Sardar Udham (இந்தி 2021) | ஜாலியன் வாலாபாக் படுகொலை

0
Sardar Udham

ஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஜாலியான் வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டயரை 20 வருடங்களுக்குப் பிறகு பழி வாங்கிய நபரின் உண்மைக்கதை Sardar Udham. Image Credit

Sardar Udham

காந்தி திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக ஜாலியன் வாலாபாக் படுகொலை மாறி இருக்கும்.

காந்தி படத்தில் இது ஒரு சம்பவம் என்பதால், அந்தச் சம்பவம் மட்டுமே காட்டப்பட்டு இருக்கும் ஆனால், Sardar Udham படத்தில் இது தான் மையக்கருத்தே.

எனவே, படுகொலை தொடர்பான சம்பவங்கள், அதற்கு முன் நடந்தது, அதற்குப் பின் நடந்தது என்ன என்பதை இன்னும் விரிவாக காட்டியுள்ளார்கள்.

பஞ்சாப் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பகத் சிங். Sardar Udham செய்த ஒரே சம்பவம் ஜெனரல் டயரை கொன்றது மட்டுமே!

1919 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் கொலைக்கு 1940 ல் இங்கிலாந்தில் ஜெனரல் டயரை கொன்றுள்ளார் Sardar Udham.

இங்கிலாந்தில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் இருந்து மிகப்பொறுமையாக, அவசரப்படாமல் திட்டம் தீட்டி ஜெனரல் டயரை சுட்டுக் கொன்றுள்ளார்.

21 வருடங்கள் காத்திருந்து கொலை செய்துள்ளது வியப்பை அளித்தது.

இந்தியர்கள் அவ்வளவு எளிதில் எதையும் மறக்க மாட்டார்கள்‘ என்பது போல ஒரு வசனம் வருகிறது.

ஜெனரல் டயர் (Reginald Dyer)

மெல்லிய தேகம், கருணை இல்லாத முகம், கண்டிப்பான பேச்சு கொண்ட ஜெனரல் டயர் தான் செய்த செயலுக்காக பெருமைப்பட்டாரே தவிர வருத்தப்பட்டது இல்லை.

ஊரடங்கு காலத்தில் கூட்டம் நடப்பதால், எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டும் என்று டயரின் மேலதிகாரி கூறுகிறார்.

இவ்வாறு கூறியது டயரை உசுப்பி விட்டதா அல்லது உண்மையாகவே இப்படி நினைத்தாரா என்பது தெரியவில்லை.

சுடுவதற்கு தயாரானதும், ‘மக்களிடம் எச்சரிக்கை செய்யலாமா?‘ என்று வீரர்கள் கேட்டதுக்கு,

அவர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, ஊரடங்கு தடையையும் மீறி கூடியுள்ளார்கள், சுட்டுத்தள்ளுங்கள்‘ என்கிறார்.

பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என்று அனைவரும் சுடப்படுகிறார்கள். சிறு வாயிலில் அனைவரும் தப்பிக்க முடியாமல் ஆயிரக்கணக்கானோர் சாகிறார்கள்.

சுடப்பட்டவுடன் பொதுமக்கள் அடிபடும் காட்சி தற்போதைய தொழில்நுட்பத்தில் பார்க்க இன்னும் கொடூரமாக உள்ளது.

கண்களில் கண்ணீர் வராமல் இருக்காது, குறைந்த பட்சம் கண் கலங்கும்.

Sardar Udham

இந்நேரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த காரணத்தால் Sardar Udham தப்பிக்கிறார். இயல்பில் மென்மையானவர், சராசரி நபராவார்.

இதன் பிறகு பல்வேறு குழுக்களுடன் இணைந்து அவர்கள் தொடர்பில் இங்கிலாந்து சென்று ஆறு வருட காலம் தங்கியிருந்து சரியான நேரத்துக்காக காத்திருந்து இதை நிறைவேற்றியுள்ளார்.

ஆங்கிலப்படங்களுக்கு இணையாக எடுத்துள்ளார்கள். அந்தக்காலத்தையே பார்ப்பது போல உள்ளது. எப்படி எடுத்தார்கள் என்று வியப்பாக இருந்தது.

Sardar Udham கதாப்பாத்திரத்தில் நடித்த Vicky Kaushal ஏற்கனவே, Uri: The Surgical Strike படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருதையும் பெற்று இருந்தார்.

இப்படத்தில் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல், சவ சவன்னு நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு அசத்தல், குறிப்பாக வெளிநாட்டு காட்சிகள், கதாப்பாத்திர தேர்வுகள் அனைத்துமே பிசிறு இல்லாமல் அக்காலத்துக்கு கொண்டு செல்கின்றன.

ஜாலியன் வாலாபாக் சம்பவத்தில் அடிபட்டு பிழைத்தவர்களை Vicky Kaushal கொண்டு செல்லும் காட்சிகள் திரும்பத்திரும்ப வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது.

இக்காட்சிகளை முழுக்க காட்டாமல், துண்டித்துக் காட்டி இருக்கலாம்.

இப்படம் துவங்கியது (2019) சரியாக சம்பவம் நடந்து 100 வருடங்களுக்குப் பிறகு 🙂 .

யார் பார்க்கலாம்?

அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

ஜாலியன் வாலாபாக் சம்பவத்தில் என்ன நடந்தது, எப்படி நடந்தது, அதன் பிறகு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கும்.

இப்படம் நேரடி அமேசான் வெளியீடு.

பரிந்துரைத்தது யாசின்.

Directed by Shoojit Sircar
Screenplay by Shubhendu Bhattacharya, Ritesh Shah
Dialogues by Ritesh Shah
Produced by Ronnie Lahiri, Sheel Kumar
Starring Vicky Kaushal
Cinematography Avik Mukhopadhyay
Edited by Chandrashekhar Prajapati
Music by Shantanu Moitra
Distributed by Amazon Prime Video
Release date 16 October 2021
Running time 162 minutes
Country India
Language Hindi

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here