தற்போது இணையத்தில் பரவலாக WhatsApp OTP SCAM நடந்து கொண்டுள்ளதாகச் சர்ச்சையாகி உள்ளது. Image Credit
WhatsApp OTP SCAM எப்படி நடைபெறுகிறது?
அறிமுகமில்லாத எண்ணில் இருந்தோ, நண்பர்களின் எண்ணில் இருந்தோ WhatsApp வழியாக வருபவர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களாக அறிமுகப்படுத்திக்கொள்வார்கள்.
தான் அவசரத்தில் / ஆபத்தில் இருப்பதாகவும், OTP அனுப்பியது தவறுதலாக உங்கள் எண்ணுக்கு வந்து விட்டதாகக் கூறி OTP கேட்பார்கள்.
யோசிக்காமல் அவசரப்பட்டு, இரக்கப்பட்டுக் கொடுத்தால், உங்கள் WhatsApp கணக்குக் கட்டுப்பாட்டை இழந்து விடுவீர்கள்.
முழுக்கட்டுப்பாட்டையும் அவர்கள் எடுத்து உங்கள் தனிப்பட்ட விவரங்களைத் திருடி விடுவார்கள்.
தனிப்பட்ட விவரங்களில் விவகாரமாக எதுவும் இருந்தால், அதை வைத்து மிரட்டப்படலாம்.
இது போல உங்கள் அடையாளத்தை வைத்து உங்கள் நண்பர்களுக்கும், உங்களுக்கு நடந்ததைப் போலச் செய்வார்கள்.
எப்படித் தடுப்பது?
உங்களுக்கு வந்த OTP எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும், எப்படிக் கேட்டாலும் கொடுக்க வேண்டாம்.
சம்பந்தப்பட்ட நபரை / நண்பரை அழைத்து (Call) விவரங்கள் கேட்டு, நண்பராக இருந்தால் அவரையும் எச்சரிக்கைப்படுத்துங்கள்.
அறிமுகமில்லாத எண்ணாக இருந்தால் Block செய்யவும்.
தொடர்புடைய கட்டுரை
OTP SPAM SCAM | Kotak Mahindra Bank
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
Ok
படிக்கும் போதே உள்ளுக்குள்ள ஒரு வித பயம் உண்டாகிறது.. எச்சரித்தமைக்கு நன்றி கிரி..
@சக்தி @யாசின் இருவருமே வந்துட்டாங்கயா 🙂 .
யாசின் இன்று கூட அலுவலக நண்பர் ஒருவர் இது போல வந்ததாக, இக்கட்டுரையை படித்துக் கூறினார். எச்சரிக்கையா இருங்க.