அமேசான் சலுகைகள்

0
Amazon அமேசான் சலுகைகள்

மேசான் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகம், இதை உணர்ந்தும் இந்தியாவில் தன்னுடைய சந்தையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், சேவைகள் விரிவுபடுத்தப்படவும் பல நடவடிக்கைகளை அமேசான் எடுத்து வருகிறது.

அமேசான்

அமேசான் கூகுளுடன் சண்டை போட்டுக் கூகுளின் ‘Chromecast’ சேவையை அமேசான் தன்  ‘Prime Videos’ செயலியில் தடை செய்து இருந்தது.

இதற்குப் பதிலடி கொடுக்க YouTube பார்ப்பதை Firestick ல் கூகுள் தடை செய்தது. YouTube இல்லாமல் இருப்பது Firestick பயனாளர்களுக்கு ரொம்பச் சிரமமானது.

கடந்த வருடம் இரு நிறுவனங்களும் தங்கள் சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானம் ஆகி, அனைத்தும் அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தும்படியானது.

இதன் பிறகே நான் அமேசான் ப்ரைம் பயனாளராகப் பதிவு செய்தேன்.

அமேசான் ப்ரைம் பயனாளராக இருந்தால், உங்களுக்கு இலாபமே அதிகம்.

அமேசான் ப்ரைம் சலுகைகள் 

  • வாங்கும் பெரும்பாலான பொருட்களுக்கு Delivery கட்டணம் இல்லை.
  • சில பொருட்களுக்கு ‘Cashback’ கிடைக்கும்.
  • இலவசமாகப் புத்தகங்கள் படிக்க முடியும்.
  • விழாக்காலத் தள்ளுபடி விற்பனையில் ஒரு நாள் முன்னதாகவே ப்ரைம் பயனாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படும்.
  • ஏராளமான திரைப்படங்களைக் காண முடியும்.
  • அமேசான் மியூசிக் பயன்படுத்த முடியும்.
  • இவையல்லாமல் ப்ரைம் பயனாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.

இவையனைத்தும் ஆண்டுக்கு ₹1499 மட்டுமே! சலுகைகள், Cashback மூலம் ₹1499 பணத்தை நீங்கள் திரும்ப எடுத்து விடலாம்.

அமேசான் Cashback சலுகைகள்

  • ஒவ்வொரு மாத முதல் தேதியிலும் நம் கணக்குக்கு, Cashback தருகிறது. Rewards பகுதி சென்று ‘Collect this offer’ என்பதை க்ளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
  • எடுத்துக்காட்டுக்கு ஏர்டெல் சேவைக்கான சலுகையைப் பெற்றுக்கொண்டால், பின்னர் ஏர்டெல் கட்டணத்தை அமேசான் வழியாகச் செலுத்தினால், உங்களுக்கு Cashback கிடைக்கும். ₹5, ₹10, ₹30, ₹50 என்று கிடைக்கும்.
  • அதிகபட்சமாக ₹1000 (ACT), ₹885 (ஏர்டெல்) Cashback கிடைத்துள்ளது 🙂 .
  • இச்சலுகை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் புதுப்பிக்கப்படும்.
  • எனவே, கட்டணத்தைச் செலுத்திய பிறகு இதை Collect செய்தால், பயனில்லை. பெரும்பாலும் மாத இறுதித் தேதியில் காலாவதியாகி விடும்.
  • எனவே, முதல் தேதியிலேயே அனைத்தையும் ‘Collect’ செய்து அமேசான் வழியாகக் கட்டணத்தைச் செலுத்தினாலே இலாபம்.

வாடிக்கையாளர் சேவை

கூகுளுக்குப் பிறகு அசந்த ஒரு வாடிக்கையாளர் சேவை என்றால், அமேசான் தான்.

இதுவரை 5 – 7 பிரச்சனைகளுக்காக அமேசானை தொடர்பு கொண்டு இருப்பேன். ஒவ்வொருமுறையும் அவர்களின் தரமான சேவையால் வியக்க வைக்கிறார்கள்.

உடனுக்குடன் புகாருக்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் மிகச் சிறப்பான சேவையை வழங்குகிறார்கள்.

வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த மிகத்தீவிரமாக உழைக்கிறார்கள் என்று பார்த்தாலே புரிகிறது. அதாவது அச்சேவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்.

அவர்களுடைய மின்னஞ்சல் உரையாடல், தொலைபேசி பேச்சு மிகவும் நட்பாக உள்ளது.

அமேசான் சேவைகள் வாடிக்கையாளர் சேவை மையத்தை நிர்வகிப்பவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

தேவையைப் பொறுத்து ‘அமேசான் ப்ரைம்‘ பயனாளராகப் பரிந்துரைக்கிறேன்.

கொசுறு

இந்தக்கட்டுரை எழுதக்காரணமே அமேசான் Chromecast யை Prime Video க்கு அனுமதித்ததே! இதன் பிறகே ‘ப்ரைம்’ பயனாளராகப் பதிவு செய்தேன்.

இதை எழுதுவதால், அமேசான் எனக்கு எதுவும் கொடுக்கப்போவதில்லை.

அமேசானால் நான் அடைந்த, பெற்ற பயன்களுக்காகவும், சலுகைகளுக்காகவும் ஒரு சிறிய நன்றிக்கடன் அவ்வளவே! 🙂 வேறு எந்த இலாப நோக்கமுமில்லை.

தொடர்புடைய கட்டுரைகள்

அமேசான் Kindle ஏன் வாங்க வேண்டும்?!

Chrome தெரியும் Chromecast தெரியுமா?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!