ஜூன் 2020 முதல் ரயில் சேவை துவங்குவதாக அரசு அறிவித்தவுடன், எந்த வழித்தடங்கள் அனுமதிக்கிறார்கள் பார்க்கலாம் என்று IRCTC செயலியில் (கணக்கில்) நுழைந்தால் என் விவரங்கள் எதையுமே காட்டவில்லை.
கணக்கை முடக்கிய IRCTC
முதலில் எதோ தொழில்நுட்ப கோளாறு என்றே நினைத்தேன், செயலியில் பிறகு முயற்சித்தாலும் அதே வந்ததால், IRCTC தளத்தில் (கணக்கில்) நுழைந்தால் “Your Account Suspended” என்று இருந்தது.
எதற்கு suspend செய்தார்கள் என்று தெரியவில்லையே! என்று கூகுளில் தேடினால் பலரும் 0755-6610661 என்ற எண்ணுக்கு அழைத்துக் கூற அறிவுறுத்தி இருந்தார்கள்.
சேவை மையம்
ஆங்கித்தை தேர்வு செய்து தொடர்பில் வந்தவரிடம் பிரச்சனையைக் கூறியவுடன், மிக வேகமாக இந்தி ஸ்லாங்கில் ஆங்கிலம் பேசியதால் ஒன்றுமே புரியவில்லை.
Master List ல் எண்ணிக்கை அதிகமாக உள்ளதுன்னு சொன்னது போலப் புரிந்தது.
எப்படிக் கணக்கைத் திரும்பச் செயல்படுத்துவது என்று கேட்டபோது ஒரு மின்னஞ்சல் முகவரியைக் கூறினார், பலமுறை கேட்டும் அவர் கூறியது புரியவில்லை. இறுதியில் கூகுள் தேடலில், அவர் கூறியது care@irctc.co.in என்று புரிந்தது.
care என்ற நான்கு எழுத்தைப் புரிந்து கொள்வதற்குள் கிறுகிறுத்து விட்டது.
IRCTC மின்னஞ்சல் சேவை
இந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால்,
Dear Customer,
We would like to inform you that your user id ****** is inactive due to 9/Other Miscellaneous Reasons. Therefore, you are unable use it.
Sorry for the inconvenience caused please re-register on irctc website with alternate email id and /or mobile no.
என்று உடனே பதில் வந்தது.
இரண்டு மாதமாகத் தான் பயன்படுத்தவில்லை, அதுவும் ஊரடங்கு நேரத்தில் எப்படிப் பயன்படுத்த முடியும்?! இதைக்கேட்டால் இன்னொரு Ticket Number உருவாகியது.
அதாவது அவர்கள் பதில் அளித்தால், நம் பதிலுக்குப் பதில் அளிக்காமலே Ticket Close செய்து விடுகிறார்கள்.
திரும்ப இதே பதில் Ticket Closed.
‘இக்கணக்கை 15 வருடங்களுக்கு மேலாகப் பயன்படுத்துகிறேன். என்னிடம் வேறு மொபைல் எண் கிடையாது. தயவு செய்து கணக்கைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வாருங்கள்‘ என்று திரும்ப அனுப்பினேன்.
அதற்குப் பின்வரும் பதில் வந்தது.
Dear Customer,
As per T&C of IRCTC, personal user IDs are meant for personal use only.
As per the record available with IRCTC you have added more than 10 master passenger list linked with your user ID.
It seems that you are using your personal user ID for commercial gains/miss used, that’s why your ID was suspended/deactivated and it can’t be activated again.
வணிக ரீதியாகப் பயன்படுத்தவில்லை. குடும்பத்தினர் யாராவது முன்பதிவு செய்து தரக் கூறி கேட்பார்கள் அல்லது நான் அவர்களுடன் பயணிப்பேன்.
வயது, எழுத்துப்பிழையைத் தவிர்க்க Master List ல் சேர்த்துக்கொண்டால், முன் பதிவின் போது எளிதாகச் சேர்க்க முடியும். இதற்காகவே அக்கா, அக்கா பசங்க பெயர்களையும் சேர்த்து இருந்தேன்.
அதுவும் IRCTC அனுமதித்ததால் மட்டுமே! 10 பேருக்கு மேல் சேர்க்க கூடாது என்று அறிவுறுத்தி இருந்தால், கண்டிப்பாகச் செய்து இருக்க மாட்டேன். இவர்களே அனுமதித்து விட்டு, தற்போது இவர்களே கணக்கை முடக்குவது எப்படி நியாயமாகும்?
இதற்கு இவர்களே 10 பேருக்கு மேல் சேர்க்க முடியாதபடி கட்டுப்படுத்தலாமே!
இதைக் கூறி திரும்பப் பதில் அளித்தேன். திரும்பப் புது Ticket ஆனால், பதில் இல்லை. இனி இவர்களிடம் பேசிப் பயனில்லை என்று புரிந்தது.
Indian Railways Seva
எப்படியாவது கணக்கை மீட்டு விட வேண்டும் என்று Escalation Matrix தேடினேன், அப்படியொன்றும் இல்லை.
பல கூகுள் தேடல்களுக்குப் பிறகு @RailwaySeva என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், பலருக்கு பொறுப்பாகப் பதில் அளித்து இருந்தனர்.
புகார் கூறப்பட்ட Ticket எண்ணுடன் என் பிரச்சனையை அந்தக்கணக்கின் தனித்தகவலில் கூறினேன்.
விரைவிலேயே மொபைல் எண் கேட்டுப் பதில் வந்தது, கொடுத்தேன்.
புகார் பதிவு செய்யப்பட்டதாகவும், https://railmadad.indianrailways.gov.in/ தளத்தில் தற்போதைய நிலையைத் தெரிந்து கொள்ளலாம் என்று வந்தது.
சில நிமிடங்களில் புகார் எண் குறுந்தகவலாக வந்தது.
இரு நாட்களுக்குப் பிறகு..
Given id has been activated, You are advised not to use your personal id for any commercial or any unknown person to book ticket என்று இருந்தது.
கணக்கில் பார்த்தேன், சரியாகி விட்டது 🙂 . கணக்கை முடக்கிய IRCTC திரும்பக் கொடுத்ததும் விட்டது
முதல் வேலையாக Master List ல் ஐந்து பேரைத் தவிர்த்து அனைவரின் பெயர்களையும் நீக்கி விட்டேன் ஆனால், என் முந்தைய பயண விவரங்கள் இல்லை.
நீக்கப்பட்டு விட்டனவா அல்லது வேறு காரணமா என்று புரியவில்லை. அவை எனக்கு முக்கியம் இல்லை என்பதால் விட்டு விட்டேன்.
கணக்கைத் திரும்பப் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி @RailwaySeva.
கூகுள்
பலரும் தங்கள் கணக்கை ஏதோவொரு காரணத்துக்காகப் பறிகொடுத்துப் புலம்பிக்கொண்டு இருந்தது கூகுள் தேடலில் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
புதிய கணக்கு என்றால், ஏற்கனவே பயன்படுத்திய மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த முடியாது. இது மிகப்பெரிய நடைமுறை சிக்கல். IRCTC க்காக ஒரு மொபைல் எண் பயன்படுத்த முடியுமா?!
பலரும் இது ஒரு Monopoly செயல் என்று விமர்சித்து இருந்தனர் ஆனால், IRCTC நிறுவனமோ, ‘பலரும் கணக்கைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்துகிறார்கள் எனவே, இந்நடவடிக்கையை எடுக்கிறோம்‘ என்று கூறுகிறது.
IRCTC கூறுவது நியாயமான காரணமாக இருந்தாலும், விசாரித்துத் தவறில்லை எனக் கருதினால், Suspend செய்த கணக்கைத் திரும்பக் கொடுப்பதே நியாயம்.
என்னதான் IRCTC சரியாகப் பதில் அளித்து உதவி இருந்தாலும், இவ்வளவு விரைவாகப் பிரச்சனையை முடிக்க உதவியது தலைவன் கூகுள் தான். நன்றி கூகுள் 🙂 .
தொடர்புடைய கட்டுரை
ரயில் முன்பதிவு அமேசானில் செய்வது எப்படி?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
அருமை… ஒரே அனுபவக்கட்டுரையில் பல பயனுள்ள தகவல்கள்..
ஈ. ரா
மெய்வருத்த முயற்சித்தால் ID திரும்ப வரும். வாழ்த்துகள்.
கிரி, கடுமையான போராட்டத்தில் வெற்றி பெற்று இருங்கீங்க !!! வாழ்த்துக்கள் .. வேறு யாராவது உங்க நிலையில் இருந்தால் இந்த அளவுக்கு தொடர் முயற்சி செய்து இருப்பார்களா ?? என்று தெரியவில்லை .. முயற்சிக்கான பலன் கிடைத்தது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது ..
கணக்காளராக பணியாற்றுவதால் ஒரு நாளைக்கு பல சமயங்கள் சமாளிக்க வேண்டி வரும் நமக்கு வாங்க வேண்டிய பணத்தை விட , நிறுவனம் கொடுக்க வேண்டிய பணத்தின் மீது ரொம்ப அக்கறையாக இருப்பாங்க ..(பணம் வெளியில போக கூடாது என்று )
சமயத்தில் பஞ்சாயத்து உச்சமாகும் போது, சில நேரங்களில் வேலைய தூக்கி போட்டு போயிடலாமுன்னு தோணும் .. ஆனால் இந்த பிரச்சனைய நீங்க கையாண்ட விதத்தில் எனக்கும் ஒரு வித பக்குவம் ஏற்பட்டு இருக்கு .. நன்றி .. பகிர்வுக்கு நன்றி கிரி ..
@ஈ.ரா & தேவா நன்றி 🙂
@யாசின் நன்றி. கொஞ்சம் பொறுமை, விடா முயற்சி வேண்டும். பெரும்பாலும் ஒரு முயற்சிலேயே பலர் சலிப்படைந்து விடுவார்கள். நான் விடாமல் அது நடக்கும் வரை தொடர்வேன்.
அவ்வளோ தான் வித்யாசம்.