Credit Card Devaluation என்றால் என்ன?

7
Credit Card Devaluation

Credit Card Devaluation தற்போது அடிக்கடி கேட்கும் வார்த்தையாக மாறி விட்டது. என்னவென்று பார்ப்போம். Image Credit

Credit Card Devaluation

Credit Card நிறுவனங்கள் மக்களை ஈர்ப்பதற்காகக் கடனட்டையைப் பயன்படுத்தினால், பல சலுகைகளைக் கொடுப்பதாக அறிவித்தார்கள்.

காரணம், கிரெடிட் கார்டு பயன்பாடு துவக்கத்தில் குறைவாக இருந்தது.

எனவே, இவற்றில் கிடைக்கும் சலுகைகளுக்காகப் பலரும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்தார்கள். ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வகையான சலுகைகளை அறிவிக்கும்.

அதாவது Travel, Purchase, Fuel, Grocery, Online, Food, Business உட்படப் பல வகைகளாகக் கொடுத்தன. எனவே, யார் எதை அதிகம் பயன்படுத்துகிறார்களோ அவ்வகை கிரெடிட் கார்டை வாங்கிக்கொண்டார்கள்.

எடுத்துக்காட்டுக்கு, ஒருவர் அடிக்கடி வெளிநாடு பயணிப்பவர் என்றால் பயணச் சலுகை அதிகம் உள்ள Travel Card வாங்கலாம்.

நாளடைவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், சலுகைகளால் வங்கிகளுக்கு நட்டம் ஏற்பட்டது.

எனவே, ஒரு சில பிரிவுகளுக்குச் சலுகைகள் இல்லையென அறிவித்தன. அதாவது, குறிப்பிட்ட Merchant Category Codes (MCC) களுக்குச் சலுகைகள் இல்லையென அறிவிக்கத் தொடங்கியுள்ளன.

இவ்வாறு துவக்கத்திலிருந்து கொடுத்து வந்த சலுகைகளை நிறுத்துவதே Credit Card Devalution என்பதாகும்.

அதிகரிக்கும் Devaluation

தற்போது பல வங்கிகளும், நிறுவனங்களும் தங்கள் கடனட்டையை Devaluation செய்ய ஆரம்பித்து விட்டன.

இதனால், சலுகைகளுக்காகப் வாங்கியவர்கள், அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இன்னமும் இதில் லாபம் உள்ளது என்று உணர்பவர்கள் தொடர்கிறார்கள், மற்றவர்கள் கடனட்டையை ரத்து செய்கிறார்கள்.

தற்போது Devalution செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இப்படியே சென்றால், எதிர்காலத்தில் கிரெடிட் கார்டு என்பது 50 நாட்கள் வட்டியில்லா கடனுக்கு மட்டுமே பயன்படும் சேவையாகி விடும்.

இதையும் 50 நாட்களிலிருந்து குறைக்கவும் முயலலாம்.

எனவே, இனி துவக்கத்தில் கிடைக்கும் சலுகைகள் எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

பரிந்துரை

உங்களால் சரியாகக் கடனட்டையைப் பராமரிக்க முடிந்தால், செலவுகள் அனைத்தையும் கிரெடிட் கார்டு மூலமாகவே செய்ய முடியும் என்று கருதினால், ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கலாம்.

பல கிரெடிட் கார்டுகளை வைத்து இருந்தால், CRED போன்ற கிரெடிட் கார்டு மேலாண்மை செயலி (App) இல்லாமல் பராமரிக்க முடியாது.

பணத்தைச் செலுத்த வேண்டிய நாட்களைத் தவற விட்டு விட வாய்ப்புள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு வாங்க திட்டமிட்டால், ஆண்டுக் கட்டணம் இல்லாத கிரெடிட் கார்டை முயற்சிக்கலாம்.

ஆண்டுக்கட்டணம் இல்லாத கடனட்டைகளில் சலுகைகள் குறைவாக இருக்கும் ஆனால், ஒன்றுமில்லாததுக்கு இதில் ஏதாவது பயன் கிடைக்கும். எனவே, நம் தேவை என்னவென்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்பத் தேர்வு செய்வது நல்லது.

தொடர்புடைய கட்டுரைகள்

Merchant Category Codes (MCC) என்றால் என்ன?

CRED | Credit Card Management App

கிரெடிட் கார்டு பயன்கள் என்ன?

கிரெடிட் கார்டு UPI எப்படியுள்ளது? FAQ

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. கிரி.. நான் முன்பே கூறியது போல தற்போது வரை கடனட்டை இன்னும் வாங்கவில்லை.. இங்கு இருக்கும் வரை வாங்கவே கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.. இந்தியா திரும்பிய பின் என் எண்ணம் மாறலாம்.. நீங்கள் பல வருடமாக கடனட்டை மிகவும் கவனமாக பயன்படுத்தி வருவது உண்மையில் மிகவும் சிறப்பான ஒன்று..

    உங்களின் கடனட்டை அனுபவங்களை அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு அனுபவ பதிவாக எழுதினால் நிச்சயம் படிப்பர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன்படும் என்று எண்ணுகிறேன். காரணம் ஆரம்பத்தில் ஏதோ ஒரு ஆர்வ கோளாறில் கடனட்டை வாங்கிவிட்டு பின்பு எப்படி அதை சரியாக மேனேஜ் செய்ய வேண்டும் என்பது பலருக்கு தெரியாத ஒன்று.. இதை கொண்டு இலாபமடைந்ததை விட நட்டப்பட்டவர்கள் தான் அதிகம் இருப்பார்கள் என எண்ணுகிறேன்.. நீங்கள் பல வருடம் முறையாக பயன்படுத்துவதால் நிச்சயம் பல அனுபவங்களை கடந்து வந்து இருப்பீர்கள்.. அதையெல்லாம் ஒரே பதிவாக தொகுத்து எழுதாமல் அவ்வப்போது பகிரலாம்..
    =========================================

    உங்களால் சரியாகக் கடனட்டையைப் பராமரிக்க முடிந்தால், செலவுகள் அனைத்தையும் கிரெடிட் கார்டு மூலமாகவே செய்ய முடியும் என்று கருதினால், ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கலாம்.

    பல கிரெடிட் கார்டுகளை வைத்து இருந்தால், CRED போன்ற கிரெடிட் கார்டு மேலாண்மை செயலி (App) இல்லாமல் பராமரிக்க முடியாது.

    பணத்தைச் செலுத்த வேண்டிய நாட்களைத் தவற விட்டு விட வாய்ப்புள்ளது.
    =========================================

    மேலே நீங்கள் கூறி இருப்பது சரியான பார்வை கிரி..

  2. இலவசமா ப்லோக் கிடைச்சா பிதற்றவேண்டியதுதானா
    ஒழுங்கா படிச்சிருந்தா இப்படி பிதற்றமாட்டே

  3. @யாசின்

    “உங்களின் கடனட்டை அனுபவங்களை அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு அனுபவ பதிவாக எழுதினால் நிச்சயம் படிப்பர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன்படும் என்று எண்ணுகிறேன்”

    ஏற்கனவே எழுதியுள்ளேன். எழுதுவதற்கான வாய்ப்பு கிடைக்கையில் நிச்சயம் எழுதுகிறேன்.

    “ஆரம்பத்தில் ஏதோ ஒரு ஆர்வ கோளாறில் கடனட்டை வாங்கிவிட்டு பின்பு எப்படி அதை சரியாக மேனேஜ் செய்ய வேண்டும் என்பது பலருக்கு தெரியாத ஒன்று.”

    உண்மை தான். சரியாக பயன்படுத்தத்தெரிந்தால் இதனால் 1 ருபாய் கூட நட்டம் ஏற்படாது.

    “இதை கொண்டு இலாபமடைந்ததை விட நட்டப்பட்டவர்கள் தான் அதிகம் இருப்பார்கள் என எண்ணுகிறேன்”

    இலாபம் அடைந்தவர்களும் உள்ளனர் ஆனால், பயன்படுத்தத் தெரியாமல் நீங்கள் கூறியது போல நட்டம் அடைந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

    “அதையெல்லாம் ஒரே பதிவாக தொகுத்து எழுதாமல் அவ்வப்போது பகிரலாம்..”

    முயற்சிக்கிறேன் யாசின்.

    உங்களுக்கு கடனட்டையில் ஆர்வம் இல்லையென்றாலும், அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள அல்லது மற்றவர்கள் தெரிந்து கொள்ள நினைக்கும் உங்கள் எண்ணத்தைப் பாராட்டுகிறேன் 🙂 .

  4. @Agni யோவ் யாருயா நீ? சம்பந்தமில்லாம உளறிட்டு இருக்க.

    உன்னைப் போலப் புத்திசாலிக்கு இங்க என்ன வேலை? வேற தளத்தில் சென்று புலம்பவும்.

  5. ஆமாம். நிறைய credit card இப்போது அவர்கள் தரும் offers வெகுவாக குறைத்துவிட்டார்கள் அல்லது அடியோடு நீக்கி விட்டார்கள். SBI simply click இதில் நிறைய நீக்கி விட்டார்கள். தற்போது axis airtel credit card தான் பெரும்பாலும் உபயோகிக்கிறேன் செமயாக உள்ளது. UPI க்கு HDFC Moneyback+ RUPAY CREDIT CARD.

  6. @ஹரிஷ்

    “SBI simply click இதில் நிறைய நீக்கி விட்டார்கள்.”

    என்னென்ன நீக்கியுள்ளார்கள்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here