தற்போது பலராலும் விவாதிக்கப்படும் ஒரு விஷயம் Windows 7.
இதைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் நான் கூறப்போவது நீங்கள் இதை உங்கள் கணினியில் தாராளமாக நிறுவலாம் என்பதே. Image Credit
Vista
லேப்டாப்பை வாங்கிய போது அதில் Vista தான் நிறுவிக் கொடுத்தார்கள். வேண்டாம் XP போட்டுக் கொடுங்கள் என்றாலும் முடியாது என்று கூறி விட்டார்கள்.
எனென்றால் Vista ரொம்ப மெதுவாக உள்ளது என்று பலர் கூறி விட்டதால் அதைப் பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை.
வேறு வழி இல்லாமல் அதோடயே வாங்கினேன், வாங்கிய முதல் நாளில் இருந்தே மொக்கை என்றால் மொக்கை அப்படி ஒரு மொக்கையா இருந்தது.
அநியாயத்திற்கு மெதுவாகப் பூட் ஆகியது மட்டுமல்லாமல் அனைத்திலுமே மிக மிக மெதுவாக லோடு ஆகியது.
அதுவும் கொஞ்சம் மென்பொருட்களை நிறுவிய பிறகு முக்கு முக்குனு முக்குது. லேப்டாப் பயன்படுத்தவே வெறுப்பாகி என் Dell லேப்டாப் ஹார்ட்வேர் மீதே சந்தேகம் வந்து விட்டது.
Vista மிகப்பெரிய தோல்வி அடைந்து விட்டதால் அதை வாங்க எந்தப் பன்னாட்டு நிறுவனமும் முன் வரவில்லை.
இதனால் மைக்ரோசாப்ட் ம் வேறு வழி இல்லாமல் நிறுத்தப் போவதாக அறிவித்த XP சப்போர்ட்டை (service pack and critical patch update) நீட்டிக்க வேண்டியதாகி விட்டது.
Windows 7
இதன் பிறகும் எந்த ஒரு பன்னாட்டு நிறுவனமும் இதைத் தங்கள் நிறுவன கணிப்பொறிகளில் நிறுவ ஆர்வம் காட்டாததால் மைக்ரோசாப்ட் வேறு வழி இல்லாமல் அதன் அடுத்தத் தயாரிப்பான Windows 7 வெளியிட வேண்டியதாகி விட்டது.
Vista Beta வில் இதை எல்லாம் எப்படிக் கவனிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை, எத்தனை பேரின் உழைப்புப் பணம் வீண்.
ஒருவேளை எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ!
கூகிள் Chrome OS வெளியிடுவதாக அறிவித்துள்ளது, மைக்ரோசாப்ட் விழித்துக் கொள்ளவில்லை என்றால் சங்கு தான். வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு 🙂 .
தற்போது Windows 7 beta வெளியாகி உள்ளது, இதற்கும் பல்வேறு விதமான கருத்துகள் நிலவி வந்தாலும் என்னைப் பொறுத்தவரை சிறப்பாகவே உள்ளது.
Windows 7 தரவிறக்கம் செய்ய அறிவித்த போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை. காரணம் காசு போட்டு லைசென்சுடன் வாங்கிய Vista வை எடுத்து விட்டு beta Windows 7 நிறுவ மனம் ஒப்பவில்லை.
பிறகு Vista கொடுமை தாங்கமுடியாமல், சரி இனியும் பொறுமை காக்க முடியாது என்று விண்டோஸ் 7 நிறுவி விட்டேன்.
Vista வை இதனுடன் ஒப்பிடவே முடியாது அத்தனை வேகம், அதில் உள்ள சிறப்புகள் இதில் அப்படியே உள்ளன, கூடுதலான வசதிகளுடன்.
Windows 7 சில குறிப்புகள்
- இதில் Windows 7 Starter, Home Basic, Home Premium, Professional, Enterprise, Ultimate, E and N editions
- Beta வெளியீடு Windows 7 Ultimate நமக்குக் கிடைக்கிறது.
- தரவிறக்கம் செய்யும் போதே (Hotmail, Live போன்ற msn ஐ டி தேவை) மைக்ரோசாப்ட் Activation Code கொடுத்து விடுவார்கள்.
- அதை நிறுவும் போதோ அல்லது நிறுவிய பிறகோ பதிவு செய்ய வேண்டும்.
- Beta வெளியீடு நமக்கு June 1, 2010 வரை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி இருக்கிறது, அதன் பிறகு நாம் பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்க வேண்டும்.
- இதை நினைவூட்ட March 1, 2010 ல் இருந்து உங்கள் கணினி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஷட்டவுன் ஆகி கொண்டே இருக்கும்.
- இந்தத் தரவிறக்கம் August 20, 2009 வரையே செய்ய முடியும், அதன் பிறகு தரவிறக்க லிங்க்குகளை நீக்கப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
- பின்னர் நீட்டிக்கலாம் ஆனால், உறுதி இல்லை.
எனவே, உங்களுக்குத் தற்போது அவசியம் இல்லை என்றாலும் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள், தேவை படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால் இது வரை அல்லது August 20 வரை தரவிறக்கம் செய்தவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, அதை அவர்கள் June 1, 2010 வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தரவிறக்கம் செய்யும் போது இது நமக்கு iso ஃபைலாக (2.35 GB) கிடைக்கிறது இதை நாம் DVD யில் burn செய்து எளிதாக நமது கணினியில் நிறுவிடலாம்.
நான் பயன்படுத்தியவரை பெரிதாக எந்தக் குறையையும் காணவில்லை, சிறப்பாகவே உள்ளது.
3D effect, Theme, வேகம் என்று கலக்கலாக உள்ளது. எனக்கு விண்டோஸ் 7 பயன்படுத்தவே ஆசையாக உள்ளது, அந்த அளவிற்கு என்னைக் கவர்ந்து விட்டது.
பெரும்பாலும் அனைத்து மென்பொருளையும் சப்போர்ட் செய்கிறது, ஆனால் ஒரு சில வீடியோ கேம்கள் வேலை செய்யவில்லை.
வேறு எதுவும் பிரச்சனை நீங்கள் சந்தித்து இருந்தால் பின்னூட்டத்தில் கூறலாம்.
Beta சேவை என்பதால் விரைவில் இவை சரி செய்யப்படலாம் என்று நம்பலாம்.
எச்சரிக்கை
Windows 7 நிறுவும் முன் உங்கள் கோப்புகளையும் தகவல்களையும் வேறு ஹார்ட் டிஸ்க் அல்லது வேறு ஏதாவது ஒன்றில் சேமித்து வைத்துக்கொள்ளவும்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
// குறை ஒன்றும் இல்லை !!! said…
அண்ணே உங்களுக்கு தெரியுமா.. இப்பொது பல கம்பெணிகள் இந்த புதிய விண்டோசை வேணாம் என சொல்லி விட்டன.. அவை விஸ்டாவையே வேண்டாமென சொல்லி மீண்டும் XP க்கு திரும்ப ஆரம்பித்து விட்டன..//
தட்ஸ்தமிழ் செய்தி பற்றி சொல்றீங்களா! நானும் படித்தேன். அப்படி எல்லாம் எளிதா இப்படி இரண்டாவது தயாரிப்பையும் வேண்டாம்னு சொல்கிற அளவிற்க்கெல்லாம் திரும்ப தவறு செய்ய மாட்டாங்க.. பல பில்லியன் முதலீடு இருக்கு
கண்டிப்பா Windows 7 ஹிட் ஆகும் பாருங்க../>======================================
// நட்புடன் ஜமால் said…
நீங்க சொல்றதை முயற்சித்து விடுவோம்.//
தைரியமா பண்ணுங்க ஜமால்
தரவிரக்கம் செய்து தயங்கிக் கொண்டே இருந்தேன். உங்கள் இடுகை தயக்கம் போக்கிவிட்டது. நன்றி.
நன்றி கிரி
நான் கிட்டத்தட்ட 2 மாதமாக பாவிக்கிறேன். எந்த பிரச்சினையும் இல்லை. 🙂
கூகிள்-காரங்க பின்னாடியே வராங்க… மைக்ரோ சாப்ட்-அ உக்கார வைக்க.. Windows 7-ல VOIP Softwares உக்காருதா பாத்தீங்களா? என்ன முக்குனாலும் நடக்காது-னு Vista சொல்லிருச்சு..
அண்ணே உங்களுக்கு தெரியுமா.. இப்பொது பல கம்பெணிகள் இந்த புதிய விண்டோசை வேணாம் என சொல்லி விட்டன.. அவை விஸ்டாவையே வேண்டாமென சொல்லி மீண்டும் XP க்கு திரும்ப ஆரம்பித்து விட்டன…
நீங்க சொல்றதை முயற்சித்து விடுவோம்.
நன்றி.
Thanks dear
கிரி,
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
TechExpose, பாலா, பிரேம்ஜி, ஜெ, டொன் லீ, கார்த்திக், பெஸ்கி மற்றும் வினோ வருகைக்கு நன்றி
@கார்த்திக்
நான் இன்னும் முயற்சி செய்யவில்லை அதை நான் பயன்படுத்துவதில்லை என்பதால்.
@பெஸ்கி
நீங்கள் கூறியது சரி தான், முதலில் notebook கிற்கே வெளியிடுகிறார்கள்..இது வெற்றி அடைந்தால் இதை மற்றவற்றிக்கும் விரிவு படுத்துவது என்பது இவர்களுக்கு பெரிய விஷயம் இல்லை..கூகிள் பயனாளர்களே போதுமானது இதை விளம்பரப்படுத்த 🙂
@வினோ
ஓகே ஆனால் அடுத்த ட்ரீட் தயார் செய்து வையுங்க! நாங்க சொன்னா கில்லியா இருக்கும் 🙂
தகவலுக்கு நன்றி கிரி அண்ணே.
—
Chrome OS சாதாரண notebook களுக்குத்தான் என கேள்விப்பட்டேன். இதனுடன் போட்டி போடும் அளவுக்கா இருக்கிறது?
சரியாக சொன்னீர்கள். 7 உண்மையிலேயே வேகம்தான் vista வோடு ஒப்பிடும்போது.
இன்னிக்கு முயற்சி பண்ணிப் பாக்குறேன்… செட் ஆகலைன்னா… அடுத்து சிங்கப்பூருக்கு 'ஆட்டோ' பிடிச்சிட வேண்டியதுதான் கண்ணு!
வினோ
I do not feel Windows 7 as a revolution etc.Its also like google chrome or Firefox or windows 6.I dont think that earth has changed just because of windows7
// M Arunachalam said…
கிரி,
விண்டோஸ் செவென் என்பது ஆப்பிள் லெபர்ட் மென்பொருளின் (Leopard OS) அப்பட்டமான காபியாமே?//
அருண் விண்டோஸ் மென்பொருளே ஆப்பிளை காப்பி அடித்து வந்தது தான்..அவர்களை காப்பி அடித்து இவர்கள் பெரிய ஆள் ஆகி விட்டார்கள் 🙂
//ஆப்பிள் வரும் செப்டெம்பரில் அடுத்த ஸ்னோ லெபர்ட் என்ற புதிய மென்பொருளை (Snow Leopard OS) மிகவும் குறைந்த விலையில் ($29) விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இதனாலும் மைக்ரோசாபிட்டுக்கு விண்டோஸ் செவேனை விற்பதில் பிரச்னை வரும் போல இருக்கிறது.//
ஆப்பிளுக்கும் விண்டோஸ் க்கும் உள்ள முக்கிய வேறுபாடே user friendly தான். மைக்ரோசாப்ட் எளிமையே பலரை கவர்ந்தது..எனவே ஆப்பிள் விண்டோஸ் க்கு போட்டியாக வராது.. கூகிள் வேண்டும் என்றால் பின்னால் வர வாய்ப்பு அதிகம்.
=============================================================
// அக்பர் said…
சரியாக சொன்னீர்கள். 7 உண்மையிலேயே வேகம்தான் vista வோடு ஒப்பிடும்போது.//
உண்மையாகவே!
==============================================================
//குப்பன்_யாஹூ said…
Its also like google chrome or Firefox or windows 6.//
என்னங்க குப்பன் OS ஐ உலவியுடன் ஒப்பிட்டு கொண்டு இருக்கிறீர்கள்.
//I dont think that earth has changed just because of windows7//
நானும் அப்படி எதுவும் கூறவில்லையே, விண்டோஸ் 7 நன்றாக உள்ளது என்று மட்டும் தான் கூறினேன் 🙂
எதுக்கும் விண்டோசை பார்த்தவுடன் நம்பிட வேண்டாம் நண்பா…கொஞ்ச நல கழித்து பார்போம்…எனினும் அனுபவத்தை பகிர்ததற்கு நன்றி….
கிரிவிண்டோஸ் 7 நிறுவிட்டேன்பயன்படுத்தி பாக்கனும்நன்றி கிரி மீண்டும்ஒரு விதமான தயக்கத்தில் இருந்தேன்இந்த பதிவு படிச்ச உடனே செஞ்சிருக்கேன்பாக்கனும் மத்த application packageஉடன் எப்படி இருக்குன்றத
பயன்படுத்த ஆவலாக இருந்தாலும் ஏனோ தெரியவில்லை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகின்றேன்.
கிரி விண்டோஸ் 7 ம் விண்டோஸ் XP ஐயும் ஒன்றாக நிறுவலாமா?
கிரி,
விண்டோஸ் செவென் என்பது ஆப்பிள் லெபர்ட் மென்பொருளின் (Leopard OS) அப்பட்டமான காபியாமே?
ஆப்பிள் வரும் செப்டெம்பரில் அடுத்த ஸ்னோ லெபர்ட் என்ற புதிய மென்பொருளை (Snow Leopard OS) மிகவும் குறைந்த விலையில் ($29) விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இதனாலும் மைக்ரோசாபிட்டுக்கு விண்டோஸ் செவேனை விற்பதில் பிரச்னை வரும் போல இருக்கிறது.
தொன்னூறுகளில், ஒரு ஜாலி மெசேஜ் பார்த்த ஞாபகம்:
விண்டோஸ் 95 = Mac System 7 (OS 89)
அதாவது, ஆப்பிள் 89ம் ஆண்டு கொண்டு வந்த OSஸை மைக்ரோசொபிட் 95ஆம் ஆண்டு காபி அடித்து ரிலீஸ் செய்தது என்று. வரலாறு திரும்புகிறதோ?
அன்புடன் அருண்
Few Softwares/drivers will not be working properly in Windows 7 (Example: USB Modem), for that you need to run that software in compatability mode with vista / XP. Then it will work.–Vicky
எங்க ஊர்ல இருக்கும் எல்லா பர்னிச்சர் கடைகளிலும் விசாரித்துவிட்டேன் எங்குமே நீங்கள் சொல்லும் விண்டோஸ் இல்லையாம்
உடன்பிறப்பு – உங்களுக்கே தெரியுதா இப்போ ? இதுக்கு தான் பாராளுமன்ற தேர்தல்ல அதிமுகவுக்கு வாக்களிக்க சொன்னோம். கேட்டீங்களா ? கவலைப்படாதீங்க. கிரி சரி பண்ணிடுவாரு.
//சம்பத் said…
எதுக்கும் விண்டோசை பார்த்தவுடன் நம்பிட வேண்டாம் நண்பா…கொஞ்ச நல கழித்து பார்போம்/
🙂 சம்பத் இதனால் நமக்கு பெரிய இழப்பு எதுவும் இல்லை, நல்லா இல்லைனா வேறு ஏதாவது செய்ய போகிறோம் அவ்வளவு தானே!
=========================================================
// J said…
கிரி
விண்டோஸ் 7 நிறுவிட்டேன் பயன்படுத்தி பாக்கனும்
நன்றி கிரி மீண்டும் ஒரு விதமான தயக்கத்தில் இருந்தேன் இந்த பதிவு படிச்ச உடனே செஞ்சிருக்கேன் பாக்கனும் மத்த application package உடன் எப்படி இருக்குன்றத//
ஜெ கலக்கிட்டீங்க.. 🙂 . கவலையே படாதீங்க சின்ன பிரச்சனைகள் இருக்கு, நீங்க பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை, அதை நீங்க பயனப்படுத்த ஆரம்பித்த கொஞ்ச நாளில் நீங்களே உணர்வீர்கள்.
=====================================================
// r.selvakkumar said…
பயன்படுத்த ஆவலாக இருந்தாலும் ஏனோ தெரியவில்லை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகின்றேன்.//
அதற்க்கு காரணம் Beta என்பது மட்டுமே செல்வகுமார்..தைரியமா பண்ணுங்க..
======================================================
// வந்தியத்தேவன் said…
கிரி விண்டோஸ் 7 ம் விண்டோஸ் XP ஐயும் ஒன்றாக நிறுவலாமா?//
வந்தியத்தேவன் நான் இன்னும் முயற்சித்து பார்க்கவில்லை.
தனி தனி பார்டிஷனில் செய்ய முடியும் என்றே நினைக்கிறேன். ஆனால் எதா இருந்தாலும் முதல் ஒரு பேக்கப் எடுத்து விட்டு அப்புறம் செய்யுங்கள்.
========================================================
// உடன்பிறப்பு said…
எங்க ஊர்ல இருக்கும் எல்லா பர்னிச்சர் கடைகளிலும் விசாரித்துவிட்டேன் எங்குமே நீங்கள் சொல்லும் விண்டோஸ் இல்லையாம்//
ஹா ஹா ஹா உடன்பிறப்பு நீங்க ஏன் இன்னும் தொழில்நுட்பத்துல பின் தங்கி இருக்கீங்கன்னு புரிந்து விட்டது :-)))))) இதுக்கு தான் அரசியல் பதிவு மட்டுமே எழுதாதீங்கன்னு சொன்னா கேட்கறீங்களா! 😉
=========================================================
// Victor Louis said…
Few Softwares/drivers will not be working properly in Windows 7 (Example: USB Modem), for that you need to run that software in compatability mode with vista / XP. Then it will work.//
விக்டரை ஒருவழியா கமெண்ட் போட வைத்து விட்டாச்சு..:-)))
நண்பர் விக்டர் கூறுவது சரி தான், பிரச்சனை உள்ளவர்கள் இதை முயற்சித்து பார்க்கலாம்.
===========================================================
// மணிகண்டன் said…
உடன்பிறப்பு – உங்களுக்கே தெரியுதா இப்போ ? இதுக்கு தான் பாராளுமன்ற தேர்தல்ல அதிமுகவுக்கு வாக்களிக்க சொன்னோம். கேட்டீங்களா ? கவலைப்படாதீங்க. கிரி சரி பண்ணிடுவாரு//
ஹா ஹா ஹா
நீங்கள் சொல்வதை பார்த்தால் இன்றே பயன்படுத்த வேண்டும் போல இருக்கு.. பிடிக்கவில்லை என்றால் மீண்டும் vista விற்கோ அல்லது xp க்கோ மாற்றமுடியுமா?
அருண் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
என் நண்பர்கள் பலர் Mac உடன் windows ஐ ஒப்பிடவே முடியாது என்று விவாதம் செய்வார்கள். நீங்கள் கூறியது மேலை நாடுகளுக்கே பொருந்தும் இந்தியாவில் Mac ரொம்ப காலம் எடுக்கும் என்பது என் கருத்து.
காரணம் அது தனி ஹார்ட்வேர் மற்றும் அது சப்போர்ட் செய்யும் மென்பொருள் எளிதில் கிடைத்து விடுவதில்லை, நம் மக்கள் மனதில் windows ஆழமாக வேர் ஊன்றி விட்டது, இது மாற கொஞ்ச காலம் எடுக்கும்.
காலம் தான் பதில் கூற வேண்டும் இதற்க்கு, ஆனால் Mac தற்போது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது உண்மை தான்.
=========================================================
// ஆ.ஞானசேகரன் said…
பிடிக்கவில்லை என்றால் மீண்டும் vista விற்கோ அல்லது xp க்கோ மாற்றமுடியுமா?//
புதிதாக தான் Vista நிறுவ வேண்டும், ஆனால் உங்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பு மிக மிக குறைவு, அப்படியே போனாலும் Vista விற்கு போக மாட்டீர்கள் 😉
எப்போதும் clean installation தான் உங்கள் OS ஐ வேகமாக செயலாற்ற வைக்கும், upgrade ஐ நான் பரிந்துரைப்பதில்லை.
எக்ஸ்பி ஒரிஜினல் இருக்கு!
இதை தாண்டி ரிஸ்க் எடுக்க பயமா இருக்கு!
//ஆப்பிளுக்கும் விண்டோஸ் க்கும் உள்ள முக்கிய வேறுபாடே user friendly தான். மைக்ரோசாப்ட் எளிமையே பலரை கவர்ந்தது..எனவே ஆப்பிள் விண்டோஸ் க்கு போட்டியாக வராது.. கூகிள் வேண்டும் என்றால் பின்னால் வர வாய்ப்பு அதிகம்.//
Apple OS beats windows hands down in User-friendliness. This I am saying out of personal experience. I have 2 desktops at home – one is a PC & the other an iMac.
The latest news/survey has revealed that Apple controls 91% of the PREMIUM (Above $ 1,000) Desktop/laptop market in North America as of June'09 quarter. Apple has increased its share of this market from 66% in Q1 of 2008 to this level. This has happened in the so-called recession time. Microsoft is controlling the low-end & less profitable market by about 90%. As Netbooks keep increasing their straglehold in the market, MS is bound to lose more & more.
BTB, Microsoft has declared a second consecutive quarterly dip in income & profits for the June quarter & for the first time in their history (post-IPO) since 1986, their Annual Profits have slumped about 30% year on year. Compare this with Apple's excellant non-holiday quarterly results with 15% jump in their profitability.
So, over time, we will know whether Apple can beat Windows or not.
Arun
எதுக்கு கிரி இவ்வளவு கஷ்டப்படுகிறீங்க!! எப்போதும் (இன்று வரை)இலவசமாக இருக்கும் லினக்ஸை முயற்சித்திருக்கலாமே?
//வால்பையன் said…
எக்ஸ்பி ஒரிஜினல் இருக்கு!
இதை தாண்டி ரிஸ்க் எடுக்க பயமா இருக்கு!//
அருண் ரிஸ்க் என்பதெல்லாம் இதற்க்கு பெரிய வார்த்தை ..சப்பை மேட்டர்
========================================================
//வடுவூர் குமார் said…
எதுக்கு கிரி இவ்வளவு கஷ்டப்படுகிறீங்க!! எப்போதும் (இன்று வரை)இலவசமாக இருக்கும் லினக்ஸை முயற்சித்திருக்கலாமே?//
:-)) வாங்க லினக்ஸ் பிரியர் வடுவூர் குமார்.
எனக்கு லினக்ஸ் அவ்வளவா பயன்படுத்த பிடிக்கல..விண்டோஸ் என்றால் நினைத்த மென்பொருளை நிறுவலாம்..இது என்றால் கொஞ்சம் தேட வேண்டும். பின்னாளில் லினக்ஸ் க்கு வளமான எதிர்காலம் உண்டு என்பதை அறிவேன், அப்போது பார்ப்போம் 🙂
நன்றி கிரி.
விஸ்டா ,சி ட்ரைவில் குறைந்தது 20 – 25ஜிபி பிடித்துக்கொள்கிறது விண்டோஸ் 7 எப்படி அதனால் என் சாய்ஸும் xp தான்.
// ஷண்முகப்ரியன் said…
நன்றி கிரி//
சார் பணிச்சுமை குறைந்து விட்டதா! வருகைக்கு நன்றி
========================================================
//மங்களூர் சிவா said…
விஸ்டா ,சி ட்ரைவில் குறைந்தது 20 – 25ஜிபி பிடித்துக்கொள்கிறது விண்டோஸ் 7 எப்படி அதனால் என் சாய்ஸும் xp தான்.//
Windows 7 ம் அப்படித்தான், இதை சரி செய்ய ரெஸ்டோர் பாய்ண்ட் வசதியை நீக்கி விட்டால் இடம் சேமிக்கலாம். தற்போதெல்லாம் வரும் ஹார்ட் டிஸ்க் 200 GB என்ற அளவில் வருவதால் இது ஒரு பெரிய விசயமில்லை.
/
கிரி said…
Windows 7 ம் அப்படித்தான், இதை சரி செய்ய ரெஸ்டோர் பாய்ண்ட் வசதியை நீக்கி விட்டால் இடம் சேமிக்கலாம். தற்போதெல்லாம் வரும் ஹார்ட் டிஸ்க் 200 GB என்ற அளவில் வருவதால் இது ஒரு பெரிய விசயமில்லை.
/
ம் வீட்டுல இருக்கிற கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் 80 ஜிபிதான். ஷூவுக்காக புது கால் வாங்க வேண்டுமா???
ஆபீஸ்ல எதாவது ஒரு சிஸ்டம்ல லோட் செஞ்சி பாத்துட வேண்டியதுதான்
🙂
சிவா அதை டிசபில் செய்துடுங்க போதும்! (கையோட ஏற்கனவே உள்ள ஃபோல்டரை நீக்கிடுங்க மேட்டர் ஓவர் 🙂