அமேசான் பிரைமில் திரைப்படம் என நினைத்து ஏமாந்து Bodyguard பார்த்துப் பின்னர் நன்றாக இருந்ததால், தொடர்ந்து அனைத்து எபிசோடும் பார்த்து முடித்தேன். தற்போது Web Series என்று தெரிந்தே Jack Ryan பார்த்துள்ளேன் 🙂 . Image Credit
Jack Ryan
அமெரிக்க Web Series, Jack Ryan மிகப்பெரிய வியப்பை அளித்தது. ஏனென்றால், கிட்டத்தட்ட மூன்று ஹாலிவுட் திரைப்படங்கள் எடுப்பதற்குச் சமமானது ஒரு சீசன்.
Web Series என்றே தோன்றாத அளவுக்கு, ஹாலிவுட் திரைப்படங்களைப் போல அதிரடியாக எடுத்துள்ளார்கள்.
பின்லேடன் போல மிக முக்கியமான தீவிரவாதியாகக் கருதப்படும் சுலைமான் என்ற தீவிரவாதியைப் பிடிப்பது தான் கதை.
Analyst
வங்கிப் பணப்பரிமாற்றங்களைக் கவனித்து, குற்றங்களைக் கண்காணிக்கும் Analyst ஆக CIA வில் பணி புரியும் Jack Ryan (John Burke Krasinski), தீவிரவாதி சுலைமானை பிடிக்கும் நடவடிக்கையில் பங்கேற்கிறார்.
முன்னாள் இராணுவ வீரராக இருந்த Jack Ryan க்கு அந்த அனுபவமும் கைகொடுக்கிறது. ஆறடிக்கு ஆள் அம்சமாக உள்ளார்.
இவருடன் சண்டை போடும் மேலதிகாரி Wendell Pierce பின்னர் எப்படி இவருடன் இணைந்து பணிபுரிகிறார் என்பதைச் சுவாரசியமாகக் கொண்டு செல்கிறார்கள்.
ஒளிப்பதிவு
சிரியா, துருக்கி, லெபனான் நாடுகள் இதில் வருகின்றன. அனைத்துமே அந்தந்த நாடுகளில் எடுத்தவையா அல்லது நாட்டின் பெயரை மட்டும் போட்டுக்கொண்டார்களா என்று தெரியவில்லை.
எல்லா நாடுகளுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால், ஏதாவது ஒரு இடத்தைக் காட்டி வேறு நாட்டின் பெயரைக் கூறினாலும் நமக்குத் தெரியவா போகிறது?!
பிரான்ஸ் உட்பட காட்டப்படும் ஒவ்வொரு நாட்டிலும் படப்பிடிப்பு நடந்த மாதிரியே தெரியவில்லை. இரகசிய ஒளிப்பதிவு செய்தது போலத் தத்ரூபமாக உள்ளது.
எதோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இப்படி எடுக்கிறார்கள் என்று கருதுகிறேன்.
மிரட்டல் காட்சிகள்
சுவாரசியமான பல காட்சிகள் இருந்தாலும், சுலைமான் குடும்பத்தைப் பிடிக்கச் செல்லும் போது நடைபெறும் சம்பவங்கள் தாறுமாறாக உள்ளது, உச்சகட்ட பதட்டம்.
அகதிகள் சூழ்நிலை, சிக்கல்கள், முகாம்களில் இருந்து தப்பித்துப் போவது என்று அனைத்துமே தொலைக்காட்சி செய்திகளில் பார்க்கும் சம்பவம் போலவே உள்ளது.
பின் லேடன் போல மிரட்டலாக இருக்க வேண்டிய சுலைமான் கதாப்பாத்திரம், அந்த அளவுக்கு இல்லையென்பது ஒரு குறை, சராசரி நபர் போல உள்ளார்.
Season 2
வெனிசூலா நாட்டின் பொதுத் தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக அதிபராக உள்ளவர் பிரச்சனையை ஏற்படுத்த, என்ன ஆகிறது என்பதே கதை.
எப்படி வெனிசூலாவில் இதை எடுத்தார்கள் என்றே புரியவில்லை. குறிப்பாக இறுதி கலவரக்காட்சிகள் உண்மையாக நடப்பது போலவே உள்ளது. அதே போலச் சில லாஜிக் கேள்விகளும், இப்படித் தான் நடக்கும் என்றும் ஊகிக்க முடிகிறது.
இந்தச் சீசனில் Jack Ryan சோகமாக / சுறுசுறுப்பு இல்லாதது போல உள்ளார். நன்றாக நடித்துள்ளார் என்றாலும், எதோ கடமைக்கு நடித்தது போல அவர் முகம் உள்ளது.
அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். முதல் சீசனில் உடலுறவு காட்சியுள்ளது. எனவே, குழந்தைகளுடன் பார்த்தால், எச்சரிக்கை.
பரிந்துரைத்தது நண்பர்கள் தீபக், ஸ்ரீனிவாசன். Amazon Prime ல் உள்ளது.
Genre Action, Political thriller
Created by Carlton Cuse, Graham Roland
Based on Characters by Tom Clancy
Starring John Krasinski, Wendell Pierce, Abbie Cornish, Ali Suliman
Composer(s) Ramin Djawadi
Country of origin United States
Original language(s) English
No. of seasons 2
No. of episodes 16 (list of episodes)
Camera setup Single-camera
Running time 40–64 minutes
Distributor Amazon Studios
Original network Prime Video
Picture format 4K (UHDTV)
Audio format Dolby Atmos surround
Original release August 31, 2018 – present
Read : 6 Underground (2019) மிரட்டல் சண்டை
கொசுறு
ஒரு ஹாலிவுட் படம் வெளியாகி, பெரிய வெற்றி பெற்றால் பல நூறு கோடிகளை வசூல் செய்கிறது, இலாபம் ஈட்டுகிறது.
Web Series ல் ஒரு சீசனுக்கு மூன்று ஹாலிவுட் திரைப்படங்களுக்கான உழைப்பு, செலவு உள்ளடக்கியுள்ளது. இவை OTT யில் வந்தால் என்ன வருமானம் வரும்?!
கூடுதல் சந்தாதாரர்கள் வரலாம் என்றாலும், ஒரு திரைப்படம் பெறும் வசூலை பெற முடியாது. அப்படியிருக்கையில் எப்படித் தைரியமாகச் செலவு செய்கிறார்கள்?
பல நாட்களாக மண்டைக்குடைச்சலான கேள்வி இது. யாருக்கும் விளக்கம் தெரியுமா?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, இது போல படங்களின் மீது தற்போது அந்த அளவிற்கு ஆர்வம் இல்லை .. கொஞ்ச நாட்கள் கழித்து தான் பார்க்க வேண்டும் .. உங்களுக்கு ஹாலிவுட் சினிமா மீது இருக்கும் அதே சந்தேகம் எனக்கு தமிழ் சினிமாவின் மீது நீண்ட நாட்களாக உண்டு .. எப்படி இவ்வளவு கோடிகள் செலவு செய்து படம் எடுக்கின்றார்கள் என்று .. ?? பல வங்கிகளும் இதற்கு நிதி உதவி செய்கின்றது .. அதற்கு என்ன??? பிணையம் வைத்து கொண்டு பணம் தருகின்றார்கள் என்று தெரியவில்லை .. பல கேள்விகள் ???? விடை தெரியாமல் உள்ளது .. பகிர்வுக்கு நன்றி கிரி
யாசின் எல்லாமே வட்டி தான். கண்டிப்பாக இவர்கள் வீடு மற்றும் மற்ற சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன் பெறுவார்கள்.
வங்கிகள் அடமானம் இல்லாமல் கடன் தர மாட்டார்கள்.
இவர்கள் அல்லாமல் மதுரை அன்பு போல கடன் கொடுப்பவர்களும் உள்ளார்கள். இவர்களிடம் சிக்கித்தான் வாழ்க்கையை பலர் தொலைக்கின்றனர்.
Hi Giri, If you know hindi (or with subtitle in english), please watch Special Ops (about RAW operation) and Undekhi. These are very good thrillers.
Sure.. Already a friend recommended and its in watch list 🙂