சிபில் ஸ்கோர் குறையக் காரணங்கள் என்ன?

2
சிபில் ஸ்கோர் குறையக் காரணம்

ற்காலத்தில் சிபில் ஸ்கோர் அனைவருக்குமே முக்கியமானதாக மாறி விட்டது. சிபில் ஸ்கோர் தேவையைத் தள்ளிப்போடலாமே தவிர தவிர்க்க முடியாது. Image Credit

சிபில் ஸ்கோர்

அலட்சியமாக இருந்தால், எதிர்காலத்தில் அவசரமாகப் பணம் தேவைப்படும் காலத்தில் இப்பிரச்சனை மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.

சிபில் ஸ்கோர் என்றால் என்ன என்பது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதி இருப்பதால், சிபில் ஸ்கோர் குறையக் காரணங்கள் என்னவென்பதைப் பார்ப்போம்.

குறைந்த கட்டணம்

கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்தும் போது முழுமையும் அல்லது குறைந்த பட்ச தொகையைச் செலுத்த கேட்கும்.

அப்போது முழுமையான தொகையையும் செலுத்த வேண்டும்.

குறைந்த பட்ச தொகையைச் செலுத்தினால், அதிகளவில் வட்டி கட்ட நேரிடும், மதிப்பெண்ணும் குறையும்.

முறையற்ற கட்டணம் செலுத்துதல்

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் சரியான தேதியில் (Due date) பணத்தைச் செலுத்தி விட வேண்டும், ஒரு மாதம் தவறினாலும் மதிப்பெண் குறையும்.

வங்கியில் கடன் பெற்றுள்ளவர்கள் தவறாது EMI செலுத்த வேண்டும்.

அதிகக் காலம்

பயன்படுத்தும் கிரெடிட் கார்டின் காலம் (Credit History) அதிகமாக இருப்பது நல்லது. எனவே, இருப்பதிலேயே பழைய கிரெடிட் கார்டு கணக்கை முடக்கக் கூடாது.

தேவையற்ற கார்டுகளின் கணக்கை முடக்க நினைத்தால், புதிய கடனட்டைகளை முடக்கலாம்.

உச்ச வரம்பு

உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பில் (Credit Limit) அதிகபட்சம் 30% மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டுக்கு, கிரெடிட் உச்ச வரம்பு ₹1,00,000 என்றால், ₹30,000 மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

முழுமையையும் பயன்படுத்தினால், நமக்கு அதிகப் பணத்தேவை இருப்பதாகக் கருதி மதிப்பெண் குறையும்.

அதிகளவில் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றால், வங்கியிடம் தொடர்பு கொண்டு உச்ச வரம்பை உயர்த்த வேண்டுகோள் வைக்க வேண்டும்.

வழக்கமாக நமது ஊதிய விவரங்களைப் பெற்று (Form 16), உச்ச வரம்பை உயர்த்தும் அளவுக்கு வருமானம் இருப்பதாகக் கருதினால் உயர்த்துவார்கள்.

அல்லது நமது தொடர்ச்சியான பயன்பாட்டின் அளவைப் பொறுத்து, முறையாக பணம் செலுத்துவதை வைத்து வங்கியே தானியங்கியாக உயர்த்தும்.

பல கணக்குகள்

வங்கிக் கடன் கணக்குகள், கடனட்டை கணக்குகளில் முடிந்த வரை செலவுகளைச் சமமாகச் செய்ய வேண்டும்.

ஒரு கணக்கில் மட்டுமே தொடர்ந்து செலவுகளைச் செய்தாலும் மதிப்பெண் குறையும்.

அதிக விண்ணப்பம்

புதிதாக ஒரு கடனட்டையை வாங்க விண்ணப்பித்தால், விண்ணப்பிக்கப்பட்ட வங்கி நம் சிபில் ஸ்கோரை சோதனை செய்யும்.

இவ்வாறு ஒவ்வொருமுறை சோதிக்கும் போதும் மதிப்பெண் குறையும்.

எனவே, ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனட்டைகளுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.

வங்கியில் கடன் வாங்குகிறீர்கள் என்றால், சிபில் ஸ்கோர் சரியாக இருந்தால் மட்டுமே கடன் கிடைக்கும்.

இல்லையென்றாலும் கிடைக்கும் ஆனால், வட்டி அதிகமாக இருக்கும்.

தவறான விவரங்கள்

சிபில் ஸ்கோரில் வங்கிகள் கொடுக்கும் விவரங்களில் தவறு இருந்தாலும், மதிப்பெண் குறைய வாய்ப்புண்டு.

எனவே, சிபில் ஸ்கோரை அவ்வப்போது பரிசோதித்துத் தவறான விவரங்கள் இருந்தால், வங்கியைத் தொடர்பு கொண்டு சரி செய்ய வேண்டும்.

வழக்கமாக இறுதி 36 மாதங்களின் விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

மதிப்பெண் 750 க்கு கீழே குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது, அதிகபட்சம் 900 மதிப்பெண்கள்.

சிபில் ஸ்கோர் குறையக் காரணங்கள் பல இருந்தாலும், சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஸ்கோரை உயர்த்த முடியும், கவலை வேண்டியதில்லை.

சிபில் ஸ்கோர் இலவசமாகப் பார்ப்பது எப்படி?

https://www.experian.in/ தளத்தில் இலவசமாகப் பார்க்கலாம்.

CRED பயன்படுத்துவராக இருந்தால், மாதம் ஒருமுறை இலவசமாகப் பார்க்கலாம்.

நிறுவனத்துக்கு நிறுவனம் சிபில் ஸ்கோர் மதிப்பீடு மாறுபடும். https://www.cibil.com/ தளத்தில் சரியான விவரங்களைப் பெறலாம் ஆனால், கட்டணம் உண்டு.

எனவே, மேற்கூறிய தளங்களே போதுமானது.

தொடர்புடைய கட்டுரைகள்

சிபில் ஸ்கோர் என்றால் என்ன? | FAQ

கிரெடிட் கார்டு பயன்கள் என்ன?

CRED | Credit Card Management App

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. கிரி.. சும்மா சிபில் ஸ்கோர பத்தி பிரிச்சி மேஞ்சி எழுதி இருக்கீங்க!!! செம்ம கிரி.. இந்த பதிவு நிச்சயம் இன்று எனக்கு பலனில்லை என்றாலும், இதை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சியே!!! ஒரே ஒரு debit மட்டுமே இங்கு வைத்து இருக்கிறேன்.. அதனால் இது வரை வங்கியில் இங்கும், ஊரிலும் கடன் வாங்க முயற்சிக்கவில்லை..

  எனக்குள் ஒரு சின்ன வட்டத்தை மட்டும் போட்டு வைத்து கொண்டு அதற்குளே சுற்றி சுற்றி வருவதால் கிரெடிட் கார்டு, வங்கி கடன் என செல்லவில்லை.. இந்தியாவில் பணியில் இருந்திருந்தால் ஒரு வேளை இதை பற்றி யோசித்து இருப்பேன். வெளிநாடு என்பதால் எப்போதும் ஒரு சிறு தயக்கம் இருப்பதால், எனக்கு அவசியமாக தோன்றவில்லை.. அலுவலகத்தில் கடனட்டை இல்லாத ஒரு ஊழியன் நான் மட்டும் தான் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.. சக ஊழியர்கள் இதற்காகவே எப்போதாவது என்னை ஓட்டுவது உண்டு.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. @யாசின்

  “சும்மா சிபில் ஸ்கோர பத்தி பிரிச்சி மேஞ்சி எழுதி இருக்கீங்க!!! செம்ம கிரி.. ”

  நன்றி யாசின் 🙂

  கடனட்டை சரியாக பயன்படுத்தினால் இலாபம் மட்டுமே.

  விரைவில் கடனட்டை மற்றும் இணையத்தின் வழியாக எவ்வளவு லாபம் அடைந்துள்ளேன் என்பதை தனிக்கட்டுரையாக எழுதுகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here