ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா?!

3

ற்போது ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா?! என்ற சர்ச்சை நடந்து கொண்டு இருக்கிறது. Image Credit

ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா?!

Wall Street Journal” நிறுவனம், ஜிமெயில் தன் பயனாளர்கள் மின்னஞ்சலை Developers படிக்க உதவுகிறது என்று சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

ஃபேஸ்புக் போல அல்லாமல் கூகுள் துவக்கத்தில் இருந்தே Security Check என்று நமக்குத் தகவல் அனுப்பிச் சோதனை செய்ய அறிவுறுத்தும்.

இதைச் செய்தால் நமக்கு 2 GB கூடுதல் இடம் கூடக் கொடுத்தது, நானும் இது குறித்து எழுதி இருக்கிறேன், இரு முறை (2015 & 2016) 2+2 GB பெற்று இருக்கிறேன்.

இது என்ன சர்ச்சை?

Third Party செயலிகள், மென்பொருளை அணுகும் போது சில நேரம் அவை தங்கள் சேவையை மேம்படுத்த நம்முடைய கூகுள் கணக்கின் அனுமதி கேட்கும்.

தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது என்னவென்று தெரியும், சிலருக்கு இது என்னவென்று தெரியாமல் அனுமதித்து விடுவார்கள்.

ஃபேஸ்புக்கில் சமீபத்தில் நடந்த பிரச்சனையும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்று தான்.

ஃபேஸ்புக் இது குறித்துப் பயனாளர்களுக்கு அறிவுறுத்தவில்லை அல்லது புரியாத வகையில் கூறியது ஆனால், கூகுள் தொடர்ச்சியாக அறிவுறுத்தியது.

இவ்வாறு அனுமதி பெற்ற Developer கள் நம்முடைய மின்னஞ்சலைப் படிக்க முடியும் என்பது தான் தற்போதைய சர்ச்சையாக எழுந்துள்ளது. இது உண்மையா என்றால், ஆம்! உண்மை தான்.

இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

இது போல அனுமதி கேட்கும் போது அனுமதி கொடுக்கக் கூடாது. நிறுவனத்தின் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே கொடுக்கலாம். உதாரணத்துக்கு மைக்ரோசாஃப்ட்.

உதாரணத்துக்கு ஒரு தளத்தில் நுழைய மின்னஞ்சலை Login ஆகப் பயன்படுத்தாமல், ஃ பேஸ்புக் / கூகுள் கணக்கு வழியாக நுழைந்தால் ஆபத்து.

இது நுழைய எளிதாக இருக்கலாம் ஆனால், உங்கள் தகவல்களை அவர்களுக்குத் தாரை வார்க்கிறீர்கள். அதாவது உங்கள் கணக்கின் கட்டுப்பாட்டை அவர்களுக்குக் கொடுக்கிறீர்கள்.

இன்னும் சில தளங்களில் ஃபேஸ்புக் கணக்கு வழியாக மட்டுமே நுழைய முடியும். அப்படிக் கேட்கும் தளங்களைப் புறக்கணித்து விடுங்கள்.

பாதுகாப்பை பலப்படுத்துவது எப்படி?

https://myaccount.google.com/security-checkup க்கு சென்று Third Party Access என்பதில் அனுமதித்து இருக்கும் Apps அனுமதியை நீக்கி (Remove Access) விடுங்கள்.

என் பரிந்துரை https://myaccount.google.com சென்று இதில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை செய்து விடுங்கள். நீங்கள் ஏதாவது தெரியாமல் தவறு செய்து இருந்தால், இதில் தெரிந்து விடும்.

கூகுள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நம்மை இது போலப் பரிசோதிக்க அறிவுறுத்தும் ஆனால், பலர் இதைக் கண்டுகொள்வதில்லை, அவ்வாறு இருக்கக் கூடாது.

Third Party Access ல் எதையெல்லாம் நீக்க வேண்டும்?

புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் 🙂 . எனவே, அனைத்தையும் நீக்கி விடுங்கள்.

Read : ஜிமெயிலுக்கு ஏன் மாற வேண்டும்?

கொசுறு

Wall Street Journal கிளப்பிய சர்ச்சையால், “அனைத்தையும் பயனாளர்களுக்குத் தெரிவிக்கிறோம், அறிவுறுத்துகிறோம்” என்று ஜிமெயில் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளது ஆனாலும், இச்சர்ச்சை கொஞ்ச நாள் ஓடும் என்று நினைக்கிறேன்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. அண்ணா நான் Third-party access இல் WhatsApp Messenger க்கு மட்டும் அனுமதி கொடுத்து இருக்கேன் இதை நம்பலாமா அண்ணா ….

  2. இணைய உலகில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது முதன்மையானது.. என்னை போல் தொழில்நுட்பத்தில் அரைவேக்காடாக இருப்பவர்களுக்கு சிரமே… குறைந்த தொழில்நுட்ப அறிவு மிகவும் ஆபத்தானது…

    என்ன ஏது என்று முழுவதும் தெரியாமலே கையாளுகின்ற போது கண்டிப்பாக பிரச்சனையில் முடிய அதிக வாய்ப்புண்டு.. உங்களின் தொடர்ச்சியான தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகளினால் இது குறித்த விழிப்புணர்வு எனக்கு ஏற்றப்பட்டுள்ளது.. புதிதாக பல செய்திகள் தெரிந்து கொள்ளவும் உதவுகிறது… பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @கார்த்தி நானும் கொடுத்து இருக்கிறேன், ஃபேஸ்புக் மாதிரி இவர்களும் எதையாவது செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன் (இதுவும் ஃபேஸ்புக் நிறுவனத்தினுடையது தானே)

    @யாசின் நன்றி 🙂 மகிழ்ச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here