அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஹாலிவுட் படங்களில் ஒன்றாக Nobody. Image Credit
Nobody
Hutch Mansell தனது மாமனார் நிறுவனத்தில் சுவாரசியமில்லாத பணியில் இருப்பவர். வாழ்க்கையும் எந்த உப்புசப்பும் இல்லாமல் சவசவனு சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில் இவர் வீட்டில் திருட வந்தவர்களைத் தடுக்காமல் தனது பையனைப் போக விடச்சொல்கிறார். இதனால், ஏற்கனவே வெறுப்பில் உள்ள குடும்பத்தினர் இவர் ஒரு டம்மி பீஸ் போல என்று கடுப்பாகி விடுகிறார்கள்.
இதன் பிறகு கடுப்பில் உள்ள Hutch Mansell, யாரையாவது போட்டு நொக்கி எடுத்தால் தான் நல்லா இருக்கும் என்று மனநிலைக்கு வந்து விடுகிறார்.
இந்நிலையில் இவர் செல்லும் இரவு பேருந்தில் சில ரவுடிகள் ஏறுகிறார்கள். இதில் ஒரு பெண் இவர்களிடம் மாட்டிக்கொள்கிறார்.
நமக்கு வேலை வந்து விட்டது என்று மகிழ்ந்து, உங்களுக்குக் கட்டம் சரியில்லை என்று கூற, ‘வயசான ஆளா இருந்துட்டு நக்கல் பாரேன்!‘ என்று சிரிக்கிறார்கள்.
ஆனால், இவரோ அனைவரையும் பொளந்து விடுகிறார். பின்னர் தெரிய வருகிறது, இதில் ஒருவன் Russia Drug Mafia Boss உடைய சகோதரன் என்று.
Boss சும்மா விடுவானா! மூஞ்சி முகரை எல்லாம் பெயர்த்து சகோதரனைப் படுக்கப்போட்டது யார் என்று கொலை வெறியில் Hutch Mansell யைத் தேடுகிறான்.
இறுதியில் என்ன ஆனது? Hutch Mansell என்ன ஆனார்? இதுவே Nobody.
Who Are You Man?
படத்தில் பல இடங்களில் இக்கேள்வி வருகிறது.
பார்க்க டம்மியா இருக்கான்! இந்த அடி அடிக்கிறான்! த்தா! யார்ரா நீ? என்று அனைவரும் கேட்கிறார்கள்.
கடைசி வரை இக்கேள்வி தொடர்கிறது.
நமக்கும் ‘யாராக இருப்பார்?!‘ என்ற குறுகுறுப்புத் தொடர்கிறது.
Russian Drug Mafia
ஏராளமான அமெரிக்கத் திரைப்படங்களில் Gangster, Trafficking, Drugs என்றாலே ரஷ்ய நபர்களைத்தான் காட்டுவார்கள்.
இவர்களையே காட்டுகிறார்களே என்று தோன்றினாலும் உறுத்தவில்லை.
ஆனால், ரஷ்யா, உக்ரைன் போர், அது தொடர்பான சம்பவங்கள், அமெரிக்கா பில்லியன் கணக்கில் ஆயுத உதவி என்று படிக்கும் போது தான் தெரிகிறது, ரஷ்யா மீது அமெரிக்கா எவ்வளவு காண்டில் உள்ளது என்று.
இந்தியா என்றால் பாகிஸ்தானை எதிரியாகப் பார்ப்பது போல, ரஷ்யாவை அமெரிக்கா வில்லனாகக் காண்பித்து வருகிறது.
இவ்வளவு வருடங்களாகத் திரைப்படங்கள் பார்க்கிறேன் ஆனால், இது புரியவில்லை. சமீபமாக நிறைய உலக அரசியல் பற்றி விவாதித்துத் தெரிந்து கொள்ளும் போது தான் பல உள்ளரசியல் புரிகிறது.
யார் பார்க்கலாம்?
சண்டைக்காட்சிகளை விரும்பிப் பார்ப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம். துவக்கத்தில் மெதுவாகச் சென்றாலும் பின்னர் பரபரப்பாகி விடுகிறது.
லாஜிக்கெல்லாம் பார்க்காதீர்கள், பார்த்தால் சுவாரசியமாக இருக்காது. பெரும்பாலான ஹாலிவுட் சண்டை படங்களில் இப்படித்தான் இருக்கும்.
Wrath Of Man போல ஒரு படம், தாராளமாகப் பார்க்கலாம்.
Amazon Prime ல் காணலாம்.
Directed by Ilya Naishuller
Written by Derek Kolstad
Starring Bob Odenkirk, Connie Nielsen, RZA, Christopher Lloyd
Cinematography Pawel Pogorzelski
Edited by William Yeh, Evan Schiff
Music by David Buckley
Distributed by Universal Pictures
Release date March 26, 2021
Running time 92 minutes
Country United States
Language English
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, நான் அதிகம் சண்டைகள் கொண்ட கதையமைப்புள்ள படங்களை பார்ப்பவன் இல்ல.. ஆனால் எதார்த்தமாக நடைபெறும் சண்டைகள் கொண்ட காட்சியமைப்பை ரசிப்பவன்.. சமீபத்தில் அது மாதிரி பார்த்த படங்கள் உடனே நினைவுக்கு வரவில்லை..
ஐய்யப்பன் கோஷியின் சண்டை காட்சிகளும் யதார்த்தமாக இருக்கும்.. இந்த வரிசையில் அஞ்சாதே படத்தின் சண்டைகள் காட்சியமைக்க பட்ட விதம் மிகவும் பிடிக்கும் ..நீங்கள் இந்த பதிவில் குறிப்பிட்ட படத்தை நான் பார்க்கவில்லை.. பார்க்க முயற்சிக்கிறேன்..
============================================
லாஜிக்கெல்லாம் பார்க்காதீர்கள், பார்த்தால் சுவாரசியமாக இருக்காது. பெரும்பாலான ஹாலிவுட் சண்டை படங்களில் இப்படித்தான் இருக்கும். உங்கள் கருத்துடன் ஒத்து போகிறேன்.
பகிர்வுக்கு நன்றி கிரி.
@யாசின் எனக்கு அனைத்து வகைப்படங்களும் விருப்பம். பேய் மற்றும் ஒரு சில அறிவியல் படங்களில் மட்டும் ஆர்வமில்லை.
சமீபத்தில் ஒரு சீன படம் பார்த்தேன். செம. விரைவில் எழுதுகிறேன்.