புதுப்பிக்கப்பட்ட IRCTC இணையதளம்

2
புதுப்பிக்கப்பட்ட IRCTC இணையதளம்

IRCTC நிறுவனம் தனது https://www.irctc.co.in/ தளத்தையும் IRCTC Rail Connect Mobile App (செயலி) யையும் புதுப்பித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட IRCTC இணையதளம்

தளம் & செயலி (App) புதுப்பிக்கப்பட்டதில் என்னென்ன வசதிகள் மாற்றம் பெற்றுள்ளன என்பதைக் காண்போம். Image Credit

  • உணவகம், தங்கும் இடம், ஓய்வு எடுக்கும் இடம் ஆகியவற்றைப் பயணசீட்டு முன்பதிவின் போதே செய்யலாம்.
  • வழக்கமாகச் செல்லும் இடங்கள், விருப்ப இடங்கள் ஆகியவை Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு) மூலம் முன்கூட்டியே பரிந்துரைக்கப்படும்.
  • ரயிலைத் தேடுவது, தேதியை மாற்றுவது எளிமையாக்கப்பட்டுள்ளது.
  • செல்லும் இடம், தேதியைக் குறிப்பிட்டு தேடிய பிறகு AC / Non AC இருக்கைகள் ஆகியவற்றின் நிலை (Availability / WL) தேடாமலே உடனே தெரியும்.
  • ஒவ்வொரு வகுப்பின் (AC / Non AC) இருக்கை நிலையும் கட்டணத்துடன் தெரியும்.
  • பயணச்சீட்டுப் பதிவு செய்யும் போது தவறுதலாகப் பக்கத்தை மூடி விட்டாலும், திரும்ப முன்பதிவு செய்யும் போது அதே விவரங்கள் அப்படியே உள்ளது.
  • பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • காத்திருப்பு பட்டியல் என்றால், Confirmation Probability காட்டும்.
  • சுருக்கமாக அனைத்தையும் முதலில் இருந்து துவங்க வேண்டியதில்லை.
  •  ஒரே பக்கத்தில் அனைத்து விவரங்களையும் பார்க்க வசதியுள்ளது.
  • Railconnect Mobile App ல் இதே வசதிகள் கிட்டத்தட்ட உள்ளன. முன்பு தேர்வு செய்வதில் குழப்பங்கள் இருக்கும், தற்போது அவை எளிமையாக்கப்பட்டுள்ளது.
  • குறையாக என்றால், இணையதளத்திலும், செயலியிலும் வண்ணங்களில் மாற்றமில்லை. குறிப்பாக இணையதளத்தில் அதே வெறுமையான வண்ணம்.

வசதிகளை, சேவைகளை வித்தியாசப்படுத்த வண்ணத்தைக் கூடுதலாக்கி இருக்கலாம். ஒருவேளை அதிக வண்ணங்கள், அனைத்து தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்காது என்று இப்படி வடிவமைத்து இருக்கலாம்.

IRCTC பயன்படுத்துவோர்

  • 6 கோடிக்கும் அதிகமானோர் இணையம் வழியாக முன்பதிவு செய்கிறார்கள்.
  • தினமும் 8 லட்சம் பேர் முன்பதிவு செய்கிறார்கள்.
  • மொத்த முன்பதிவில் 83% இணையம் வழியாக நடைபெறுகிறது.

புதுப்பிக்கப்பட்ட IRCTC இணையதளம் வரவேற்பை பெறும் என நம்பலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

ரயிலில் ‘Boarding Point’ மாற்றுவது எப்படி?

ரயில்வே துறையில் தனியார் சரியா தவறா?

Where Is My Train | App

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. 15 வருடங்களுக்கு முன் 3 மணிநேரம் கால்கடுக்க விழுப்புரம் ரயில் நிலையத்தில் நண்பனுக்காக டெல்லி செல்ல டிக்கெட் வாங்கி கொடுத்து, வேறு ஒரு நண்பனின் அலட்சியத்தால் அந்த ரயிலை சென்னையில் தவறவிட்ட நிகழ்வு நினைவில் வந்து போகிறது..மொத்த முன்பதிவில் 83% இணையம் வழியாக நடைபெறுகிறது என்பது உண்மையில் ஆச்சரியத்தை கொடுக்கிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. சென்னை சென்ட்ரலில் முன் பதிவு செய்ய வரிசையில் பல மணி நேரம் நின்றுள்ளேன். அதுவும் பண்டிகை கால முன்பதிவுக்கு மிகக் கூட்டமாக இருக்கும் 🙂 .

    தற்போது 100% இணைய முன்பதிவு தான். நேரடி முன்பதிவு எப்போது செய்தேன் என்று கூட நினைவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here