சன் தொலைக்காட்சி வர ஆரம்பித்த போது கேபிள் டிவியாகத் தொடர்ந்து பின்னர் DTH க்கு மாறித் தற்போது அதையும் கடந்து OTT க்கு மாறியுள்ளேன். Image Credit
DTH ஏன் வெறுப்பானது?
துவக்கத்தில் DTH ல் பார்ப்பது விருப்பமாக இருந்தது காரணம், பல்வேறு சேனல்களைக் காண முடிந்தது.
ஆனால், நாளடைவில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சில நிமிடங்களுக்கு இருந்த விளம்பரம் சில நிமிடங்களுக்கு நிகழ்ச்சி மீதி விளம்பரமானது.
நிகழ்ச்சிகள் போலித்தனமாகி விட்டது. செயற்கை அழுகை, செயற்கை பாராட்டு, பில்டப் என்று சலிப்பாகி விட்டது.
அனைத்தையும் விட விளம்பரம் பொறுக்கவே முடியாததாகி விட்டது. இதனால், சேனல்களைப் பார்ப்பதை தோராயமாக 2008 முதல் நிறுத்தி விட்டேன்.
நிறுத்திய பிறகு (Unsubscribe செய்யவில்லை) பெரும்பாலும் YouTube அதிகம் பார்க்க ஆரம்பித்தேன் (திரைப்படங்களும் பாடல்களும்).
சிங்கப்பூரில் இருந்த போது Hero Talkies OTT தளம் 2014 ல் அறிமுகமாகியது (தற்போது இல்லை). இதில் திரைப்படங்கள் பார்ப்பது வழக்கமானது.
இதன் பிறகு 2015 இறுதியில் சென்னைக்கு வந்த பிறகும் குடும்பத்தினருக்காகவே DTH இருந்தது, அதுவும் மனைவி பார்ப்பதில்லை. பசங்க மட்டும் கார்ட்டூன், ஆதித்யா, சிரிப்பொலி பார்ப்பார்கள்.
குடும்பத்தினர் விடுமுறையில் ஊருக்குச்சென்றால் DTH Recharge செய்ய மாட்டேன்.
இதன் பிறகு இந்தியாவில் பிரபலமாகத் துவங்கிய OTT, கொரோனா காலத்தில் மேலும் பிரபலமாகியது. திரையரங்களுக்குச் செல்ல முடியாத பலரும் OTT யை நாடினர்.
OTT வளர்ச்சி
கொரோனா பலரின் தொழிலை மாற்றி விட்டது. அதில் ஒன்று திரைத்துறை.
தற்போது OTT க்காகவே திரைப்படங்கள் எடுக்கப்படும் அளவுக்கு முன்னேறி விட்டது. விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுடனான பிரச்சனையால் தயாரிப்பாளர்கள் பலரும் OTT வெளியீட்டை விரும்புகிறார்கள்.
OTT நிறுவனங்களான Amazon Prime, NETFLIX, Disney+ Hotstar, Zee 5, SonyLIV, Sun NXT, Aha உட்படப் பல நிறுவனங்கள் படங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன.
கட்டணக்குறைப்பு உட்படப் பல சலுகைகளை வழங்கிச் சந்தாதாரர்களை ஈர்த்து வருகின்றன.
Bye Bye DTH Welcome OTT
இந்நிலையில் திரைப்படங்களை அதிகம் பார்ப்பவனாக உள்ள எனக்கு OTT வசதியாக இருந்தது ஆனால், NETFLIX & Disney+ Hotstar கட்டணம் அதிகமாக இருந்தது.
எனவே, இணக்கமான 4 நண்பர்களை இணைத்து யாரிடமும் User Name & Password பகிரக் கூடாது என்ற ஒப்பந்தத்தில் கட்டணத்தைப் பகிர்ந்து கொண்டோம்.
தற்போது Amazon Prime, NETFLIX, Disnney+ Hotstar, Zee 5, SonyLIV, Sun NXT, Discovery+, Aha ஆகிய OTT தளங்களைப் பயன்படுத்தி வருகிறேன்.
பாடல்கள் மற்றும் நேர்முகத்துக்காக YouTube அதிகம் பார்ப்பேன். இதில் வரும் விளம்பரங்கள் சகிக்க முடியவில்லை என்பதால் YouTube Premium ல் உள்ளேன்.
YouTube Premium ல் பல சேவைகள் இருந்தாலும், நான் பயன்படுத்துவது விளம்பரத்தைத் தவிர்க்க மட்டுமே.
விரைவில் YouTube Premium Lite என்ற பெயரில் மற்ற சேவைகள் தவிர்த்து விளம்பரம் மட்டுமில்லாமல் கட்டணம் குறைந்து வரப்போவதாகச் சொல்லப்படுகிறது.
YouTube Premium மூன்று மாதங்களுக்கு ₹399 வருகிறது.
தோராயமாக OTT & YouTube Premium வருடத்துக்கு ₹7800 வருகிறது (As on Feb 2022).
இதில் அமேசான் ₹1499 கட்டணத்தைப் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்தி Cashback மூலம் திரும்ப எடுத்து விடுவேன் ஆக, வருடத்துக்கு ₹6300 வருகிறது.
DTH துண்டிக்கப்பட்டதால் வருடத்துக்கு ₹2400 சேமிக்கப்படுகிறது.
எனவே இதையும் கழித்தால் OTT & YouTube Premium க்கு ஆண்டுக்குச் செலவழிக்கும் தொகை தோராயமாக ₹3900 மட்டுமே! அனைத்து OTT யும் Premium Subscriptions.
Flipkart coins பயன்படுத்தி இக்கட்டணங்களில் மேலும் சலுகையைப் பெற முடியும்.
மூன்று படங்களுக்குக் குடும்பத்துடன் திரையரங்கில் செலவழிக்கும் தொகையை வைத்து ஒரு வருடத்துக்கு OTT யில் விருப்பம் போல ஏராளமான அனைத்து மொழித் திரைப்படங்களையும் காண முடிகிறது, குறிப்பாக விளம்பரம் இல்லாமல்.
Android TV
இந்நிலையில் Android TV அறிமுகமாகியது.
DTH பார்ப்பதில்லை, குடும்பத்தினரும் DTH தேவையில்லை என்று கூறியதால் கடந்த டிசம்பர் 20, 2021 முதல் DTH சேவையை முற்றிலும் ஏறக்கட்டி விட்டேன்.
என் தேவையை முழுவதுமாகச் சிக்கல் இல்லாமல் பயன்படுத்த Android TV உதவுகிறது.
கிட்டத்தட்ட 50 நாட்களாகப் DTH இல்லாமல் OTT மட்டுமே பயன்படுத்துகிறேன். எந்தக் கடுப்பும் விளம்பரமும் இல்லாமல் மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெற்று வருகிறேன்.
தற்போது பலரும் OTT க்கு மாறி வருவதை உணர்ந்த TATA Sky நிறுவனம், பெயரை TATA Play என்று மாற்றி OTT சேவைகளையும் வழங்கி வருகிறது.
குறைகள்
கார்ட்டூனுக்கு (Voot) App இருந்தாலும், அனைத்துக்கும் இல்லாதது குழந்தைகளுக்குச் சிக்கல். Devotional, Travel Channels போன்றவற்றைப் பார்ப்பது கடினம்.
சில சேனல்களை DTH / கேபிளில் பார்ப்பது போலப் பார்க்க முடியாது என்பது இதன் பெரிய குறை.
OTT, YouTube மட்டுமே என்பதால், 100% இணையம் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதற்குத் துண்டிப்பு இல்லாத (Stable) இணைய இணைப்புத் தேவை.
இதுவரை அதிகபட்சம் ஒரு நாளில் 76 GB பயன்படுத்தியுள்ளேன். OTT மட்டுமே பயன்படுத்துபவர்களுக்கு மாதத்துக்குத் தோராயமாக 500 GB தேவை.
4K வீடியோ மட்டுமே பார்த்தால் கூடுதல் GB தேவை. Disney+ Hotstar & NETFLIX ல் அதிகளவில் மிகச்சிறந்த, தரமான (Pic & Audio Quality) திரைப்படங்கள் உள்ளன.
2016 முதல் ACT Fibernet பயன்படுத்துகிறேன். சிறப்பான தடங்கலில்லாத சேவை, மாதம் 3300 GB / 3.3 TB தருகிறார்கள் (Blaze Plan / 125 Mbps / ₹970+ Tax Per month).
6 மாதங்களுக்குக் கட்டணம் செலுத்தினால் சலுகையாக 2 மாதங்கள் இலவசம்.
WiFi க்கு பதிலாக Network Cable தொலைக்காட்சியில் இணைத்தால் சிறப்பான Buffer பிரச்சனையில்லாத சேவையைப்பெறலாம்.
Jio போன்ற நிறுவனங்கள் Broadband உடன் OTT யையும் இலவசமாக வழங்கி வருகின்றன. எனவே, எது இலாபமோ அதைப் பயன்படுத்தலாம்.
மேற்கூறியவை உங்களுக்கு உடன்பாடு என்றால், DTH க்கு Bye Bye சொல்லலாம். இல்லையெனில் தற்போதைக்கு DTH லையே தொடர்வது நல்லது.
ஒவ்வொரு OTT யும் எவ்வாறு உள்ளது என்பதை பின்னர் எழுதுகிறேன்.
தொடர்புடைய கட்டுரைகள்
Flipkart Super Coin | இது தெரியாம போச்சே!
NETFLIX Vs Amazon Prime Video Vs Hotstar எது சிறந்தது?
Vu Premium (55 inch) Ultra HD (4K) Android TV Review
Sony HT-RT3 Real 5.1ch Dolby Digital Soundbar
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
Yupp TV என்ற ஒரு OTT APP இருக்கிறது. அதில் அனைத்து Devotional சேனல்கள். சங்கரா. SVBC. HINDU DHARMAM. ஜெயா குழும சேனல்கள். கலைஞர் குழும சேனல்கள். என எல்லாம் மாதம் ரூபாய் 49 க்கு தருகிறார்கள். மாதா மாத சந்தா மட்டுமே தற்போது கொடுக்கிறார்கள். குழந்தைகள் பார்க்கும் கார்டூன் சேனல்கள் (POGO. CARTOON NETWORK. SONIC
SONY. HUNGAMA) போன்றவை. எந்த OTT APP லும் இதுவரை இல்லை. அது மட்டும் வந்துவிட்டால் சிறப்பாக இருக்கும்.
விரிவான கட்டுரைக்கு நன்றி.. ஒவ்வொரு OTT யும் எவ்வாறு உள்ளது என்பதை பின்னர் எழுதுகிறேன். விரைவில் எதிர்பார்க்கிறேன்..நன்றி .. கிரி..
@ஹரிஷ் Yupp TV யில் விளம்பரங்கள் அதிகம் வருவதாக கேள்விப்பட்டேன். தற்போது எப்படி என்று தெரியவில்லை.
தற்போதும் விளம்பரங்கள் வருகிறதா?
@யாசின் நேற்று பாடல் கேட்கும் போது நீங்க கூறிய முத்து நகையே பாடல் வந்தது. உங்களுக்காகவே பார்த்தேன்.. யாசினுக்கு இப்பாடல் ஏன் பிடித்தது? அப்படி இதில் என்ன உள்ளது? என்று யோசித்துட்டு இருதேன் 🙂
@கிரி. Yuppie TV யில் விளம்பரங்கள் அதிகம் வருவதாக கேள்விப்பட்டேன். தற்போது எப்படி என்று தெரியவில்லை.
தற்போதும் விளம்பரங்கள் வருகிறதா?
Yupp tv க்கு என்று எந்த விளம்பரமும் வருவதில்லை. இதுவரை நான் விளம்பரத்தை காணவில்லை. நன்றாக உள்ளது.