தற்போது திரையரங்குகளுக்குச் செல்ல முடியாததால், பலரும் OTT யை நாடி வருகிறார்கள். அதிகாரப்பூர்வ தளங்களில் திரைப்படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. Image Credit
NETFLIX Vs Amazon Prime Video Vs Hotstar
தற்போதைய (2020) சூழ்நிலைக்கு NETFLIX, Amazon Prime & Hotstar ஆகிய தளங்கள் பிரபலமாக உள்ளன. இதில் எந்தத் தளம், செயலி சிறந்தது என்பதை என் அனுபவத்தில் கூறுகிறேன்.
1. NETFLIX
- ஏராளமான பன்மொழித் திரைப்படங்களும், சீரிஸ்களும் உள்ளன. குறிப்பாகத் திரைப்படங்களுக்கு ஈடாகச் சீரீஸ்கள் இதில் உள்ளன.
- இந்திய மொழித் திரைப்படங்கள் குறிப்பாகத் தென்னிந்திய திரைப்படங்களின் எண்ணிக்கை குறைவு.
- இருப்பதிலேயே மிகச்சிறந்த செயலியாக NETFLIX உள்ளது. பயன்படுத்தவும், படங்களைத் தேர்ந்தெடுக்கவும் எளிதாக உள்ளது.
- பயன்படுத்த எளிதாக உள்ளதற்காகவே பார்த்த படங்கள் ஏராளம் 🙂 .
- Android TV யில் பார்க்க எளிதாக உள்ளது.
- பார்த்த திரைப்படங்களே இதன் பரிந்துரைகளில் வருவது சலிப்பை தருகிறது. இதை மறைக்க வசதிகள் இருந்தாலும் தொடர்ச்சியாகப் பார்த்த படங்களே வருகின்றன.
- ஏராளமான பார்க்காத திரைப்படங்கள் இருக்கையில் திரும்பத்திரும்ப ஒரே திரைப்படங்கள் பரிந்துரையில் வருவது மட்டுமே பெரிய குறையாக உள்ளது.
- கட்டணம் மாதம் ₹149 முதல் உள்ளன. இதோட பல்வேறு வகையான கட்டணங்கள் உள்ளன.
2. Amazon Prime Video
- அமேசான் ப்ரைமில் அனைத்து வகைப்படங்களும், சீரீஸ்களும் உள்ளன.
- தென்னிந்திய திரைப்படங்கள் அதிகம் உள்ளதால், நமக்கு மிகப் பொருத்தமான தளம் இதுவே.
- செயலியைப் பொறுத்தவரை பயன்படுத்த NETFLIX அளவுக்கு இல்லையென்றாலும், ஓரளவு பரவாயில்லை. பார்க்காத திரைப்படங்களை அதிகம் பரிந்துரைக்கிறது.
- Android TV யில் படத்தின் முன்னே / பின்னே செல்வது கடுப்பாக இருக்கும். NETFLIX போல எளிதானதல்ல.
- தேடல் பகுதி மோசம். இல்லாத படங்களை எல்லாம் தேடலில் காட்டி ஏமாற்றும்.
- தமிழ் டப்பிங் படங்கள் அதிகம் உள்ளன.
- கட்டணம் வருடத்துக்கு ₹1499
3. Hotstar
- இத்தளத்தில் பெரும்பாலான திரைப்படங்கள் Super Hero / Cartoon / Animation படங்களாகும்.
- Hotstar ல் இதுவரை அதிகபட்சம் 5 திரைப்படங்கள் மட்டுமே பார்த்துள்ளேன். Prison Break பார்க்கவே சந்தாதாரர் ஆனேன்.
- Android TV யில் பார்க்க எளிதாக உள்ளது.
- Super Hero / Cartoon / Animation திரைப்படங்களை ரசிப்பவர்களுக்கு Hotstar பொருத்தமானது.
- கட்டணம் வருடத்துக்கு ₹1,499. (தற்போது Hotstar உடன் Disney இணைந்ததால் ₹500 உயர்த்தி விட்டார்கள்).
எதற்குச் சந்தாதாரர் ஆகலாம்?
சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் Amazon Prime தான் சிறந்தது. கட்டணமும் குறைவு அதோடு பல்வேறு மற்ற பயன்களும் / Cashback உள்ளன.
இது குறித்துப் பின்வரும் கட்டுரையில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Read: அமேசான் சலுகைகள்
வேற்று மொழிப்படங்களை ரசிப்பவர்கள், சீரீஸ் அதிகம் பார்க்க விரும்புபவர்கள் NETFLIX செல்லலாம்.
Hotstar Premium கு பதிலாக Hotstar VIP என்ற குறைந்த கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கலாம். கிரிக்கெட் தொடர்கள் வரும் போது பயனளிக்கும்.
NETFLIX Vs Amazon Prime Video Vs Hotstar சுருக்கமாக, ஏதாவது ஒன்றை பெறலாம் என்று நினைப்பவர்களுக்கு அமேசான்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
சரியாக சொன்னீர்கள். அமேஸான் பிரைம் சிறந்நது தென்னக படங்களை மட்டும் வைத்து ஒப்பிடும் போது. மற்றபடி நெட்பிளிக்ஸ் கிட்டயே யாராலும் நிற்க முடியாது.
MUBI செயலியை பற்றிய உங்களது கருத்தை எழுதுமாறு கோருகிறேன்
amazon prime is more apt for India, aaana adhule search option romba poor, You wont get the required results in amazon prime, neenga onnu search paninaa adhuvaa oru result kattum, u need lot of patience
ஒரு ஆறு மாதத்திற்கு பின்பு படமே பார்க்க வேண்டாம் என்று நினைத்து கொண்டிருந்த போது தற்செயலாக ஐயப்பன் கோஷி, படத்தை பார்த்த பின் தொடர்ந்து பல மலையாள படங்கள் பிரைம் மூலமாக பார்த்தேன் .. ஒரு, ஒரு படமாக தேர்வு செய்து பார்க்கும் போது (உங்கள் தளம் , நண்பர்கள் பரிந்துரை , இணைய தேடல் ) என செலக்ட் பண்ணி பார்க்கும் போது எந்த படமும் ஏமாற்றம் தரவில்லை .. தற்போது கடந்த இரண்டு மாதமாக படம் பார்ப்பதை குறைத்து விட்டு கிரிக்கெட் விளையாட்டில் அதிக நேரம் செலவு செய்கிறேன் .. வாரத்தில் 4 நாட்கள் கண்டிப்பாக விளையாடி விடுவேன் .. netflix , hotstar பற்றி எனக்கு அதிகம் தெரியாது .. பகிர்வுக்கு நன்றி கிரி ..
@சுரேந்தர் உண்மையே!
@கிருஷ்ணன் இதுவரை பயன்படுத்தியதில்லை, முயற்சிக்கிறேன்.
@Ansi சரியா சொன்னீங்க.. நானே இதைக் குறிப்பிட்டு இருக்கணும். மறந்து விட்டேன். இல்லாத படங்களைக் கூட இருக்கும்படி காட்டும்.
@யாசின் NETFLIX Hotstar எல்லாமே இதே போல தான். படங்களின் எண்ணிக்கை மட்டுமே வித்யாசம்.
அமேசான், நெட்பீலீக்ஸ் ஐ நாங்க ஃப்ரியாக டெலிகிராமில் அல்லது எங்கள் தல தமிழ்ரொக்கர்ஸில் டவ்ன்லோட் செய்து பார்ப்போம்
நாங்கள் நடுத்தர வர்க்கம்
வசதி நிறைந்தவர்கள் அமேஜான் பீலீக்ஸ் ஹாட் நட்சத்திரம்