ஆடுகளம் கோணல் என்றதாம் இங்கிலாந்து

2
ஆடுகளம்

ங்கிலாந்து அணி இந்தியா வரும் முன்பு இருந்தே பீட்டர்சன் போன்றவர்கள் ஆட்டம் ட்விட்டரில் அதிகமாக இருந்தது. Image Credit

முக்கிய வீரர்கள் இல்லாமலே ஆஸி அணியை இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய போது சம்பந்தமே இல்லாமல், ‘திறமையான இங்கிலாந்து அணியுடன் உங்கள் திறமையைக் காட்டுங்கள்‘ என்றார்.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்டில் யார் டாஸ் வெற்றி பெறுகிறார்களோ அந்த அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. எதிர்பார்த்தது போல இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

இந்திய அணிக்கு ட்ரா / தோல்வி என்ற இரு வாய்ப்புகள் மட்டுமே இருந்தது, இந்திய அணி தோல்வியடைந்தது.

நான் தான் அப்போதே சொன்னேனே ரொம்ப ஆட்டம் போடாதீங்கன்னு‘ என்று பீட்டர்சன் நக்கல் அடித்தார்.

இரண்டாவது டெஸ்ட்

முதல் சென்னை டெஸ்ட் மட்டையாளர்களுக்குச் சாதகமானதால், இரண்டாம் டெஸ்டில் சுழல் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக ஆடுகளத்தை அமைத்தார்கள்.

இது Pitch இல்லை Beach, மோசமான ஆடுகளம்‘ என்று மைக்கேல் வான் கிண்டலடித்தார்.

இங்கிலாந்து அணி 317 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியடைந்தது.

முதல் டெஸ்ட் வெற்றியில் அதிகம் பேசிய பீட்டர்சன், ‘இங்கிலாந்து B Team யை வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துகள்‘ என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கணக்காகக் கருத்து தெரிவித்தார்.

எங்க இங்கிலாந்து அணிகிட்டே உங்க வீரத்தை காட்டுங்க!‘ என்று துவக்கத்தில் பீட்டர்சன் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளம்

முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்குச் சாதகமாக ஆடுகளம் இருந்த போது யாரும் ஆடுகளத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை.

ஆனால், இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியினர் சொதப்பியதும் ஆடுகளத்தைக் குறை கூறுகிறார்கள்.

எந்தவொரு நாடும் தங்கள் அணியினருக்குச் சாதகமாகத்தான் ஆடுகளத்தை அமைப்பார்கள். இது கிரிக்கெட் வழக்கம்.

தட்பவெட்ப சூழ்நிலை காரணமாக இந்தியா ஆடுகளங்கள் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமாகவும், ஆஸி, இங்கிலாந்து நாடுகள் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும். இதில் இரகசியம் எதுவுமில்லை.

திறமையான அணி என்றால், எந்த நிலையிலும் சிறப்பாக விளையாட வேண்டும், ஆடுகளம் சரியில்லை என்று குறை கூறுவது தவறு.

இரண்டு இன்னிங்சிலும் சொதப்பிய இங்கிலாந்து

நாளுக்குநாள் ஆடுகளம் சுழலுக்குச் சாதகமாகும் என்பது அனைவரும் அறிந்தது. இவர்கள் கூற்றுப்படியே ஆடுகளம் மோசம் என்று வைத்துக்கொண்டாலும்…

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி எடுத்த ஓட்டங்களை விட, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 152 ஓட்டங்கள் (286 -134=152) அதிகம்.

எனவே, ஆடுகளம் மோசம் என்றால், இங்கிலாந்து அணி எடுத்த 134 ஓட்டங்களை விட இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் குறைவாக எடுத்து இருக்க வேண்டும்.

ஆடுகளம் கோணல் என்றதாம் இங்கிலாந்து

ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்‘ என்ற கதையாக, இங்கிலாந்து அணி தன் தோல்வியைச் சமாளிக்க ஆடுகளத்தைக் குறை கூறிக்கொண்டுள்ளது.

ஆஸியோ இங்கிலாந்தோ சென்றால், அவர்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாத்தானே ஆடுகளத்தை அமைப்பார்கள். இதை நாம் கேள்வி கேட்க முடியுமா?!

இங்கிலாந்து அணி ஒழுங்கா விளையாடததற்கு ஆடுகளத்தைக் குறை கூறாதீர்கள்‘ என்று மைக்கேல் வான் மற்றும் மற்றவர்களுக்கு வார்னே பதிலடி கொடுத்தார்.

சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்களை விசில் அடிக்கக் கோலி கூறியது, ரோஹித் 160, அஸ்வின் 100, அக்சர் பட்டேல் & அஸ்வின் 5 விக்கெட் எடுத்தது, 317 ஓட்டங்கள் வித்யாசத்தில் வெற்றிப் பெற்றது எனச் சென்னை டெஸ்ட், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

பல வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் போட்டிகள் என்பதால் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு இருந்தது.

முதல் போட்டியில் தோற்றாலும் இரணடாவது போட்டியில் அதிரடியாக வெற்றி பெற்று ரசிகர்களைக் கோலி அணியினர் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டனர் 🙂 .

கொசுறு

சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறவில்லை என்று 3 காலரிகளை பயன்படுத்தச் சென்னை மாநகராட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

வழக்கு காரணமாக இப்பகுதியைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.

ஏற்கனவே, சிறிய விளையாட்டரங்கான சேப்பாக்கம், இப்பிரச்சனையால் கூடுதல் ரசிகர்களை அனுமதிக்க முடியாமல் இருந்தது.

IPL இறுதிப்போட்டி கூட இதன் காரணமாக வேறு மாநிலத்துக்குச் சென்றது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

தற்போது இப்பிரச்சனை முடிந்து அனைவருக்கும் அனுமதி இருந்தாலும், கொரோனா காரணமாக முழுமையான பார்வையாளர்களை அனுமதிக்க முடியவில்லை.

அரங்கம் முழுமையும் ரசிகர்கள் நிறைந்து பார்க்கும் தருணம் விரைவில் வரும், அது IPL 2021 போட்டிகளாக இருக்கலாம்.

2 COMMENTS

  1. கிரி, வென்றாலும் விமர்சனம் தான், தோற்றாலும் விமர்சனம் தான்.. இதையெல்லாம் கண்டுக்கவே கூடாது என்பது என் எண்ணம்.. உலக அரங்கில் இந்திய அணிக்கென்று உள்ள இடம் மிக சிறப்பாக இருக்கிறது.. ஒரு மோசமான ஆட்டமோ, தொடரோ ஒட்டு மொத்த அணியை குறை கூற முடியாது.. AUS ,ENG,SA,NZ இங்கெல்லாம் தற்போது எல்லாம் பேட்டிங் சாதகமாக தான் ஆடுகளம் இருக்கிறது.. பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக இருக்கும்.. 50 ஓவர் போட்டாலும் விக்கெட் எடுப்பது கடினமாக இருக்கிறது.. ஆனால் தற்போதும் பழைய டெஸ்ட் போட்டிகளை பார்ப்பேன்.. ஆனால் அந்த தரம் இனி எப்போதும் வராது.. பேட்டிங், பௌலிங் எல்லாவற்றிக்கும் சமமாக இருக்கும்.. டெஸ்ட் போட்டிகளை காண்பதில் உள்ள ஆர்வம் வேறு எதிலும் கிடையாது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. ஆடுகளம் மீதான விமர்சனம் உச்சக்கட்டத்தில் உள்ளது 🙂 . இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் அழுதுட்டு இருக்காங்க.

    இவங்க வேகப்பந்து வீச்சுக்கு மட்டுமே களம் தயாரிப்பாளர்களாம், யாரும் கேட்க கூடாதாம்.

    ஆனால், சுழல் பந்து வீச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களாம்.

    ஒரு விளையாட்டு வீரர் எந்த ஆடுகளத்திலும் ஆட வேண்டும். அவரே திறமையான வீரர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here