்ளது.
- Brightness ‘0’ க்கு கொண்டு வந்து விட்டால், பேட்டரி அதிக நாட்கள் வரும் ஆனால், இதைச் செய்யாமலே வாரக்கணக்கில் பேட்டரி வருகிறது.
- 4 GB அளவுள்ள Kindle வாங்கினாலே போதுமானது.
- பல்வேறு வகையான புத்தகங்கள் இருப்பதால், இதுவரை வாய்ப்பில்லாத பல புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
- பயணங்கள் என்றுமே சலிப்பாகாது.
- நண்பர்கள் வாங்கிட்டு புத்தகம் தொலைந்து விட்டது என்று கூற முடியாது 🙂 .
- நமக்குத் தேவையான பக்கத்தை Bookmark செய்து கொள்ள முடியும்.
- எந்த இடத்தில் படிப்பதை நிறுத்தினோமோ அதே இடத்தில் இருந்து தொடரலாம், வேறு புத்தகங்களுக்கு மாறினாலும் கூட.
- Kindle பயன்பாட்டால், திறன்பேசியின் பயன்பாடு குறைவதால், கண்களுக்கான பாதிப்பும் குறைகிறது.
- புத்தகம் போலவே Kindle இருப்பதால், கண்களுக்குப் பாதிப்பு இல்லை / குறைவு.
- எழுத்தின் அளவை நமது வசதிக்கேற்ப மாற்ற முடியும். பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு மிகப் பயனுள்ளது.
- நூற்றுக்கணக்கான புத்தகங்களை Kindle ல் வைத்துக்கொள்ள முடியும்.
- எங்கும் மொபைல் போல எளிதாக எடுத்துச் செல்லலாம்.
- குறைந்த விலைக்குக்கூட Kindle புத்தகங்களைப் பெற முடியும். ₹10 கூட நல்ல புத்தகங்களை வாங்க முடியும். இது காகித புத்தகத்தில் சாத்தியமில்லை.
- ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியும்.
எனவே, Kindle வாங்கினால், பல பயன்கள் கிடைக்கும். வாங்கிப் பயன் பெறுங்கள்.
அமேசானில் Kindle வாங்க –> Link
தொடர்புடைய கட்டுரை
கொசுறு
புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் வாங்குங்கள், வாங்கிச் சும்மா போட்டு வைத்து விடாதீர்கள்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கில், என்னோட பொண்ணுக்கு படிக்கிறதுன்னா ரொம்ப இஷ்டம் so கண்டிப்பா வாங்குவேன்னு நினைக்கிறேன். நெறைய விஷயங்கள் சொல்லிருக்கீங்க kindle பத்தி. நன்றி 🙂
கிரி.. இந்த பதிவை படிக்கும் போது என்னுடைய கடந்த கால பள்ளிவாழ்க்கை நாட்கள் திரும்ப வந்து போகிறது… ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆரம்பித்த என் பள்ளி நாட்கள், பெரியார் கலை கல்லுரியில் கரைந்து போனது.. பத்தாம் வகுப்பு வரை படிப்பிலும், விளையாட்டிலும், சேட்டையிலும் நான் தான் No 1 . எனக்கு போட்டி சசிகலா.. என் சக வகுப்பு தோழி.. ஆட்டோகிராப் படம் பார்ட் 2 எடுத்தா எங்களின் கதையும் அதில் வரும்..
ஒண்ணுமே தெரியாம பத்தாவது வரை எப்படி NO : 1 என்று தற்போதும் வியந்து போவேன்.. ஆங்கிலம் படிக்க தெரிந்தாலே ஹீரோ தான்.. இதுல பொருள யாரும் கேட்பதில்லை.. பத்தாவது படிக்கும் போது வகுப்பாசிரியர் கேட்ட கேள்வி, மசூதிக்கு ஆங்கிலத்தில் என்ன வென்று கேட்டார்.. யாருக்குமே தெரியல?? அப்போது தான் என் ஆங்கில அறிவு தராசில் வைக்க பட்டது..
கல்லுரியில் assassination பொருள் என்னவென்று ஆசிரியர் கேட்க பொருள் தெரியாமல் விளித்தபோது தான் தெரிந்தது நமக்கு ஏதும் தெரியவில்லை என்று.. தற்போதும் ஆங்கிலத்தில் 50 % அறிவு தான்..
KINDLE பற்றி விளக்கமாக சொல்லி இருக்கீங்க.. தற்போது வாங்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது.. ஒரே ஒரு பயம் மட்டுமே, தொடர்ந்து தொடுதிரையை பார்த்து கொண்டிருப்பதால் கண்களின் பாதிப்பை பற்றி தெரியவில்லை.. அலுவலகத்திலும் 10 /11மணி நேரம் தொடுதிரையே பார்த்து கொண்டிருக்கிறேன்.. மீண்டும் KINDLE லில் படிக்கும் போது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.. இந்த ஒரு விஷியம் மட்டும் தான் வாங்குவதை குறித்து யோசிக்க வைக்கிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@விஜய் வாங்கிட்டீங்க போல 🙂 . வாழ்த்துகள்
@யாசின் “எனக்கு போட்டி சசிகலா.. என் சக வகுப்பு தோழி.. ஆட்டோகிராப் படம் பார்ட் 2 எடுத்தா எங்களின் கதையும் அதில் வரும்..”
அடுத்தமுறை உங்களைச் சந்திக்கும் போது கேட்டுக்கொள்கிறேன் 🙂 .
“மசூதிக்கு ஆங்கிலத்தில் என்ன வென்று கேட்டார்.. யாருக்குமே தெரியல?? அப்போது தான் என் ஆங்கில அறிவு தராசில் வைக்கப் பட்டது..”
😀
“கல்லுரியில் assassination பொருள் என்னவென்று ஆசிரியர் கேட்க பொருள் தெரியாமல் விளித்தபோது தான் தெரிந்தது நமக்கு ஏதும் தெரியவில்லை என்று”
நீங்க சொன்ன நம்பமாட்டீங்க.. கடந்த மாதம் வரை இந்த வார்த்தைக்குக் குத்துமதிப்பா தான் அர்த்தம் புரியும். Sita புத்தகம் படித்த பிறகு தான் அதை முழுமையாகப் புரிந்து கொண்டேன் 🙂 .
“ஒரே ஒரு பயம் மட்டுமே, தொடர்ந்து தொடுதிரையை பார்த்துக் கொண்டிருப்பதால் கண்களின் பாதிப்பைப் பற்றித் தெரியவில்லை.. ”
கண்களுக்குப் பாதிப்பில்லை யாசின், கவலையே வேண்டாம். புத்தகம் படிப்பது போலவே தான் இருக்கும்.
புத்தகமாவது உங்களுக்கு எழுத்து சிறியதாக இருந்தால் படிக்கச் சிரமமாக இருக்கலாம். இதில் எழுத்துக்களின் அளவை மாற்றிக்கொள்ள முடியும்.
எனவே தாராளமாக வாங்குங்கள்.
ஹாய் கிரி, நீங்க சொன்னன மாதிரி நானும் கிண்டல் வாங்கிவிட்டேன். 2 புத்தகங்கள் வாசித்தித்துருகிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி 🙂
🙂