அனைவருக்குமே புதிய உலகம் காண விருப்பம் இருக்கும். வழக்கமான பழகிப்போன இடத்தில் இருந்து புதிய இடம் கண்டால் வித்யாசமான உணர்வாக இருக்கும்.
அப்படிப்பட்ட இடத்தைக் காண எளிமையான 4 வழிகள் உள்ளது. Image Credit
1. ஃபேஸ்புக்கில் இருந்து வெளியே வந்து விடுங்கள்.
2. ட்விட்டர் பக்கமே செல்லாதீர்கள்.
3. WhatsApp ல் உள்ள அனைத்துக் குழுக்களில் இருந்தும் வெளியே வந்து விடுங்கள். தொடர்ச்சியாகக் கண்டதையும் Forward அனுப்புவர்களைத் தடை செய்து விடுங்கள்.
4. எதிர்மறை செய்திகளைக் கொடுத்து உங்களுக்கு மன உளைச்சல் தரும் செய்தித் தளங்களை, சேனல்களைப் புறக்கணித்து விடுங்கள்.
அப்புறம் பாருங்க புதிய உலகம் எப்படி அற்புதமானதாக இருக்கிறது என்று 🙂 .
இவற்றைப் பின்பற்றினால் நீங்கள் அன்பான, அமைதியான, மகிழ்ச்சியான புதிய உலகத்தைக் காணலாம். அட! இப்படி ஒன்றுள்ளதே நமக்குத் தெரியாமல் போனதே! என்று வியப்படைவீர்கள்.
இதை விளையாட்டுக்கு கூறவில்லை, அனுபவித்ததால் கூறுகிறேன்.
இவற்றில் அனைத்தையும் 100% நான் பின்பற்றவில்லை என்றாலும், எனக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் அனைத்தில் இருந்தும் சில வருடங்களுக்கு முன்பே விலகி விட்டேன், ரொம்ப நிம்மதியாக உள்ளது.
கூறியதை நம்பவில்லை என்றால், எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு வாரம் இருந்து பாருங்கள், மன அழுத்தம் குறைந்து உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.
நண்பர்களை, இதுவரை தொடர்பு கொள்ளாதவர்களைத் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பீர்கள். இது போல எண்ணற்ற வழக்கத்துக்கு மாறான செயல்களில் ஈடுபடுவீர்கள்.
இவை அனைத்துமே உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியான மனநிலையையும், அதிக நேரத்தையும் கொடுக்கும். இதுவரை தள்ளிப்போட்டு இருந்த பல வேலைகள் நடந்து முடிந்து இருக்கும்.
உங்கள் முயற்சி வெற்றி பெற, புதிய உலகம் காண வாழ்த்துகள் 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்
நம் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?
நடுத்தர வகுப்பு மக்கள் என்பவர்கள் யார்?
கொசுறு
நம்முடைய நிலைக்கு நாமே தான் காரணம் வேறு யாருமல்ல (சில விதிவிலக்குகளுடன்). எனவே, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு எதிர்மறை செய்திகளைப் புறக்கணித்தால், மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும். எண்ணம் போல வாழ்க்கை.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
super Bro.i already away from Facebook fell stress free.
கிரி, நீங்க சொன்னவற்றில் 80 % தவிர்த்து விட்டேன்.. கூடிய மட்டில் 20 % பூர்த்தியடைய முயற்சிக்கிறேன்.. என்றுமே தொழில்நுட்பம் இல்லாத உலகத்தில் ஆர்வம் கொண்டவன் தான்.. இவற்றில் சில நன்மைகள் இருந்தாலும், நன்மைகளை காட்டிலும் நமது நேரம் வீணாக செலவாகிறது என்பது மறுக்க முடியாது..
இவைகளை தவிர்த்து, நிறைய புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம்.. குறிப்பாக கிராமங்களுக்கும், மலை பிரதேசங்களுக்கும்… கல்லூரி நாட்களில் பல சமயங்களில் நண்பர்களுடன் சேர்ந்து அடித்த கூத்து. கும்மாளம், கேளிக்கை இவைகளில் இருந்த மகிழ்ச்சி…அதே நண்பர்களுடன் இன்று வாட்சப் குருப்புகளில் இருக்கிறதா என்றால் நிச்சயம் கிடையாது… இவைகள் எல்லாம் ஒரு போலியான மகிழ்ச்சியாகவே தோன்றுகிறது…
ஒரு குழந்தை கத்தியை வைத்து விளையாடும் போது பதறும் பெற்றோர்கள், கைபேசியை வைத்து விளையாடும் போது பதறுவது கிடையாது… கத்தியை காட்டிலும் கைபேசியில் ஆபத்து அதிகம் என்பதை உணர்வதில்லை, மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் நினைக்கிறார்கள்.. இந்த குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று கணிக்க முடியவில்லை..
வாலிப பருவத்தில் இருப்பவர்கள் நிலை தான் பரிதாபம்.. யாருடனும் பேசவும், பழகவும் நினைப்பதில்லை.. உறவுகளுக்கு இவர்கள் முக்கியத்துவம் கொஞ்சமும் கொடுப்பதில்லை.. எல்லாவற்றிக்கும் பதில் மீம்சாக இருக்கிறது..ஓடி,ஆடி விளையாடிய நம்மை கைபேசி ஒரே இடத்தில் கட்டி போட்டு விட்டது .. பகிர்வுக்கு நன்றி கிரி..
50 % வெளியே வந்துவிட்டேன் நீங்க மேலே சொன்னதில் இருந்து, இன்னும் முழுமையாக வெளியே வரவேண்டும். சிறந்த பதிவு கில்லாடி.
@விஜயகுமார் @ விஜய் 🙂
@யாசின் சுருக்கமாக தொழில்நுட்பம் நம்மை இணைத்த அதே அளவுக்கு பிரித்தும் விட்டது.
தொழில்நுட்பத்தால் பலரிடையே தொடர்பு கொள்ள முடிகிறது. அதே தொழில்நுட்பத்தால் வீட்டில் இருப்பவர்களிடையே கூட சரியாக பேச முடியாமல் போய் விடுகிறது.