Authenticator App அவசியம் ஏன்?

2
microsoft authenticator app

ணையத்தில் பாதுகாப்புக்கான அளவுகோல் மாறிக்கொண்டே உள்ளது. துவக்கத்தில் SMS OTP பாதுகாப்பு என்றார்கள், தற்போது Authenticator App தான் பாதுகாப்பு என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. Image Credit

Authenticator App அவசியம்

மைக்ரோசாஃப்ட் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பின் Authenticator App பற்றிய விவாதங்களும், முன்னெடுப்புகளும் துவங்கியுள்ளன.

எதிர்காலத்தில் வங்கிகளும் Authenticator வசதியைக் கொண்டு வர வாய்ப்புள்ளது.

ஏனென்றால், தற்போது SIM Swap செய்து SMS OTP திருடிப் பல இலட்சங்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

SMS OTP (One Time Password)

துவக்கத்தில் தனது கணக்குக்கு SMS OTP முறையைக் கூகுள் அறிமுகப்படுத்தியது, அதன் பிறகு பல நிறுவனங்களும் இந்த வசதியைக் கொண்டு வந்தன.

Authenticator App வசதியையும் கூகுள் முன்னரே கொண்டு வந்து விட்டது ஆனால், இன்னும் பரவலாகப் பயன்பாட்டுக்கு வரவில்லை.

கட்டாய வசதி

மைக்ரோசாஃப்ட் தன் கணக்குகளுக்கு, குறிப்பாக நிறுவனங்களில் Office 365 சேவையைப் பயன்படுத்துபவர்களுக்கு SMS OTP முறையைத் தடை செய்து Authenticator App முறையைக் கட்டாயமாக்கியுள்ளது.

அதாவது இனி SMS OTP முறையைப் பயன்படுத்த முடியாது.

Microsoft Authenticator App

துவக்கத்தில் இருந்தே Google Authenticator செயலி (App) உள்ளது ஆனால், பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

பாதுகாப்புக் காரணமாக Cloud Backup வசதி கிடையாது, Export வசதி உள்ளது ஆனால், சிக்கலானது.

எனவே, Microsoft Authenticator பரிந்துரைக்கிறேன்.

இதில் Cloud Backup உள்ளது.

எனவே, மொபைலை factory reset செய்தாலோ, வேறு மொபைலுக்கு மாறினாலோ எளிதாக Cloud Backup ல் இருந்து நம் விவரங்களைப் பெற்று விடலாம்.

இவ்வசதியை செயல்படுத்துபவர்கள், செயல்படுத்தும் கணக்கின் (ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர்) Backup Code எடுத்து வைத்துக்கொள்வது அவசியம்.

ஒருவேளை Authenticator செயலி பிரச்சனையானால், இதை வைத்து மட்டுமே கணக்கினுள் நுழைய முடியும்.

Restore

மொபைலை Reset செய்த பிறகு திரும்ப Cloud Backup Restore செய்ய "RESTORE" option யைத்தான் நுழையும் போது தேர்ந்தெடுக்க வேண்டும்.

மறந்து வழக்கமான முறையில் நுழைந்து விட்டால், Cloud Backup Overwrite ஆகி விடும். பின்னர் உங்கள் கணக்குகளில் நிரந்தரமாக நுழைய முடியாதபடி ஆகி விடும்.

எனவே, எச்சரிக்கையாக இருக்கவும்.

அனைவரும் செயல்படுத்த வேண்டுமா?

ஓரளவாவது தொழில்நுட்ப அறிவுள்ளவர்கள், Google, facebook, Instagram, Twitter, Linkedin, Amazon கணக்குகள் மிக முக்கியம் என்று கருதுபவர்கள் மட்டும் செயல்படுத்தலாம், மற்றவர்களுக்கு அவசியமில்லை.

காரணம், ஒருவேளை சரியான முறையில் செயல்படுத்தவில்லை அல்லது Backup Code எடுக்கவில்லை என்றால், கணக்கினுள் நுழைவதே சிக்கலாகி விட வாய்ப்புள்ளது.

சுருக்கமாக, ‘பாதுகாப்பாக இருக்க நினைத்து, இருப்பதும் போயிற்றே!‘ என்ற நிலையாகலாம்.

எனவே, இவ்வசதியை அனைவருக்கும் பரிந்துரைக்கவில்லை.

SMS OTP வசதி

இன்னும் பலர் எளிமையான SMS OTP வசதியையே செயல்படுத்தாமல் உள்ளார்கள்.

இதைச் செயல்படுத்துவது மிக எளிது.

எனவே, இதுவரை உங்கள் கணக்குகளுக்கு OTP வசதி செயல்படுத்தாமல் இருந்தால், கணக்கைப் பாதுகாப்பாக வைக்கச் செயல்படுத்துங்கள்.

பாஸ்வேர்ட் திருடப்பட்டாலும், SMS OTP இல்லாமல் யாரும் நுழைய முடியாது.

எனவே, SMS OTP பாதுகாப்பில்லை என்று கூறப்பட்டாலும், ஒன்றுமே இல்லாததற்கு SMS OTP பரவாயில்லை ரகமே!

ஏற்கனவே OTP பயன்படுத்துபவர்கள், Microsoft Authenticator முயற்சித்துப்பார்க்க பரிந்துரைக்கிறேன்.

மேற்கூறிய தகவல்களையும் கவனத்தில் கொள்ள அறிவுறுத்துகிறேன்.

எந்தப் பாதுகாப்பு வசதியைச் செயல்படுத்தினாலும், அதற்கு ஒரு Backup வசதி அவசியம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

கொசுறு

Microsoft Authenticator ல் கணக்கைச் (Google, facebook etc) சேர்த்தால், அது Cloud Backup க்கு செல்லத் துவக்கத்தில் சில மணி நேரங்கள் எடுக்கும்.

தொடர்புடைய கட்டுரைகள்

SIM SWAP மோசடி [FAQ]

ஹேக்கிங் (Hack) பாதுகாப்பு வழிகள் என்ன?

கூகுளின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, இது வரை நான் அறியாத ஒரு செய்தி இது.. நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்..பகிர்வுக்கு நன்றி.

  2. யாசின் பயன்படுத்தும் போது நான் கூறியவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here