ட்விட்டர், ஃபேஸ்புக், ஜிமெயில், Blog, WhatsApp Web என எழுதும் போது எழுத்து, இலக்கணப் பிழையுடன் தமிழ் ஆங்கிலம் மொழிகளில் எழுதுகிறோம். அதைத் தவிர்க்க எளிமையான வழி உள்ளது (மற்ற மொழிகளுக்கும் கூட).
Language Tool
Language Tool என்ற நீட்சியை (Extension / Add-On) உலவியில் (Browser) நிறுவிக்கொண்டால் போதுமானது. இதன் பிறகு தமிழ் ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையுடன் எழுதினால் அதுவே தவறுகளைச் சுட்டிக்காட்டும்.
இரண்டு மொழிகளுக்குமே மிகச்சிறப்பாகப் பிழைகளைத் திருத்துகிறது.
உலவியில் மட்டுமே!
எந்த உலவியில் நிறுவுகிறீர்களோ அதில் மட்டுமே இதன் பரிந்துரைகளைக் காட்டும். உலவியை விட்டு வெளியே வந்து வேறு மென்பொருளில் பயன்படுத்த முடியாது.
ஆங்கிலத்துக்கு இலக்கண & எழுத்துப் பிழைகளையும், தமிழுக்கு இலக்கணப் பிழையை மட்டும் சுட்டிக்காட்டும்.
அவசரத்தில் எழுதும் போது இலக்கண, எழுத்துப்பிழைகள் வழக்கமானது. எனவே, இவ்வசதி மூலம் அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியும்.
இலக்கண எழுத்துப் பிழைகளைத் தவிர்ப்போம்
தமிழில் எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுத வேண்டும் என்பதை 95% பின்பற்றி வந்தாலும், சில நேரங்களில் ஓரிரு எழுத்துப்பிழைகள் வந்து விடுகின்றன.
எக்கட்டுரையை வெளியிடும் முன்பும் பின்வரும் தளத்தில் சென்று பிழைகளைச் சரிசெய்த பிறகே வெளியிடுவேன்.
http://dev.neechalkaran.com/p/naavi.html
தற்போது இத்தளத்தோடு மேற்கூறிய நீட்சியும் கூடுதலாக உதவி புரிகிறது.
தமிழ் ஆங்கிலம் அல்லது வேறு மொழிகளோ அம்மொழியைச் சிதைக்காமல் முடிந்தவரை சரியாக எழுத முயலுங்கள். அவற்றைத் தொடரும் போது உங்களுக்கே நாம் சரியாக எழுதுகிறோம் என்ற பெருமையை உணர முடியும்.
அனைத்து உலவிகளுக்கும் இவ்வசதியுண்டு
பின்வரும் தளத்தில் சென்று உங்கள் விருப்ப உலவியைத் தேர்ந்தெடுத்து நீட்சியை நிறுவி இலக்கண (இரண்டு மொழிகளுக்கும்), எழுத்துப் பிழை (ஆங்கிலம் மட்டும்) இல்லாமல் எழுதி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருங்கள்.
மாதக்கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் (Advance) முறை உள்ளது ஆனால், Basic (இலவசம்) முறையே நமக்குப் போதுமானது.
இந்நீட்சியைப் பல மாதங்களாகப் பயன்படுத்திப் பார்த்த பிறகே இதைப் பரிந்துரைக்கிறேன். இவற்றைப் பயன்படுத்தி பிழை இல்லாமல் எழுதுங்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
தமிழ் முக்கியத்துவம் குறைய நீங்களும் ஒரு காரணம்!
ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதுவது கடினமா?!
தமிழ் ஊடகங்களின் தமிழ் அழிப்பு
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, நல்ல உபயோகமாக வசதியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி .. பள்ளி பருவத்தின் போதே தமிழ் மொழியின் மீது அதிக காதல் கொண்டதால் , முடிந்த வரையில் பிழையில்லாமல் சின்ன வயதிலே எழுத பழகி கொண்டேன் .. ஆனால் தற்போது அதிகம் எழுத வாய்ப்பில்லாமல் போனதால் சில சமயங்களில் தவறுகள் வந்து விடுகிறது ..
என்னுடைய பின்னுட்டத்திலியே திரும்ப படிக்கும் போது பல சமயங்களில் பிழைகளை காண முடிகிறது .. சில தவறுகள் தட்டச்சினால் ஏற்பட்டவை , சிலது தெரியாமல் ஏற்பட்டவைகள் … ஆங்கிலத்தை பொறுத்தவரை இன்னும் அரைகுறை தான் .. இந்நீட்சியைப் பயன்படுத்தி என் தவறுகளை திருத்தி கொள்ள முயற்சிக்கிறேன் .. பகிர்வுக்கு நன்றி கிரி ..
@யாசின் இதை நிறுவி விட்டீர்களா? கருத்திடும் போது பயனுள்ளதாக உள்ளதா?