Merchant Category Codes (MCC) என்றால் என்ன?

2
Merchant Category Codes

வ்வொரு நிறுவனத்தின் வியாபார தன்மையைப் பொறுத்து அந்நிறுவன பணப்பரிவர்த்தனைக்கு அத்தொழில் சார்ந்த எண்ணைக் கொடுத்து இருப்பார்கள். அந்த எண் Merchant Category Codes எனப்படுகிறது. Image Credit

எடுத்துக்காட்டுக்கு, 6513 எண் என்றால், ரியல் எஸ்டேட் சார்ந்தது.

ஒருவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வீடு வாங்கியதற்காக முன் பணத்தைக் கிரெடிட் கார்டு வழியாகச் செலுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

இப்பணம் 6513 என்ற எண் வழியில் பணப்பரிவர்த்தனை நடந்ததாகப் புரிந்துகொள்ளப்படும்.

கிரெடிட் கார்டு MCC

முன்பு நிறுவனத்தை அடையாளப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட எண், பின் பணப்பரிவர்த்தனையைப் பிரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதாவது கிரெடிட் கார்டில், ரியல் எஸ்டேட்டில் இவ்வளவு பரிவர்த்தனைகள் நடந்துள்ளது எனவும், அது போல எரிபொருள் நிலையங்கள், விளையாட்டு அரங்கு, உணவகம், நகைக்கடை, திரையரங்கு என்று பிரிக்கப்படும்.

இதன் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது என்பதை எளிதாகக் கணக்கெடுக்க முடியும்.

இம்முறையைப் பயன்படுத்தித்தான் கிரெடிட் கார்டில் மருத்துவம், உணவகம் என்று செலவுகள் பிரிக்கப்படுகின்றன.

தற்போது ஏன் முக்கியத்துவம்?

முன்பு கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு குறைவாக இருந்தது. எனவே, இவ்வகை எண்கள் ஒரு பயனரின் கவனத்துக்கு வரவேண்டிய தேவையிருக்கவில்லை.

ஆனால், தற்போது பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாலும், பயன்படுத்துபவர்கள் அதைத் தவறாகப் பயன்படுத்துவதாலும் தற்போது கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து விட்டார்கள்.

எளிதாகக் கூற வேண்டும் என்றால், ஓரிரு வருடங்களுக்கு முன் கடனட்டை வழியாக வீட்டு வாடகைப்பணம் செலுத்தலாம் என்ற வசதியைக் கொடுத்தார்கள்.

ஆனால், பலர் இந்த வசதியை மற்றவர்களுக்கு வட்டி இல்லாமல் 50 நாட்கள் பணத்தைக் கொடுக்கத் தவறாகப் பயன்படுத்தினார்கள்.

இதனால், வங்கிகளுக்கு நட்டம் ஏற்பட்டது.

இதைத்தவிர்க்க வாடகைக்குக் கடனட்டையில் பணம் செலுத்தினால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி விட்டார்கள்.

இவ்வகைப் பணத்தைப் பிரிக்க இந்த CODES உதவுகின்றன.

நெருக்கடி

முன்பு குறைவானவர்களே பயன்படுத்தியதால், எந்தக்கட்டுப்பாடும் இல்லை ஆனால், தற்போது பயன்பாடு அதிகரிப்பால், பல MCC க்களுக்குத் தடை போட்டு விட்டார்கள்.

இதனால், தற்போது Reward Points கிடைப்பது கடினமாகி வருகிறது.

குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும், பள்ளிக் கட்டணம், வாடகை, காப்பீடு, அரசுக் கட்டணம், நகைக்கடை, ரயில்வே கட்டணம், எரிபொருள் உட்படப் பலவற்றுக்கு நிறுத்தி விட்டார்கள்.

எதிர்காலத்தில் கடனட்டை 50 நாட்கள் வட்டியில்லா கடன் என்பதோடு முடிந்து, Reward Points கிடைப்பது அரிதாகி விடும்.

எப்படியிருந்தாலும், பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு இலாபகரமானது என்பதில் சந்தேகமில்லை.

முன்பெல்லாம் கடனட்டையில் Merchant Category Codes பற்றி எந்த விவரங்களும் இருக்காது ஆனால், சமீபமாகக் குறிப்பிட்ட எண்களுக்கு Reward Points இல்லை என்று குறிப்பிடுவது அதிகரித்து விட்டது.

எனவே, எந்தக் கடனட்டை பயன்படுத்தினால் இலாபம் என்பதைத் தேவையறிந்து பயன்படுத்தினால், கூடுதல் இலாபம் பெறலாம்.

தவறான Merchant Category Codes

சில நேரங்களில் தவறான அடையாளம் கூடக் குழப்பி விடும்.

பதிவு செய்பவர்கள் தவறான Merchant Category Codes பதிவு செய்து விட்டால், கிடைக்கும் Rewards Points கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

அதாவது, தற்போது எரிபொருள் கடைகளில் (Fuel Station) சிறு கடைகளும் வைக்கிறார்கள். ஒருவேளை அக்கடையும் எரிபொருள் MCC ல் வந்தால், இங்கு ஏதாவது பொருளைக் கடனட்டையில் வாங்கினால் Reward Points கிடைக்காது.

எனவே, வங்கியில் சண்டை போட்டால் பயனில்லை காரணம், கடை பதிவு செய்ததது தவறான MCC எண் என்பதால்.

சமீபமாகப் பல வங்கிகள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு எவ்வளவு Reward Points கிடைத்துள்ளது என்பதைக் குறிப்பிடுவது, புரிந்து கொள்ள எளிதாக உள்ளது.

என்னென்ன வகையான CODE கள் உள்ளன என்பதை இங்கே சென்று பார்க்கலாம்.

மேற்கூறியவை Merchant Category Codes என்றால் என்ன என்று புரிந்து கொள்ள உதவியிருக்கும் என நம்புகிறேன்.

கொசுறு

இணையத்தில் கடனட்டை உட்படப் பல சேவைகளைப்பயன்படுத்தி எவ்வளவு சம்பாதித்துள்ளேன் என்பதைத் தனிக்கட்டுரையாக பின்னர் எழுதுகிறேன் 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

கிரெடிட் கார்டு பயன்கள் என்ன?

கிரெடிட் கார்டு UPI எப்படியுள்ளது? FAQ

HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card எது சிறந்தது?

கிரெடிட் கார்டில் வாடகை செலுத்துவது இலாபமா?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. நான் ஏற்கனவே பல முறை கூறியது போல் கடனட்டையின் மீது பெரிய ஆர்வம் இல்லையென்றாலும், ஆனால் அதனை பற்றி தெரிந்து கொள்வதில் எப்போதும் ஆர்வம் உண்டு. உண்மைய சொல்லப்போனால் நான் உங்கள் பதிவுகளின் மூலம் கடனட்டை குறித்து நிறைய அறியாத செய்திகளை அறிந்துள்ளேன்.. நன்றி.. இன்னும் சொல்லப் போனால் நீங்கள் இந்த பதிவில் கூறிய செய்தி கூட நான் இதுவரை அறியாத தகவல் இது.

    இணையத்தில் கடனட்டை உட்படப் பல சேவைகளைப்பயன்படுத்தி எவ்வளவு சம்பாதித்துள்ளேன் என்பதைத் தனிக்கட்டுரையாக பின்னர் எழுதுகிறேன். காத்திருக்கிறேன் கிரி..

  2. @யாசின்

    “இன்னும் சொல்லப் போனால் நீங்கள் இந்த பதிவில் கூறிய செய்தி கூட நான் இதுவரை அறியாத தகவல் இது.”

    🙂 . எனக்கும் சில நாட்களுக்கு முன்பு தான் தெரியும். பின்னர் இது தொடர்பாக இணையத்தில் தேடி படித்து புரிந்து கொண்டு பின்னர் எழுதினேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!