ஜப்பானிய கிராபிக்ஸ் நாவலான Alice in Borderland வைத்து உருவாக்கப்பட்ட டிவி சீரிஸ். Image Credit
Alice in Borderland
நண்பர்கள் இருவருடன் விளையாட்டாக Express Avenue போல ஒரு மாலின் ஒரு அறையில் ஒளிந்து கொள்கிறீர்கள். திடீர் என்று சத்தம், மின்சாரம் தடையாகிறது பின்னர் பேரமைதி.
வெளியே வந்தால், அவ்வளவு கூட்டமாக உள்ள மாலில், வெளியே பரபரப்பான சாலையில் ஒருவருமே இல்லையென்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்?!
அது தான் Alice in Borderland 🙂 .
டோக்கியோ நகரில் இது போல நடக்க, மூவரும் பரபரப்பான நகரில் ஒருவருமே இல்லாத சாலையில் சுற்றி ஓடித் தேடுகிறார்கள் ஆனால், ஒருவருமே இல்லை.
பின்னர் ஒரு கட்டிடத்துக்குச் சென்றால், அங்கே ஒரு பெண் ‘இது விளையாட்டு, வெற்றி பெற்றால், பிழைக்கலாம். இல்லையென்றால் கொல்லப்படுவோம்‘ என்கிறார்.
இதன் பிறகு போட்டியில் வெற்றி பெற்றால், இன்னொரு போட்டி, அதை வெற்றி பெற்றால் இன்னொன்று என்று தொடரும்.
விசா காலம் கொடுக்கப்பட்டு இருக்கும்.
போட்டியில் வெற்றி பெற்றால் விசா காலம் நீட்டிக்கப்படும் இல்லையென்றால், விசா காலம் முடிந்த பிறகு கொல்லப்பட்டு விடுவார்கள்.
போட்டிகளை வென்று இறுதிப்போட்டியை அடைய வேண்டும்.
நிமிடங்கள், மணி நேரங்கள்
துவக்கத்தில் (first level) 2.00 நிமிடங்களுக்கு இருக்கும், அதற்குள் தப்பிக்க வேண்டும். அடுத்தப் போட்டி 1.50 நிமிடங்கள், அடுத்தது 1.40 என்று குறைந்து கொண்டே வரும்.
இதன் பிறகு காலம் அதிகரிக்கப்படும்.
கால அளவு குறைவாக இருப்பதாலும், அதற்குள் எப்படித் தப்பிக்க முடியும்? என்பதாலும் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாகவே உள்ளது.
Common Sense & புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே தப்பிக்க முடியும்.
இந்த மூவரில் யார் தப்பிக்கிறார்? இவர்களைப் போல மற்றவர்கள் நிலை என்ன? யார் இதை நடத்துகிறார்கள்? என்பதே இக்கற்பனைக் கதை.
Arisu
இம்மூவரில் மட்டுமல்ல, மாட்டிக்கொண்ட மொத்த பேரிலும் Arisu தான் புத்திசாலி. மற்றவர்கள் Arisu என்று அழைக்கும் போது எனக்கு ‘அரசு அரசு’ என்றே கேட்கிறது 🙂 .
ஒவ்வொரு கட்டத்திலும், இதற்கு முன்பு சாதாரணமாகக் கடந்து வந்தவற்றை வைத்து விடையைக் கண்டுபிடிப்பது சுவாரசியம்.
அட! சீக்கிரம் கண்டுபிடிங்கடா… ஏதாவது ஆகி தொலைந்துடப்போகுதுன்னு படபடப்பாக உள்ளது.
Saw படம் போல, எங்கே இருந்து யோசனைகளைப் பிடிக்குறாங்களோ தெரியலை, ஒவ்வொன்றும் மிரட்டல் ரகம்.
ஒளிப்பதிவு
தொழில்நுட்பத்தை (Green Screen) வைத்து அசத்துகிறார்கள்.
டோக்கியோ எவ்வளவு பரபரப்பான நகரம்! அங்கே ஊரடங்கு போல ஒரு நிலையை எப்படிப் படம் பிடிக்க முடியும்?
ஆனால், கொஞ்சம் கூடச் சந்தேகம் வராதபடி அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
நிஜமாவே நகரில் எவருமே இல்லையோ! ஊரடங்கு நடக்கும் போது எடுத்து விட்டார்களோ! என்று நினைக்கும்படியுள்ளது.
எங்குமே கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்குக் காட்சியமைப்பு உள்ளது, ஊகிக்க முடியுமே தவிர உறுதி செய்ய முடியாது.
யார் பார்க்கலாம்?
இள வயதினருக்கு ரொம்பப் பிடிக்கும், மற்றவர்களுக்கு இது போன்ற கதைகளில் ஆர்வம் இருந்தால் பிடிக்கும்.
சில உடலுறவு காட்சிகள் உள்ளதால் குடும்பத்தினருடன் பார்க்க முடியாது. ஜப்பான் திரைப்படங்கள் என்றாலே, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் வழக்கம், இதிலும் உள்ளன.
இள வயதினரை மனதில் வைத்தே எடுக்கப்பட்டுள்ளது, இந்த மூவரைப்போலவே தப்பித்த மற்ற பெரும்பாலனவர்கள் 25 வயதுக்குட்ப நபர்களாகவே உள்ளனர்.
எனவே, மேற்கூறியது ஏற்புடையதாக இருந்தால் பார்க்கலாம்.
NETFLIX ல் காணலாம். வழக்கம்போலப் படம் என்று நினைத்துப் பார்த்து, சீரிஸ் என்று தெரிந்து சுவாரசியமாக இருந்ததால் அப்படியே தொடர்ந்து விட்டேன் 🙂 .
Genre Science fiction, Suspense-thriller, Drama
Based on The original graphic novel “Alice in Borderland” by Haro Aso
Written by Yoshiki Watabe, Yasuko Kuramitsu, Shinsuke Sato
Directed by Shinsuke Sato
Starring Kento Yamazaki, Tao Tsuchiya, Yūki Morinaga
Composer Yutaka Yamada
Country of origin Japan
Original language Japanese
No. of seasons 1
No. of episodes 8
Producer Akira Morii
Cinematography Taro Kawazu
Editors Tsuyoshi Imai, Shoukichi Kaneda
Camera setup Multi-camera
Running time 41–52 minutes
Production company Robot Communications Inc.
Distributor Netflix
Release Original network Netflix
Picture format 4K (Ultra HD)
Audio format Dolby Digital
Original release December 10, 2020
தொடர்புடைய திரை விமர்சனங்கள்
Battleship (2012) | இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு!
6 Underground (2019) மிரட்டல் சண்டை
Android Kunjappan Ver 5.25 (2019 மலையாளம்) | இயந்திர மனிதன்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, இதுவரை வெப்சிரிஸ் தமிழில் எதுவும் பார்க்கவில்லை.. கடந்த வருடம் இறுதியில் இரண்டு ஹிந்தி வெப்சீரிஸ் பார்த்தேன்.. மிரட்சியின் உச்சிக்கு சென்று விட்டேன்.. குறிப்பாக மிர்ஜாபூர் (திருப்பதி பாத்திரத்தில் நடித்தவர் நடிப்பு இதுவரை என் வாழ்நாளில் எந்த மொழியிலும் பார்க்காத நடிப்பு.. அசுரத்தனமான நடிப்பு.. கண்களின் அசைவுகளியே நடித்து இருப்பார்.. & தி ஸ்கேம் 1992.. (அசோக் மேத்தாவாக நடித்தவர் நடிப்புக்கு இரண்டு தேசிய விருது கொடுக்கலாம்..) இரண்டுமே வித்தியாசமான கதை களங்கள்..மிகவும் ரசித்து பார்த்தேன்.. தற்போது நேரம் குறைவின்மையினால் என்னால் இதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.. நீங்கள் குறிப்பிட்டுள்ள வெப் சீரிஸ் பின்பு தான் பார்க்க வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
மிர்ஜாபூர் என் பட்டியலில் உள்ளது. இந்த வாரம் பார்த்து விடுவேன் என்று நினைக்கிறன்.
தி ஸ்கேம் ஏற்கனேவே கூறி இருக்கீங்க..ஆனால், அது சோனி லைவ் ல இருக்கு.. அதில் பணம் கட்டவில்லை.