ஆங்கில எழுத்து இலக்கணப் பிழை இல்லாமல் எழுதுவது அவசியம் குறிப்பாக அலுவலகத்தில் பணி புரிபவர்கள். Image Credit
ஆங்கில எழுத்து இலக்கணப் பிழை
தாய் மொழி தமிழே பலருக்கு தகராறு எனும் போது உலகப் பொது மொழி ஆங்கிலமும் சிக்கலாக உள்ளது.
அனைவருமே தமிழ் ஆங்கிலத்தில் புலமை பெற்று இருப்போம் என்று கூற முடியாது ஆனால், தொழில்நுட்பம் மூலம் தவறுகளைச் சரி செய்து கொள்ள முடியும்.
இதற்குத் தேவை பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே!
Grammarly
தமிழில் எவ்வாறு இலக்கணப் பிழை இல்லாமல் எழுதுவது என்பது பற்றி முன்பே எழுதி இருந்தேன்.
அதே போலத் தொழில்நுட்பத்துடன் ஆங்கிலத்திலும் பிழை இல்லாமல், சரியான இலக்கணத்துடன் எழுத Grammarly துணை புரிகிறது.
இதைச் செயல்படுத்த Grammarly நீட்சியை (Extension) உலவியில் (பிரௌசர்) நிறுவ வேண்டியது தான்.
இதை நிறுவிக்கொண்டால், உலவியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் போது பிழை இருந்தால் சுட்டிக்காட்டும்.
இதனுடைய பரிந்துரைப்படி மாற்றிக்கொண்டால், தவறுகளைத் தவிர்க்கலாம்.
Outlook Add-On
இன்னொரு ஆகப்பெரிய உதவி என்னவென்றால், அலுவலகப் பயன்பாடான அவுட்லுக் (Outlook) மென்பொருளுக்கு Add-On இருப்பது தான்.
இதைப்பயன்படுத்த Grammarly தளத்தில் பயனர் கணக்கு உருவாக்குவது அவசியம். உலவிக்கு மட்டும் என்றால் தேவையில்லை.
இதை நிறுவிய பிறகு என்னென்ன எழுத்து & இலக்கணப் பிழைகள் உள்ளதோ அவற்றைச் சுட்டிக்காட்டி மாற்றப் பரிந்துரைக்கும்.
சிறப்பு என்னவென்றால், வார்த்தைகள் மட்டுமல்ல, வரி முழுக்க இலக்கணப் பிழையைச் சரி செய்ய அதுவே பரிந்துரைக்கும்.
Grammarly கூறும் பரிந்துரையை க்ளிக் செய்தால், மாறி விடும்.
அலுவலக மின்னஞ்சல்களில் எழுத்து, இலக்கணப் பிழை இல்லாமல் எழுதுவது மிக முக்கியம்.
பிழைகளுடன் எழுதுவது நம் மீதான மதிப்பை மற்றவர்களிடையே குறைத்து விடும்.
Grammarly Desktop
https://www.grammarly.com/desktop சென்று Desktop Application நிறுவிக்கொண்டால், Notepad முதற்கொண்டு அனைத்திலும் தவறுகளைச் சுட்டிக்காட்டிவிடும்.
தவறுகளைச் சரி செய்ய வாய்ப்புகள் இருந்தும் பயன்படுத்தாமல் தொடர்ந்து தவறு செய்வது முட்டாள்தனம்.
தொடர்ந்து பயன்படுத்தும் போது, தவறுகள் குறைந்து கொண்டு வருவதை உணர முடியும். அதாவது, நாம் என்ன தவறு செய்கிறோம் என்பது பிடிபட்டு விடும்.
எனவே, Grammarly பயன்படுத்தி எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இல்லாமல் எழுதுங்கள்.
Premium சென்றால், இன்னும் கூடுதலாக ஆலோசனைகளைக் கூறும் ஆனால், அது கட்டண சேவை என்பதால், அவசியமில்லை.
தொடர்புடைய கட்டுரைகள்
தமிழ் ஆங்கிலம் எழுத்து இலக்கணப்பிழை தவிர்க்கலாம்
நான் ஏற்கனவே இதை பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறேன். ரொம்ப நல்லவன் இவன். பெரும்பாலும் நமக்கு துரோகம் பண்ணமாட்டான். என்ன ஒன்னு இவனுக்கும் கூகிள் டிரான்ஸ்லேட்டருக்கும் கொஞ்சம் ஆவாது போல.
கிரி, நானும் ஆங்கிலத்தில் அரைகுறை தான், சில நேரங்களில் இதை பயன்படுத்தி இருக்கிறேன்.. பயனுள்ளதாக இருந்தது.. ஆங்கிலத்தில் நல்ல புலமை பெறவேண்டும் என்று படிக்கும் முதலே ஆர்வம் இருந்தது.. ஆனால் என்னால் சரியாக முயற்சிக்க முடியவில்லை.. இன்னும் கத்து குட்டியாகவே இருக்கிறேன்.. நல்ல புலமை உள்ளவர்களை பார்க்கும் போது கொஞ்சம் பொறமையாக இருக்கும்.. இந்த சேவையை எல்லோர்க்கும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கிரி..
@கார்த்திக் 🙂 சிறப்பான சேவை.
@யாசின் இதன் மூலம் பல தவறுகளைத் திருத்தி வருகிறேன். தவறுகள் குறைந்துள்ளது.