விண்டோஸ் 11 இயங்கு தளத்தை மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் பயன்பாட்டுக்கு (OEM (Original Equipment Manufacturer) Release) 2021 இறுதி அல்லது 2022 துவக்கத்தில் வரும் என்று கூறப்படுகிறது.
விண்டோஸ் 10 பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் 11 க்கு இலவசமாக Upgrade செய்து கொள்ளலாம் என்று மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது.
விண்டோஸ் 11
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வெளியீடுகளில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இயங்குதளங்களில் ஒன்று விண்டோஸ் 10.
UI (User Interface), வேகம் இதன் முக்கிய அம்சமாக இருந்தது.
தற்போது வெளியாகவுள்ள Windows 11 இன்னும் வேகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாகப் புதிய வசதிகளையும் இணைத்துள்ளது.
என்னென்ன மாற்றங்கள்
- Start Menu இடது ஓரத்துக்குப் பதிலாக நடுவில் உள்ளது.
- தேவையான Layout தேர்வு செய்ய முடியும்.
- மடிக்கணினியை Tab போலப் பிரிக்க முடிந்தால், அதற்குத் தகுந்த மாதிரி வடிவமைப்பும் மாறி விடும்.
- கூகுளின் Chrome OS க்கு குடைச்சல் கொடுக்கும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
- Light Mode / Dark Mode உள்ளது.
- Windows Updates 40% குறைவாக இருக்கும் ஆனால், சிறப்பாகச் செயல்படும்.
- Voice Typing உள்ளது.
- User Inerface (UI) தெளிவாக இருக்கும்.
- மொபைலில் பார்த்தாலும் Recent Docs கணினியிலும் காட்டும்.
- Games க்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
- Alert System மேம்படுத்தப்பட்டுள்ளது
- Android Apps நிறுவலாம் என்று மைக்ரோசாஃப்ட் கூறுகிறது ஆனால், இதற்குக் கூகுள் ஏதோ செக் வைத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
- Chat செயலியான Teams இணைக்கப்பட்டுள்ளது.
- Internet Explorer நீக்கப்பட்டு Edge உலவி (பிரௌசர்) மட்டும் சேர்க்கப்படுகிறது.
விண்டோஸ் 11 நிறுவ என்னென்ன தேவை?
- Processor 1 gigahertz (GHz) or faster with 2 or more cores on a compatible 64-bit processor or System on a Chip (SoC)
- Memory 4 GB RAM
- Storage 64 GB or larger storage device
- System firmware UEFI, Secure Boot capable
- TPM Trusted Platform Module (TPM) version 2.0
- Graphics card DirectX 12 compatible graphics / WDDM 2.x
- Display > 9″ with HD Resolution (720p)
- Internet connection Microsoft account and internet connectivity required for setup for Windows 11 Home
மேற்கூறிய வசதிகள் இல்லாத கணினியில் விண்டோஸ் 11 நிறுவ முடியாது.
விண்டோஸ் 11 யைத் தற்போதைய கணினி ஏற்றுக்கொள்ளுமா என்று https://aka.ms/GetPCHealthCheckApp Application நிறுவிப் பரிசோதிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
கொசுறு
இத்தளத்தின் முதல் தொழில்நுட்ப பதிவு விண்டோஸ் 7 ல் July 29, 2009 ஆரம்பித்தது.
அதற்குக் கிடைத்த வரவேற்பு, அப்போது இருந்த ஷிர்டி சாய்தாசன் தனது டாப் 10 கட்டுரைகளில் கொடுத்த உற்சாகம் ஆகியவை மேலும் தொழில்நுட்ப பதிவுகள் எழுத ஊக்குவித்தது.
விண்டோஸ் 7 எனக்கு ரொம்ப ராசியானது, விண்டோஸ் 7 கட்டுரையே என் தொழில்நுட்ப கட்டுரைகளுக்குப் பிள்ளையார் சுழி.
தற்போது விண்டோஸ் 11 வரை 11 வருடங்களாகத் (2021) தொடர்கிறது 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
Authenticator App அவசியம் ஏன்?
அடிக்கடி கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமா?
ஹேக்கிங் (Hack) பாதுகாப்பு வழிகள் என்ன?
கூகுள் ஃபோட்டோஸ் Unlimited ஜூன் 1 2021 முதல் நிறுத்தம் | FAQ
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி. ரொம்ப நாட்களுக்கு பிறகு தொழில் நுட்பம் குறித்த பதிவை எழுதி இருக்கீங்க!!!! எனக்கு windows xp ரொம்ப, ரொம்ப பிடிக்கும்.. கணிப்பொறியை ஆரம்பத்தில் இயக்க கற்று கொண்டதே ஒரு அருமையான நிகழ்வு.. மைக்ரோசாப்ட் photodraw வில் பூந்து விளையாடுவேன்.. நிறைய design பண்ணி கொண்டே இருப்பேன்.. Adope pagemaker , photoshop , coraldraw இதில் work பண்ண ரொம்ப பிடிக்கும்..ஒரு DTP சென்ட்ரலில் சம்பளம் இல்லாமல் கணிப்பொறியுடன் தொடர்பு வேண்டும் என்று கல்லூரி படிக்கும் போது பகுதி நேரத்தில் பணி புரிந்தேன்.. எனக்கும் கணிப்பொறிக்குமான தொடர்பு இங்கு தான் ஆரம்பித்தது..
நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் இங்கு நடந்தது.. கல்லூரி முடித்த பிறகு hardware & networking படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.. பொருளாதார சூழலில் நடக்காமலே போகி விட்டது.. (ஆனால் ஆசை இன்னும் விட வில்லை).. சமயத்தில் எனக்கு பல கற்பனைகள் தோன்றும்.. இதை படிக்கலாமா?? அதை படிக்கலாமா??? என் துறைக்கு சம்பந்தமே இல்லாத பல விஷியங்களை தெரிந்து கொள்ள வேண்டும், படிக்க வேண்டும் என்ற தேடல் இருந்து கொண்டே இருக்கும்..இது சரியா? தவறா? என்று கூட தெரியவில்லை.. SAP படிக்கவேண்டும் என்று ரொம்ப நாள் கனவு.. ஆனால் தள்ளி கொண்டே போகிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
TPM Trusted Platform Module (TPM) version 2.0
இதுதான் புரியல. இதுவரை எந்த ஓஸ் க்கும் நான் இதை பார்த்தது இல்லை.
@யாசின்
“கிரி. ரொம்ப நாட்களுக்கு பிறகு தொழில் நுட்பம் குறித்த பதிவை எழுதி இருக்கீங்க”
Google Page Experience & Google Photos கட்டுரைகள் எழுதி இருந்தேனே யாசின்.
சில விஷயங்களில் நீங்கள் கூறுவது போல ஆர்வம் இருக்கும் ஆனால், அதற்கான சரியான வாய்ப்பு அமையாது. அப்படி அமையும் போது ஆர்வமாக அதை பயன்படுத்துவோம்.
@கார்த்திக்
“TPM Trusted Platform Module (TPM) version 2.0 இதுதான் புரியல”
கார்த்திக் இதன் பயன்பாடு என்னவென்றால், Encryption Enable செய்வதற்கு ஆகும். இந்த வசதி இருந்தால், உன் கணினி திருட்டு போனாலும், தகவல்களை யாரும் எடுக்க முடியாது.
உன் கணினியில் உள்ள தகவல்கள் பாதுகாப்பாக இருக்க Encryption உதவுகிறது.
இந்த Encryption Enable செய்ய TPM Hardware தேவைப்படுகிறது.
தற்போது பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாக உள்ளது. எனவே, இதை மைக்ரோசாஃப்ட் கட்டாயமாக்கியுள்ளது.
Encryption செயல்படுத்துவது நம் விருப்பம் ஆனால், இந்த (Hardware) வசதி கட்டாயம்.
புரிந்ததா?!
புரிந்தது அண்ணா. நன்றி அண்ணா
நான் உபயோகிப்பது உபுன்டு மிக மிக மிக வேகமாக வேலை செய்கிறது
எனக்கு மிக பயனுள்ளதாக உள்ளது,