ரயிலில் பயணிப்பவர்களுக்குக் குறிப்பாகப் புதிய வழியில் பயணிப்பவர்களுக்குத் தேவையான செயலி (App) Where Is My Train.
Where Is My Train
ரயிலில் பயணிப்பவர்கள் இறுதி நிறுத்தத்தில் இறங்குபவர்கள் என்றால், எந்தக்கவலையும் இல்லை. Image Credit
ஆனால், நடுவில் இறங்க வேண்டும் என்றால், வரும் நிறுத்தம் எப்போது வரும்? தவற விட்டுவிடுவோமோ என்ற சந்தேகத்துடன் நிம்மதியற்ற நிலையிலேயே இருப்போம்.
இப்பிரச்சனையைத் தீர்க்க Where Is My Train செயலி உதவுகிறது.
பயன்கள் என்ன?
- எந்த நிறுத்தத்தில் உள்ளோம், எங்கே சென்று கொண்டுள்ளோம்.
- ஒவ்வொரு நிறுத்தத்தையும் ரயில் எப்போது அடையும்.
- செல்லவேண்டிய நிறுத்தத்துக்கு எவ்வளவு நேரம் ஆகும்.
- நிறுத்தம் வந்தால், அலாரம்.
- நிறுத்தம் வருவதற்கு முன்பு எவ்வளவு நிமிடங்கள் முன்பு அலாரம் அடிக்க வேண்டும்.
- இணையம், GPS இல்லாமலும் பயன்படுத்தலாம் (Cell Tower வழியாக)
- பேட்டரி பயன்பாடு குறைவு.
- Lock screen ல் விவரங்களைக் காணலாம்.
- இவையல்லாது ரயில் புறப்படும் நேரம், PNR தகவல்கள் உட்பட பல்வேறு தகவல்களைப் பெற முடியும்.
செயலி தமிழிலும் உள்ளது.
Android க்குத் தரவிறக்கம் (டவுன்லோடு) செய்ய இங்கே செல்லுங்கள்
இவ்வளவு சிறப்பான செயலி iOS க்கு இல்லையென்பது வருத்தமளிக்கும் செய்தி. இந்தியாவை சார்ந்த பெரும்பாலான செயலிகள் iOS க்கு இருப்பதில்லை.
இச்செயலியை கூகுள் கையப்படுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய கட்டுரைகள்
ரயிலில் ‘Boarding Point’ மாற்றுவது எப்படி?
கிரி, கடந்த வருடம் விடுமுறையின் போது நானும், பையனும் மட்டும் காரைக்காலிலிருந்து திருச்சிக்கு ரயிலில் சென்றோம்.. தொலைதூர ரயில் பயணம் எனக்கும் மிகவும் பிடித்தமானது.. என்னை விட பையனுக்கு அதிக விருப்பம்.. (மனைவிக்கு ஈடுபாடு கிடையாது). அந்த சமயத்தில் இந்த செயலி மிகவும் உபயோகமாக இருந்து.. எல்லா விவரமும் தெளிவாக வந்து விடுகிறது..ஆனால் தமிழில் இருப்பது தெரியாது.. அடுத்த பயணத்தில் சோதனை செய்து பார்க்கிறேன் .. பகிர்வுக்கு நன்றி கிரி..
இந்த செயலியில் விளம்பரங்கள் கிடையாது என்ற முக்கியமான தகவலை தாங்கள் குறிப்பிடவில்லை. இந்த அறிமுகமான அந்த நாள் முதலே நான் பயன்படுத்தி வருகின்றேன். விளம்பரங்கள் இல்லாமல் ஒரு செயலியா? என்று வியந்தது உண்டு. நிறைய பேருக்கு இதை பரிந்துரை செய்துள்ளேன். வந்ததலிருந்து அவ்வப்போது அப்டேட்ஸ் தொடர்ந்து வந்து தற்போது அனைவரும் விரும்பும் செயலியாகி விட்டது.
@யாசின் ரொம்ப நாட்களாக இது குறித்து எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன். கடந்த வாரம் ரயிலைப் பயன்படுத்திய போது நினைவு வந்து எழுதுகிறேன் 🙂 .
@விபுலானந்தன் “இந்த செயலியில் விளம்பரங்கள் கிடையாது என்ற முக்கியமான தகவலை தாங்கள் குறிப்பிடவில்லை. ”
காரணம், பின்னாளில் விளம்பரங்கள் வரலாம் என்பதால், அதைக் குறிப்பிடவில்லை.
“அவ்வப்போது அப்டேட்ஸ் தொடர்ந்து வந்து தற்போது அனைவரும் விரும்பும் செயலியாகி விட்டது.:
உண்மையே 🙂 . பயன்படுத்துபவர்கள் கருத்துகளைக் கேட்டுச் சிறப்பாக மேம்படுத்தியுள்ளார்கள்.