Vu Premium (55 inch) Ultra HD (4K) Android TV Review

4
Vu Premium (55 inch) Ultra HD (4K) Android TV

தொலைக்காட்சி வாங்க திட்டமிட்ட பிறகு, ஊரில் 4 வருடங்களுக்கு முன்பு வாங்கிய Vu TV சிறப்பாக இருந்ததால், அதையே வாங்கலாம் என்று Vu Premium (55 inch) Ultra HD (4K) LED Smart Android TV தேர்வு செய்தேன்.

Vu Premium (55 inch) Ultra HD (4K) Android TV

முன்னரே Android TV தான் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்ததாலும், Vu Android TV என்பதாலும் தேர்வில் குழப்பமில்லை.

என் குழப்பம் 50″ அல்லது 55″ வாங்குவதா என்பதில் தான்.

காரணம், எங்கள் சென்னை வீட்டு வரவேற்பறை 10 X 10 என்பதால், தூரம் குறைவாக இருந்தது.

தொலைக்காட்சியின் அளவு அதிகமாக அதிகமாகத் தூரம் அதிகம் இருந்தால் மட்டுமே எளிதாகப் பார்க்க முடியும் அல்லது கண்களுக்குச் சிரமமாக இருக்கும்.

அதோடு குழந்தைகள் இருந்தால், பல நேரங்களில் நாம் கூறியும் கேட்காமல் தொலைக்காட்சி அருகே சென்று அமர்வார்கள்.

இது அவர்களுக்குக் கண்களையும், கழுத்தையும் பாதிக்கும்.

எங்கள் வீட்டு உரிமையாளரிடம் Wall Mount க்கு அனுமதி கேட்பது, கொடுத்தால் 55″ செல்லலாம் என்று முடிவு செய்தேன்.

ஏனென்றால், ஏற்கனவே வைத்து இருந்த LG TV 43″ Wall Mount அல்ல. Wall Mount எனும் போது கூடுதலாக ஒரு அடி தூரம் கிடைக்கும்.

உரிமையாளர் ஒப்புக்கொண்டதால், 55″ வாங்க முடிவு செய்தாலும் ஒரு அரை மனதோடு தான் இருந்தேன்.

Flipkart

Vu தொலைக்காட்சி Amazon / Flipkart இரு நிறுவனங்களிலும் இருந்தாலும் Flipkart ல் தள்ளுபடியுடன் இருந்தது.

Flipkart வாடிக்கையாளர் சேவை அமேசானுடன் ஒப்பிடும் போது சிறப்பு இல்லை. எனவே, எப்போதும் அமேசானில் மட்டுமே வாங்குவேன்.

தயக்கத்துடனே வாங்கினேன் ஆனால், எதிர்பார்த்ததுக்குச் சம்பந்தமே இல்லாமல், சிறப்பான சேவை. குறிப்பாக TV யை Wall Mount செய்ய வந்து இருந்தவர் அட்டகாசம்.

ரொம்ப மேலே வைத்தால் கழுத்து வலி வரும் எனவே, சரியான உயரத்தில் பரிந்துரைத்து, மட்டம் வைத்துப் பொருத்தினார்.

தொழில் சுத்தம் என்பது போல, அதிகம் பேசாமல், எந்த உதவியும் என்னைச் செய்ய விடாமல், அவரே செய்தார்.

Perfect Installation என்றால் உங்களுக்கு என்ன நினைவு வருகிறதோ அது போலச் செய்து கிளம்பி விட்டார்.

Flipkart ல் இருந்து பலமுறை அழைத்து முன்பதிவு குறித்தும், மற்ற சேவைகளுக்கும் தகவல் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். சிறப்பான அனுபவம்.

தூரம்

எதிர்பார்த்தது போலவே 55″ கண்களுக்குச் சிரமமானது, ஏமாற்றமாகி விட்டது.

அதோடு இதுவரை கீழே இருந்த தொலைக்காட்சி தற்போது Wall Mount என்பதால் கழுத்துக்கும் அசவுகரியமாக இருந்தது.

அவசரப்பட்டு வாங்கிட்டோமோ என்று வருத்தமாகி விட்டது. பசங்களும் சிரமப்பட்டது போல இருந்ததால், கடுப்பானது.

சரி தற்போதே முடிவு செய்ய வேண்டாம், ஓரிரு நாட்கள் பழகிய பிறகு பார்ப்போம் என்று முடிவு செய்தேன்.

எதிர்பார்த்தது போல ஓரிரு நாட்களில் பழகி விட்டது. முன்பு இருந்த எந்தப்பிரச்னைகளும் இல்லை. அப்பாடா! என்றானது 🙂 . ஒருவேளை 55″ வாங்காமல் இருந்தால் தான் ஏமாற்றமாகி இருப்பேன்.

இருப்பினும் 55″ க்கு என் பரிந்துரை குறைந்தது 12 அடி தூரம் இருப்பது நலம்.

DTH

தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி 10+ வருடங்களுக்கும் மேலாகி விட்டது. முன்பு YouTube அதிகம் பார்ப்பேன் அல்லது பாடல் கேட்டுக்கொண்டு இருப்பேன்.

தற்போது OTT வந்த பிறகு வாய்ப்புகள் அதிகரித்தாலும், திரைப்படங்கள் பார்ப்பது எனது விருப்பம் என்பதாலும் DTH க்கு வேலையே இல்லாமல் போனது.

மனைவியும் TV பார்க்க மாட்டார், பசங்க கார்ட்டூன் மற்றும் ஆதித்யா, சிரிப்பொலி மட்டுமே பார்ப்பார்கள் என்பதால், அதற்காக மட்டுமே DTH இருந்தது.

Vu Andrioid என்று முடிவானதும் DTH நிறுத்த முடிவு செய்து வீட்டில் கேட்டேன். மனைவி நான் பார்ப்பதே இல்லை தேவையில்லை என்றார், பசங்களும் வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.

DTH நிறுத்தியதையும் OTT க்கு நகர்ந்ததையும் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

பிற்சேர்க்கை

Bye Bye DTH Welcome OTT

Vu Android TV

எதிர்பார்த்ததை விட Android TV பிடித்து விட்டது.

தேவையான செயலிகளை (Apps) நிறுவிக்கொள்ளலாம் என்பது ஒரு வசதி என்றால், வீட்டில் அனைவரும் பயன்படுத்தலாம் என்பது பெரிய வசதி.

முன்பு Chromecast பயன்படுத்திக்கொண்டு இருந்தேன். எனவே, நான் இருந்தால் மட்டுமே மற்றவர்கள் பார்ப்பார்கள் அல்லது படத்தைப் போட்டுவிட்டு செல்வேன்.

Login & Password செயலிகளிலேயே (Apps) சேமிக்கப்படுவதால், தற்போது இப்பிரச்சனையில்லை.

WiFi, Bluetooth, HDMI, Fiber, USB, Chromecast என்று அனைத்து வசதிகளும் உள்ளது.

Bluetooth வழியாக இணைக்க முடியும் என்றாலும் என் SONY speaker க்கு கூடுதல் தரத்துக்காக Fiber Cable இணைத்துக்கொண்டேன்.

இதே போல இணையத்துக்கு WiFi க்கு பதிலாக Netwrok Cable இணைத்துக்கொண்டேன்.

காரணம், WiFi என்றால் இணைய வேகம் குறைவாக இருக்கும் ஆனால், Cable என்றால் கூடுதல் வேகம் கிடைக்கும், Buffer ஆகாது.

முன்பு Chromecast வழியாக Hotstar ல் கிரிக்கெட் பார்க்கும் போது Buffer ஆவது கடுப்பாக இருக்கும் ஆனால், தற்போது ஆவதில்லை.

4K தரம்

தொலைக்காட்சி வண்ணம் மிகத்தெளிவாக உள்ளது. எந்தக்குறையும் கூற முடியாது. 4K என்பதால் தாறுமாறாக உள்ளது.

காணொளி 4K இல்லையென்றாலும் மேம்படுத்திக்கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது, பயன்படுத்தியவரை உண்மை தான் என்று நினைக்கிறேன்.

55″ என்பதால், திரைப்படங்களை, கிரிக்கெட்டை பார்ப்பது அசத்தலாக உள்ளது.

30 Watts ஆடியோ பரவாயில்லை ரகம், Base இருக்காது. நான் External Speaker பயன்படுத்துவதால் குறையாக இல்லை.

Wall Mount செய்ததால், மேசையில் இடம் இருந்ததால், இவ்வளவு வருடங்களாகத் தரையில் இருந்த Speaker யை மேசையில் வைத்தேன்.

முன்பு Base அதிகம் வரும் போது ஜன்னல் அதிரும், தற்போது இப்பிரச்சனையில்லை.

முன்பை விட Speaker ஒலி தரம் நன்றாக உள்ளது. இது தெரியாமல் இவ்வளவு வருடங்கள் பயன்படுத்தியுள்ளேன்! 🙁

NETFLIX & Disney Hotstar

4K தரத்தில் கொடுப்பதில் NETFLIX & Disney Hotstar சிறப்பாக உள்ளது.

Dolby Vision என்று வந்தால், அத்திரைப்படம் அட்டகாசமாக இருக்கும் என்று அர்த்தம்.

அதாவது திரைப்படத்தைப் போட்டவுடன் Dolby Vision என்று வந்து செல்லும். இது போன்ற திரைப்படங்கள் தரம் மிகச்சிறப்பாக இருக்கும்.

இதைவிடச் சிறப்பான தரத்தில் தேவையென்றால் OLED TV / QLED TV செல்ல வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு விலை.

என்ன விலை கொடுத்து வாங்கினாலும், நாம் பார்க்கும் காணொளியின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும்.

4K என்றில்லை 10K வந்தாலும் பார்க்கும் காணொளியின் தரம் அதையொட்டியில்லையென்றால், எந்த TV வாங்கியும் பயனில்லை.

Remote

Voice Assistant இருப்பது மிகப்பெரிய பயன்.

நமக்குத் தேவையான படத்தை எந்த OTT யில் உள்ளது என்று தேட வேண்டியதில்லை. இதில் கூறினால் அதுவே தேடி எந்தெந்த OTT யில் உள்ளது என்று கூறி விடும்.

Voice Assistant தரும் பரிந்துரையில் எந்த OTT க்கு Subscribe செய்துள்ளோமோ அதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

Bluetooth Remote என்பதால், எப்படி வைத்தும் பயன்படுத்தலாம், TV க்கு நேராகத்தான் வைக்க வேண்டும் என்பதில்லை.

Infrared வசதியும் உள்ளது ஆனால், தேவையில்லை.

OK button அழுத்துவதன் மூலம் எளிதாக Pause செய்யலாம்.

Voice Assistant button ம் Up Arrow button ம் அருகருகே உள்ளதால், அடிக்கடி தெரியாமல் Voice Assistant button யை அழுத்தி விடுவது கடுப்பாக உள்ளது.

R & D Team இதைக் கூடக் கவனிக்காமல் உருவாக்கி இருப்பது வியப்பளிக்கிறது.

NETFLIX, YouTube, Google Play, Prime Video, Hotstar நேரடியாகச் செல்ல Button உள்ளதால், எளிதாகச் செல்ல முடியும்.

கூடுதல் தகவல்கள்

Screen Saver நேரத்தைக் கூட்டி குறைக்க முடியும்.

Parental Control உள்ளது.

Favourites Channel களை வரிசைப்படுத்த முடியும்.

Android 9 (Pie) பதிப்பு (Version) உள்ளது. புதிய பதிப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை. வந்தால், நாமே Update செய்து கொள்ளலாம்.

Android TV / Smart TV யில் உள்ள பிரச்சனை, User Name & Password தட்டச்சு (Type) செய்வது.

தற்போது பல நிறுவனங்களும் இவ்வாறு செய்யாமல் ஸ்கேன் செய்தோ Code கொடுத்தோ நுழையும்படி எளிதாக்கி விட்டார்கள்.

இல்லையென்றால் Complicated Password வைத்துள்ள என்னைப் போன்றவர்களுக்கு Special Character உடன் தட்டச்சுச் செய்வது மிகக்கடினம்.

TV Infrared ம் SONY Speaker ம் அருகருகே இருப்பதால், conflict ஆகி SONY ரிமோட் சரியாக வேலை செய்வதில்லை.

SONY தளத்தில் speaker யைத்தள்ளி வைக்கப் பரிந்துரைத்தார்கள் ஆனால், அப்படியும் பிரச்சனை சரியாகவில்லை. இது எனக்கு ஏமாற்றமே.

அவ்வப்போது வேலை செய்கிறது, சில நேரங்களில் சில நொடிகள் அழுத்திப் பிடித்தால் வேலை செய்கிறது.

பிற்சேர்க்கை

DuraCell பேட்டரி மாற்றிய பிறகு இப்பிரச்சனை தற்போது இல்லை.

பரிந்துரை

Vu TV வாங்க சந்தேகம் இல்லாமல் பரிந்துரைக்கிறேன்.

குறைவான விலை நிறைவான தரம்.

முன்பு அதிக விலை கொடுத்துத் தொலைக்காட்சி வாங்கி வந்தேன் ஆனால், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது பின்னர் புரிந்தது.

ஊரில் Samsung TV ₹55,000 க்கு (2015) வாங்கினேன். இடி இடித்த போது TV பழுதாகி விட்டது. பின்னரே Vu 43″ ₹23,000 க்கு (2018) வாங்கினேன். சிறப்பான தரம் 4 வருடங்களாக எந்தப் பிரச்சனையுமில்லை.

ஒரு TV யின் வாழ்க்கை 5 / 6 வருடங்கள் அல்லது அதன் தொழில்நுட்பம் பழையதாகி விடுகிறது. எனவே, அதிக விலை கொடுத்து வாங்குவது பயனற்றது.

பணம் அதிகமுள்ளவர்கள், Passion உள்ளவர்கள் அதிக விலை கொடுத்துக் குறிப்பிட்ட வசதிக்காக, தரத்துக்காக, பெருமைக்காக வாங்கலாம்.

தள்ளுபடி போக ₹35,500 க்கு வாங்கினேன்.

PM & UT என்ற இரு மாடல்கள் உள்ளது. இரண்டுமே ஒன்று தான், UT யில் Parental Control அதிகம் அவ்வளவே ஆனால், விலை அதிகம்.

எனவே, Premium (PM) மாடல் வாங்க பரிந்துரைக்கிறேன்.

ஆன்லைனில் வாங்கினால் பிரிக்கும் முன்பு சரியான மாடலை டெலிவரி செய்துள்ளார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Android TV ஏன் வாங்க வேண்டும் என்பதை முன்பே கூறியுள்ளேன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Android TV என்றால் என்ன?

Sony HT-RT3 Real 5.1ch Dolby Digital Soundbar

கொசுறு

Speaker Fiber Cable, HDMI Cable, Network Cable, Power Cable ஆகியவை இருப்பதாலும், Wall Mount என்பதாலும், Cable Organizer வாங்கிகொள்வது நல்லது.

பார்க்க அழகாக இருக்கும்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. தங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி.smart TV ஐ கணிணி திரையாக பயன்படுத்துவது பற்றி ஒரு பதிவிடவும்.நன்றி

  2. (DTH நிறுத்தியதையும் OTT க்கு நகர்ந்ததையும் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.) சீக்கிரம் எழுதுங்கள் கிரி. நான் ஏர்டெல் பிராட்பேண்ட் பயன்படுத்தி வருகிறேன். TATA SKY டிடிஎச் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருகிறேன். அனைத்துக்கும் ரீசார்ஜ் செய்வது கடுப்பாக உள்ளது. BROADBAND. DTH. MOBILE. என்று செலவு மிக அதிகமாக உள்ளது. டிடிஎச் வேண்டாம் என்றால் சில சேனல்கள் OTT யில் வருவது இல்லை. குறிப்பாக Devotional சேனல்கள். அதற்கு என்ன செய்வது? டிடிஎச் க்கு வருடம் குறைந்தபட்சம் சாதாரணமாக 3500 ஆகிறது. இந்த செலவை எப்படி சாமர்த்தியமாக சமாளிப்பது என்று நீண்ட நாட்களாக யோசித்து வருகிறேன். உங்களுக்கு தெரிந்த ஆலோசனையை கூறுங்கள்.

  3. @விஜயகுமார்

    “smart TV ஐ கணிணி திரையாக பயன்படுத்துவது பற்றி ஒரு பதிவிடவும்”

    இதில் தனிக்கட்டுரையாக எழுதும் அளவுக்கு எதுவுமில்லை. தொலைக்காட்சியின் பின்னே VGA, DVI & HDMI Port மூலமாக இணைக்கலாம்.

    மேலும் கூறும் அளவுக்கு விவரங்கள் இருந்தால், தனிக்கட்டுரையாக பின்னர் எழுதுகிறேன்.

    @ஹரிஷ்

    “சீக்கிரம் எழுதுங்கள் கிரி”

    விரைவில் எழுதுகிறேன்.

    “டிடிஎச் வேண்டாம் என்றால் சில சேனல்கள் OTT யில் வருவது இல்லை. குறிப்பாக Devotional சேனல்கள். அதற்கு என்ன செய்வது?”

    இது நெருக்கடியான நிலையே.. காரணம், சில சேனல்கள் இதற்குத் தனியாக செயலிகள் வெளியிடுகின்றன. சிலதுக்கு இல்லை.

    எனவே, DTH விட்டு விலகுவதால், இது போன்ற இழப்புகளும் உள்ளது. கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.

  4. இது நெருக்கடியான நிலையே.. காரணம், சில சேனல்கள் இதற்குத் தனியாக செயலிகள் வெளியிடுகின்றன. சிலதுக்கு இல்லை.) Yupp TV என்ற ஒரு OTT APP இருக்கிறது. அதில் அனைத்து Devotional சேனல்கள். சங்கரா. SVBC. HINDU DHARMAM. ஜெயா குழும சேனல்கள். கலைஞர் குழும சேனல்கள். என எல்லாம் மாதம் ரூபாய் 49 க்கு தருகிறார்கள். மாதா மாத சந்தா மட்டுமே தற்போது கொடுக்கிறார்கள். குழந்தைகள் பார்க்கும் கார்டூன் சேனல்கள் (POGO. CARTOON NETWORK. SONIC
    SONY. HUNGAMA) போன்றவை. எந்த OTT APP லும் இதுவரை இல்லை. அது மட்டும் வந்துவிட்டால் சிறப்பாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!