அரசுத்துறை சேவைகள் தனியார் துறையுடன் இணைக்கப்படுவதால், பொதுமக்களுக்குப் பல்வேறு நிறுவனங்கள் வழியாக அரசு சேவையைப் பெறும் வாய்ப்புக் கிடைக்கிறது. இது போல ஒரு சேவையே அமேசான் ரயில் முன்பதிவு.
ரயில் முன்பதிவு
ரயிலில் செல்ல IRCTC தளத்தில் முன்பதிவு செய்வோம். Image Credit
ஆனால், இதுமட்டுமல்லாது அமேசான், Paytm உட்படப் பல நிறுவனங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்ய வாய்ப்புக்கிடைக்கிறது.
IRCTC
IRCTC தளம் முன்பை விட வேகமாக இயங்குகிறது என்றாலும், அதனுடைய UI (User Interface) சில வருடங்களுக்கு முன்பு மாற்றப்பட்ட பிறகு குழப்பமாகி விட்டது.
குறிப்பாக, தேர்வு செய்யும் பக்கம் எளிதாக இல்லை, முழுக்க வெள்ளை நிறத்தில் இருப்பது, கட்டணம் செலுத்தும் போது பிரச்சனைகள் ஆகியவை.
அதோடு Master List ல் அதிக நபர்களைச் சேர்க்க முடிவதில்லை.
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நான் தான் முன்பதிவு செய்து கொடுப்பேன் என்பதால், அனைவரின் விவரங்களையும் இதில் சேர்க்க வேண்டியதாக உள்ளது.
ஒவ்வொருமுறையும் பிறந்த தேதி, Spelling, உண்மையான பெயர் ஆகியவற்றைக் கேட்டுக்கொண்டு இருப்பது கடினமாக இருந்தது.
அதிக நபர்கள் சேர்த்து இருந்ததாகக் கூறி ஒரு முறை IRCTC கணக்கை முடக்கி விட்டது. பின் பெரிய போராட்டத்துக்குப் பிறகு திரும்பப்பெற்றேன்.
எனவே, இது போலப் பிரச்சனைகளால் IRCTC தளம் விருப்பமானதாக இல்லை.
ரயில் முன்பதிவு அமேசானில் செய்வது எப்படி?
இந்நிலையில் இப்பிரச்னைகளைத் தவிர்க்க வேறு வாய்ப்பைத் தேடிய போது கிடைத்ததே அமேசான்.
இதில் முன்பதிவு செய்வது குழப்பம் இல்லாமல் உள்ளது.
முன்பதிவு செய்ய IRCTC பயனர் கணக்குத்தேவை.
நன்மைகள்
- ஒருமுறை ஒருவர் பெயரைப் பயன்படுத்தி முன்பதிவு செய்தால், தானாகவே பெயர் சேமிக்கப்பட்டு விடுகிறது.
- நினைவில் கொள்ள வேண்டியது அமேசானில் உள்ள Master List மற்றும் IRCTC தளத்தில் உள்ள Master List இரண்டும் வேறு வேறு.
- ஏற்கனவே, கிரெடிட் / டெபிட் கார்டு சேமிக்கப்பட்டுள்ளதால், முன்பதிவின் போது எண்களைத் திரும்ப ஒருமுறை உள்ளீடு செய்ய வேண்டிய தேவையில்லை.
- அமேசான் வழியாக முன்பதிவு செய்தாலும், முன்பதிவை உறுதிப்படுத்த IRCTC கணக்கில் நுழைய வேண்டும்.
- இதற்காக மட்டும் CAPTCHA கொடுத்தால் போதும். IRCTC தளத்தைப் போல இருமுறை CAPTCHA கொடுக்க வேண்டியதில்லை.
- அமேசானில் Back வர முடியும் ஆனால், IRCTC யில் முடியாது, திரும்ப அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
- தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கையை இணைக்க முடிகிறது (Master List).
சுருக்கமாக, UI மிக எளிமையாக உள்ளது.
சிரமங்கள்
- தட்கால் முன்பதிவு இதில் செய்ய முடியாது.
- காரணம், IRCTC ல் மட்டுமே 10 AM (AC), 11 AM (Non – AC) க்குச் சரியாக முன்பதிவு செய்ய முடியும்.
- IRCTC அல்லாத தளங்களில் 15 நிமிடங்கள் தாமதமாக முன்பதிவு துவங்கும்.
- முன்பதிவு துவங்கிய 2 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்துவிடும் என்பதால், 15 நிமிடங்களுக்குப் பிறகு முன்பதிவு செய்வதில் பயனில்லை.
- சிறப்பு Quota க்கள் வழியாக அமேசானில் முன்பதிவு செய்ய வாய்ப்புள்ளது ஆனால், IRCTC போலவே கிடைக்குமா என்பதை இன்னும் பரிசோதிக்கவில்லை.
- ₹20 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவை தவிர்த்து அமேசானிலேயே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் தகவல்கள்
அமேசானில் முன்பதிவு செய்தாலும், பயணச்சீட்டு விவரங்கள் IRCTC கணக்கிலும் இருக்கும்.
ஆனால், பயணசீட்டை ரத்துச் செய்ய வேண்டும் என்றால், அமேசானில் முன்பதிவு செய்து இருந்தால் அமேசானில் சென்றே ரத்துச் செய்ய வேண்டும்.
அமேசானில் ரத்துச் செய்வது, IRCTC யில் ரத்துச் செய்வது போலவே எளிமையானது.
முன்பு Gateway கட்டணம் இல்லை ஆனால், தற்போது கட்டண சேவை ₹20 (இரண்டாம் வகுப்பு) வசூலிக்கிறது.
தேவைப்படுகிறவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கொசுறு
IRCTC மாதத்துக்கு 6 பயணச்சீட்டு முன்பதிவு என்பதை 12 ஆக மாற்றி விட்டது.
ஆதார் எண் பதிவு செய்து இருந்தால், 12 பயணசீட்டு என்பதை மாதத்துக்கு 24 முன்பதிவாக தற்போது மாற்றியுள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்
ரயிலில் ‘Boarding Point’ மாற்றுவது எப்படி?
ரயிலில் Lower Berth முன்பதிவு செய்வது எப்படி?
ரயில்வே துறையில் தனியார் சரியா தவறா?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
இணையத்தில் ஏதாவது டிக்கெட் புக்கிங் என்றாலே என்னுடைய முதல் விமான பயண நிகழ்வு தான் நினைவுக்கு வரும். ஏனெனில் என்னுடைய வாழ்நாளில் நான் முதன் முதலில் முன்பதிவு செய்த டிக்கெட் அது தான் .. அதற்கு முன் சினிமாவிற்கோ, அல்லது வேறு எதற்காகவோ நான் புக் செய்தது இல்லை. பல முறை கடலூரிலிந்து, கோவைக்கு பயணித்து இருந்தாலும் ஒரு முறை கூட முன்பதிவு செய்ததில்லை.
14 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வை தற்போது நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாகவும், நான் எவ்வளவு அறியாமையில் இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது சிரிப்பாக இருக்கிறது.. விமான ட்ராவல் புக்கிங் ஆஃபீசிலில் அவர் நடந்து கொண்ட விதம் காதலர் தினத்தின் படத்தில் கவுண்டமணி சார் கணினியின் கீ போர்டு தட்டும் நிகழ்வை போல் தான் இருந்தது.. ரயில் முன்பதிவு அமேசானில் செய்வது எப்படி? இதுவரை அறியாத ஒரு புதிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி கிரி..
@யாசின்
“விமான ட்ராவல் புக்கிங் ஆஃபீசிலில் அவர் நடந்து கொண்ட விதம் காதலர் தினத்தின் படத்தில் கவுண்டமணி சார் கணினியின் கீ போர்டு தட்டும் நிகழ்வை போல் தான் இருந்தது.”
🙂 🙂