ஜெயிலர் (2023) | No Escape

28
ஜெயிலர்

பாலிக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்பில் வந்துள்ள படம் ஜெயிலர். Image Credit

ஜெயிலர்

ஓய்வுபெற்ற அதிகாரியான ரஜினியின் மகன் வசந்த் ரவி, காவல் அதிகாரி. சிலை கடத்தல் செய்பவர்களால் கடத்தப்படுகிறார். காவல்துறை அவர் கொல்லப்பட்டதாகக் கூறியதால், அதற்கு ரஜினி பழி வாங்குகிறார்.

இறுதியில் என்ன ஆனது? என்பதே ஜெயிலர்.

ரஜினி

கிட்டத்தட்ட 60+ வயதுள்ள நபராகக் காட்டப்படும் ரஜினி, ஓய்வுபெற்ற அதிகாரியாகப் பழிவாங்குவதில் எவ்வளவு முடியும் என்பதை நம்பும்படி நெல்சன் கொடுத்துள்ளார்.

சண்டைக்காட்சிகளுக்குப் பயன்படுத்தியிருக்கும் உத்தி நம்புபடியும், லாஜிக்கலாகவும் உள்ளது.

ரஜினி யோகி பாபு காட்சிகள் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. யோகிபாபு கூறும் பாரதியார் வரிகளுக்கு அவர் பாணியிலேயே பதில் கூறுவது செம.

ஒரு குடும்பத்தலைவராக, தாத்தாவாக, அப்பாவாக, மாமனாராக, கணவராக, நண்பராக, அதிகாரியாக என்று அனைத்து இடங்களிலும் அசத்தியுள்ளார்.

வீட்டு வேலை கொடுப்பதை ரஜினி கிண்டலாகக் கூறுவது, அவரைப் போல நிலையில் (ஓய்வுபெற்று) உள்ளவர்கள் ரசிக்கும்படி உள்ளது 🙂 .

அமைதியாகப் போகும் இடத்திலும், கோபம் கொள்ளும் காட்சிகளிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இடைவேளை காட்சியும், இறுதி சண்டைக்காட்சிகளிலும் செம மாஸ்.

இந்த வயதில் 50 பேரை அடிப்பது போல எல்லாம் காட்டாமல் ஆனால், அதே சமயம் ரஜினியின் கெத்தையும் விட்டுக்கொடுத்து விடாமல் சிறப்பான இயக்கம்.

Black comedy

இயக்குநர் நெல்சன் Black comedy யைத் தனது அனைத்துப் படங்களிலும் பயன்படுத்துகிறார், ஜெயிலரும் விதிவிலக்கல்ல.

Black comedy க்கு யோகி பாபு முகப் பாவனைகள் மிகப்பொருத்தமாக உள்ளது. அதிலும் ரஜினியிடம் சிக்கிக்கொண்டு அவர் கொடுக்கும் பதில்கள், முகப் பாவனைகள் ரசிக்கும்படியுள்ளது.

கிங்ஸ்லி எடுபடவில்லை. சில நேரங்களில் சீரியஸான காட்சிக்குப் பிறகு இது போல Black comedy வருவது, அதன் வீரியத்தைக் குறைப்பது போல உள்ளது.

கதாப்பாத்திரங்கள்

மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் போன்றோர் குறுகிய நேரமே வந்தாலும், அவர்களுக்கான மரியாதையைக் காட்சிகள் கொடுத்துள்ளது.

சிவராஜ்குமார் அறிமுகக்காட்சியில் பெங்களூரு திரையரங்குகள் அதிர்ந்து இருக்கும் 🙂 .

VTV கணேஷ், ரம்யா கிருஷ்ணன், மிர்னா (மருமகள்) ஆகியோர் மிகைநடிப்புச் செய்யாமல், சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மிர்னா அதிர்ச்சிகள், முகப் பாவனைகள் மிக நேர்த்தியாக இருந்தது, கொஞ்சம் கூடச் செயற்கைத்தனமாக இல்லை. வசந்த் ரவி கதாப்பாத்திரத்தில் கேள்விகள் உள்ளது.

டெர்ரர் வில்லனாக வரும் விநாயகன் முக்கியக் கதாப்பாத்திரம், அதோடு வித்தியாசமாகவும் செய்துள்ளார்.

இக்கதாப்பாத்திரத்தை மம்முட்டி செய்வதாக இருந்தது ஆனால், சில இடங்களில் சமரசம் செய்ய வேண்டும் என்பதால், தவிர்த்து விட்டதாகத் தலைவரும், நெல்சனும் கூறி இருந்தார்கள்.

சரியான முடிவு! மம்முட்டியை இக்கதாபாத்திரத்தில் நினைக்கவே முடியலை, படமே சொதப்பியிருக்கும்.

இருப்பதிலேயே திருப்தி இல்லாமல் போனது, சுனில் பகுதி தான், ரசிக்கும்படியில்லை.

இப்பகுதி இரண்டாம் பகுதியின் சுவாரசியத்தைக் குறைக்கிறது. இதில் நெல்சன் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் அல்லது காட்சிகளைக் குறைத்து இருக்கலாம்.

முதல் பாதிக் கலகலப்பு, மாஸ் என்றால், இரண்டாம் பாதி அதில் குறைவு தான் ஆனாலும், இறுதி நேரக்காட்சிகள் செம மாஸாக உள்ளது.

இறுதி காட்சி கலகலப்பாக முடிய வேண்டும் என்று எதிர்பார்த்தேன் ஆனால், எமோஷனலாக முடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு இசை

படத்துக்கு ஒளிப்பதிவு பலமாக உள்ளது. பல காட்சிகள் படத்துக்குக் கூடுதல் கவனத்தைக் கொடுக்க வைக்கிறது.

வெறுமையான இடங்களில், இரவுக் காட்சிகள், நெடுஞ்சாலை காட்சிகள், ட்ரோன் போன்றவற்றில் கேமரா அசத்தலாக உள்ளது. இரவுக் காட்சிகள் கூடுதல் அழகு.

அனிருத் பற்றிக் கூறவே வேண்டியதில்லை.

காரணம், படத்தின் துவக்கத்தில் அனிருத்துக்குச் சிறப்பு மரியாதை செய்துள்ளார் நெல்சன். இதுவே கூறும் எவ்வளவு முக்கியமான நபராக உள்ளார் என்று.

படம் துவங்கியதிலிருந்து இறுதி வரை அனிருத்தை பிரித்து எதையுமே கூற முடியாது.

யார் பார்க்கலாம்?

சில வன்முறை காட்சிகளுக்குச் சரியென்றால், அனைவரும் பார்க்கலாம். காரணம், இதில் எல்லாமே உள்ளது.

ஒரு ஓய்வு பெற்றவரின் சூழ்நிலை, குடும்பத்தலைவராக, பொறுப்பான அப்பாவாக, மாஸ் காட்சிகள், எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாக என்று அனைத்துமே உள்ளது.

ரஜினியை நெல்சன் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். மிகையாக எதையும் செய்யாமல், ரஜினிக்கு ஏற்றக் கதை மற்றும் திரைக்கதை.

முதல் காட்சி என்பதால், சத்தத்தில் சில வசனங்கள் புரியவில்லை. விரைவில் இரண்டாவது முறை செல்ல வேண்டும்.

Directed by Nelson
Written by Nelson
Produced by Kalanithi Maran
Starring Rajinikanth, Mohanlal, Shivarajkumar, Jackie Sherof, Ramyakrishnan, Vinayagan, Yogi Babu, Vasanth Ravi, Mirna
Cinematography Vijay Kartik Kannan
Edited by R. Nirmal
Music by Anirudh Ravichander
Production company Sun Pictures
Release date 10 August 2023
Running time 168 minutes
Country India
Language Tamil

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

28 COMMENTS

 1. “கபாலிக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்பில் வந்துள்ள படம் ஜெயிலர்” – ஏன் கபாலிக்கு பிறகு ?. இடையில் காலா , தர்பார் , அண்ணாத்ததே படங்கள் வந்த பொழுது எதிர்பார்ப்பு இல்லையா ?

  • 2.0 மற்றும் பேட்ட நீங்கள் கவனிக்கவில்லை. கடந்த காலத்திலிருந்து விண்டேஜ் ரஜினிகாந்த் வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததால், பேட்டவுக்காக ஒரு வலைப்பதிவு இடுகையையும் எழுதினார்.

 2. எல்லா ரஜினி படத்தையும் ஒரே மாதிரி எதிர்பாக்கறவன்தான் உண்மையான எளந்தாரி ரஜினி பேன். சரியா கிரி ?

 3. ஜெயிலர் படம் வெற்றி என்பதை காலையில் அலுவலக நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கும் போதே தெரிந்து விட்டது.. ரஜினி சாரை விட நெல்சன் நிச்சயம் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார், மகிழ்ச்சி என்பதை விட நிம்மதியாக இருப்பார் என்று கூறலாம்.. காரணம் படம் பூஜை போட்டதிலிருந்து பல்வேறாக இடர்பாடுகள் ஏற்பட்டன..

  ஒரு கட்டத்தில் நெல்சன் படத்தை இயக்குவாரா இல்லையா?? என்றெல்லாம் செய்திகள் வந்தது.. தற்போது எல்லாவற்றிக்கும் பதில் கூறும் வகையில் படம் அமைந்து விட்டது.. ரஜினி ரசிகனாக நீங்கள் படத்தை அதிகம் விரும்புவீர்கள் என்பதை உணர முடிகிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  • தாத்தா ரஜினிக்கும் நெல்சனுக்கும் கோடிக்கணக்கில் லாபம் வந்து விட்டதால் அவர்களுக்கு மகிழ்ச்சி . கோடியையே கண்ணில் பார்த்தறியாத உனக்கும் கிரிக்கும் ஏன் மகிழ்ச்சி . தாத்தா ரஜினி சாப்பிட்டால் நீங்கள் சாப்பிட்ட மாதிரியா

 4. உங்க கபாலி. காலா. பேட்ட. தர்பார். அண்ணாத்த. இப்ப ஜெயிலர் அனைத்தையும் படித்தேன். என்னா முட்டு. இப்படி ஒரு முட்டு பார்க்கவே முடியாதுபா. அண்ணாத்த படத்தையெல்லாம் நல்லா இருக்கு பார்க்க பரிந்துரைக்கிறேன் வேற.😀 மனசாட்சியே இல்லையா. படம் நல்லா இல்லைனா ஒத்துக்குற பக்குவம் உங்களுக்கு எல்லாம் எப்ப தான் வருமோ. பொதுவாக இந்த ரஜினி ரசிகர்கள் அடுத்த ரஜினி படம் வரும்போது தான் முந்தைய ரஜினி படத்தை விட இது நன்றாக உள்ளது என்று ஒத்துக்கொள்வார்கள். ஆனால் கிரி் உங்க முட்டு மரண முட்டு. எந்த ரஜினி பட விமர்சனமும் நீங்கள் நியாயமாக மனசாட்சிப்படி எழுதவில்லை. ரஜினியை பிடிக்கும் என்பதற்காக மட்டும் அனைத்து படத்தையும் செமையாக உள்ளது என எழுதுகிறீர்கள். உடனே இது என் ப்ளாக் எனக்கு தோன்றியதை தான் எழுதுவேன் என உருட்டுவீர்கள். எந்த ரஜினி ரசிகரும் உங்களை போல முரட்டு முட்டு கொடுத்து நான் பார்க்கவில்லை. கொஞ்சமாவது ரசிகர் என்பதை தாண்டி பொதுமக்கள் கண்ணோட்டத்தில் படத்தை விமர்சனம் செய்தார்கள். நீங்கள் வேண்டுமானால் உங்களின் பழைய ரஜினி படங்கள். கபாலி. காலா. பேட்ட. தர்பார். அண்ணாத்த படத்தின் உங்களின் விமர்சனத்தை நீங்களே படித்து பாருங்கள். உங்களுக்கே சிரிப்பு சிரிப்பா வரும். அவ்வளவு முட்டு

 5. ****** மூஞ்சை பார்த்தாலே வாந்தி வருது . இவரு ஹீரோவாம்
  வீட்டிலே மனைவியிடம் அடி வாங்கி குடித்து விட்டு பம்மர ஆளு ஹீரோவாம் .**********

 6. @unmai vilambi

  “ஏன் கபாலிக்கு பிறகு ?. இடையில் காலா , தர்பார் , அண்ணாத்ததே படங்கள் வந்த பொழுது எதிர்பார்ப்பு இல்லையா ?”

  நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து படங்களுக்கும் எதிர்பார்ப்பு வந்து விடாது, அது ரஜினி படமாக இருந்தாலும்.

  அதில் உள்ள இயக்குனர், கதை, இசையமைப்பாளர், கால சூழ்நிலை என்று ஏராளாமான காரணிகள் உள்ளது.

  முதன் முதலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் பாபா, அதன் பிறகு எந்திரன், அதன் பிறகு கபாலி, அதன் பிறகு ஜெயிலர்.

  இடையில் வந்த படங்கள் வெற்றி தோல்வி அடைந்தாலும் மேற்கூறியவற்றை போல எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.

  கபாலியின் எதிர்பார்ப்பு அந்த நேரத்தில் கற்பனை செய்ய முடியாதது. அதற்கு தாணு செய்த விளம்பரங்களும், படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களும், அதோடு அப்படத்துக்கு வந்த first look, teaser என்று ஏராளமான காரணங்கள் இருந்தன.

  எனவே, மற்ற படங்களுக்கு இல்லையென்றால், கண்டிப்பாக இவற்றுக்கு இருந்த எதிர்பார்ப்பு இல்லை. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

  இன்னொன்று எதிர்பார்ப்பு என்பது ரசிகனால் மட்டுமே வந்து விடாது. பொதுமக்களுக்கும் அந்த எதிர்பார்ப்பு வர வேண்டும்.

  அதே போல ஒரு படம் வெற்றி பெறுவதும் ரசிகனால் மட்டுமே அல்ல, பொதுமக்களின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியாது.

  ரசிகன் அனைத்து படங்களையும் எதிர்பார்க்கலாம் ஆனால், பொதுமக்கள் நினைத்தாலே அதற்கு வெற்றி தீர்ப்பு எழுதப்படும்.

  அது பாபாக்கு நடைபெறவில்லை ஆனால், எந்திரனுக்கு, கபாலிக்கு நடந்தது.

  அதே போல ஜெயிலரும் பெரிய எதிர்பார்ப்பைக் கொடுத்தது, படமும் நன்றாக வந்துள்ளது.

  எனவே, மக்கள் மனது வைத்தால் மட்டுமே படம் வெற்றி, ரசிகர்கள் எதிர்பார்ப்பதாலும், பார்ப்பதாலும் ஒரு படம் ஓடி விடாது.

  • “நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து படங்களுக்கும் எதிர்பார்ப்பு வந்து விடாது, அது ரஜினி படமாக இருந்தாலும். ” — ஒரு ரஜினி ரசிகரின் இந்த புரிதலை வரவேற்கிறேன் .
   உங்கள் பார்வையில் பொதுமக்களின் ஆதரவு இப்படத்திற்கு எப்படி உள்ளது என்பதை வரும் நாட்களில் தெரிவிக்கவும்

 7. @யாசின்

  “ரஜினி சாரை விட நெல்சன் நிச்சயம் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார், மகிழ்ச்சி என்பதை விட நிம்மதியாக இருப்பார் என்று கூறலாம்..”

  கண்டிப்பாக. ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

  “ஒரு கட்டத்தில் நெல்சன் படத்தை இயக்குவாரா இல்லையா?? என்றெல்லாம் செய்திகள் வந்தது.”

  ஆமாம். ரஜினி தான், படத்தை கை விட்டால், இவர் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று உறுதியாக இருந்தார்.

  அதற்கான வெற்றியை நெல்சன் கொடுத்து விட்டார்.

  “ரஜினி ரசிகனாக நீங்கள் படத்தை அதிகம் விரும்புவீர்கள் என்பதை உணர முடிகிறது..”

  பொதுமக்களையும் அதிகம் கவர்ந்துள்ளது.

 8. @anand

  சில நேரங்களில் கண்ணாடியைப் பார்த்துப் பேசுகிறோம் என்பதை மறந்து விடுகிறோம். நீங்கள் கண்ணாடி பார்ப்பதில்லை என்று தெரிகிறது.

  விமர்சனம் என்ற பெயரில் தனிமனித தாக்குதல் என்ற வாந்தியை இங்கே எடுக்க வேண்டாம். அதற்கான இடம் இதுவல்ல.

  வேறு ஏதாவது சாக்கடையில் சென்று புரளவும். அதை எதிர்பார்க்கும் தளங்கள் நிறைய உள்ளன.

  இத்தளத்தில் கமெண்ட் மாடரேஷன் கிடையாது. எனவே, கொடுக்கப்படும் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம்.

  இனியொரு முறை தனிமனித தாக்குதல், அநாகரீகமான கருத்துகளைப் பதிவு செய்தால், நீக்கப்படும்.

 9. @கார்த்திக்

  உங்களைச் சிரிக்க வைத்து இளைப்பாற உதவியது மிக்க மகிழ்ச்சி.

  இனி உங்கள் வேலையைத் தொடரலாம்.

 10. 😀 எப்படி இருந்தாலும் அடுத்த ரஜினி படம் வரும்போது ஜெயிலர் ஐ விட இந்த படம் தாறுமாறாக உள்ளது ஜெயிலர் ரசிகர்களை அந்த அளவு திருப்திபடுத்தவில்லை என கூற போகிறீர்கள். அந்த உண்மையை இப்போதே கூறினால் தான் என்ன. அடுத்த ரஜினி படம் வந்தால் தான் உங்களிடம் முந்தைய ரஜினி பட உண்மையான விமர்சனம் வருகிறது. நீங்கள் வரிசையாக ரஜினி நடித்த உங்களின் விமர்சனத்தை படியுங்கள். சரி நான் இப்போது என் வேலையை பார்க்க போகிறேன். அடுத்த ரஜினி படம் வரும் போது உங்களின் உண்மையான ஜெயிலர் விமர்சனத்திற்காக வெயிடிங்.

 11. @கார்த்திக்

  உங்களுக்கு என்னங்க பிரச்சனை?!

  இப்ப என்ன ஜெயிலர் நல்லா இல்லைனு சொல்லணும்.. அவ்வளோ தானே! சரி நல்லா இல்லை. போதுமா!

  நான் என் பழைய விமர்சனங்களைப் படிப்பது இருக்கட்டும் நீங்க முதல்ல இங்க எழுதிய இரண்டு கருத்துகளையும் படித்துப் பாருங்க.

  ஆத்தா வையும் சந்தைக்குப் போகணும் காசு கொடுங்கிற மாதிரி ஒன்றையவே பேசிட்டு இருக்கீங்க.

  போங்க பாஸ் உலகத்துல ரஜினி தவிர்த்துப் பேச நிறைய இருக்கு.. அதற்கும் கொஞ்சம் முக்கியத்துவதும் கொடுங்க.

  ரஜினி பற்றி எழுதினால் போதும் உடனே இதுவரை தூங்கிட்டு இருந்தவர்கள் எல்லோரும் விழிப்பு வந்து நீதி, நேர்மை, நியாயம் நடுநிலைனு பேச வந்துட வேண்டியது.

  • ஹாஹ்ஹஹாஹ்ஹாஅஹ்ஹ்ஹாஹ்ஹா
   படத்தப்பாத்து சிரிக்கல. இந்தக் கண்றாவியை நேத்துக் காலைல இருந்து பலரும் முட்டுக் கொடுத்துட்டு ஹிட்டு , ப்ளாக் பஸ்டர் ,அது இதுன்னு பெனத்திட்டு திரிஞ்சிட்டு இருக்குறவங்களப் பாத்து சிரிக்கிறேன்.
   தூக்கிச் சொமக்கறாராம். எதத் தூக்கிச் சொமப்பாங்க.
   கிரி,
   நீங்கள் “ஜெயிலர்” என்று அழைக்கப்படும் குப்பைகளை விற்க முயற்சிக்கிறீர்கள்

 12. ரஜினியை தவிர உலகத்தைல நிறைய இருக்கு தான் யாரு இல்லைனா. ரஜினி ஜெயிலர் விமர்சனத்துக்கு வந்து வேற என்ன பேசணும்னு சொல்றிங்க. அண்ணாத்த மாதிரி மொக்க படத்துக்கே பரிந்துரைத்த நீங்க ஜெயிலர் படத்தை முட்டு கொடுக்கறது சாதாரணம் தான். இந்த ரஜினி விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவே வராது. சம்பந்தம் இல்லாமல் நீங்கள் தான். எழுதுகிறீர்கள். நீங்கள் ரஜினியை தெய்வமாக கொண்டும் அளவிற்கு அவர் வொர்த் இல்ல. திமுகவிடம் டீல் போட்டு அரசியலுக்கு வராமல் தவிர்த்து அவரை நம்பிய மக்களை ஏமாற்றியவர் தான் ரஜினி. அதான் வரிசையாக ரஜினி சன் பிக்சர்ஸ் பேனரில் நடிக்கும் காரணம்.

 13. @நச்சினார்க்குஇனியன்

  நீங்க கூறுவதைப் பார்க்கும் போது வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. எதிர்கட்சிக்காரனை பார்த்து கேட்கிறேன் அப்படி என்னையா என் கட்சிக்காரன் செய்தான்… 😀

  ட்விட்டர்ல எங்கேயோ யாருகிட்டயோ சண்டை போட்டுட்டு அல்லது எழுதியதை பார்த்து காண்டாகி இங்கே வந்து புலம்பிட்டு இருக்கீங்க.

  நீங்க கூறிய எதையும் நான் எழுதவில்லை. சம்பந்தமில்லாம கருத்து கூறிட்டு இருக்கீங்க.

  ஆனால், ஜாலியா தான் இருக்கு 🙂 .

  • I don’t need to grieve. We’ve noticed your consistent flip-flopping since Lingaa. A day after posting a negative review, you turn around and praise the movie, especially highlighting Rajni’s appeal to the female audience as the culinary expert. This pattern persisted with Kabali. However, your most remarkable turnaround was with Annathey. This trend of inconsistency seems to be everlasting.

   It’s perfectly fine to express dissatisfaction with a movie if it falls short, but instead of straightforwardly expressing your opinion, you seem to engage in a lot of back-and-forth. I hope this pattern of oscillation brings you happiness and satisfaction in the long run.

 14. @கார்த்திக்

  “ரஜினியை தவிர உலகத்தைல நிறைய இருக்கு தான் யாரு இல்லைனா.”

  ஆனால், ரஜினின்னா மட்டும் தானே வந்து சண்டை போடுறீங்க.. மற்றதுக்கு எதற்கும் வருவதில்லையே.!

  ரஜினின்னா மட்டும் உங்களுக்கு மூக்கு வேர்க்குதுல்ல.. 🙂 .

  “ஜெயிலர் விமர்சனத்துக்கு வந்து வேற என்ன பேசணும்னு சொல்றிங்க”

  ஒன்றையவே சுத்தி சுத்தி சொல்லிட்டு இருக்கீங்களே.. அதை சொல்றேன்.

  “அண்ணாத்த மாதிரி மொக்க படத்துக்கே பரிந்துரைத்த நீங்க ஜெயிலர் படத்தை முட்டு கொடுக்கறது சாதாரணம் தான். இந்த ரஜினி விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவே வராது.”

  கார்த்திக்கு ஒரு படம் பிடிக்கலைன்னா ஊருக்கே பிடிக்காதுன்னு அர்த்தமில்லை. உங்களுக்கு பிடிக்கல, எனக்கு பிடித்து இருக்கு.

  அவ்வளோ தான்! Opinion Differs.

  வராதுன்னு சொல்றீங்க.. அப்புறம் எதற்கு வராத ஒன்றை வர வைக்க முயற்சி பண்ணுறீங்க.. அது தான் வராதுல்ல.

  “சம்பந்தம் இல்லாமல் நீங்கள் தான் எழுதுகிறீர்கள். நீங்கள் ரஜினியை தெய்வமாக கொண்டும் அளவிற்கு அவர் வொர்த் இல்ல.”

  இருக்கட்டும்.. அதுக்கு இப்ப என்ன?

  “திமுகவிடம் டீல் போட்டு அரசியலுக்கு வராமல் தவிர்த்து அவரை நம்பிய மக்களை ஏமாற்றியவர் தான் ரஜினி.”

  இது ஜெயிலர் விமர்சனத்துக்குச் சம்பந்தமாம்.. பார்த்துக்குங்க மக்களே!

  அப்புறம், ஜூனியர் விகடன் கழுகாருக்கு பிறகு நீங்க தான் அனைத்தையும் கிட்ட இருந்தே கண்காணிக்கிறீங்க போல 😀 .

  எல்லாமே தெரிந்து வைத்து இருக்கீங்க!

  ரஜினிக்கு ஆதரவா நான் எழுதறேன்னு சொல்றீங்க.. அதையே நான்.. ரஜினி மேல உள்ள காண்டுல நீங்க சொல்றீங்கன்னு ஏன் சொல்லக் கூடாது!

  உங்க கருத்துப்படி இருவருமே ஒன்று தானே!

 15. கிரி..

  நல்ல படம்.. ஸ்டைல் அருமை..

  மக்கள் கொண்டாடுறாங்க.. குடும்பம் குடும்பமா பாக்குறாங்க.. படம் 1000 கோடி வசூல் பண்ணினாலும் இவனுங்க அதுக்கு காரணம் ரஜினி இல்லை னு புலம்புவாங்க.. 😊

  அவருக்கு எல்லாம் பக்கம் பக்கமா பதில் சொன்னாலும்

  அதே தான்.. காக்கா கூட்டம் ல.. விடுங்க 😊

  கழுகு போல நாம் பறப்போம்.. இவர்களைக் கண்டுக்காம 😊👍

 16. @Nachinaarkkuiniyan

  I’m surprised. I’m a BIG fan of Rajini and obviously, I can’t write like your expectation.

  Yes Of course I agree with your point. The reason behind is FDFS movie watching and normal movie watching are different.

  This is the reason instant reviews are different from late reviews. I will write an article related to this later and explain the differences.

  You may agree or disagree it doesn’t matter. I just want to convey my thoughts on what I like and don’t like. This is the reason I have been here for 15 years.

  Nachinaarkkuiniyan I’m not writing here to satisfy others and am doing it for my passion and express my thoughts.

  As I mentioned I’m not neutral and you are also.

  It seems you hate Rajini. If you write a review how it will be? Will it be neutral? Can you satisfy everyone with your reviews? BIG NO.

  You are on the left and I’m on the right that’s all. Everyone has their own opinion / interest / view. Respect that.

  If you write a Jailer review, will you be neutral? Of course, you can’t. If I’m saying why you are writing like this? Will you accept it?

  Always criticising is easy for everyone, but doing the same thing will be the toughest one.

  You are always welcome to ask questions about my article and I will reply sure but you can’t impose your thoughts / expectation on me which won’t work.

 17. @இந்துமதி

  இங்கே பதிலளிக்க காரணம், என் தளத்தில் கருத்திடுகிறார்கள். கேட்கப்படும் கேள்விகளுக்கு மரியாதை கொடுக்கப் பதிலளிக்கிறேன் அவ்வளவே.

  கட்டுரையை எழுதிட்டு பதிலளிக்காமல் இருப்பது சரியல்லவே. என் threshold reach ஆகும் வரை தொடரும் 🙂 .

  நன்றி 🙏

 18. ‘’அப்புறம், ஜூனியர் விகடன் கழுகாருக்கு பிறகு நீங்க தான் அனைத்தையும் கிட்ட இருந்தே கண்காணிக்கிறீங்க போல 😀

  எல்லாமே தெரிந்து வைத்து இருக்கீங்க!’’

  😀😀 நடப்பவைகளை நீங்க கவனித்து இருந்தால் இந்த உண்மை அப்பட்டமாக தெரிந்து இருக்கும். ரஜினி மேல் இருக்கும் அசட்டு நம்பிக்கையில் நீங்க நம்ப மறுக்கறீங்க.
  2017 அரசலுக்கு வருவது உறுதின்னு சொன்னாரு. அப்புறம் சட்டசபை தேர்தல் நெருங்கும் போது ரசிகர்களை மட்டுமே நம்பி அரசியலுக்கு வரமுடியாது அப்படீன்னு ஒரு அறிக்கை. பிறகு மக்களிடம் மாற்றம் வரட்டும் நான் அப்ப அரசியலுக்கு வரேன் ஒரு பெரிய தன்னிலை விளக்க பேட்டி. பிறகு இந்த கோமாளி திடீர்னு நான் அரசியலுக்கு வரேன் மாற்றம் அரசியல் மாற்றம் உறுதின்னு ஒரு பேட்டி. பிஜேபில இருந்து ஒரு ஆள பிடித்து (பெயர் நினைவில்லை) இவர் தான் கட்சிக்கு தலைவர்னு ஒரு காமெடி அறிக்கை. அடுத்த ரெண்டு நாளில் கோமாளி ரஜினி பல்டி அடிச்சாரு. அண்ணாத்த பட சூட்டிங் போது யூனிட்ல யாருக்கோ கொராணா வந்துச்சாம். இவரு 2 நாள் ஹைதராபாத் மருத்துமனையில் இருந்தாராம். தீவிரமாக யோசிச்சாராம். பிறகு அரசியலுக்கு வரவில்லைன்னு ஒரு அறிக்கை. அரசியலுக்கு வந்தால் நிறைய சுத்தனும் கொரோனா வந்துரும். ஆனால் அண்ணாத்த சூட்டிங் மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் கொரோனா வராது. அறிய கண்டுபிடிப்பு. நான் அரசியலுக்கு வரலை ரசிகர்களை மட்டுமே நம்பி வரமுடியாது பொதுமக்கள் ஆதரவு வேணும்னு சொன்னாரு அப்பவே அப்படியே விட்டு இருக்கலாம். அப்படி சொல்லிட்டு அடுத்த ஒரு வாரத்தில் நான் அரசியலுக்கு வரேன் மாற்றம் உறுதின்னு சொல்லி அடுத்த இரண்டு நாளில் நான் வரலை கொரானா வந்துரும் ஓடிட்டாரு. திமுகவிடம் டீல் பேசி திமுக ஆட்சிக்கு ரஜினி உதவியிருக்கிறார். அதான் திமுக பிரதி உபகாரமாக அவருக்கு ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் கொடுத்து தொடர்ந்து திமுக குடும்ப பேனரில் நடிக்க காரணம். ரஜினி ஒரு கஞ்சன். அப்பட்டமான சுயநலவாதி. இந்த உண்மையை நீங்க ஏற்காமல் போங்க எனக்கு கவலை இல்ல. ஆனால் இந்த கோமாளி ரஜினி அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராக ட்விட்டரில் அறிக்கை மீடியா பேட்டின்னு எல்லாத்துக்கும் கருத்து சொன்ன ரஜினி இப்ப திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களுக்கு எதற்கும் அறிக்கை பேட்டி இல்லை. ஏன் இதே மவுனத்தை அதிமுக ஆட்சயில் கடைபிடித்து இருக்கலாமே?
  அதிமுக ஆட்சியில் தந்தை மகனை போலீஸ் அடித்து கொன்றதுக்கு இந்த கோமாளி ட்விட்டரில் கோபமாக இருப்பதை போன்று ஒரு போட்டோ போட்டு ( விடவே கூடாது. சத்தியமா விடவே கூடாது) அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணம் இருந்தால் இதுபோன்று நடக்க விடகூடாதுன்னு அறிக்கை. இப்ப திமுக ஆட்சியில் எனக்கு தெரிந்து 4 லாக்அப் டெத் நடந்துவிட்டது ரஜினி ஒரு அறிக்கை விடவில்லை. யஜமான வசுவாசம் போல. அதிமுக என்றால் சீறுவதும் திமுக என்றால் பம்முவதும் தான் நேர்மையானவருக்கு அழகா? அல்லது வாங்கிய பணத்திற்கு or பேசிய டிலிங்கிற்கு விசுவாசமாக இருக்கிறாரா? அல்லது பயமா? இதே ஜெயலலிதா இருந்த போது அதிமுக ஆட்சிக்கு எதிராக ஒரு அறிக்கை விட்டாரா. பலமில்லாத வீக்கான பழனிசாமி ஆட்சிதானே இப்போது நம் வீரத்தை காட்டுவோம் என தன் கோழைத்தனத்தை காட்டினார். நீங்களே ஒரு பதிவில் திமுக ஆட்சியில் சூர்யா மற்ற நடிகர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என எழுதி இருந்தீர்கள். வசதியாக ரஜினியின் பெயரை தவிர்த்தீர்கள். உங்களுக்கு பிடிக்கும் என்பதால் ரஜினியை அந்த லிஸ்டில்்சேர்க்கவில்லை. அவர்களுக்கும் ரஜினிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவரும் பழனிசாமி அதிமுக ஆட்சியல் பொங்கி கொண்டு தான் இருந்தார். என்ன ரஜினி அவர்களை போல இந்து விரோத பேச்சோ இந்து கடவுளை அவமதித்தவரோ இல்லை. அவ்வளவு தான் வித்தியாசம். தைரியம் இருந்தால் ரஜினி வேங்கைவயல் பிரச்சனை. தமிழக சட்ட ஒழங்கு பிரச்சனை. லாக்அப் டெத் விசயம். இதை பற்றி பேசுவாரா? அறிக்கை விடுவாரா? ட்வீட் போடுவாரா. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் எண்ணம் இருந்தால் இதுபோல நடக்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்வாரா? திராணி இருக்கா பேச? மாட்டார். ஏன் என்றால் திமுக என்றாலே அராஜகம் அடாவடி என அவருக்கு தெரியும் பேசினால் அடுத்து என்ன நடக்கும் எனவும் தெரியும் அதனால் பேச மாட்டார். அதிமுக என்றால் மட்டுமே தன் கோழைத்தனத்தை காட்டுவார் ரஜினி. அவர் அறிக்கை விட்டு ஒன்றும் ஆவப்போவதில்லை தான். ஆனால் அதிமுக ஆட்சியில் பொங்கி விட்டு திமுக ஆட்சியல் இப்படி மௌனமாக இருக்கிறாரே என்பது தான் கேள்வி. சூர்யா சித்தார்த் போன்ற நடிகர்களை இப்போது கேள்வி கேட்கும் போது ரஜினியையும் சேர்த்தே கேட்க வேண்டும் ரஜினியும் அதிமுக ஆட்சியில் பொங்கிவர் தான்.

 19. @கார்த்திக்

  ரஜினி மேல உங்களுக்குள்ள காண்டு புரிகிறது. எதனால் ஜெயிலருக்கு கொந்தளித்தீர்கள் என்பதை இதைப்படித்தாலே அனைவரும் புரிந்து கொள்ளலாம்.

  விமர்சிக்கும் போது மரியாதையாக குறிப்பிட்டு பழகுங்கள். 72 வயது நபர், பல லட்சம் மக்களால் நேசிக்கப்படுபவரை வாய்க்கு வந்தபடி கூறுவது கேவலமான செயல்.

  இனியொருமுறை இது போல மரியாதைக்குறைவாகக் குறிப்பிட்டால், எடிட் செய்யப்படும்.

  தற்போது இதை வெளியிடக் காரணம், மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

  ஒருத்தரை பொதுவெளியில் எப்படி விமர்சிப்பது என்பதை கற்றுக்கொள்ளுங்கள் முதலில். பின்னர் விமர்சனத்தை வைக்கலாம்.

  இதுவொரு திரைப்பட விமர்சனம். இங்கே வந்து சம்பந்தம் இல்லாமல் அரசியல் பேசிக்கொண்டுள்ளீர்கள்.

  இதுல என்னை வேறு சம்பந்தம் இல்லாமல் பேசியதாக குறிப்பிட்டீர்கள்.

  முதலில் கட்டுரை எது பற்றியதோ அதை பற்றி மட்டும் விவாதம் செய்து பழகுங்கள். கட்டுரைக்குச் சம்பந்தமில்லாததை எழுதிக்கொண்டு இருக்காதீர்கள்.

  நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துக்கும் என்னால் பதிலளிக்க முடியும் ஆனால், அதற்கான கட்டுரை இதுவல்ல.

  இது சம்பந்தமாக கட்டுரை எழுதும் போது தாராளமாக கேள்விகளை முன் வையுங்கள், மறுக்காமல் பதிலளிப்பேன்.

  எங்கேயும் ஓடி விட மாட்டேன், பதிலளிப்பது எனக்கு பிடித்தமானது.

 20. ‘’நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துக்கும் என்னால் பதிலளிக்க முடியும்’’

  😀😀😀 நீங்கள் முட்டுகொடுப்பதை பதில் சொல்வதாக நினைக்கிறீர்கள்.

  ‘’விமர்சிக்கும் போது மரியாதையாக குறிப்பிட்டு பழகுங்கள். 72 வயது நபர்’’

  வயதிற்கு மரியாதை என்பதை தாண்டி அவர்கள் செயலிலும் கலந்தே மரியாதை இருக்கிறது.
  இருந்தாலும் கோபத்தில் அப்படி எழுதியதற்காக மன்னப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி இதை தவிர்க்க முயற்சிக்கிறேன்.
  அவர் பல கோடி பேரை தன் சுயநலத்திற்காக சுயலாபத்திற்காக ஏமாற்றியவர். நான் ஏற்கனவே கூறியது போல திமுக ஆட்சியில் தற்போது நடக்கும் அவலங்கள தட்டி கேட்க முடியாதவர் அது பயமா அல்லது விசுவாசமா? நீங்கள் சூர்யா சித்தார்த்தை விமர்சிக்கும் போது ரஜினி விமர்னத்திற்கு அப்பார்ப்பட்டவர் போல எழுதுகிறீர்கள். அவர்களை போலவே ரஜினியும் அதிமுக ஆட்சியில் பொங்கிவிட்டு திமுக ஆட்சியில் மௌனமாக இருக்கிறார். சரி இத்தோடு இதை நான் முடித்து கொள்கிறேன். இதை பற்றிய உங்கள் ப்ளாகில் பதிவு வரும்போது வருகிறேன். நான் நியாயமான கேள்விகளை கேட்க தயங்கியதில்லை நானும் ஓடி ஒளியமாட்டேன். இப்போது தான் உங்கள் ப்ளாகை புதிதாக படிக்க ஆரம்பித்தேன். கூகுளில் ஜெயிலர் விமர்சனம் என தேடும்போது உங்கள் ப்ளாக் தென்பட்டது. நிறைய பதிவை படித்தேன். ரஜினிக்கு அப்படி முட்டு கொடுக்கிறீர்கள். எல்லாத்துக்கும் ரஜினி தான் எனக்கு inspiration என்று அதுக்கும் ரஜினிக்கும் சம்பந்தமில்லை என்றாலும் நான் தீவிர ரஜினி ரசிகன் என காட்டிகொள்வதற்காக வேண்டுமென்றே அனைத்து பதிவிலும் ரஜினி ஜால்ரா சத்தம் ஓவராக இருப்பதை பார்த்தேன். இனி உங்களுடன் என் ஆரோக்கியமான விவாதம் தொடரும்.

 21. @கார்த்திக்

  “😀😀😀 நீங்கள் முட்டுகொடுப்பதை பதில் சொல்வதாக நினைக்கிறீர்கள்.”

  “இப்போது தான் உங்கள் ப்ளாகை புதிதாக படிக்க ஆரம்பித்தேன். கூகுளில் ஜெயிலர் விமர்சனம் என தேடும்போது உங்கள் ப்ளாக் தென்பட்டது.”

  என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாது கார்த்திக். தற்போது தான் வந்துள்ளீர்கள்.

  எனவே, ரஜினி மீதான உங்கள் கோபத்தை / வன்மத்தை கொட்டி விட்டீர்கள். புரிந்து கொள்ள முடிகிறது, எனக்கு இது ஒன்றும் புதிதில்லை எனவே, எந்த தாக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தாது.

  நான் எந்த மாதிரி விவாதம் செய்வேன், எப்படி பதிலளிப்பேன் என்பதை ரஜினி அல்லாத கட்டுரைகளையும் விவாதங்களையும் படித்து பாருங்கள்.

  நீங்கள் நினைக்கும் பதிலை நான் கூற முடியாது. என் கருத்தையே கூற முடியும்.

  நான் கூறுவது முட்டுக்கொடுப்பது என்று நீங்கள் கூறினால், நீங்கள் கூறும் வெறுப்பு கருத்துகளுக்கும் இதே போல நானும் ஒரு காரணம் கூற முடியுமே!

  இங்கு யார் சரி தவறு என்பது கேள்வியல்ல. நீங்கள் உங்கள் கருத்தைக் கூறுகிறீர்கள். நான் என் கருத்தைக் கூறுகிறேன் அவ்வளோ தான்.

  எனவே, இது ஒரு விவாதம் அவ்வளவே என்ற புரிதல் இருந்தால் போதுமானது. அடிப்படை, விவாதம் நாகரீகமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே!

  “நிறைய பதிவை படித்தேன்.”

  ரஜினி சார்ந்த கட்டுரைகளை மட்டும் படித்து இருப்பீர்கள். மற்ற கட்டுரைகளையும் படித்து இருந்தால், இது போல கூறி இருக்க மாட்டீர்கள்.

  “ரஜினிக்கு அப்படி முட்டு கொடுக்கிறீர்கள். எல்லாத்துக்கும் ரஜினி தான் எனக்கு inspiration என்று அதுக்கும் ரஜினிக்கும் சம்பந்தமில்லை என்றாலும் நான் தீவிர ரஜினி ரசிகன் என காட்டிகொள்வதற்காக வேண்டுமென்றே அனைத்து பதிவிலும் ரஜினி ஜால்ரா சத்தம் ஓவராக இருப்பதை பார்த்தேன்”

  ரஜினி ரசிகன் என காட்டிக்கொள்வதற்காகவா?! இதில் காட்டிக்கொள்ள என்ன உள்ளது! நான் ரஜினி ரசிகன் என்பது என் தளத்தைத் தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் தெரியும்.

  இதில் தனியாக நான் என்ன நிரூபிக்க வேண்டியது உள்ளது!!

  அவரால் எனக்கு கிடைத்த பயன்கள், அவரால் நான் என்னை எவ்வளவு மாற்றிக்கொண்டேன் என்பதையெல்லாம் வாய்ப்புக்கிடைக்கும்போது கூறி வருகிறேன். இது 100% உண்மை.

  அனைவருக்கும் ரஜினியை பிடிக்க வேண்டும் என்பதில்லை ஆனால், அவர் எனக்கு ஒரு Inspiration.

  உங்களுக்கு ரஜினியை வெறுக்க 100 காரணங்கள் இருப்பது போல, ரசிக்க எனக்கு 1,000 காரணங்கள் இருக்கக்கூடாதா?!

  நீங்கள் இவ்வளவு கடுமையாக விமர்சித்தும் பொறுமையாக பதிலளிக்கிறேன் என்றால், அதற்கு காரணமே ரஜினியிடமிருந்து கற்றுக்கொண்ட பொறுமையே!

  ஒரு வகையில் இதற்கு ரஜினியை நீங்கள் பாராட்ட வேண்டும் 🙂 .

  https://www.giriblog.com/neautral-is-possible-or-not/

  அதே போல நான் என்ன மாதிரியான நபர் என்பதையும் மேற்கூறிய கட்டுரையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

  எனவே, நான் இங்கே எதையும் மறைக்கவில்லை.

  உங்களுக்கு ஒரு விருப்பம், வெறுப்பு இருப்பது போல எனக்கும் உள்ளது.

  நம்மைப் போலவே அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. நம் கருத்துகளை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று திணிப்பது, எதிர்பார்ப்பது தவறு.

  அவரவர் கருத்தைக் கூற உரிமையுண்டு. அது நாகரீகமாக உள்ளதா என்பதே இங்கே கேள்வி.

  நீங்கள் கடுமையாக ரஜினியை குறிப்பிட்டதற்கு நானும் பதிலுக்கு அசிங்கமாக பதிலளித்தால் என்ன நடக்கும்?

  என் தளம் தான் சாக்கடையாகும். அதை நான் விரும்பவில்லை.

  இங்கே நான் தளம் நடத்துவது என் Passion காரணமாக. வருமானத்துக்காகவோ, புகழுக்காவோ அல்ல.

  மற்ற கட்டுரைகளையும் விவாதங்களையும், அதற்கு எப்படி பதிலளித்துள்ளேன் என்பதையும் பார்க்கவும்.

  “இனி உங்களுடன் என் ஆரோக்கியமான விவாதம் தொடரும்.”

  நன்றி. இதையே நான் அனைவரிடமும் எதிர்பார்க்கிறேன்.

  நண்பர் அப்துல்லா கூறியதை குறிப்பிட்டு முடிக்கிறேன்.

  “பொதுவில் வந்துவிட்ட எவரையும் விமர்சிக்க நமக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில் நம்மால் விமர்சிக்கப்படும் நபரைப் பற்றி விமர்சிக்கும் முன் முழுமையாக அறிந்து கொள்ளும் கடமையும் நமக்குண்டு.”

 22. கிரி. விஜய் சேதுபதி மடோனா செபாஸ்டியன் நடித்து 2016 வருடம் வெளியான (காதலும் கடந்து போகும்) திரைப்படம் பார்த்து இருக்கிறீர்களா? அதிகாரப்பூர்வமாக கொரியன் படத்தின் உரிமையை வாங்கி அதை தமிழில் அழகாக எடுத்திருப்பார் இயக்குனர் நலன் குமாரசாமி. அற்புதமான படம். அந்த படம் பார்க்கவில்லையெனில் பாருங்கள். எனக்கு மிக மிக மிக பிடித்த திரைப்படம். Feel good movie. படம் கொஞ்சம் மெதுவாக தான் நகரும். ஆனால் ஒவ்வொரு சீனிலும் ஒரு உணர்வு இருக்கும். படத்தை பார்த்து உங்களுக்கு பிடித்து இருந்தால் விமர்சனம் எழுதுங்கள். படம் எந்த ஓடிடியிலும் இல்லை. சாட்டிலைட் உரிமை ஜெயா டிவி வாங்கியுள்ளது. எப்பயாவது ஜெயாவில் போடுவார்கள். நெட்டில் டவுன்லோட் செய்து பார்க்கலாம். அல்லது YouTube இல் கிடைத்தால் பாருங்கள். பார்த்து பிடித்து இருந்தால் விமர்சனம் எழுதுங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here