Sony HT-RT3 Real 5.1ch Dolby Digital Soundbar

4
SONY Sony HT-RT3 5.1ch Soundbar

ல்வேறு பரிசீலனை, தேடல்களுக்குப் பிறகு, 2019 வருட ஜனவரி அமேசான் தள்ளுபடி விற்பனையில், ₹15,500 க்கு Sony HT-RT3 5.1ch Dolby Digital Soundbar வாங்கினேன்.

Sony HT-RT3 Real 5.1ch Dolby Digital Soundbar

SONY என்றாலே தரம் என்று அனைவர் மனதிலும் பதிந்து விட்டது, விலை காரணமாகப் போட்டி நிறுவனங்கள் வளர்ந்தாலும் சோனிக்கு என்று இருக்கும் வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சோனி என்ற பெயருக்காக அல்ல, போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளையும் பரிசீலனை செய்து, பல யோசனைகளுக்குப் பிறகே வாங்கினேன். Image Credit

என்னென்ன வசதிகள் உள்ளன?

  • ஒரு Soundbar (3 ஸ்பீக்கர்கள் உள்ளடக்கியது)
  • இரு குட்டி தனி ஸ்பீக்கர்கள் & ஒரு Sub Woofer (5.1)
  • USB, BT, HDMI, Fiber, NFC & Analog ports வசதியுள்ளது.
  • 600 Watts
  • Remote

எப்படியுள்ளது?

நான் வாங்கிய பொருட்களில் எனக்குத் திருப்தியளித்தவற்றுள் ஒன்று.

இதற்கு முன்பு வாங்கிய ஸ்பீக்கரின் Fiber கேபிள் இருந்ததால், இதற்குப் பயன்படுத்திக்கொண்டேன். Analog யை விட Fiber தரம் ஒலிக்குச் சிறப்பாக இருக்கும்.

  • BT இருப்பதால், எளிதாக மொபைலில் இருந்து பாடலை ஒலிக்க விடலாம்.
  • Amazon Music, Radio Tamil HD, Southradios & Gaana செயலிகளைப் பாடல்கள் கேட்கப் பயன்படுத்துகிறேன். ஓயாமல் ஓடிக்கொண்டு இருக்கும் 🙂 .
  • Sub Woofer ஒலியைக் கூட்ட குறைக்க முடியும்.
  • சில நேரங்களில் Sub Woofer (Base) காரணமாகத் திரைப்படங்களில் பேசுவது புரியாது, அப்போது இவ்வசதியைப் பயன்படுத்திச் சரி செய்யலாம்.
  • இதனுடன் Night Mode, Voice வசதிகளும் Remote ல் உள்ளன. இதன் மூலம் ஒலியமைப்பை மாற்ற முடியும்.
  • Remote சிறியதாகப் பயன்படுத்த எளிதாக உள்ளது. பெரும்பாலும் பயன்படுவது Volume, Mute, Source, மற்றவை பயன்பாடு எனக்குக் குறைவு.

எஃபெக்ட் இல்லையே

வாங்கியதும் மிகப் பிடித்த கபாலி ‘உலகம் ஒருவனுக்கா‘ YT பாடலைப் போட்டேன் (Base அதிகம் இருக்கும்), திருப்தியாக இல்லை.

பையன் வினய் வேற ‘அப்பா! எஃபெக்ட் இல்லையே!‘ ன்னு கூறியவுடன் குபீர்னு ஆகி, ஐயையோ ஏமாந்து விட்டோமோன்னு கவலையாகி விட்டது.

லாட்டரி டிக்கெட் தொலைந்து விட்டதுன்னு ஷர்மிலி சொன்னதும் கவுண்டர் ஒரு அதிர்ச்சி கொடுப்பாரே அது போலானது.

சரியென்று Lucia படத்தின் Helu Shiva போட்டேன், தரமாக இருந்தது, அப்புறம் தான் உயிரே வந்தது. உலகம் ஒருவனுக்கா பாடல் ஒலி YT ல் தரமானதாக இல்லை.

வினய் குஷியாகி, ‘அப்பா! சூப்பரா இருக்கு‘ன்னு சான்றிதழ் கொடுத்து விட்டான்.

இதன் பிறகு Shamur பாடலைப்போட்டு, செம கொண்டாட்டமாகி விட்டேன்.

யாரெல்லாம் ஸ்பீக்கர் சோதிக்க வேண்டுமோ இந்த இரு பாடல்களைப் போட்டுப்பாருங்க. தாறுமாறா இருக்கும் 🙂 .

கோடை விடுமுறையில் மனைவி, பசங்க ஊருக்குப் போனதும் ஸ்பீக்கரை கதற விட்டுட்டேன். மேல் வீட்டுப் பெண், மனைவியை அழைத்து ‘நீங்க ஊருக்குப் போனதும் உங்க வீட்டுக்காரர் பாட்டு கேட்டுட்டு ஜாலியா இருக்காரு‘ன்னு கூறி இருக்காங்க.

என்ன ஒரு வில்லத்தனம்! 🙂 .

ஸ்பீக்கரை அலற விடச் சில பாடல்கள் பரிந்துரை. இவை உங்கள் ஸ்பீக்கரின் தரத்தைக் காட்டும்.

Gully Boy, City Slums, Worth it, We will we will rock you, 50 Cent In Da Club, Sexy Lady (Shaggy), Believer இவை எனக்கு மிகவும் பிடித்தவை.

இவற்றை YouTube ல் கேட்கலாம்.

ஸ்பீக்கர் சிறப்பாக உள்ளது, விருப்பப்படுபவர்கள் அமேசான் தள்ளுபடி போடும் போது வாங்கிக்கொள்ளுங்கள். அமேசானில் வாங்க –> SONY HT RT3 Soundbar

நான் வாங்கியதில் மிகவும் திருப்தியளித்தவை Jupiter, Kindle & SONY Speaker 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

அசத்தலான டிவிஎஸ் ஜுபிடர்

அமேசான் Kindle ஏன் வாங்க வேண்டும்?!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. I am analysing it for long time. This is 2016 model. This bluetooth won’t support direct to TV. This is the only dwawback of this model in this budget. So, waiting for the new version in 2020

  2. You are correct Senthil. I should have mentioned it.

    I tried in the beginning (a year back) and didn’t work, so I forgot it. As well, I’m not missing anything BIG because of this feature, so I didn’t care about it.

    As you said they may include this BT –> TV future in upcoming models.

  3. கிரி, தனிப்பட்ட முறையில் என்னுடைய கோவம் ,மகிழ்ச்சி ,சந்தோசம் ,வெறுப்பு ,காதல் ,அமைதி ,மௌனம் ,ஆரவாரம் இவை எல்லாவற்றின் பிரதிபலிப்பை வெளிக்கொண்டு வருவது இளையராஜாவின் பாடல்கள் மூலமாகவே மட்டும் … இளையராஜா சார் இல்லாத என்னுடைய நாட்களை கற்பனையில் கூட எண்ண முடியவில்லை ..

    கல்லுரி படிக்கும் போது ஒரே கனவு ” பயோனியர் CD பிளேயர் 3 டிஸ்க் போடுவது வாங்க வேண்டும் என்பது கனவல்ல தவம் !!! வெளிநாடு வந்து நான் எப்போதெல்லாம் ஆடியோ கடைகளுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் நான் அந்த பயோனியர் செட்டை தொட்டு பார்க்காமல் வந்தது கிடையாது .. கிட்டத்திட்ட பொல்லாதவன் தனுஷ் போல (அவருக்கு பைக் எனக்கு CD பிளேயர்)..

    ஆரம்பத்தில் 3 வருடம் BACHELOR ரூம்ல இருந்தததால் செட் வாங்கினாலும், ரூம்ல மூணு நாலு பேர் தங்கி இருக்கும் போது நம்மால் சுதந்திரமாக பாட்டு கேட்க முடியாது என்பதால் வாங்கவில்லை .. திருமணமாகி மனைவி வந்தபின் செட் வாங்கலாம் என்ற போது (” என்னங்க என்ன சொல்லு ?? எனக்கு சத்தமே சுத்தமாக பிடிக்காது என்று இடியை தலையிலே இறக்கிட்டாங்க மனைவி ) .. அன்றிலிலிருந்து CD பிளேயர் வாங்க வேண்டும் என்ற ஆர்வமே போகி விட்டது … பகிர்வுக்கு நன்றி கிரி ..

  4. ” எனக்கு சத்தமே சுத்தமாக பிடிக்காது என்று இடியை தலையிலே இறக்கிட்டாங்க மனைவி”

    🙂 ஆமாம் பெண்களுக்குப் பொதுவா அவங்க சத்தம் / சண்டை போடப் பிடிக்கும் ஆனால், மற்றவங்க சத்தம் போட்டா பிடிக்காது.

    என் மனைவியும் அப்பப்ப சொல்லுவாங்க. அந்த நேரத்தில் மட்டும் குறைத்து விடுவேன். என் பையன் வினய்க்கும் என்னைப் போலவே பிடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!