WhatsApp பயன்படுத்துபவர்களின் தகவல்களை ஃபேஸ்புக் எடுத்துக்கொள்ளும். WhatsApp தனியுரிமை கொள்கை (Privacy Policy) ஏற்கவில்லையென்றால், கணக்கு முடக்கப்படும் என்பதே சர்ச்சை. Image Credit
WhatsApp தனியுரிமை கொள்கை
எதிர்ப்பு கடுமையாக எழுந்தவுடன் பின்வாங்கியது.
பிறகு பலர் Signal க்கு மாறி, அதே வேகத்தில் வாட்சப் க்கு திரும்பி விட்டார்கள்.
பிப்ரவரி 8 2021 முதல் கணக்கு முடக்கப்படும் என்பதை மே 15 என்று வாட்சப் மாற்றியது. தற்போது இதை ரத்து செய்துள்ளது ஆனால், கட்டுப்பாடுகளுடன்.
வாட்சப் கட்டுப்பாடுகள் எப்படியிருக்கு என்றால், கூகுளில் கணக்கு வைத்துக்கொள்ளலாம் ஆனால், ஜிமெயில், ஃபோட்டோஸ், ட்ரைவ் உட்பட எந்தச் சேவையையும் பயன்படுத்த முடியாது என்பது போல 🙂 .
எந்தச் சேவையையும் பயன்படுத்த முடியாது என்றால், வாட்சப் கணக்கை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது?!
வாட்சப் தனியுரிமை கொள்கையை ஏற்கவில்லையென்றால் என்ன நடக்கும்?
அறிவிப்புகளும் கட்டுப்பாடுகளும்
- தனியுரிமை கொள்கை அறிவிப்பு கிடைக்காத நபர்களுக்கு நினைவூட்டப்படும்.
- சில வாரங்களுக்குப் பிறகு நினைவூட்டல் நிரந்தரமாகத் தென்படும், அதாவது அறிவிப்பை விலக்க முடியாது.
- புதிய கொள்கையை ஏற்காத பயனாளர்களின் சேவைகள் படிப்படியாகக் குறைக்கப்படும்.
- துவக்கத்தில் குறுந்தகவல் அனுப்ப முடியாது ஆனால், குறுந்தகவல், அழைப்பு வந்தால் பதில் அளிக்க முடியும்
- உள் அழைப்புகள் (காணொலி உட்பட) அனுமதிக்கப்படும். உள் வரும் அழைப்பைத் தவறவிட்டால், திரும்ப அழைக்க முடியும்.
- வாட்சப் தரவிறக்கம் (டவுன்லோடு) செய்து பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கும் இவ்விதிமுறைகள் பொருந்தும்.
- இதன் பிறகும் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், உள் வரும் குறுந்தகவல்கள், அழைப்புகள் உட்பட அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும்.
- அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டாலும் கணக்கு முடக்கப்படாது என்று வாட்சப் அறிவித்துள்ளது.
120 நாட்கள் வாட்சப் பயன்படுத்தாமல் இருந்தால், கணக்கு முடக்கப்படுவது ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எதையும் பயன்படுத்த முடியாத போது கணக்கை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது?! அதைத்தான் மேலே கூறி இருந்தேன் 😀 .
ஆக மொத்தத்தில் எப்படியிருந்தாலும் 120 நாட்களில் கணக்கு முடக்கப்படும் என்பதைத் தான் தலையைச் சுற்றி மூக்கை தொட்டு வாட்சப் கூறியுள்ளது.
என்ன செய்யலாம்?
வாட்சப் தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்வதே நல்லது! காரணம், நம் தகவல்கள் ஏற்கனவே இந்நிறுவனங்களிடம் உள்ளது.
கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் உட்பட பயன்படுத்தும் அனைத்து பெரிய நிறுவனங்களிடமும் நம் தகவல்கள் உள்ளது.
இதில் வாட்சப் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் மற்றவர்களை விட மோசமாக நடந்து கொண்டது. எனவே தான் இச்சர்ச்சை ஏற்பட்டது.
தற்போது வாட்சப் வேண்டும் என்றால், வாட்சப் தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
அதெல்லாம் முடியாது, தகவல்களைக் கொடுக்க முடியாது என்று அடம் பிடித்தால், Signal செயலிக்கு மாறிக்கொள்ளலாம்.
ஆனால், Signal செயலிக்குச் சென்றால் தற்போதைக்கு நீங்கள் மட்டுமே அங்கே இருப்பீர்கள், வேறு யாரும் இருக்க மாட்டார்கள் 🙂 .
எனவே, என்ன செய்யலாம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
Signal App | தற்காலிக பரபரப்பா? நிரந்தர மிரட்டலா?!
WhatsApp OTP SCAM எப்படி நடைபெறுகிறது?
WhatsApp Pay UPI யை செயல்படுத்துவது எப்படி?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
24 மணி நேரமும் இந்த கூகிள்காரன் என் கூட தான் இருக்கான். அதையே நான் ஏத்துக்கிட்டேன். அதனால இந்த வாட்சப் பிரைவசி எனக்கு பெருசா எதுவும் தோனல. முதல் டைமே அக்சப்ட் கொடுத்துட்டேன் அண்ணா.
கார்த்திக் 😀 😀 செம .. நானும் அதே.
கிரி, மிகவும் விரிவாக, விவரமாக, தெளிவாக அலசி ஆராய்ந்து எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி இருக்கீங்க!!!! பகிர்வுக்கு நன்றி கிரி.
நன்றி யாசின். நம்ம ஏரியா அதனால் 🙂