OnePlus 8 Mobile Review

3
OnePlus 8 Review

OnePlus 3T க்குப் பிறகு OnePlus Nord வாங்கலாம் என்று இருந்து, நண்பர் ஹரிஷ் பரிந்துரையில் OnePlus 8 வாங்கினேன். Image Credit

OnePlus 8

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், சூப்பராக உள்ளது. வடிவமைப்பு, Display, வேகம், பேட்டரி என்று அனைத்துமே குறை கூற முடியாத அளவுக்கு உள்ளது.

40 நாட்கள் பயன்படுத்திய பிறகே இவ்விமர்சனத்தை எழுதுகிறேன்.

Configuration

 • Display : Fluid AMOLED, 90Hz, 1080 x 2400 pixels, Gorilla Glass 5
 • RCamera : 48 Megapixel
 • FCamera : 16 Megapixel
 • Memory : 128GB / 8GB RAM
 • Chipset : Qualcomm SM8250 Snapdragon 865
 • SIM : Nano + Nano 5G
 • BT : V 5.10
 • Sound : Dolby Atmos
 • Battery : Li-Po 4300 mAh
 • Charge : Fast charging 30W
 • Screen : 6.55 Inches
 • Weight : 180g
 • OS : Android 10 (Upgraded to 11)

Pros

 • Display பளிச்சுனு செமையா இருக்கு குறிப்பாக வீடியோ தரம் நன்றாக உள்ளது.
 • Full Display View
 • வீடியோ வண்ணமயமாக உள்ளது. குறிப்பாக Fluorescent color (Green, Yellow).
 • Qualcomm Snapdragon 865, 8 GB RAM என்பதால், Performance நன்றாக உள்ளது.
 • ஒலி தரம், இரைச்சல் இல்லாமல் அசத்தலாக உள்ளது.
 • 90Hz வைத்தால் பேட்டரி குறையும் என்று கூறப்பட்டதால், 60Hz தான் துவக்கத்தில் இருந்தே பயன்படுத்துகிறேன். இதனால் பயன்பாட்டில் எந்தக் குறையும் இல்லை.
 • Curved Display என்பதால், Premium Look ல் அட்டகாசமாக உள்ளது.
 • எடை குறைவு என்பது இதன் முக்கிய அம்சம்.
 • Fast charging 30W என்பதால், 1.10 மணி நேரங்களில் முழுமையாகச் சார்ஜ் ஆகி விடும்.
 • பேட்டரி குறைந்த பட்சம் 1 1/2 நாட்கள் வருகிறது. காலையில் 50% இருக்கும் போது (சார்ஜர் இல்லாமல்) அலுவலகத்துக்குத் தைரியமா எடுத்துட்டு போகலாம், இடையில் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
 • விடுமுறை நாட்களில் முழு நாளும் (காணொளி பார்க்காமல், கேம் பயன்படுத்தாமல்) பயன்படுத்தினாலும் இரவு வரை பேட்டரி தாங்கும்.
 • Oxygen OS OnePlus பலம். தேவையற்றதை தவிர்த்த Clean OS.

Cons

 • கேமரா தரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை ஆனால், மோசமில்லை.
 • Volume Button & Power Button இரண்டுமே எதிர்புறம் உள்ளது. எனவே, Volume மாற்றும் போது Power Button யையும் அழுத்த நேர்வதால் இடைஞ்சலாக உள்ளது.
 • Headphone Jack இல்லை. எனவே, USB-C கன்வெர்ட்டர் தேவை.
 • LED Notification இல்லை. ஈடு செய்ய Always On future உள்ளது ஆனால், பேட்டரி அதிகம் எடுக்கும்.
 • Display பகுதியிலேயே Fingerprint Sensor இருப்பதால், சில நேரங்களில் நன்கு அழுத்த வேண்டியதாக உள்ளது.
 • அழுத்தும் போது வெளிச்சம் வந்து அதுவே Sensor செய்யத் துணை புரிவதால், சிறு தாமதம் ஏற்படுகிறது. பலர் வேகமாக உள்ளது என்று கூறுகிறார்கள் ஆனால், எனக்குத் திருப்தியில்லை.

கூடுதல் தகவல்கள்

Exchange Offer, Credit Card Offer எல்லாம் போக, விலை ₹36,000 (October 2020).

Game Performance எப்படியுள்ளது என்று தெரியவில்லை (விளையாடுவதில்லை). மற்றவர்கள் கூறியதை வைத்து நன்றாக உள்ளது என்று அறிகிறேன்.

மொபைலை பாதுகாப்பாகப் பயன்படுத்துவேன் என்பதால், Case க்கு அதிகம் செலவளிக்கவில்லை. வாங்கிய Amozo Ultra Thin Case ரொம்ப நன்றாக உள்ளது.

ஆனால், அதிக விலை கொடுத்து மொபைல் வாங்கி, இதில் சமரசம் செய்து கொள்ள வேண்டாம். வேறு நல்ல Ringke Fusion-X Case போல வாங்கவும், ₹1000 வரலாம்.

OnePlus Red Cable Club ல் இணைந்ததால் கூடுதலாக 6 மாத வாரண்டி கிடைத்தது.

OnePlus default SMS App ல் Visual Cards Enable செய்தால், OTP copy செய்வது எளிது.

Android 10 க்கும் 11 க்கும் பெரிய வித்யாசம் காணவில்லை.

OnePlus 8 Final Verdict

OnePlus 8 வாங்க தாறுமாறாகப் பரிந்துரைக்கிறேன் 🙂 . மேற்கூறியது ஏற்புடையது என்றால், நிச்சயம் உங்களை ஏமாற்றாது.

அமேசானில் வாங்க –> OnePlus 8 Link

தொடர்புடைய கட்டுரை

Sony HT-RT3 Real 5.1ch Dolby Digital Soundbar

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

 1. கிரி, அலைப்பேசியின் மீது அதீத ஆர்வம் எனக்கு கிடையாது.. நான் விரும்பி வாங்கிய ஒரே அலைப்பேசி நோக்கியா – C6 மாடல், 2010 திசம்பர் மாதம் வாங்கினேன்.. 2012 இல் ஐபோன் – 4 S நிறுவனத்தில் கொடுத்தார்கள்.. (என்னுடைய மாமா பையன் & சித்தி பையன் ரெண்டு பேரோட தேவைக்காக அந்த போனை விற்று பணத்தை கொடுத்தேன், அந்த உதவி அவர்கள் முன்னேற்றத்திற்கு அன்று உதவியது ) என் மனைவிக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை.. தகுதிக்காக நிறுவனத்தில் கொடுத்ததை ஊதாரிதனமாக விற்று விட்டேன் என்ற வருத்தம் .. அன்று என்பார்வையில் சரியென்றுபட்டதால் அதிகம் யோசிக்கவில்லை..

  கடந்த 8 வருடமாக ரெண்டு/மூன்று அலைப்பேசிகள் மாறி தற்போது இரண்டு வருடத்திற்க்கு மேல் ரெட்மி mi 4 வைத்து இருக்கிறேன்.. தற்போது வரை நன்றாக வேலை செய்து வருகிறது.. எப்பாவது புது போன் வாங்கலாமா என்று யோசிக்கும் போதே, மறு நிமிடமே மனது வேண்டாம் என்று மறுத்து விடுகிறது.. ஊரில் நிறைய வாலிப பசங்களை பார்க்கும் போது ஆயிரம் / லட்சம் என செலவு செய்து அலைப்பேசியை வாங்கி வைத்து இருக்கிறார்கள்.. என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. உங்கள் பயன்பாட்டிற்கு தேவை என்றால் வாங்குவது தவறே இல்லை.. 50 / 60 / 70 ஆயிரம் செலவு செய்து game விளையாடுவது / படம் பார்ப்பது என்றால் யோசிக்க கூட முடியவில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. மொபைல் முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் அல்லது பேச மட்டுமே பயன்படுத்துபவர்கள் அதிக விலை கொடுத்து வாங்குவது வீண்.

  பலர் பந்தாவுக்காக வாங்குகிறார்கள் அதுவும் தவறு ஆனால், பணம் வைத்துள்ளார்கள், வாங்குவதில் என்ன தவறு என்ற கேள்வி வருவதால், தலையிடுவதில்லை.

  நான் மொபைலை முழுமையாகப் பயன்படுத்துவேன். அதில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்துவேன் கேம் தவிர.

  குறைவான விலையில் துவக்கத்தில் வாங்கியது பிரச்சனையை ஏற்படுத்தியதால். நல்ல மொபைலே வாங்குவோம் என்று OnePlus வாங்கி வருகிறேன்.

  கடந்த மொபைலை நான்கு வருடங்கள் பயன்படுத்தினேன். ரொம்ப நன்றாக வைத்து இருந்தேன் ஆனால், ரொம்ப மெதுவாகி விட்டதால், மாற வேண்டியதாகி விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here