சிபில் ஸ்கோரை உயர்த்துவது எப்படி?

12
சிபில் ஸ்கோரை உயர்த்துவது எப்படி?

ரு நபரின் பணப் பரிவர்த்தனை எவ்வாறு உள்ளது? எவ்வாறு பணத்தைக் கையாளுகிறார் என்பதை வங்கிகளுக்குத் தரும் அமைப்பே சிபில். Image Credit

சிபில் ஸ்கோர் என்றால் என்ன? எதனால் சிபில் ஸ்கோர் குறைகிறது? என்பவற்றை ஏற்கனவே பார்த்து விட்டோம்.

எனவே, சிபில் ஸ்கோர் எப்படி அதிகரிப்பது என்று தற்போது பார்ப்போம்.

சிபில் ஸ்கோரை உயர்த்துவது எப்படி?

சிபில் ஸ்கோர் எதனால் குறைகிறது என்பதற்கான காரணங்களைத் திருப்பிப் போட்டாலே உயர்த்துவதற்கான வழிமுறைகளை அறிந்து விடலாம். 

கிட்டத்தட்ட தீர்வுகள் இரண்டுமே ஒன்று தான்.

தவணைத்தேதியில் கட்டுதல்

கடனட்டை (கிரெடிட் கார்டு), கடன் உட்படப் பணம் சார்ந்த அனைத்துப் பணிகளையும் தேதி தவறாமல், சரியான முறையில் செலுத்த வேண்டும்.

தவணைத்தேதி கடந்து செலுத்தக் கூடாது.

அறிக்கை விவரம்

சிபில் அறிக்கையில் என்னென்ன தவறுகளைச் செய்து இருக்கிறோம் என்று விரிவாகக் காண முடியும். எனவே, அவற்றைச் சரி செய்தால் ஸ்கோர் உயரும்.

சில நேரங்களில் தவறான விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கலாம். அந்நிலையில் வங்கியை அணுகி அத்தவறை சரி செய்ய வேண்டும்.

வரம்பை மீறிய செலவு

உங்களுடைய Credit Limit ₹1,00,000 என்று வைத்துக்கொண்டால், அதிகபட்சம் 30% (30,000) மட்டுமே செலவு செய்ய வேண்டும்.

சில நேரங்களில் இதைத்தாண்டி செல்லும் போது சிபில் ஸ்கோர் குறைந்து விடும். இதைத்தவிர்க்க அடுத்த மாதங்களில் இத்தவறை சரி செய்து விட வேண்டும்.

மேற்கூறியது பெருங்குற்றமல்ல ஆனால், உடனடியாகச் சரி செய்து கொண்டால், ஸ்கோர் திரும்ப உயர்ந்து விடும்.

தவறை சரி செய்ய வேண்டும்

சில நேரங்களில், Credit Limit தாண்டிச் செலவு செய்வோம், கடனுக்குப் பல வங்கிகளில் விண்ணப்பிப்போம், புதிய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்து இருப்போம், தவணை கட்ட தவறி இருப்போம்.

மேற்கூறிய நடவடிக்கைகளை அடுத்து வரும் மாதங்களில் தவிர்ப்பதன் மூலம், மெதுவாக ஸ்கோர் உயர்ந்து விடும்.

அறிக்கையைக் கவனித்து தவறுகளைச் சரி செய்து கொள்ள முடியும்.

உச்ச வரம்பு

தொடர்ச்சியாகக் கிரெடிட் கார்டு பயன்படுத்தித் தவறாமல் கட்டணத்தைச் செலுத்தும் போது வங்கியே Credit Limit உயர்த்தும்.

இதற்குக் கிரெடிட் கார்டு வாங்கிக் குறைந்தது ஆறு மாதங்களாகி இருக்க வேண்டும்.

ஒருவேளை ஒரு வருடமாகியும் Credit Limit உயர்த்தப்படவில்லையென்றால், Form 16 கொடுத்துச் சம்பளத்தின் அடிப்படையில் உயர்த்தித் தரக் கேட்கலாம்.

Credit Limit உயர்த்துவதால், கூடுதல் செலவு செய்தாலும் பாதிக்கப்படாது. மனதில் நிறுத்த வேண்டியது, Credit Limit எவ்வளவாக இருந்தாலும் 30% தாண்டக் கூடாது.

Credit Limit அதிகம் கிடைத்தால், உயர்த்திக்கொள்வது நல்லது.

சிபில் ஸ்கோர் இலவசமாகப் பார்ப்பது எப்படி?

https://www.experian.in/ தளத்தில் இலவசமாகப் பார்க்கலாம்.

CRED பயன்படுத்துவராக இருந்தால், மாதம் ஒருமுறை இலவசமாகப் பார்க்கலாம். இவையல்லாமல் Paytm, Gpay ல் இலவசமாகப் பார்க்கலாம்.

நிறுவனத்துக்கு நிறுவனம் சிபில் ஸ்கோர் மதிப்பீடு மாறுபடும். https://www.cibil.com/ தளத்தில் சரியான விவரங்களைப் பெறலாம் ஆனால், கட்டணம் உண்டு.

Premium, Standard & Basic முறையில் CIBIL Score விவரங்களைப் பணம் கட்டிப்பார்க்க முடியும்.

https://www.cibil.com/choose-subscription

எனவே, மேற்கூறிய இலவச தளங்களே போதுமானது.

தொடர்புடைய கட்டுரைகள்

சிபில் ஸ்கோர் என்றால் என்ன? | FAQ

சிபில் ஸ்கோர் குறையக் காரணங்கள் என்ன?

கிரெடிட் கார்டு பயன்கள் என்ன?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

12 COMMENTS

 1. Gpay இல் தற்போது இலவசமாக நன்கு விவரமாக சிபில் ஸ்கோர் பார்க்கலாம். Unlimited.

 2. இதற்கு முன் நீங்கள் எழுதிய பதிவை படித்து தான்.. இது குறித்த புரிதல் எனக்கு வந்தது.. இந்த பதிவும் எளிமையாகவும், விளக்கமாகவும் இருக்கிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 3. @ஹரிஷ்

  “Gpay இல் தற்போது இலவசமாக நன்கு விவரமாக சிபில் ஸ்கோர் பார்க்கலாம். Unlimited.”

  நீங்க சொன்ன பிறகே கவனித்தேன் ஆனால், இதில் மற்ற தள மதிப்பெண்களை விட குறைவாக இருக்கிறது.

  @யாசின் 🙂 .

 4. ‘’ நீங்க சொன்ன பிறகே கவனித்தேன் ஆனால், இதில் மற்ற தள மதிப்பெண்களை விட குறைவாக இருக்கிறது.’’

  அதெப்படி அப்படி வரும். சிபில் ஸ்கோர் ஒவ்வொரு அப் க்கும் மாறுமா? புரியவில்லையே.

  எனக்கு paytm, sbi card, app gpay அனைத்திலும் ஒரே மாதிரி சிபில் ஸ்கோர் தான் காட்டுகிறது.

 5. @ஹரிஷ்

  “அதெப்படி அப்படி வரும். சிபில் ஸ்கோர் ஒவ்வொரு அப் க்கும் மாறுமா? புரியவில்லையே.”

  இக்கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டு இருப்பேன்.

  நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். காரணம், ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு Algorithm பின்பற்றுகிறது.

  CIBIL நிறுவனம் தரும் மதிப்பெண் தான் அதிகாரப்பூர்வமானது. வங்கிகள் கடன் கொடுக்கும் முன் இங்கே இருப்பதையே எடுத்துக்கொள்ளும்.

  எனக்கு CRED, Gpay 800+ காட்டுகிறது. Experian, Paytm 870+ காட்டுகிறது.

 6. நான் சொல்வது சிபில் ஸ்கோர் மட்டுமே. Crif. Exprian. இன்னும் சில இருக்கிறது. இதெல்லாம் உபயோகமில்லாத ஸ்கோர்கள். கடன் வேண்டும் என்று வங்கிக்கு சென்றால் சிபில் ஸ்கோர் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும். நான் Gpay இல் சிபில் ஸ்கோர் வருவது பற்றி மட்டுமே கூறினேன். Gpay. Sbi Credit card app. Airtel thanks app. Paytm. இதிலெல்லாம் சிபில் மட்டுமே வருகிறது. இதில் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும்.

 7. ‘’ எனக்கு CRED, Gpay 800+ காட்டுகிறது. Experian, Paytm 870+ காட்டுகிறது’’

  Cred இல் சிபில் ஸ்கோரே வராதே. உங்களுக்கு எப்படி வரும்? Cred இல் வருவது Experian score and Crif score மட்டுமே. அதில் சிபில் ஸ்கோர் வருவதில்லை. நான் சிபில் ஸ்கோர் மட்டுமே பார்ப்பேன். மற்றவை எல்லாம் நானும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை

 8. சிறிய மாற்றம். Paytm இல் தற்போது சிபில் காட்டுவதில்லை. Equifax and Experian score மட்டுமே வருகிறது. தற்போது தான் அதை கவனித்தேன். இது உபயோகமில்லாத எதற்கும் உதவாத ஸ்கோர் என்னை பொருத்தவரை

 9. @ஹரிஷ்

  “நான் சொல்வது சிபில் ஸ்கோர் மட்டுமே. Crif. Exprian. இன்னும் சில இருக்கிறது. இதெல்லாம் உபயோகமில்லாத ஸ்கோர்கள். கடன் வேண்டும் என்று வங்கிக்கு சென்றால் சிபில் ஸ்கோர் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்”

  இதற்கு கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளேன், CIBIL score மட்டுமே அதிகாரப்பூர்வமானது என்று.

  மற்றவை பயனில்லை என்று கூற முடியாது காரணம், சிபில் ஸ்கோரில் பிரச்சனை என்றால், வங்கியில் இதன் விவரங்களை pdf ஆக கேட்பார்கள்.

  சிபிலில் பெற கட்டணம் செலுத்த வேண்டும் ஆனால், Experian தளத்தில் இலவசமாக பெறலாம்.

  எடுத்துக்காட்டுக்கு, என் பழைய கார்டு ஒன்று Active ஆக காட்டிக்கொண்டு இருந்தது, அதோடு HDFC Limit காட்டாமல் இருந்தது.

  அதற்கு இந்த PDF தான் வங்கிக்குக் கொடுத்தேன்.

  “Cred இல் வருவது Experian score and Crif score மட்டுமே. அதில் சிபில் ஸ்கோர் வருவதில்லை.”

  இதைத்தான் கூறி இருந்தேன், ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு algorithm பின்பற்றும் என்று.

 10. கிரி. முதல் முறையாக நான் கிரெடிட்கார்டு பில் பே செய்ய மறந்து போய் விட்டேன். அதனால் என்னுடைய சிபில் ஸ்கோர் 787 இல் இருந்து 718 க்கு வந்துவிட்டது. மிகவும் வருத்தமாக உள்ளது. SBI CARD வேண்டாம் என்று முடிவு செய்து வாடிக்கையாளர் சேவைமைய அதிகாரியிடம் பேசினேன். அவர் நிறைய மூளை சலவை செய்து பார்த்தார் நான் மசியாததால் ஒப்புக்கொண்டு உங்களுக்கு 4 நாட்களுக்குள் கால் வரும் அதற்கு பதில் சொல்லிவிடுங்கள் உங்கள் கார்டு ரத்துஆகி விடும் என தள்ளிபோட்டார். சரி கால் வரட்டும் நம்மை யாராலும் மாற்ற முடியாது என இருந்தேன். எந்த காலும் வரவில்லை. இதற்கு நடுவில் நான் cred இல் இருந்து sbi card ஐ நீக்கி விட்டேன். மனைவி add on sbi card இல் 618 ரூபாய்க்கு பர்சேஸ் செய்துவிட்டார். நான் இந்த sbi card closing விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களும் ரத்துசெய்யவில்லை. மனைவி உபயோகித்த அந்த 618 ரூபாய் பில் april 22 அன்று பில் வந்துவிட்டது. நான் cred இல் இருந்து sbi card ஐ நீக்கியதால் எனக்கு பில் வந்ததே தெரியவில்லை. மே மாதம் 12 பில் கடைசி நாள். Sbi card உம் எனக்கு sms WhatsApp எதிலும் பில் ரிமைண்டு செய்யவில்லை. Email செய்திருந்தார்கள். மிக அதிகமாக spam mail notification வருவதால் mail notification off செய்திருந்தேன். நானாக சென்று பார்த்தால் தான் உண்டு. அவ்வப்போது பார்ப்பேன் அதற்குள் நிறைய மெயில் வந்து sbi mail கீழே சென்றுவிட்டது. கடைசியாக மே 25 அன்று WhatsApp இல் remain செய்தார்கள் எனக்கு அப்போது தான் sbi card மனைவி உபயோகித்தது நினைவு வர உடனடியாக 618 கட்டி பிறகு customer care இல் பேசி அவர்கள் அபராதமாக வட்டியுடன் போட்ட 538 ரூபாய் திரும்ப அளித்துவிட்டார்கள். ஆனால் cibil இல் எனக்கு 787 இல் இருந்து 718 க்கு ஸ்கோர் குறைந்து விட்டது. Payment history 100% இருந்து 99.80% ஆக வந்துவிட்டது. எனக்கு மிக கவலையாக உள்ளது. இத்தனை வருடமாக பாதுகாத்து வந்த சிபில் ஸ்கோர் இப்போது சிறிய தவறால் பயங்கரமாக அடிவாங்கிவிட்டது. எனக்கு வீடு லோன் போகும் போது இது பாதிப்பை உண்டாக்குமே என வருத்தமாக உள்ளது. இதை சரிசெய்ய ஏதாவது வாய்ப்பு உள்ளதா?

 11. @ஹரிஷ்

  “நான் இந்த sbi card closing விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களும் ரத்துசெய்யவில்லை.”

  வழக்கமாக App ல் card closure இருக்கும், அதைபயன்படுத்தி ரத்து செய்தால், தானியங்கியாக நடக்கும் என்று நினைக்கிறன்.

  முயற்சித்தது இல்லை, இந்த வருட இறுதியில் முயற்சிப்பேன்.

  நீங்கள் இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. ஓரிரு மாதங்களில் திரும்பப் பழைய மதிப்பெண்ணுக்கு வந்து விடும்.

  இனி வரும் காலங்களில் எந்தத் தவறும் நடக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்.

  நீங்கள் சரியாக அனைத்தையும் செய்து இருந்தால், 800 க்கு மேலே இருந்து இருக்க வேண்டுமே! 787 எப்படி வந்தது?

  750.. அதற்கு மேல் என்பதே சரியான மதிப்பெண். 718 என்றால், கடனுக்குச் செல்லும் போது வட்டி கூடுதலாகலாம்.

  ஆனால், உடனே கடன் பெற போகிறீர்கள் என்றால் மட்டுமே யோசிக்க வேண்டும்.. இன்னும் ஓரிரு மாதங்களுக்கு மேல் ஆகும் என்றால், கவலை வேண்டியதில்லை.

  அபராத பணத்தை திரும்பப் பெறுவதால், சிபிலில் மாறாது ஆனால், இதை வாடிக்கையாளர் சேவை மையத்திடம் பேசிப் பார்க்கலாம்.

  தவறான என்ட்ரி என்றால், சரி செய்து கொடுத்து விடுவார்கள் ஆனால், இதற்கு அவ்வாறு செய்வார்களா என்பது சந்தேகமே!

  இருப்பினும் அவர்களிடம் கேட்காமல் இருக்க வேண்டாம். கேளுங்கள்! என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

  ஒருவேளை அவர்கள் அப்டேட் செய்தால், சிபிலில் அப்டேட் ஆகி விடும்.

 12. நீங்கள் சரியாக அனைத்தையும் செய்து இருந்தால், 800 க்கு மேலே இருந்து இருக்க வேண்டுமே! 787 எப்படி வந்தது?

  Home loan க்கு யூனியன் வங்கியில் முயற்ச்சித்தேன். அவர்கள் 25 லடசம் வரையில் தான் தருவோம் என்றார்கள். 25 லட்சத்திற்கு வீடு எங்கே இருக்கிறது. அவர்கள் லாகின் செய்து சிபில் பார்த்ததால் சிபில் மதிப்பென் 15 குறைந்து விட்டது. அதுவும் இல்லாமல் நான் American Express. அது இது என்று விவரம் இல்லாமல் நிறைய கார்டு ஆன்லைனில் pancard விவரங்கள் கொடுத்து அடிக்கடி check செய்ததால் அதற்காகவும் சிபில் குறைந்து போனது. பிறகு தான் தெரிந்தது eligibility பார்த்தாலே சிபில் குறையும் என்று. அதன்பிறகு அப்படி செய்வதை நிறுத்தி விட்டேன்…

  ‘’ வழக்கமாக App ல் card closure இருக்கும், அதைபயன்படுத்தி ரத்து செய்தால், தானியங்கியாக நடக்கும் என்று நினைக்கிறன்’’

  அப்படி இல்லை. அப்படி செய்தால் உங்கள் ரிக்வெஸ்ட் அவர்களுக்கு போகும் அவ்வளவுதான் உங்களுக்கு கால் ஓயாமல் brainwash செய்வார்கள். அவ்வளவு சுலபமாக sbi card இல் இருந்து நாம் வெளி வரமுடியாது. இது என் அனுபவம். நான் தீர்மானமாக இருந்தாலும் கடைசியாக ஓகே என்று சொல்லி ஒரிரு நாளில் எங்கள் closing team உங்களிடம் பேசுவார்கள் என்று கூறி வைத்துவிடுவார்கள் இதுவரை எனக்கு அவர்களிடம் இருந்து கால் வரவில்லை. மிக மோசம் sbi card இந்த விஷயத்தில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here