WhatsApp Last Seen Status | புதிய மாற்றம் என்ன?

0
WhatsApp Last Seen

WhatsApp ல் துவக்கத்தில் பலருக்குப் பிரச்சனையாக இருந்தது WhatsApp Last Seen status. Image Credit

WhatsApp Last Seen

ஒருவர் WhatsApp பார்க்கிறாரா இல்லையா என்பதை இதை வைத்துக்காண முடிந்தது. இதனால், பார்க்கவில்லையென்று சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.

இதனால் ஒருவரின் Privacy (தனியுரிமை) பாதிக்கப்பட்டது.

பின்னர் இதைத் தடுக்கும் வசதியைக் கொண்டு வந்தது. அதாவது, Nobody தேர்வு செய்தால், WhatsApp Last Seen யாரும் பார்க்க முடியாது.

பலரும் இதைத் தேர்வு செய்து நிம்மதியானார்கள்.

ஆனால், சிலருக்கு அனைவருக்கும் இதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லாமல், சிலருக்கு மட்டும் மறைக்க வேண்டிய விருப்பம் இருந்தது ஆனால், முடியவில்லை.

புதிய வசதி

தற்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மறைக்கும் வசதியை WhatsApp கொண்டு வரப்போகிறது.

சிலருக்கு தங்கள் வாழ்க்கைத் துணைக்கு, Boss / Manager க்கு, தேவையற்றவர்கள் சிலருக்கு மட்டும் WhatsApp Last Seen ஸ்டேட்டஸ் மறைக்க விரும்புவார்கள்.

அவர்களுக்கு இப்புதிய வசதி பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது சோதனை (Beta) அடிப்படையில் இருப்பதால், விரைவில் அனைவருக்கும் WhatsApp Last Seen வசதி கிடைக்கும்.

இதனோடு Online என்று இருப்பதையும் தடுக்க வசதி வந்தால் நன்றாக இருக்கும். இதுவும் ஒருவரின் தனியுரிமையில் தலையிடுகிறது.

பிற்சேர்க்கை

WhatsApp Online Status | புதிய வசதிகள் என்னென்ன?

கொசுறு 1

அனுமதி கேட்காமலே சிலர் நம்மை ஏதாவது குழுமத்தில் (Group) இணைத்து விடுவார்கள். அதிலிருந்து வெளியே வந்தாலும் பிரச்சனை, வெளியேறவில்லையென்றாலும் தலைவலி.

இதற்குத் தீர்வாகக் குழுமத்தில் இணைக்க முடியாதபடியான வசதியை WhatsApp கொண்டு வந்தது இப்பிரச்சனைக்குத் தீர்வானது.

எந்தக் குழுமத்திலும் இணைய விரும்பாதவர்களுக்கு மிகப்பயனுள்ளது. காரணம், பெரும்பாலும் அனைத்துக்குழுக்களும் எதிர்மறை தகவல்களையே பகிர்கின்றன.

இவ்வசதி பற்றித் தெரியாதவர்கள் இதைச் செயல்படுத்தி நிம்மதியடையலாம்.

Read: WhatsApp Group Restriction

கொசுறு 2

பயனாளர்களிடையே வெறுப்புணர்வை குறைக்க Dislike எண்ணிக்கையை YouTube மறைக்கப்போகிறது.

அதாவது இனி நம்மால் எவ்வளவு பேர் ஒரு காணொளியை Dislike செய்துள்ளார்கள் என்பதைக் காண முடியாது. காணொளி வெளியிட்டவர்களுக்கு தெரியும்.

இதற்காகவே ஒரு கூட்டம் Dislike செய்து சண்டை போட்டுக்கொண்டு இருக்கும். இதனால், இவர்கள் என்ன சாதிக்கப்போகிறார்கள் எனப் புரியவில்லை!

நல்ல மாற்றம். வரவேற்கிறேன்.

தொடர்புடைய கட்டுரைகள்

WhatsApp OTP SCAM எப்படி நடைபெறுகிறது?

WhatsApp Pay UPI யை செயல்படுத்துவது எப்படி?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here