Marcella | British Series | குருட்டுத்தனமான முரட்டுத்தனம்

3
Marcella

கொலைகள் நடப்பதை புலன் விசாரணை செய்யும் கதை Marcella. Image Credit

Marcella

தற்போது வரை மூன்று சீசன்கள் வந்துள்ளது.

முதல் சீசனில் ஒரே மாதிரித் தொடர் கொலைகள், இரண்டாவதில் தொடர் குழந்தைகள் கொலை, மூன்றாவது Under Cover Operation.

நான்காவது சீசனுக்கும் அடி போட்டு விட்டார்கள்.

Anna Louise Friel

சீரீஸ் மொத்தத்தையும் தன் தோளில் தூக்கி சுமந்து இருக்கிறார் Marcella கதாப்பாத்திரத்தில் நடித்த Anna Louise Friel.

சைக்கோத்தனமான, குருட்டுத்தனமான முரட்டுத்தனத்துடன் விசாரணை பணியை வெறித்தனமாகக் காதலிக்கும் ஒரு கதாப்பாத்திரம் இருந்தால் எப்படி இருக்கும்?!

அது தான் Marcella.

அபாரமான நடிப்பு. இவரை நேரில் பார்த்தாலே பயமாக இருக்கும் போல. எப்படி நடந்து கொள்வார்? என்ன செய்வார்? என்ன பேசுவார்? எதையுமே கணிக்க முடியாது.

மின்னல் போல வேகமாகச் சிந்திப்பது, கொலைகளுக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பது, அதிரடியாகச் செயல்படுவது என்று மூன்று சீசனிலும் பட்டையைக்கிளப்பியுள்ளார்.

இவருடன் எவரும் வாழ்க்கை நடத்துவதும் முடியாது, அதற்குத் தகுந்த மாதிரி நிகழ்வுகளும் இருக்கும்.

சுருக்கமாக, யாராலும் புரிந்து கொள்ள முடியாத கதாப்பாத்திரம் ஆனால், காவல்துறை (விசாரணை) பணியை மிக மிக நேசிப்பவர்.

சிலருக்கு நிறுவனமே “போதும்பா நீ வேலை செய்தது” என்று கூறினாலும், “முடியாது” என்று Workaholic க்காக இருப்பார்கள். அது போல எப்போதும் விசாரணை குறித்த சிந்தனையே.

ஒரு காட்சியில் இவருக்கு அடிபட்டு ரத்தம் வந்து கொண்டு இருக்கும். அருகில் உள்ளவர் இதைச் சரி பண்ணிக்கக் கூறியவுடன் சரி என்று Marcella கிளம்பி விடுவார்.

அருகில் உள்ள அவரது மகளிடம், அம்மாவை உடன் இருந்து கவனித்துக்கொள் என்று கூறும் போது, அதற்கு அப்பெண், “அவங்க நேரா அலுவலகத்துக்குத் தான் போவாங்க.. அது தான் எங்க அம்மா!” என்று கூறுவார் 🙂 .

இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் இவர் எப்படிப்பட்டவர் என்று.

குடும்ப சிக்கல்கள்

சீரீஸ்கள் அனைத்துமே குடும்பச் சிக்கல்களையும் கூறுகிறது. திருமணம், விவாகரத்து, இன்னொருவருடன் தொடர்பு, அது முடிந்து அடுத்து, அது முடிந்து இன்னொன்று என்று சென்று கொண்டே உள்ளது.

கணவன் மனைவி புரிதல் இல்லாததால் குழந்தைகள் பாதிக்கப்படுவது என்று அனைத்துமே வருகிறது.

இந்நிலை இந்தியாவிலும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம் அதாவது இதில் வருவது போல. இதை அவர்கள் எளிதாகக் கடக்கிறார்கள்.

மூன்று சீசன்களிலுமே விடை தெரியாத கேள்விகள் உள்ளது. அதற்குக் கடைசி வரை பதில் கிடைக்காதது கடுப்பாக இருந்தது குறிப்பாக முதல் சீசன் ஏகப்பட்ட விடையில்லா கேள்விகள்.

விசாரணை என்பது Presence Of Mind. அந்நேரத்தில் தோன்றுவதே முக்கியமாகப்படுகிறது. இதில் Marcella கில்லாடியாகச் சிந்திப்பது அசத்தல் ரகம்.

மூன்றாவது சீசனை செமையாக முடித்துள்ளார்கள். அதோடு நான்காவதுக்கும் தரமான தொடர்பைக் கொடுத்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு அருமை ஆனால், பின்னணி இசை சுமார்.

யார் பார்க்கலாம்?

விசாரணை, க்ரைம் போன்றவற்றை ரசிப்பவர்கள் தவற விடக் கூடாது சீரீஸ்.

உடலுறவு காட்சிகள் அதிகம் என்பதால், அனைவரும் பார்க்க ஏற்றதல்ல.

நண்பர் யாசின் ஒருமுறை “கிரி! உங்களை விமர்சனம் எழுதத் தூண்டுவது எது?” என்று கேட்டு இருந்தார். அதற்குப் பதில் அளித்து இருந்தேன்.

இந்த சீரீஸ் பார்த்தவுடன் யாசின் கேட்டதே நினைவுக்கு வந்தது.

முதல் சீசன் பார்த்த போது விமர்சனம் எழுதத் தோன்றவில்லை ஆனால், சீசன் 2 பார்த்ததும் எழுத வேண்டும் என்று தோன்றியது.

இரண்டுக்கும் என்ன வித்யாசம்? பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் 🙂 .

பரிந்துரைத்து கௌரிஷங்கர் & ராம். NETFLIX ல் காணலாம்.

Genre Crime noir, Nordic noir
Created by Hans Rosenfeldt, Nicola Larder
Written by Hans Rosenfeldt
Starring Anna Friel, Nicholas Pinnock
Composer Lorne Balfe
Country of origin United Kingdom
Original language English
No. of series 3
No. of episodes 24 (list of episodes)
Producer Andrew Woodhead
Cinematography Ula Pontikos
Editor Liana Del Giudice
Running time 50–60 minutes
Netflix (International)
Picture format 16:9 (4K)
Audio format Stereo
Original release 4 April 2016

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

Bodyguard | British TV Crime series

Stay Close | Series | அனைவரிடமும் இரகசியம் உள்ளது

The Stranger | 2020 | British TV Crime series

Line of Duty | British TV Crime series | தெறி விசாரணை

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

 1. கிரி.. உங்களுடைய ரசனையும், என்னுடைய ரசனையும் முற்றிலும் வேறானது.. எனக்கு அதிகம் சண்டை காட்சிகள் உள்ள படமும், கொலை , பழிவாங்கல் சம்பந்த பட்ட படங்களின் மீதும் ஆர்வம் மிகவும் குறைவு.. ஆனால் இது போன்ற படங்கள் உங்களுக்கு விருப்பமானவையாக இருக்கிறது.. நேற்று மகான் படம் பார்த்தேன்.. படத்தை முழுவதும் பார்த்த பின் தற்போதும் படம் எப்படி என்று என்னால் கூற முடியவில்லை.. தில் படத்தில் நான் மிகவும் ரசித்த விக்ரம் சார் தற்போது எங்கு போனார் என்றே எனக்கு தெரியவில்லை.. நீங்கள் குறிப்பிட்ட வெப்சிரிஸ் தற்போது உள்ள மனநிலையில் சத்தியமாக பார்க்க முடியாது.. பின்பு முயற்சிக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. Excellent review Giri. Will watch definitely.

  Current watching Sardar Udham and Stay Close (in the 5th episode now) as per your recommendation….

  You have mastered the art of Review. Really proud of you Giri!

 3. @யாசின்

  “கிரி.. உங்களுடைய ரசனையும், என்னுடைய ரசனையும் முற்றிலும் வேறானது.. எனக்கு அதிகம் சண்டை காட்சிகள் உள்ள படமும், கொலை , பழிவாங்கல் சம்பந்த பட்ட படங்களின் மீதும் ஆர்வம் மிகவும் குறைவு”

  Sci Fiction, Super heroes படங்களில் மட்டுமே ஆர்வமில்லை. மற்ற அனைத்து வகைப்படங்களையும் பார்ப்பேன்.

  த்ரில்லர், ஹாரர், பழிவாங்கல்,ம் சண்டை படங்களில் ஆர்வம் அதிகம்.

  “நேற்று மகான் படம் பார்த்தேன்.. படத்தை முழுவதும் பார்த்த பின் தற்போதும் படம் எப்படி என்று என்னால் கூற முடியவில்லை.”

  நானும் பார்த்து விட்டேன். Not bad not good தான்.

  “நீங்கள் குறிப்பிட்ட வெப்சிரிஸ் தற்போது உள்ள மனநிலையில் சத்தியமாக பார்க்க முடியாது.”

  உங்கள் கமெண்ட் படிக்கும் போதே நீங்கள் பார்க்கும் மனநிலையில் இல்லை எனத் தெரிகிறது 🙂 . உங்களுக்கு இது பிடிக்காது. எனவே தவிர்த்து விடுங்கள்.

  @Srinivasan

  Thank You 🙂 .

  I suggest you to watch Aranyak which is different and intersting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here