கூகுள் ஃபோட்டோஸ் Unlimited ஜூன் 1 2021 முதல் நிறுத்தம் | FAQ

3
கூகுள் ஃபோட்டோஸ் Unlimited Google Photos

1 ஜூன் 2021 முதல் கூகுள் ஃபோட்டோஸ் Unlimited (free) நிறுத்தம் என்ற அறிவிப்பு பலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. Image Credit

இனி கூகுள் ஃபோட்டோஸ் சேவையைப் பயன்படுத்த முடியாதா?!

கூகுள் ஃபோட்டோஸ் Unlimited நிறுத்தம்

கூகுளின் பிரபலமான சேவைகளில் ஒன்று கூகுள் ஃபோட்டோஸ். இலவசமாக Unlimited நிழற்படங்களைச் சேமிக்கலாம்.

இதில் இரு வசதிகள் உள்ளன.

Orginal Quality & High Quality

Original Quality படங்கள் என்றால் என்ன?

நிழற்படத்தின் தரத்தைக் குறைக்காமல் அப்படியே சேமித்து வைப்பது.

எடுத்துக்காட்டுக்கு 4 MB நிழற்படம் என்றால், அதே அளவில் சேமிப்பது.

High Quality படங்கள் என்றால் என்ன?

நிழற்படத்தின் தரத்தை 16MP (Mega Pixel) அளவுக்கும், காணொளிகளை 1080p தரத்துக்கும் குறைத்து சேமிப்பது.

இதில் சேமிக்கப்படும் நிழற்படங்கள் கூகுள் தரும் 15 GB கணக்கில் வராது. எத்தனை நிழற்படங்களை (Unlimited) வேண்டும் என்றாலும் சேமிக்க முடிந்தது.

ஜூன் 1 முதல் இவ்வகையில் சேமிக்கப்படும் நிழற்படங்கள் 15 GB storage கணக்கில் எடுக்கப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது.

இதனால் என்ன பிரச்சனை?

உடனடி பிரச்சனை என்று எதுவுமில்லை.

எடுத்துக்காட்டுக்குத் தற்போது உங்கள் 15 GB storage கணக்கில் 5 GB தான் பயன்படுத்தியுள்ளீர்கள் என்றால், 15 GB வரும் வரை தொடரலாம்.

இந்நிலையை அடைய ஓரிரு வருடங்கள் ஆகலாம்.

15 GB யை அடைந்து விட்டால் என்ன நடக்கும்?

15 GB யை அடையப்போகிறது என்றாலே, கூகுள் அறிவிப்பு கொடுக்கும்.

இதன் மூலம் தேவையற்ற படங்களை, கோப்புகளை, அதிக அளவு (size) கொண்டவற்றை நீக்கலாம்.

இதன் மூலம் கூடுதல் இடம் கிடைக்கும்.

நீக்க விரும்பவில்லை ஆனால், இடம் வேண்டும்!

கூகுள் குறைந்த பட்சமாக 100 GB க்கு மாதக்கட்டணம் ₹130, ஆண்டுக்கட்டணமாக ₹1300 வசூலிக்கிறது.

இதை வாங்கினால், இலவச 15 GB அல்லாது கூடுதலாக 100 GB க்கு சேமிக்க முடியும்.

15 GB கூகுள் ஃபோட்டோஸுக்கு மட்டுமா?

கிடையாது.

Google storage என்பது Unified storage.

ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் ஃபோட்டோஸ் உள்ளடக்கியது.

15 GB யைக் கூகுள் ஃபோடோஸுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் அல்லது ஜிமெயில், ட்ரைவ், ஃபோட்டோஸ் மூன்றுக்கும் சேர்த்துப் பயன்படுத்தலாம், நம் விருப்பமே!

High Quality படங்களாகச் சேமிப்பது சரியா?

தாராளமாகச் சேமிக்கலாம்.

Original Quality நிழற்படங்கள், ஃபோட்டோக்ராபர்ஸ் மற்றும் தரம் குறைக்காத படங்கள் வேண்டும் என்பவர்களுக்கு மட்டுமே தேவை.

மற்றவர்களுக்கு High Quality தரமே போதுமானது.

இதுவரை சேமித்த படங்கள் என்ன ஆகும்?

மே 31 வரை High Quality யில் சேமிக்கப்பட்ட, சேமிக்கப்படும் நிழற்படங்கள் இலவச கணக்கிலேயே வரும். அதாவது 15 GB கணக்கில் சேராது.

ஜூன் 1 முதல் சேமிக்கப்படும் நிழற்படங்கள் மட்டுமே 15 GB கணக்கில் வரும்.

உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

பின்னர் சேமிக்கலாம் என்று நினைத்துக் கணினியில் வைத்து இருந்தால், மே 31 க்குள் தரவேற்றம் (Upload) செய்து விடுங்கள்.

https://photos.google.com/settings சென்று High Quality க்ளிக் செய்தால், படங்களை 16 MP க்கு compress செய்யவா? என்று கேட்கும்.

OK கொடுத்து விட்டால், இலவச கணக்கில் சென்று விடும்.

High Quality தேர்வு செய்து இருந்தால், கூகுள் தானாகவே 16 MP மாற்றி இருக்கும், மாறாத படங்களை மேற்கூறிய முறையில் செய்து கொள்ளலாம்.

இது மே 31 வரை மட்டுமே.

ஜூன் 1 முதல் High Quality யில் சேமிக்கப்படும் நிழற்படங்கள் 16 MP என்றாலும், அதன் size என்னவோ அது 15 GB கணக்கில் வரும்.

எனவே, தாமதிக்காமல் தேவையானவற்றை அப்லோடு செய்து விடுங்கள்.

https://photos.google.com/quotamanagement சென்றால், ஜிமெயில், ட்ரைவ் & ஃபோட்டோஸ் ஒவ்வொன்றும் எவ்வளவு இடத்தை எடுத்துள்ளது என்று அறியலாம்.

https://one.google.com/storage/management சென்றால் தேவையற்றதை நீக்கலாம்.

Original Quality நிழற்படங்களை High Quality நிழற்படங்களாக மாற்றி (Convert) விட்டால், திரும்ப Original Quality க்கு மாற்ற முடியாது.

இந்த மாற்றத்தை ஏன் கூகுள் செய்கிறது?

தற்போது WhatsApp மற்றும் மற்ற சேவைகள் காரணமாகத் தினமும் நூற்றுக்கணக்கான நிழற்படங்கள், காணொளிகள் பகிரப்படுகிறது.

இவை அனைத்துமே பயனுள்ளது என்று கூற முடியாது. எனவே, தேவையற்றவை கூகுள் ஃபோட்டோஸில் சேமிக்கப்படுகிறது.

இது கூகுளின் பராமரிப்பு செலவை அதிகரிக்கிறது.

எனவே, கூகுள் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன் பிறகு தேவையற்றவற்றை அவர்களாகவே நீக்கி விடுவார்கள்.

இலவசம் என்றால் அலட்சியம் இருக்கும், பணம் என்றால் பயனாளர்கள் தேவையற்றதை நீக்குவார்கள்

வேறு நிறுவனத்தின் சேவைகள் உள்ளதா?

கூகுள் போலப் பல நிறுவனங்கள் இச்சேவையை வழங்குகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம்.

என்னென்ன நிறுவனங்கள் உள்ளன? (Google Photos Alternative)

  • Amazon Photos
  • Microsoft OneDrive
  • Apple Photos
  • Dropbox
  • Flickr

இவையல்லாமல் பல நிறுவனங்கள் சேவையை வழங்கி வருகின்றன. மேற்கூறிய நிறுவனங்களிலும் கட்டுப்பாடுகள் உள்ளன.

நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் இம்மாற்றத்தை தெரியப்படுத்துங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

கூகுள் முக்கிய அறிவிப்புகள்

கூகுள் ஃபோட்டோஸ் இலவச சேவைகள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. பதிவுக்கு நன்றி. Alternative app-களின் storage அளவையும் குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.

  2. புகைப்படம் காண பிடிக்கும்.. ஆனால் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் குறைந்து விட்டது.. யாரவது என்னுடைய பழைய புகைப்படத்தை காண்பித்தால் பார்ப்பதற்கும் மிகவும் பிடிக்கும்.. அதுவும் சிறுவயது புகைப்படம் என்றால் கூடுதல் ஆர்வம்.. நான் இந்த சேவையை பயன்படுத்தவில்லை.. இந்த பதிவு கூகுள் ஃபோட்டோஸ் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.. நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி கிரி..

  3. @தேவா மற்றதை நான் முழுமையாக பயன்படுத்தியதில்லை. Dropbox பயன்படுத்துகிறேன். இது கோப்புகளுக்குச் சரி ஆனால், நிழற்படங்களுக்கு ஏற்றதல்ல.

    என் பரிந்துரை Google Photos தான். அமேசான் முயற்சித்துப்பாருங்கள். Prime Member ஆக இருந்தால், கூடுதல் வசதி.

    @யாசின் ரைட்டு 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here