Flipkart Super Coin | இது தெரியாம போச்சே!

0
Flipkart Super Coin

பொருட்களை வாங்கும் போது Flipkart Super Coin பயன்படுத்திப் பல வசதிகளை / சேவைகளை Flipkart ல் இலவசமாகப் பெற முடியும். Image Credit

Flipkart Super Coin

பொருட்களை வாங்கினால் அதற்கு Super coin என்ற சலுகையைச் சில வருடங்களுக்கு முன்பு Flipkart அறிமுகப்படுத்தியது.

வாங்கும் பொருளின் விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், ஒரு பொருளுக்கு அதிகப் பட்சம் 50 coins கிடைக்கும். Flipkart Plus க்கு இதில் மாற்றம் உண்டு.

இந்த coin களை பயன்படுத்திப் பொருட்களையோ, சேவைகளையோ பெற முடியும்.

பொருள் மற்றும் சேவையின் மதிப்பைப் பொறுத்து கொடுக்க வேண்டிய coin எண்ணிக்கை கூடக் குறையும். போதுமான அளவு coin இல்லையென்றால், கூடுதல் பணத்தைச் செலுத்திப் பெற முடியும்.

இது தெரியாம போச்சே!

அதிகம் அமேசான் தான் பயன்படுத்துகிறேன் காரணம் இவர்களுடைய வாடிக்கையாளர் சேவை.

என்ன பிரச்சனை என்றாலும் எளிதில் தொடர்பு கொள்ளலாம், பிரச்சனைகளையும் உடனே சரி செய்து விடுவார்கள்.

முன்பு Flipkart ல் சில கடுப்பான சம்பவங்கள் நடந்ததால், அதிகம் Flipkart செல்வதில்லை. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே இங்கே வாங்குகிறேன்.

இதனால், Flipkart தரும் coin பற்றித் தெரியாததால் பயன்படுத்தவில்லை.

சமீபத்தில் தான் இதன் பயன் தெரிய வந்தது ஆனால், பெரும்பாலான coin கள் காலாவதியாகி விட்டது. வட போச்சே! என்பது போலானது.

என்னென்ன வாங்கலாம்?

coin கள் எண்ணிக்கைக்குத் தகுந்த மாதிரி, பட்டியலிட்டுள்ள பொருட்களை வாங்கலாம்.

Gaana, Aha, Zee 5, Sony Liv, Disney Hotstar, Saavn, Storytel, Erosnow, hungama, YouTube Premium, Voot, Shemaroo, EpicON உட்பட பல்வேறு செயலி சந்தாக்களுக்கு தள்ளுபடி அல்லது இலவசமாகப் பெற முடியும்.

OTT செயலிகளுக்கு மாத, வருட சந்தாவை இதன் மூலம் பெற முடியும். பல வகையான சந்தாக்கள் இருப்பதால், நமது தேவைக்கு ஏற்ப வாங்கலாம்.

ஒவ்வொரு செயலியும் (App) பல்வேறு வகையான சந்தாக்கள் வைத்துள்ளன.

Premium, Plus, Mobile Only என்பது போன்ற வசதிகளைத் தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

கவனிக்க வேண்டியவை

அவர்களுடைய conditions என்ன என்பதைச் சரிவரப் புரிந்து கொண்ட பிறகு வாங்குவதே சரி. இல்லையென்றால், coin வீணாகி விடும்.

எடுத்துக்காட்டுக்கு YouTube Premium பெற, ஏற்கனவே கடந்த 36 மாதங்களில் Premium பயன்படுத்தி இருக்கக் கூடாது.

Zee 5 ஒரு வருட சந்தாவுடன் வாங்கினால் 3 மாதம் கூடுதலாகக் கொடுப்பார்கள் ஆனால், ஏற்கனவே இருக்கும் சந்தாவுடன் இணைக்க முடியாது.

சில சந்தாக்கள் Premium இல்லையென்றால், TV யில் பார்க்க முடியாது, மொபைலில் மட்டுமே அனுமதிக்கும்.

இதுபோலப் பல்வேறு கால வசதிகள், சந்தாக்கள் இருப்பதால், பொறுமையாகப் படித்து அது நமக்கு இலாபமா என்று பார்த்துப் பின்னர் coin பயன்படுத்த வேண்டும்.

இவ்வசதி தெரியாதவர்கள், தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

அமேசான் சலுகைகள்

NETFLIX Vs Amazon Prime Video Vs Hotstar எது சிறந்தது?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!