Cloud Computing | மேகக் கணினி என்றால் என்ன?

13
What is cloud computing

ணையத்தில் பிரபலமாகி வரும் ஒரு தொழில்நுட்பம் தான் “Cloud computing”.

Cloud Computing என்றால் என்ன?

Cloud Computing என்பது நமது தகவல்களை ஒரு இடத்தில் வைத்துக்கொண்டு அதை  எந்த இடத்தில் இருந்தும் இணையம் மூலம் பயன்படுத்தும் ஒரு வசதியாகும்.

இதன் வழியாக எந்த இடத்தில் இருந்தும் தகவல்களைப் பெற முடியும்.

இன்னும் சுருக்கமாக நமது மின்னஞ்சலை எங்கே இருந்து வேண்டும் என்றாலும் நம்மால் எந்த வித சிக்கலும் இல்லாமல் பயன்படுத்த முடியும். Image Credit

எப்படி?

காரணம் நமது தகவல்கள் யாஹூ ஜிமெயில் ஹாட்மெயில் போன்ற வழங்கிகளில் (Server) உள்ளது. இதனால் இணையம் மூலம் எளிதாகப் பயன்படுத்த முடிகிறது.

இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் யோசித்துப்பாருங்கள் அதாவது உங்கள் ஹார்ட் டிஸ்கில் உள்ள தகவல்கள் அனைத்தும் இது போன்ற இடத்தில் இருந்தால்…!

அது தான் Cloud Computing.

Cloud Computing பலன்கள்

எடுத்துக்காட்டுக்கு, உங்கள் தகவல்கள் அனைத்தும் கூகுள் வழங்கியில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் உங்களால் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இணையம் இருந்தால் போதும் உங்கள் தகவல்களைப் பெற முடியும்.

அதாவது உங்கள் வீட்டில் இருக்கும் போது தான் இதைப் பயன்படுத்த முடியும் என்கிற கட்டுப்பாடு இல்லை, எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் Excel கோப்பை அப்டேட் செய்ய முடியும்.

சில முக்கிய கோப்புகளை மின்னஞ்சல்களிலோ அல்லது வேறு தளங்களிலோ சேமித்து வைத்து இருப்பீர்கள். எதற்காக?

அவசரமாகத் தேவைப்படும் போது பயன்படுத்த.

எடுத்துக்காட்டுக்கு, உங்கள் பிறப்பு சான்றிதல் அவசரமாகத் தேவைப்படுகிறது ஆனால், அதனுடைய கோப்பு (File) உங்கள் வீட்டு கணினியில் இருக்கிறது.

ஆனால், வீட்டிற்கு சென்று எடுத்து வரும் அளவிற்கு நேரமில்லை அல்லது நீங்கள் தொலைவில் இருக்கிறீர்கள்.

என்ன செய்வது?

கூகுள் ஃபோட்டோஸ் அல்லது மின்னஞ்சல் போன்ற இடத்திலோ சேமித்து வைத்து இருந்தால், உடனடியாக அருகில் உள்ள பிரவுசிங் சென்டரில் ப்ரிண்ட் செய்து பயன்படுத்த முடியும்.

எவ்வளவு நேரம் மிச்சம்! அதோடு வேலையும் விரைவாக முடியும்.

முன்பு இணையத்தின் வேகத்தின் அளவு மெதுவாக இருந்தது ஆனால், தற்போது இணைய வேகம் அதிகரித்து உள்ளது.

எனவே, இது போன்ற வசதிகள் உருவாகி வருகின்றன.

Dropbox என்றால் என்ன?

Dropbox என்பது ஒரு Cloud தளம். இலவசமாக நமக்கு 2 GB இடம் தருகிறார்கள் மற்றும் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் இன்னும் சில MB களை பெற முடியும்.

பணம் கட்டினால் மேலும் நமக்குத் தேவையான அளவு இட வசதியைப் பெற முடியும்.

இது எப்படி வேலை செய்கிறது என்றால்..

இவர்கள் தரும் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும் (வீட்டுக்கணினி அலுவலக கணினி என்று எங்குத் தேவையோ அங்கு).

நிறுவியவுடன், பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து உள்ளே நுழைந்து கொண்டால், கணினியில் Dropbox என்ற பெயரில் ஒரு ஃபோல்டர் வந்து விடும்.

இதில் நீங்க என்ன வேண்டும் என்றாலும், கொடுக்கப்பட்ட இட அளவு வரை சேமிக்கலாம்.

எடுத்துக்காட்டாக, வீட்டு கணினியில் JPG கோப்பை சேமிக்கிறீர்கள், பின் அலுவலகம் வந்து கணினியை ஆன் செய்தவுடன், வீட்டுக் கணினியில் சேமித்த கோப்பு இங்கேயும் வந்து விடும்.

இணையம் அவசியம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

இணையம் இல்லாமலும் உங்கள் கணினியில் உள்ள தகவல்களைப் பார்க்க முடியும் ஆனால், அப்டேட் செய்தால் இங்கே மட்டுமே அப்டேட் ஆகும்.

மற்ற இடங்களில் ஆகாது காரணம் இணைய இணைப்பு இல்லாதது.

அனைத்து இடங்களிலும் புதுப்பிக்கப்படும்

நீங்கள் ஒரு Text கோப்பை அடிக்கிறீர்கள் அதை வேறு கணினியில் அப்டேட் செய்தால் உங்கள், வீடு, அலுவலகம் என்று அனைத்து இடத்திலும் அப்டேட் ஆகி விடும்.

காரணம் உண்மையாக அந்தக் கோப்பு இருக்கும் இடம் Drobox வழங்கி ஆகும்.

இதைப் பயன்படுத்தக் கண்டிப்பாக இணையம் அவசியமாகும். iPhone Android என்று தொலைபேசிகளிலும் இந்த வசதி உள்ளது.

எனவே, இணையம் இருந்தால், எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் தகவல்களைப் பார்க்க முடியும்.

இதை நான் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன் மிக மிக அருமையான சேவை. உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.

Windows, Mac, Linux மற்றும் Mobile ல் பயன்படுத்தலாம். உங்கள் ஹார்டிஸ்க் செயலிழந்து விட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை.

உங்கள் தகவல்கள் மற்ற இடங்களில் பாதுகாப்பாக இருக்கும், இதுவும் இச்சேவையின் மிக முக்கிய பயன்.

மைக்ரோசாஃப்ட், கூகுள் நிறுவனங்களும் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றன.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

13 COMMENTS

  1. அனைத்து தகவல் அருமை…

    //தென் கொரியா அமெரிக்கா சிங்கப்பூர் ஜப்பான் போன்ற இணைய வசதி சிறப்பாக உள்ள நாடுகள் இதில் முதலில் வர வாய்ப்பு உள்ளது.//

    தென் கொரியால http://www.daum.net/ [Cloud Computing] வேற சில சைட்ளையும் இருக்கு… எனக்கு சில குழப்பம் இருந்தது…இப்போ தெளிவாச்சு..நன்றி சுவாமி….

  2. விளக்கமாக கூறியிருக்கீங்க… அருமை…

    என்னை பற்றிய உங்கள் குறிப்பை எதிர்ப்பார்க்கவில்லை. நன்றி. 🙂

  3. ரொம்ப எளிமையா, புரிஞ்சிக்கிற மாதிரி சொல்லி இருக்கீங்க கிரி. பாராட்டுக்கள்.

    இணைய வேகத்தை பத்தி சொல்லும் போது, என் நண்பர் ஒருத்தர், இணைய வேக நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு பின்னால (அதாவது கடைசியில) ரெண்டு நாடுகள் தான் இருக்கு அப்படீன்னு சொன்னாரு. உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா?

  4. பயனுள்ள தகவல்..கூகிள் இதுலயும் கலக்கப்போறாங்க… 🙂

  5. மிக இளிமையான விளக்கம்…ஒன்னுமே தெரியாத எனக்கே புரியுது சார்

  6. கிளவுட் கம்பியுடிங் பற்றி மிக எளிமையாக விளைக்கி இருக்கிறீர்கள். எனக்கு கூகிள் இந்த பக்கம் ஏன் கவனம் செலுத்தவில்லை? என்ற எண்ணம் இருந்தது. போகிற போக்கை பார்த்தால், கூகிள் புண்ணியத்தில், வெறும் மானிட்டர் மற்றும் நெட் கனெக்சன் மட்டும் வைத்துக்கொண்டே இனி கணிப்பொறியை இயக்கும் காலம் வந்து விடும் போலிருக்கிறது.

  7. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @பாமரன் இதுல எதோ உள்குத்து இருக்கே 🙂

    @பாலா விரைவில் அப்படித்தான் நடக்கும் போல இருக்கு

    @கோபிநாத் நானும் இதை முன்பே பார்த்தேன். இவர்கள் டேப்லெட் PC யை மனதில் வைத்து இதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    கடைசிப்பாரா (கூகுள் டிரைவ் ) மட்டும் தான் எழுத நினைத்து ஆரம்பித்தேன்.. சரி அப்படியே அதனோடு தொடர்புடைய Cloud Computing பற்றியும் கொஞ்சம் எழுதுவோம் என்று தான் எழுதினேன் ஆனால் இவ்வளவு பேர் எளிமையாக இருக்கு என்று கூறும் போது இன்னும் கொஞ்சம் பெட்டரா எழுதி இருக்கலாமோன்னு தோன்றுகிறது 🙁

    • // ….ல் இவ்வளவு பேர் எளிமையாக இருக்கு என்று கூறும் போது இன்னும் கொஞ்சம் பெட்டரா எழுதி இருக்கலாமோன்னு தோன்றுகிறது
      அதுக்கென்ன இன்னொரு பதிவ எழுதிருங்க. விண்டோஸ் ஸ்டார்ட் பட்டன் தகவலை இதில் ஏன் சொருகுனீங்க? :). இருப்பினும் இதுவரை அறியாத சுவாரஸ்யமான தகவல் சொன்னதற்கு நன்றி.

  8. குழப்பமில்லா எளிமையான சொற்கள். என்னைபோல் கண்ணி அறிவு இல்லா பாமரனுக்கும் புரிகிறது.,
    மேலும் இது போன்ற கட்டுரைகளி எழுதுங்கள். அன்புடன் எனது பாராட்டுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!