கூகுள் தன்னுடைய இயங்கு தளமான [Operating System] Chrome OS உடன் Chromebook மடிக்கணினியை வெளியிட்டது.
Chromebook
முதலில் வழக்கம் போல US ல் மட்டுமே வெளியாகியது. Image Credit
பின்னர் ஒவ்வொரு நாடாக வந்து தற்போது ஒரு வழியாக சிங்கப்பூரில் வெளியாகி உள்ளது.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால், அறிமுகப்படுத்தப்பட்டவுடன் வாங்க வேண்டும் என்று இருந்தேன்.
இதற்கு இதனுடைய குறைவான விலையும் முக்கியக் காரணம்.
குறிப்பு:
கணினி பற்றிய அறிமுகம், கொஞ்சம் இணையம் சார்ந்த செய்திகள் பற்றி தெரிந்து இருந்தால் மட்டுமே இந்தப் பதிவில் உள்ள சில தகவல்கள் புரியும்.
முடிந்த வரை எளிமையாக எழுதி இருக்கிறேன்.
ஆனால், இது பற்றிய அறிமுகம் இல்லாமல் இருந்தால் ஒரு சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் போக வாய்ப்புள்ளது. சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
Chrome OS என்றால் என்ன?
Chrome OS என்பது விண்டோஸ் இயங்கு தளம் போலவே இதுவும் ஒரு வகையாகும். இது இணைய உலகில் பிரபலமான நிறுவனமான கூகுள் தயாரித்தது.
விண்டோஸ் இயங்கு தளம் போலவே இன்னும் Apple OS, Linux OS மற்றும் UNIX OS போன்ற பிரபலமான இயங்கு தளங்களும் உள்ளன.
இதில் சில உங்களுக்கு பரிச்சியம் இல்லாதவையாக இருக்கும் ஆனால், லினக்ஸ் அதிகம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
Chrome OS லினக்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.
Chrome OS ஒரு திறந்தவெளி [Open source] இயங்கு தளம்.
இதை முதலில் அறிமுகம் செய்த போது அவ்வளவாக வரவேற்பில்லை ஆனால், குறைவான விலையில் மடிக்கணினி அறிமுகப்படுத்தியவுடன் சூப்பர் ஹிட் ஆகி விட்டது.
க்ரோம் உலவியை [Chrome Browser] பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றால் போதும், அது தான் Chrome OS. கூடுதலாக மிகச்சில அமைப்புகள் அவ்வளவு தான்.
இதில் உள்ள நிறைகள் குறைகள் பற்றி கூறுகிறேன், உங்களுக்கு இது பற்றி ஒரு புரிதல் கிடைக்கும்.
நிறைகள்
- மடிக்கணினியை திறந்தவுடனே On ஆகி விடும். நீங்கள் Power Button கூட அழுத்தத் தேவையில்லை.
- திறந்த 5 வது நொடியில் ஜிமெயில் பயனர் கணக்கை கொடுத்து நுழைய வேண்டியது தான். 7 வது நொடியில் நீங்கள் க்ரோம் உலவியில் இருக்க முடியும்.
- மடிக்கணினியை [Lid] எதற்கு திறப்போம்? வேலை செய்யத்தானே! திறந்தால் Power button அழுத்தப் போகிறோம் அதையே தானியங்கியாக வைத்து விட்டால்…!
- அழுத்தும் நேரம் [சில நொடிகள்] கூட மிச்சம் தானே!
- விண்டோஸ் மடிக்கணினியில் BIOS Screen முடிவதற்குள் இதில் Login Prompt வந்து விடும். விண்டோஸ் ல் logout ஆகும் நேரத்தில் இதில் shutdown செய்து விடலாம்.
- கடவுச்சொல் [Password] அடிக்கத் தான் அதிக நொடிகள் எடுக்கிறது.
- இதில் வேகம் என்பது Hardware சம்பந்தப்பட்டதல்ல காரணம், கூகுள் மிகவும் அவசியமானவற்றை மட்டுமே Startup ல் வைத்து இருப்பதால் விரைவில் Boot ஆகிறது.
- எனவே, வேகமாக இருக்கக் காரணம் RAM CPU அல்ல, இதுவும் ஒரு காரணம்.
- முதல் முறையாக Login செய்து நுழைந்தவுடன், நீங்கள் சேமித்து இருந்த Bookmarks, Extensions [Addon] மற்ற அனைத்து செட்டிங்க்ஸ் ம் அப்படியே வந்து விடும்.
- இதனால் எதுவும் புதிதாக configure செய்யத் தேவையில்லை.
- கூகுள், மைக்ரோசாப்ட் போலவே Word [Google Docs], Excel, Power point போன்றவை வைத்து இருப்பதால், இலவசமாகவே இவற்றைப் பயன்படுத்தலாம்.
- விண்டோஸில் புதிதாகக் கணினி வாங்கும் போது துவக்கத்தில் நன்கு வேகமாக இருக்கும் ஆனால், நாளாக வேகம் குறைந்து விடும்.
- சில நேரங்களில் கணினி On செய்து விட்டு ஏதாவது ஒரு வேலையை முடித்து விட்டு வந்து விடலாம். அந்த அளவிற்கு மோசமாகி விடும்.
- இதில் வாங்கிய போது எப்படி வேகம் இருந்ததோ அதே வேகம் அல்லது இன்னும் அப்டேட் வர வரக் கூடுதல் வேகம் கிடைக்கும் என்று கூகுள் கூறியுள்ளது.
- காரணம், க்ரோம் உலவி நாளுக்குநாள் வேகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, கூகுள் தரும் புதிய அப்டேட்டால்.
- இதன் விலை 199 USD ல் இருந்து இருக்கிறது, நம்ம ஊர் பணத்தில் 12000 INR. எனவே நமது பயன்பாட்டிற்கு தேவையான மாடலை நாம் வாங்கிக்கொள்ளலாம்.
- வாங்கும் போது கூகுள் Online Storage ல் 100 GB இலவசமாக இரண்டு ஆண்டிற்கு தருகிறார்கள்.
- எந்தக் கூகுள் ஐடியை வைத்துப் பதிவு செய்கிறோமோ அதற்கு இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மதிப்பு 7200 INR.
- ஆக மொத்தம் இந்த மடிக்கணினியின் விலை 5000 INR தான் வருகிறது. இது நாட்டுக்கு நாடு விலை கூடக் குறையும்.
- வடிவமைப்பின் காரணமாக வழக்கமாக வரும் மோட்டர், fan சத்தம் போன்றவை இதில் இருக்காது.
- [குறைந்தபட்ச] அளவு 11.6” மட்டுமே எடையும் மிக மிகக் குறைவு. எங்கு வேண்டும் என்றாலும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
- இணையத்தில் படிக்க மட்டுமே நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்றால் உங்களுக்கு Tablet தான் சரியான தேர்வு.
- அதிகம் எழுதுவீர்கள் என்றால் இது போன்ற Manual Keyboard உள்ள விலை குறைவான மடிக்கணினி நல்லது.
- கூகுள் என்றாலே பாதுகாப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அது இதிலும் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது.
- இதில் கூகுள் Playstore ல் இருந்து மட்டுமே மென்பொருட்களை நிறுவ முடியும் என்பதால், வேறு Malware போல எதுவும் திருட்டுத் தனமாக வர வாய்ப்பில்லை.
- Wifi, Blutooth, USB, 3G, SD Card, Webcam வசதிகள் உண்டு.
- பேட்டரி நேரம் 6.5 மணி நேரம் வருகிறது.
- இதில் கூகுள் தானியங்கியாகப் புதிய பதிப்பை அப்டேட் செய்து விடும் என்பதால், நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை.
- Keyboard தட்டச்சு செய்ய எளிதாக உள்ளது அதோடு Caps Key இருக்க வேண்டிய இடத்தில் Search Key கொடுத்துள்ளார்கள்.
- எனவே இந்த Key அழுத்தினாலே கூகுள் Search வந்து விடுகிறது.
- கூகுள் பாதுகாப்பை தானே ஏற்றுக்கொள்வதால் Antivirus மென்பொருளை நாம் நிறுவ வேண்டியதில்லை / அதற்குத் தனியாகப் பணம் செலவழித்து மென்பொருள் வாங்க வேண்டிய அவசியமில்லை.
- தகவல்கள் அனைத்தும் Cloud ல் சேமிக்கப்படுவதால், உங்கள் மடிக்கணினியை தொலைத்தாலும் உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
குறைகள்
- Primary laptop ஆக பயன்படுத்த முடியாது. இது முக்கியமாக இணையத்தை பயன்படுத்த மட்டுமே ஆகும். குறிப்பாக உங்கள் கூகுள் க்ரோம் உலவியில் நீங்கள் என்னென்ன பயன்படுத்த முடியுமோ அது மட்டுமே இதில் பயன்படுத்த முடியும்.
- எனவே ஒரு விண்டோஸ் / ஆப்பிள் லேப்டாப் வைத்து இருப்பவர்கள் இதை ஒரு additional மடிக்கணினியாக [Tablet போல] வைத்துக்கொள்ளலாம்.
- நமக்குத் தேவையான அனைத்து மென்பொருட்களும் இந்த Chrome OS ல் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது, குறைவான மென்பொருட்களே உள்ளது.
- இதன் எண்ணிக்கை பின்னாளில் அதிகரிக்கலாம், தற்போது சிரமம் தான்.
- உதாரணத்திற்கு ஒரு MP3 எடிட்டர் நிறுவ வேண்டும் என்று நினைத்தால் முடியாது. iTunes / Dropbox மென்பொருள் நிறுவ முடியாது. iTunes க்கு கூகுள் வேறு முறை கூறுகிறது ஆனால், அது US ல் இருப்பவர்களுக்கு மட்டுமே பயன்.
- இந்தக் கணினியைப் பயன்படுத்த ஓரளவு கணினி அறிவு இருக்க வேண்டும் அல்லது கற்றுக்கொள்ள கொஞ்சம் பொறுமை அவசியம்.
- பெரியவர்களுக்கு / கணினியே புதிதாகப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றதல்ல.
- இணையம் அவசியம். இணையம் இல்லாமலும் பயன்படுத்த [offline] வழிமுறைகள் உண்டு என்றாலும், இணையம் இருந்தால் முழுமையாகப் பயன்படுத்த முடியும்.
- இணைய வசதி சிறப்பாக உள்ள நாடுகளில் மட்டுமே இதைப் பயன்படுத்த எளிது.
- கோப்பு, படங்கள் போன்றவற்றை சேமிக்கும் முறை கொஞ்சம் சிரமம் எனவே பழகும் வரை பொறுமை அவசியம், இல்லை என்றால் வாங்கிய பிறகு அடடா! அவசரப்பட்டு வாங்கிட்டோமோ! என்று நினைக்க வேண்டியது வரும்.
- சுருக்கமாக, படிப்பதற்குத் தான் கணினியை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் என்றால் Tablet தான் என் பரிந்துரை, இதை வாங்க வேண்டாம்.
பொதுவான தகவல்கள்
Touch Pad பழகச் சிரமமாக உள்ளது குறிப்பாக Right Click செய்ய இரண்டு விரலை வைக்க வேண்டும் Apple Mac போல.
How to use Chromebooks
Internal Hard Disk ல் Download என்ற Folder உள்ளது [விண்டோஸ் C:\ ட்ரைவ் போல]. இதில் Cloud ல் சேமிக்காத திரைப்படங்கள், கோப்புகள், நிழல் படங்கள் சேமிக்கப்படும் இடமாக உள்ளது.
விருப்பம் போல Folder உருவாக்கிக் கொள்ளலாம்.
Chromebook கணினியை விண்டோஸ் கணினியுடன் ஒப்பிடும் போது, இதில் இணைய வேகம் குறைவாக இருந்தது. கூகுளில் தேடிய போது இது பற்றி பலரும் குறை கூறி இருந்தார்கள்.
இதற்கு wifi security settings “WEP2” என்று இருக்க வேண்டும் என்று இருந்தது. மாற்றினேன், ஆனாலும் வேகம் கூடவில்லை.
பின்னர் Predicts network settings to improve page load performance எடுத்து விடக் கூறினார்கள் [Un check] என்று அதை முயற்சித்தேன் முன்பை விடப் பரவாயில்லை ஆனாலும் வேகம் திருப்தி இல்லை.
சில நேரங்களில் வேகமாக இருக்கிறது அந்தச் சமயங்களில் இதைப் பயன்படுத்த அருமையாக உள்ளது.
மேலும் இணையத்தில் தேடினால் இதைச் சரி செய்வதற்கான வழிமுறைகளைக் காண முடியும்.
எனக்குத் தற்போதைய நிலைக்கு இது மட்டுமே சிரமமாக உள்ளது மற்றபடி வேறு எந்தச் சிக்கலும் இல்லை. வாங்கி இரண்டு வாரம் ஆகிறது.
இந்தக் கட்டுரையை Chromebook கணினியின் மூலம் தான் எழுதினேன்.
வாங்கிய அடுத்த நாளே திரை விமர்சனம் போல படம் அருமை / மொக்கை என்று எழுதிவிட முடியாது என்பதால், பயன்படுத்திப் பார்த்தப் பிறகே எழுதுகிறேன்.
Cloud Computing
உலகம் Cloud Computing நோக்கிச் சென்று கொண்டு இருப்பதால், இன்று இந்த Chrome OS அவ்வளவாக விரும்பப்படவில்லை என்றாலும் பின்னாளில் Chrome OS அல்லது இது போன்ற Cloud தொழில்நுட்பமே தவிர்க்க முடியாத வசதியாக இருக்கும்.
விண்டோஸ் கூட வருங்காலத்தில் முழுக்க Cloud Computing யை அடிப்படையாக வைத்தே தன்னுடைய இயங்கு தளத்தையும் தயாரிக்கும்.
சுருக்கமாகக் கூறினால், எதிர்காலத்தில் இணையம் இல்லை என்றால் கணினி வைத்து இருப்பது அவசியமற்றது என்ற நிலை வரும்.
அனைத்துமே இணையம் சார்ந்து தான் இருக்கும்.
அப்போது இந்த முறையைப் பயன்படுத்தாதவர்கள் / பயன்படுத்த விரும்பாதவர்கள் கூடப் பயன்படுத்த வேண்டிய நிலை வரும்.
Cloud Computing என்றால் என்னவென்று அறியாதவர்கள் பின் வரும் கட்டுரையைப் படித்தால், புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும்.
Cloud Computing | மேகக் கணினி என்றால் என்ன?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
//சிங்கப்பூர் “ஒலி” பண்பலையில் தினமும் காலையில் சுகி சிவம் ஐந்து நிமிடம் பேசுகிறார்//
இவர் பேசுவது அர்த்தம் உள்ளது என்றாலும் இவர் பேசும் தோரணை சகிக முடியல.
இவர் மாலையும் ஐந்து நிமிடம் பேசுகிறார்.
// “இந்த அவரை விதை இருக்கிறதே.. அவரை விதை” காமெடி தான் நினைவிற்கு வருகிறது//
விவேக் இந்த காமெடியில் ‘வலம்புரி’ ஜான் -ஐ கிண்டலடித்திருப்பார், சுகி. சிவத்தை அல்ல என நினைக்கிறேன்.
சொல்ல மறந்துவிட்டேன். குரோம் புக் பற்றி மிக நல்ல கட்டுரை. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@நவீன் ஹா ஹா எனக்கும் இதை கேட்க கொஞ்சம் கடுப்பாகத் தான் இருக்கிறது..ஆனால், சிரிப்பாகவும் இருக்கிறது.
@விழிப்பு நீங்கள் கூறியது போல வலம்புரிஜான் தான் என்று நானும் நினைக்கிறேன்.
Cromebook Internal Hard Disk எத்தனை GB? default media player எதுவும் உள்ளதா?
“எப்படி நம்முடைய மின்னஞ்சல் முகவரியை மாற்றுவது”
– IRCTC-யில் login ஆனாவுடன் leftside மெனுவில் “User Profile” இருக்கும். அதை கிளிக் செய்து பின் “Update Profile” கிளிக் செய்து உங்கள் ஈமெயில், password, address போன்ற தகவல்களை மாற்றிக்கொள்ளலாம்.
“தற்போது எதுவும் வித்யாசம் தெரிகிறதா பாருங்கள்”
– தற்போது பரவாஇல்லை.
@கௌரிஷங்கர் ஹார்ட் டிஸ்க் 16 GB ல் இருந்து 300+ GB வரை இருக்கிறது. மேலே அதற்கு தான் லிங்க் கொடுத்து இருக்கிறேன் அதில் சென்று பார்த்தீர்கள் என்றால் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம். மீடியா பிளேயர் உள்ளது.
IRCTC தகவலுக்கு நன்றி. நான் அங்கே சென்று பார்த்தேன் ஆனால் சரியாக கவனிக்கவில்லை போல :-).
தல தொழில்நுட்ப செய்திகள் எனக்கு எப்பவும் பிடித்த ஒன்று… பகிர்வுக்கு நன்றி கிரி…
நன்றி தல
வழக்கப்படி எல்லாமே புதுசு தான்
நன்றி
– அருண்
முதலில் இப்படி சொல்லியிருக்கிறீர்கள்.
// குறைவான விலையில் மடிக்கணினி அறிமுகப்படுத்தியவுடன் சூப்பர் ஹிட் ஆகி விட்டது.//
பிறகு நீங்களே இப்படி சொல்கிறீர்கள்.
//இன்று இந்த Chrome OS அவ்வளவாக விரும்பப்படவில்லை//
முரண்பாடாக இருக்கிறதே.
மக்களால் விரும்பப்படாத ஒன்று எப்படி சூப்பர்ஹிட் என்று எடுத்துக்கொள்ளப்படலாம்?
வாங்க பிரபு. நீண்ட மாதங்களுக்கு பிறகு வருகிறீர்கள்.
இதில் முரண்பாடு என்று எதுவுமில்லை. நீங்கள் இது போல கேட்டால் நான் ஏன் அவ்வாறு கூறினேன் என்று உங்களுக்கு கூற முடியும்.
முதலில்
“குறைவான விலையில் மடிக்கணினி அறிமுகப்படுத்தியவுடன் சூப்பர் ஹிட் ஆகி விட்டது.”
க்ரோம் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்ட போது அதற்கு அவ்வளவாக வரவேற்பில்லை. காரணம் அனைவரும் அறிந்தது தான் வசதிகள் குறைவாக உள்ள இயங்கு தளத்திற்கு யாரும் அதிகம் செலவழிக்க தயாராக இருக்க மாட்டார்கள்.
இதை உணர்ந்த கூகுள் குறைந்த விலையில் பிளாஸ்டிக் அதிகம் பயன்படுத்தி இந்த லேப்டாப் வெளியிட்ட போது கூகுளே எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெற்றது. தற்போது கூகுள் வெளியிட்ட Chromecast க்கு இருக்கும் வரவேற்பு போல. இதற்கு செம டிமாண்ட் ஆனது ஆனால், கூகுள் US ல் மட்டுமே வெளியிட்டது. இதனால் மற்ற நாடுகளில் இருந்தவர்கள் அமேசான் மூலம் ஆர்டர் செய்து வாங்கினார்கள்.
இதை வாங்குபவர்கள் பெரும்பாலும் Geek ஆக இருப்பார்கள் அல்லது இது போன்ற தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே வாங்குவார்கள். நான் முன்னரே கூறியபடி இது அனைவருக்கும் உண்டான கணினி கிடையாது. ஒரு லேப்டாப்பிற்கு 200 USD என்பது பெரிய விசயமில்லை. இதில் Storage பணத்தையும் கழித்து விட்டால் 80 USD தான் வருகிறது. 80 USD ல் நீங்கள் ஒரு லேப்டாப் வாங்க முடியும் என்றால் யார் தான் வாங்க மாட்டார்கள்.
இது பற்றி நான் 2011 லியே விரிவாக எழுதி இருக்கிறேன் https://www.giriblog.com/chrome-os-review/
நிற்க
நான் சூப்பர் ஹிட் என்று கூறியது அது வெளியாகிய அந்த தருணத்தில் மட்டுமே! இது அனைவரும் வாங்கும் கணினி இல்லை என்பதால் அதுவே பெரிய விஷயம் தான். வெளியான சமயத்தில் இது சூப்பர் ஹிட் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அப்போது இருந்த பரபரப்பு வரும் காலங்களிலும் தொடர இது விண்டோஸ் Mac போல பெரும்பான்மையானவர்கள் பயன்படுத்தும் இயங்கு தளம் அல்ல.
“இன்று இந்த Chrome OS அவ்வளவாக விரும்பப்படவில்லை”
இதுவும் உண்மை தான். இது பெரும்பான்மை மக்களுக்குண்டானது அல்ல காரணம் இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள். இது ஒரு முழுமையான பயன்பாட்டிற்கு உண்டான இயங்கு தளம் அல்ல. விண்டோஸ் மற்றும் Mac போல. எனவே இது பிரபலம் ஆக இன்னும் வெகு காலம் எடுக்கும், அதுவும் இன்னும் பல புதிய வசதிகளை கூகுள் இணைத்தால் மட்டுமே.
“மக்களால் விரும்பப்படாத ஒன்று எப்படி சூப்பர்ஹிட் என்று எடுத்துக்கொள்ளப்படலாம்?”
இதற்கான பதில் நான் மேற்க்கூறியதிலேயே உள்ளது.
இந்த விளக்கம் உங்களுக்கு தெளிவை கொடுத்து இருக்கும் என்று நம்புகிறேன்.
விளக்கத்திற்கு நன்றி.
“கூகுள் சேவைகளை பயன்படுத்துபவர்கள் பிரைவசியை எதிர்பார்க்கக்கூடாது” என்று அவர்களே வெளிப்படையாக சொன்னபிறகாவது, ‘கூகுளுக்கு ரொம்ப இடம் கொடுக்கக்கூடாது’ என்று மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
chrome
neenga yedho chemistry vara chrome pathi solla vareengalo nu oru second nenachen……….
குரோம் புக் இணையத்தை பயன்படுத்தவும் , விளையாட்டுகள் தரவிறக்கம் செய்து விளையாடவும் மட்டுமே பயன்படும் .விரும்பி வாங்க விருப்பம் உள்ளவர்கள் முதலில் கணினியில் வி ம் பிளேயர் அல்லது சன் வி ம் பாக்ஸ் இல் நிறுவி திருப்தி இருந்தால் வாங்கலாம். குரோம் உலவியில் நெருப்பு நரி உலவியில் இருப்பதை போல தலைமை கடவுச்சொல் இல்லை.இது பெரிய ஓட்டை .