வோர்ட்பிரஸ் (WordPress) என்றால் என்ன?

46
வோர்ட்பிரஸ் (WordPress) என்றால் என்ன??

வோர்ட்பிரஸ் (WordPress)

வோர்ட்பிரஸ் (WordPress) 2003 ம் ஆண்டு May 27 ம் தேதி Matt Mullenweg என்பவரால்  துவங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 19 தான்!

CNET நிறுவனத்தில் தன் வேலையை விட்டுவிட்டு இதைத் துவங்கினார். WordPress ஒரு சுதந்திர மென்பொருள் (Open source) ஆகும். இதுவே இதன் மதிப்பைக் கூட்டியது மற்றும் பலரும் விரும்பக் காரணமாக இருந்தது.

Blogger

வலைப்பதிவர்களுக்கு எளிதாகக் கூகுள் Blogger இருப்பதால், அதை அனைவரும் பயன்படுத்தி வந்தாலும் பெரிய தளங்கள் WordPress முறையிலே இயங்குகின்றன.

அதற்குக் காரணம் சுதந்திர மென்பொருளாக இருப்பது தான். நமக்குத் தேவையான முறையில் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியும் என்பதே இதன் சிறப்பு.

வலைப்பூக்கள் (Blogs) என்றால் பிரபலமாக இருப்பது கூகிள் ன் Blogger (Blogspot) தான் அதன் பிறகு இடத்தைப் பிடிப்பது WordPress நிறுவனம்.

நாம் பார்க்கப்போவது இந்த WordPress பற்றி. அதற்கு முன் வலைப்பூக்கள் என்றால் என்ன என்று கூறுகிறேன் (இது புதியவர்களுக்கு)

வலைப்பூ (Blog) என்றால் என்ன?

நமது எண்ணங்களைக் கருத்துக்களை மற்றவர்களுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ள உதவும் தளமே வலைப்பூ ஆகும்.

இது முற்றிலும் இலவசமாகும். எவரும் எளிதாகத் துவங்க முடியும்.

இதில் முன்பு பிரபலமாக இருந்தது Yahoo! Blog மற்றும் Geocities என்ற தளங்களாகும். தற்போது கூகிள் Blogger & WordPress தளங்கள் பிரபலமாக உள்ளன.

கூகுள் Blogger தளம் வந்த பிறகு, அதன் எளிமை மற்றும் வசதிகளால் அனைவரின் வரவேற்ப்பை பெற்றது. இதனால் படிப்படியாக Yahoo! Blog மற்றும் Geocities வரவேற்ப்பு குறைந்து மூட வேண்டிய நிலைக்கு வந்து விட்டது.

முதலில் (2006 ம் ஆண்டு வாக்கில்) Yahoo! Blog ல் எழுதிக்கொண்டு இருந்தேன்.  ஆனால், அதன் பிறகு கூகிள் Blogger பற்றித் தெரிய வந்து அதன் எளிமை காரணமாக அதற்கு 2008 பிப்ரவரியில் மாறினேன்.

வேர்ட்பிரஸ் ஏன் பிரபலமாகவில்லை?

காரணம் மிக எளிது… எளிமை இல்லாதது தான். Blogger தளத்தில் எவரும் எந்த வித தொழில்நுட்ப அறிவும் இல்லாமல் எளிதாக மாற்றி அமைக்க முடியும், எடிட் செய்ய முடியும் ஆனால், WordPress ல் அவ்வாறு செய்வது கொஞ்சம் சிரமமான செயலாகும்.

இதிலும் Blogger தளம் போலச் செய்ய வசதிகள் உண்டு ஆனால், Blogger தளம் அளவிற்கு எளிது இல்லை.

இதனாலே பெரும்பாலான வலைப்பதிவர்கள் இதைப் பயன்படுத்த விரும்புவதில்லை ஆனால், WordPress ன் காதலர்கள் நிறைய உண்டு 🙂 .

மேற்கூறியது அனைத்தும் வலைப்பூக்களுக்கே (Blogs) பொருந்தும் ஆனால், பெரிய தளங்கள் என்று வந்துவிட்டால் WordPress தான் ஆட்சி செய்கிறது.

எந்தப் பெரிய தளம் என்றாலும் பெரும்பாலும் அது WordPress கொண்டு வடிவமைக்கப்பட்டதாகவே இருக்கும்.

இதற்குக் காரணம் Selfhosting வசதி Blogger தளத்தில் இல்லாததும் சுதந்திர மென்பொருளாக (Open source) இல்லாததும் காரணம்.

இதில் புரிந்துகொள்ள வேண்டியது இலவச WordPress தளம் வேறு, பணம் கட்டி நடத்தும் Selfhosting WordPress தளம் வேறு.

இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். தொழில்நுட்பங்கள் மட்டுமே ஒன்று.

Selfhosting என்றால் என்ன?

தற்போது இலவசமாக Blogger மற்றும் WordPress தளங்களில் எழுதி வருகிறோம். இதில் அவர்கள் கொடுக்கும் வசதிகளை மட்டுமே பயன்படுத்த முடியும், நாமாக எதையும் மாற்றி அமைக்க (Customize) முடியாது.

இதற்குப் பதிலாக WordPress தொழில்நுட்பத்தை  அடிப்படையாக வைத்து, அவர்களது இலவச தளத்தில் அல்லாமல், பணம் கொடுத்து நம்  தகவல்களை வைத்துக்கொள்ள வாடகைக்கு தனியாக இடம் (சர்வர்) வாங்கும் முறையே Selfhosting ஆகும்.

வாடகைக்கு வாங்கினால் வருடத்திற்கு தளத்தின் தேவையைப் பொறுத்து செலவு செய்ய வேண்டியதிருக்கும். குறைந்த பட்சமாக வருடத்துக்கு ₹2000 ஆகும்.

இதன் மூலம் நமக்கு விருப்பமான முறையில் நமது தளத்தை வடிவமைக்க முடியும். புது புது வசதிகளைப் படிப்பவர்கள் வசதிக்கேற்ப எளிதாக மாற்றி அமைக்க முடியும்.

ஏன் WordPress க்கு மாறினேன்?

புதிதாக ஏதாவது முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குச் சிறு வயதில் இருந்தே இருக்கிறது, அதிலும் தொழில்நுட்பத்தில் எனக்கு அதிக ஆர்வம்.

http://girirajnet.blogpsot.com என்ற (sub domain) இலவச முகவரியிலிருந்து தனியாக  (Domain name) முகவரி வாங்க வேண்டும் என்று விரும்பி வாங்கியது தான் www.giriblog.com.

இதன் பிறகு தனியாக (Selfhosting) தளம் ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் ஆனால், Blogger தளத்தில் அந்த வசதி இல்லை.

Blogger தளம் selfhosting வசதியை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை, பின்னாளில் அறிமுகப்படுத்தலாம். எனவே, எனக்கு இருந்த வாய்ப்பு WordPress தளம். இது மட்டுமல்ல வோர்ட்பிரஸ் (WordPress) மேலும் பல வசதிகளைக் கொண்டது.

Domain  & Sub Domain என்றால் என்ன?

தளத்திற்கு உள்ள இணைய முகவரி தான் Domain Name என்று அழைக்கப்படுகிறது. இதைக் கூகுள் உட்பட பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டணம் இதற்கு வசூலிக்கிறார்கள் கூகுள் இதற்கு வருடத்திற்கு 10$ USD கட்டணமாக வசூலிக்கிறது.

www.giriblog.com தள முகவரிக்கு 10$ USD வருடம் கட்டுகிறேன்.

http://girirajnet.blogspot.com என்பது நேரடி Domain Name அல்ல subdomain ஆகும். நீங்கள் யோசித்து இருக்கலாம், கூகுள் எப்படி இத்தனை முகவரியை இலவசமாக அனைவருக்கும் தருகிறது என்று. நியாயமான சந்தேகம் தான்! 🙂 .

இதில் blogspot.com என்பது Domain Name ஆகும் girirajnet என்பது subdomain ஆகும். இதைப் போல subdomain அவர்கள் எத்தனை வேண்டும் என்றாலும் கொடுக்க முடியும் அதற்குக் கட்டணமில்லை.

அவர்களுடைய செலவு blogspot.com என்ற Domain Name க்கு மட்டும் தான்.

எடுத்துக்காட்டாக www.giriblog.com என்பது Domain Name இதில் நான் www.geek.giriblog.com என்று வைத்தால் அது Subdomain. இதைப் போல எத்தனை வேண்டும் என்றாலும் உருவாக்கிக்கொள்ளலாம் ஆனால், கட்டணமில்லை.

Selfhosting WordPress நிறை குறைகள்

நிறைகள்

 • SEO எனப்படும் Search Engine Optimization இதில் சிறப்பான சேவையாகும்.
 • சமூகத்தளங்களில் கட்டுரைகளை இணைப்பதால் அதன் மூலம் பலர் நமது தளத்திற்கு வருகிறார்கள் ஆனால், கூகிள் போல Search Engine மூலமாக வார்த்தைகளைத் தேடுபவர்களை நம் தளத்திற்கு இதன் மூலம் வரவைக்க முடியும்.
 • Blogger தளத்திலும் செய்ய முடியும் ஆனால், WordPress உடன் ஒப்பிடும் போது வித்யாசம் பெருமளவில் மாறுபடும்.
 • SEO க்கு கூடுதல் கவனம் செலுத்தினால், கூடுதல் நபர்களை வரவைக்க முடியும்.
 • விருப்பத்திற்கு தகுந்த மாதிரித் தளத்தை மாற்றி அமைக்க முடியும்.
 • நினைத்த வசதிகளை இதில் கொண்டு வர முடியும் கட்டுப்பாடு கிடையாது.
 • யார் வேண்டும் என்றாலும் எளிதாகக் கருத்திட முடியும்.
 • Blogger தளம் நினைத்தால், உடனடியாக நமது தளத்தை முடக்க முடியும், நீக்க முடியும். இதில் நாமே நிர்வாகி, வேறு யாரும் எதுவும் செய்ய முடியாது.
 • தளத்தின் Backup ரொம்ப அவசியமானது. ஏதாவது நேர்ந்து விட்டால் Restore செய்யத் தேவைப்படும். இதில் அது மிக மிக எளிதானதாகும்.
 • எத்தனை நாளைக்கு ஒருமுறை Backup எடுக்க வேண்டும் என்று நாம் அமைத்துக்கொள்ளலாம்.
 • அதே போல Backup தானாக நாம் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு வந்து விடும். மறந்து விட்டால் என்ன செய்வது! என்ற பிரச்சனை இல்லை.

குறைகள்

 • செலவு பிடிக்கும் விஷயம்.
 • எளிமையானது இல்லை. PHP போன்றவற்றில் அனுபவம் வேண்டும்.
 • தொழில்நுட்ப அறிவு மற்றும் நிரலி (script) ஓரளவு தெரிந்து இருக்க வேண்டும்.
 • ஏதாவது பிரச்சனை என்றால், அது பற்றிய தொழில்நுட்ப அறிவு குறைவு என்றால் சரி செய்வது எளிதானது அல்ல.

எனவே, Selfhosting யை வலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைக்கவில்லை. Blogger மற்றும் Selfhosting இல்லாத WordPress தளத்திலேயே அனைத்தும் செய்ய முடியும்.

இதைப் போலச் செலவு செய்வது தேவையில்லாதது. புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆர்வம் இருந்தால் மட்டும் இதைச் செய்யலாம்.

மற்றபடி கண்டிப்பாக (Selfhosting) வேண்டாம்.

கட்டுரை 2020 ல் மேம்படுத்தப்பட்டது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

46 COMMENTS

 1. கிரி உங்கள் நீண்ட நாள் வாசகன் என்பதில் பெருமையாக உள்ளது.

  இந்த வேர்ட் ப்ரஸ் தளத்தை உருவாக்கியவர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியது.

  மிக அற்புதமாக தொகுத்து கொடுத்து இருக்கீங்க. வாழ்த்துகள் கிரி.

  வலையுலகில் பல குழுக்கள் உண்டு இத்தனை வருடமாக இருந்தும் நான் எந்த குழுவிலும் இல்லை “என் வழி தனி வழி” யாகத் தான் செயல்படுகிறேன். தமிழக அரசியலில் ஆர்வம் உண்டு ஆனால் வலையுலக அரசியலில் ஆர்வமில்லை கூறப்போனால் அவற்றை வெறுக்கிறேன். இவங்க சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன். நான் Blog எழுத வந்தது தமிழை தூக்கி நிறுத்த அல்ல என்னோட எண்ணங்களை பகிர்ந்து கொள்ள மட்டுமே. தமிழுக்காக நான் செய்யும் சேவை என்னவென்றால் முடிந்தவரை பிழை இல்லாமல் எழுதுகிறேன்.. இது போதாதா! நான் தமிழுக்கு செய்யும் சேவைக்கு ,,,,,,,,,,,,,,,

  நீங்கள் யார் என்று மற்றவர்கள் உணர்ந்து கொள்ள இந்த ஒரு பத்தி போதுமே,

 2. நீங்கள் சொல்லியுள்ள வேர்ட் ப்ரஸ் தொழில் நுட்ப சமாச்சாரங்களை நான் அனுபவித்துள்ளதால் இந்த கட்டுரையை என் எண்ணங்களாக நீங்கள் எழுதியது போல் உணர்கின்றேன்.

 3. பல விசயங்களை தெரிந்துக்கொண்டேன் நன்றி கிரி…

 4. பல தரப்பட்ட விசையங்களுடன் உங்கள் நடவடிக்கைகளை கலந்து ஒரு அருமையான பகிர்வு கிரி.

  பகிர்வுக்கு நன்றி.

  //இது போதாதா! நான் தமிழுக்கு செய்யும் சேவைக்கு//

  ஹ ஹ ஹ சூப்பர் 🙂

  ஒரு சிங்கை தமிழ் வானொலி கலந்துரையாடலில் சமீபத்தில் கேட்ட ஒரு செய்தியை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  மொழிபெயர்ப்பும் உருவாக்க பட்ட தமிழ் சொல்லும் என்ற தலைப்பில் பேசினார்கள்.

  வலைப்பூ என்று மொழிபெயர்க்க பட்ட தமிழ் சொல்லைவிட, நம் எண்ணங்களை நடவடிக்கைகளை இணையத்தில் பதிவதே ப்ளாக் அதனால் “பதிவு” என்பதே சரியான சொல்லாகும் என்று எடுத்து சொன்னார்கள்.

  மேலும் ஆரம்பத்தில் “கணினி” என்று சொல்லுக்கு எதிர்ப்பு வந்தாலும் பின் அது ஏற்றுக்கொள்ள பட்டது போல, விரைவில் வலைப்பூ என்பதைவிட பதிவு என்பது ஏற்றுக்கொள்ள படும் என்று முடிந்தது அந்த நிகழ்ச்சி.

  எனக்கும் இது சரி என்றே படுகிறது, அதனால் ஏன் நாம் “பதிவு” என்பதையே பயன்படுத்த கூடாது?

  இது என் எண்ணம் மட்டுமே, அதனால் வலைப்பூ என்ற சொல்லை குறை சொல்வதாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் :-).

  நன்றி!.

 5. அருமையான விளக்கங்கள்.

  என்னைப் பற்றியும் குறிப்பிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது, நன்றி. சில நாட்களுக்கு முன்பாக இந்தப் பின்னூட்ட அமைப்பைக் கண்டேன். http://disqus.com/. அருமையாக இருக்கிறது.

  சாய்தாசன் – என்னையும் தொழில்நுட்பப் பதிவுகள் எழுத ஊக்கப்படுத்தியவர். அவரைப் பற்றியும் கூறியுள்ளது அருமை.

 6. பின்னொரு நாளில் என் தளம் பெரிய அளவில் பலரால் விரும்பப்படும் பேசப்படும் ஒரு தளமாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு 100% உள்ளது. இது தலைக்கனமல்ல என் மீது எனக்குள்ள நம்பிக்கை.. Keep it up Mr.Giri.

  “எந்திரன் திரைவிமர்சனம்” என்று நீங்கள் கூகிள் ல் தேடினால் என் தளம் தான் முன்னணியில் இருக்கும்.. Yes ur First & best..

  நான் உங்கள் வலைப்பூவை தொடர்ந்து படிக்கும் வாசகன்…. முதன் முதலில் உங்கள் போட்டோ (மாளவிகா) பார்த்து இந்த பக்கம் வர்ரதேய் இல்ல!! என்ன இது ஏதோ சும்மா வெட்டிய மொக்க போடுறவுங்க பிளாக் நு நினைத்து கண்டுக்கவே இல்ல ரொம்பநாள்….. பிறகு சிங்கக்குட்டி போல சிலபேர் கொம்மெண்ட்ஸ் பார்துதான் இதுவும் நல்லாதான் இருக்கும்போலனு பார்க்க வந்தேன்.. அதுல இருந்து ரொம்ப பிடிச்சி போச்சி…..

  உங்க வலைப்பூ வேகமா இருக்கு, விவேகமா எலுதுறீங்க, நகைச்சுவை இருக்கு, அறிவுரையும் இருக்கு, சினிமா தலைவரை பத்தி தாராளமா இருக்கு….. so நீங்க சொன்னதுபோல எதிர்காலதுல மிக பிரபலமான வலைபூவா இருக்கும்…

  உங்கள் எலுத்து சூப்பர்….நீங்க thamilai வலர்கிறீர்கள்.. ஆனால் என்னுடய thamil கொடுமயா இருக்கும்… so sorry for the spelling mistakes…. ennudaya tamil evalo nalla irukkumnu Singakuttiku nallave therium…அவருக்கும் இப்படித்தான் மொதல்ல மெசேஜ் பண்ணுனேன்… ஹீ ஹீ ஹீ .. ஒரு சின்ன வேண்டுகோள் நீங்க ஏன் மாளவிக போட்டோ வச்சி இருக்கீங்க 🙂 , பொதுவா பொண்ணுகதான் பொண்ணு போட்டோ வச்சி இருப்பாங்க அதான் கேட்டேன்… தப்ப இருந்த sorry ….

  keep rocking boss…

 7. நிறைய தகவல்கள்

  வேர்ட்ப்ரஸ் – கமெண்ட்டிங் ப்ராப்ளம் தான் – இதை சரி செஞ்சிட்டாங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும்

 8. நல்ல பதிவு கிரி!

  நான் அன்றும், இன்றும் வோர்ட்ப்ரெஸ் ரசிகன். எனக்கென்னவோ, ப்ளாக்கரை விட வேர்ட்ப்ரெஸ் எளிமையாக, கையாள எளிதாகத் தெரிகிறது.

 9. Nalla pagirvu.
  Ennai ponrorukum (blogs pathi onnum theriyadhavangalukum) puriyum vannam elimayaana ezhuthu ungaludayadhu.

  Paaratukkal matrum nandrigal.

 10. அருமை! மிக விவரமான பதிவு! நான் வேர்ட்பிரஸ் பயன்படுத்தி பார்த்துள்ளேன்! ஆனால் பிளாக்கர் மிக எளிமையாக உள்ளது!

 11. அருமையான செய்தி. இந்த பயனுள்ள பதிவுக்கு நன்றி. மேலும் இதுபோல் பல தொழில்நுட்ப இடுகைகளை பதிவு செய்ய வேண்டும். வாழ்த்துக்கள்.

 12. இந்த பதிவை படிப்பவர்கள் ஒரு விஷயத்தை மட்டும் கவனிக்காமல் விட்டிருக்க முடியாது – இது ஒரு பதிவு என்ற அளவில் இல்லாமல் ஒரு குட்டி புத்தகமே போடும் விதத்தில் விஷயங்களை நகர்த்தி வந்திருக்கிறது என்று.

  Intro-விலிருந்து ஒரு சீரான லாஜிக்கல் Flow. இந்த Flow-வை கைவசப்படுத்தி வைத்திருப்பவர்கள், தொழில்நுட்பம் மட்டும் இல்லை. அவர்கள் விரும்பும் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு வெற்றிகரமான புத்தகமாக எழுதிவிடலாம்.

  கிரி! உங்கள் நடையில் உங்களுக்கு பிடித்தமான ரஜினியைப்பற்றி ஒரு புத்தகம் எழுதுங்களேன். நல்ல வரவேற்பு கிடைக்கும்.

  இருக்கவே இருக்கிறது கிழக்கு பதிப்பகம், உங்கள் முதல் புத்தகத்திற்கு பிள்ளையார் சுழி போட.

  ரஜினி பற்றி புத்தகம் எழுத வேண்டும் என்று எண்ணம் உங்களுக்கு இதுவரை வந்திருக்காது என்று நினைக்கிறேன். திரியை கொளுத்து போட்டுட்டோமில்லை. இனிமே தானா வந்துடும்.

 13. //எனக்கு மட்டுமல்ல பலருக்கு இவர் உற்சாகம் கொடுத்து ஊக்கப்படுத்தியிருக்கிறார்.//

  இம்மாதிரி தொழில்நுட்ப பதிவுகள் தமிழ் சமூகத்திற்கு மிகவும் தேவை. அதனால் இவ்வாறு முயற்சி செய்கிறேன்.

  //நான் முன்பு தொழில்நுட்ப இடுகைகள் எழுதி இருந்தாலும் இவரின் உற்சாக வார்த்தைகளுக்கு பிறகே அதிகளவில் எழுத ஆரம்பித்தேன்.//

  நானெல்லாம் casual-ஆ ஏதாவது சொல்லி இருப்பேன். அது உங்களை இந்தளவு உற்சாகப்படுத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

  //என்னுடைய தொழில்நுட்ப இடுகைகளின் குரு என்றால் அது இவர் தான்.//
  கிரி. உங்களுக்கே இது ஓவரா தெரியலே. சரி. இந்த விஷயத்தை இப்படியே விட்டுடுவோம். .

  நன்றி கிரி.

 14. அஸ்ஸலாமு அலைக்கும்,

  சகோதரர் கிரி,

  அருமையான ஆக்கம். வாழ்த்துக்கள்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

 15. //பிரபு:கிரி! உங்கள் நடையில் உங்களுக்கு பிடித்தமான ரஜினியைப்பற்றி ஒரு புத்தகம் எழுதுங்களேன். நல்ல வரவேற்பு கிடைக்கும்.//

  நானும் என் பங்குக்கு விரும்பி கேட்டு கொள்கிறேன். யோசிங்க சார். உங்க எழுத்து அவ்வளவு எளிமையாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கு.

 16. அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  @ஜோதி உங்களின் நீண்ட பாராட்டிற்கு நன்றி

  @சிங்கக்குட்டி பதிவு என்பது ஒன்றை பதிய வைப்பது போல உள்ளது..ஆனால் இது ஒரு தளம் என்று வரும் போது எப்படிப்பொருந்தும்? பதிவு, இடுகை என்பதில் தான் குழப்பம் உள்ளது. ஆளாளுக்கு ஒன்று சொல்வதே இதற்கு காரணம்.

  @பெஸ்கி நீங்க கொடுத்த சுட்டி வேலை செய்யவில்லை

  @RK உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி 🙂 எனக்கு மாளவிகா ரொம்ப பிடிக்கும் அதனால் ஃப்ரொபைல் படமாக வைத்தேன் அதுவே பின் அடையாளமாகி விட்டது 🙂 இப்போதைக்கு மாற்ற விருப்பமில்லை பின்னாளில் மாற்றலாம்.

  @வெயிலான் காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு 🙂 உங்களை காக்கா என்று சொல்வதா நினைத்துக்காதீங்க ஹா ஹா ஹா

  @ஷங்கர் நீங்க கூட உங்க தளத்திற்கு முயற்சி செய்யலாம்.. இன்னும் நிறைய பேர் வருவாங்க

  @பிரபு குறிப்பா கூற வேண்டும் என்றால் உங்களுடைய தொழில்நுட்ப பதிவர்கள் வரிசையில் என்னையும் ஒரு பகுதியில் இணைத்ததே எனக்கு இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. நம்மையும் தொழில்நுட்ப பதிவராக கருதுறாங்க என்று அப்போது தான் புரிந்தது 🙂

  ரஜினி பற்றி சொன்னீங்க… ஆனால் ரஜினி பற்றி ஏற்கனவே நிறைய பேர் எழுதி இருக்காங்க ..இன்னும் எழுதுவாங்க. நாம கடல்ல கரைத்த பெருங்காயம் மாதிரி போய்டுவோம் ..அதனால என்னோட அனுபவங்களை நான் எழுதலாம். இப்ப இல்லை என்றாலும் பின்னொரு நாள்.

  அப்புறம் நான் சொன்னது எதுவும் ஓவர் இல்லை.. நான் உங்களை என் தொழில்நுட்பத்திற்கு குரு என்று சொல்லவில்லையே தொழில்நுட்ப இடுகைகளுக்கு தானே கூறி இருக்கிறேன்.. சரி தானே அது!

  @Mrs Krishnan உங்கள் அன்பிற்கு நன்றி.

 17. Hi Giri,

  Really a very useful post in Tamil for wordpress newbies. Yes wordpress really rocking… lots of people using it not only for blogging but also for business (up to medium level applications). I am using mostly wordpress over the custom coded one (nearly for 50 sites)…

  And one more thing, we can overcome that comment issue buy using relevant plugins.

 18. வணக்கம் கிரி அவரகளே
  இரண்டு நண்பர்கள் சுட்டிக்காட்டியதுப் போல் ரஜினியைப் பற்றி நீங்கள் ஒரு புத்தகம் எழுதலாம் அதற்கான முழு முழுத்தகுதியும் உங்களுக்கு இருக்கிறது.மேலும் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
  நன்றி
  அன்புடன்
  இளவரசன்

 19. என் தளம் பெரிய அளவில் பலரால் விரும்பப்படும் பேசப்படும் ஒரு தளமாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு 100% உள்ளது. இது தலைக்கனமல்ல என் மீது எனக்குள்ள நம்பிக்கை

  வாழ்த்துக்கள்… கிரி.

  நல்ல பதிவு

 20. தமிழ்,ராஜ், இளவரசன், இளா மற்றும் சரவணன் வருகைக்கு நன்றி

  @தமிழ் ரொம்ப சந்தோசம்.. உங்க WordPress பற்றிய அனுபவங்களை நேரம் கிடைக்கும் போது கூறுங்கள்.. கேட்க ஆவலாக இருக்கிறேன்.

  நீங்க கூறிய கமெண்ட் பற்றி நானும் அறிந்து இருக்கிறேன்.. ஒரு சிலருக்கு அந்த முறை கொஞ்சம் குழப்பத்தை தரும் என்று கருதுகிறேன். விரைவில் இந்த பிரச்சனை முற்றிலும் சரிசெய்யப்படும் என்று நம்புகிறேன்.

  WordPress really rocks! 🙂

 21. naanum oru blog aarampikka irukiiran . eppadi seyya vendum enpathi oru mail moolam vizakkamudiyuma. appuram idil tamil-l type pannuvathu eppadi.

 22. //என்னுடைய தொழில்நுட்ப இடுகைகளின் குரு என்றால் அது இவர் தான்.//

  குருவை மிஞ்சிய சிஷ்யராக மனப்பூர்வமான வாழ்த்துகள்.

 23. //உங்க WordPress பற்றிய அனுபவங்களை நேரம் கிடைக்கும் போது கூறுங்கள்.. கேட்க ஆவலாக இருக்கிறேன்.//

  Sure giri,

 24. உலகில் அதிக அளவிலான ஸெல்ப் ஹோஸ்டிங் செய்யப்பட தளங்கள் வேர்ட் பிரசில் அமைந்தவையே.
  அனைத்து வெப் ஹோஸ்டிங் தளங்களும் வேர்ட் பிரசை ஆதரிக்கின்றன. அதிக அளவில் டோவ்ன்லோடும் ஆவது வேர்ட் பிரஸ் தான்.

  ஸெல்ப் ஹோஸ்டிங் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ப்ளாக்கரில் இருந்து வேர்ட் பிரசுக்கு மாறியவர்களே.

  //WordPress ஏன் Blogger தளம் போல பிரபலமாகவில்லை?

 25. @ராஜேஷ் விரைவில் இது பற்றி எளிமையாக ஒரு இடுகை எழுதுகிறேன்.

  @Tech Shankar

  நீங்கள் கூறுவது சரி தான். நானும் இதை என் இடுகையில் குறிப்பிட்டு இருக்கிறேன். நான் கூறியது வலைப்பூக்களுக்கு மட்டுமே பெரிய தளங்களுக்கு அல்ல.

 26. தங்கள் பகிர்வுக்கு நன்றி, நண்பரே!

  நான் இரண்டு தளங்களையும் உபயோகித்து வருகிறேன். ப்ளாக்கர் பெரிதா? வேர்ட்பிரஸ் பெரிதா? என்று சொல்ல முடியவில்லை. ஏனெனில் இரண்டு தளங்களுக்கும் தனித்தன்மைகள் இருக்கின்றன.

  ப்ளாக்கரில் நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்துக் கொள்ளலாம், வெளித்தளங்களில் இருந்து பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம். ஆனால் அது வேர்ட்பிரஸில் இல்லை. (இலவச)வேர்ட்பிரஸ் பிரபலம் ஆகாததற்கு இது முக்கிய காரணம் என நினைக்கிறேன்.

  வேர்ட்பிரஸில் Search Engine Optimization முறைகள் Default-ஆக இருக்கிறது. ஆனால் ப்ளாக்கரில் நாம் தான் அதை செய்ய வேண்டும்.

  இப்படி இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது, அதை எழுதினால் பின்னூட்டம் நீண்டுவிடும்.

  Blogger vs WordPress போட்டி தீவிரம் அடைந்துள்ளது என நினைக்கிறேன். ப்ளாக்கர் தற்பொழுது பயனாளிகளிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருக்கின்றது. இன்னும் புதிய விஷயங்கள் ப்ளாக்கரில் எதிர்பார்க்கலாம்.

 27. @Abdul Basith நீங்க சொன்னது போல இரண்டிற்கும் தனித்தன்மை உள்ளது. மறுக்கவில்லை.

  கூகிள் ஆலோசனைகளை கேட்டு வருகிறது என்பதை நானும் படித்தேன். இரண்டிற்கும் ஆரோக்கியமான போட்டி என்றால் அதன் பயனாளர்களுக்கு நன்மை தானே!

  உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி

 28. “இன்று இல்லை என்றாலும் பின்னொரு நாளில் என் தளம் பெரிய அளவில் பலரால் விரும்பப்படும் பேசப்படும் ஒரு தளமாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு 100% உள்ளது”

  இது போன்ற மக்கள் பயனுள்ள அருமையான ஆக்கங்களை தந்தாலே போதும் உங்கள் நம்பிக்கை வீண் போகாது. – நன்றி நன்பரே

 29. அன்பு நண்பர்க்கு,
  வாழ்த்துக்கள்,
  தங்களின் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன்.
  மிகவும் அருமை.
  மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
  எனக்கும் பதிவுகளில் ஆர்வம் உண்டு.
  இது எனது முதல் பதிவு.
  உங்களால் அது இப்போது உயிர் பெற்றுள்ளது.

  நன்றி.

  தொடரட்டும் தங்களின் முயற்ச்சி!

  சுப்பிரமணி,
  பொள்ளாச்சி.

 30. நிறைய புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் . நன்றி. ஜெயராமன்

 31. வணக்கம் ஐயா. எனக்கு இதை பற்றி ஒன்றும் புரியவில்லை. தயைசெய்து ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். நன்றி.

 32. வணக்கம் கிரி

  நான்கூட எனது தளத்தை முழுமையாக வோர்ட்பிரஸ்க்கு மாற்றலாம் என்ற எண்ணத்தில் தான் உள்ளேன். ஆனால் தற்பொழுதே பிளாக்கரில் கஸ்டம் டொமைனில்(automobiletamilan.com) இயங்குகின்றது. இதே டொமைனில் வோர்ட்பிரஸ் செல்ஃப் ஹோஸ்டிங்கிற்க்கு முழுமையாக மாற்றமுடியுமா– மாற்றமுடியும் என சில ஆங்கில கட்டுரைகளை படித்தேன் ஆனால் சரிவர அறிய இயலவில்லை.. தங்களுக்கு ஏதேனும் விபரங்கள் தெரியும் எனில் தெரியப்படுத்துங்கள் நன்றி

  எனது தளம் automobiletamilan.com

 33. வணக்கம் ராயதுரை

  உங்களுடைய பழைய டொமைன் பெயரிலேயே ஸெல்ப் ஹோஸ்டிங் தளத்திற்கு முழுமையாக மாற்றம் செய்ய முடியும். ஸெல்ப் ஹோஸ்டிங் செய்தால் நான் கூறியது போல ஆண்டுக்கட்டணம் உண்டு தோராயமாக 4500 வருடத்திற்கு ஆகலாம்.

  உங்களுக்கு இதற்கு மாற்றுவதில் தொழில்நுட்ப அறிவு இருந்தால் சரி.. இல்லை என்றால் நீங்கள் இதற்கு என்று உள்ளவர்களை தான் நாட வேண்டும். இதற்கு 10000 வரை ஆகலாம். உங்களுக்கு மேலும் தகவல் வேண்டும் என்றால் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நான் விவரம் தர முயற்சிக்கிறேன்.

  நன்றி

 34. WordPress, Blogger & Selfhosting WordPress பற்றி மிக அழகாக, தெளிவாக எழுதியுள்ளீர்கள்.

  wordpress.com மற்றும் wordpress.org பற்றியும் எழுதியிருக்கலாம்!

 35. மிக அற்புதமாக தொகுத்து கொடுத்து இருக்கீங்க. வாழ்த்துகள் கிரி.

 36. வேர்டு பிரஸ் பற்றிய தகவலையும், அதை தொடங்குபவர்களின் சந்தேகங்களையும் எளிமையாக பதிவிட்டுள்ளீர்.
  வாழ்த்துகள்.

 37. //எடுத்துக்காட்டாக “எந்திரன் திரைவிமர்சனம்” என்று நீங்கள் கூகிள் ல் தேடினால் என் தளம் தான் முன்னணியில் இருக்கும். இது தற்போதைய (12-10-2010) நிலைமை ஆகும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும்.//

  பாஸ் இன்னைக்கி கூட (31/01/2017) நீங்க தான் முன்னிலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here